செவ்வாய், 26 டிசம்பர், 2017

தினகரனை விட அதிகம்தான்

தினகரன் வழங்கிய, 20 ரூபாய், 'டோக்கனை' நம்பி ஓட்டளித்த, ஆர்.கே.நகர் மக்கள், பணம் கேட்டு, தினகரன் ஆதரவு பொறுப்பாளர்களை நச்சரித்து வருகின்றனர். 
இதனால், பொறுப்பாளர்களில் பலர் வீடுகளில் தங்காமல், வெளியிடங்களுக்கு ஓட்டம் பிடித்துள்ளனர்.
சென்னை, ஆர்.கே.நகரில், வாக்காளர்களின் ஓட்டுகளை கவர, 20ம் தேதி நள்ளிரவு, ஆர்.கே.நகர் முழுவதும், 20 ரூபாய் நோட்டுகள், 'டோக்கனாக' வழங்கப்பட்டன. 

'தினகரன் வெற்றி பெற்றால், 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்' என, தினகரனின் பொறுப்பாளர்கள் வாக்குறுதியளித்து, அதில் உள்ள சீரியல் எண்களை எழுதி சென்றுள்ளனர். 

ஆர்.கே.நகர் மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக, தினகரன் இருப்பதால், அவர் பணம் கொடுப்பார் என நம்பி, மக்களும் ஓட்டளித்தனர். 

தினகரன் வெற்றி பெற்றதால், ஆர்.கே.நகர் மக்கள் குஷியில் உள்ளனர். 20 ரூபாய் டோக்கனுக்கு, பணம் கிடைக்கும் என்ற உற்சாகத்திலும் உள்ளனர். 

அத்துடன், பணம் சப்ளை செய்த பொறுப்பாளர்களை, மொபைல் போனில் அழைத்து, '10 ஆயிரம் ரூபாய் எப்போ தருவீங்க?' என, கேட்க துவங்கி உள்ளனர். 

அவர்களில் சிலர், 'இன்று அல்லது நாளை தருவோம்' எனக் கூறி, சமாளித்து வருகின்றனர். 

மற்ற சிலர், வீடுகளில் தங்காமல், மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து, வெளியிடங்களுக்கு ஓட்டம் பிடித்துள்ளனர். இருப்பினும், தினகரனின் தேர்தல் பொறுப்பாளர்கள் தந்த, 20 ரூபாய் நோட்டை, பொக்கிஷமாக பலர் பாதுகாத்து வருகின்றனர்.

எங்கள் வீட்டில், ஆறு ஓட்டுகள் உள்ளன. 'குக்கருக்கு' ஆதரவாக பிரசாரத்திற்கு போனதால், எங்களுக்கு, அ.தி.மு.க.,வினர், 6,000 ரூபாய் தரவில்லை. ஜெ., விசுவாசியான எங்களுக்கு, பணம் கொடுக்காததால், கோபத்தில் குக்கருக்கு ஓட்டு போட்டோம்.


தினகரன் கண்டிப்பாக, 10 ஆயிரம் ரூபாய் தருவார். 'எப்படியும் நன்றி தெரிவிக்க, ஆர்.கே.நகருக்கு வருவார் என்பதால், அதற்கு முன் பணம் கொடுத்து விடுவோம்' என, அவரின் பொறுப்பாளர் தெரிவித்து உள்ளனர். 

எனவே, இன்று அல்லது நாளைக்குள் பண'ம் வரலாம் என்று பலர் காத்திருக்கின்றனர். 

பணம் வாங்கி வாக்களித்த  இளைஞர்கள் சிலரிடம் அது தவறில்லையா என கேட்டபோது "ஒரு மாற்றத்தை அதாவது  தி.மு.க., - அ.தி.மு.க., அல்லாத ஒருவர் வர வேண்டும் என, எதிர்பார்த்து  குக்கருக்கு தான் ஓட்டு போட்டேன். 
20 ரூபாய் டோக்கனுக்கு, நாளை பணம் கொடுப்பதாக, எங்கள் பகுதி பொறுப்பாளர் தெரிவித்து உள்ளார். பணம் வந்தால், 'லேப் - டாப்' வாங்குவேன்".என்று பெருமையாகக் கூறினார். 

பணத்துக்கு வாக்களித்து விட்டு மாற்றத்தை விரும்பி திமுக,அதிமுகவுக்கு வாக்களிக்காமல் தினகரனுக்கு வாக்களித்ததாக மாணவர் கூறுவது மிகவும் வேடிக்கை,வேதனை.
ஒரு சுயேட்சை வேட்பாளர் வென்று என்ன மாற்றத்தைக்கொண்டுவருவார் என்று மாணவர் எதிர்பார்த்தார்.

அவர் உண்மையில் எதிர்பார்த்தது மாற்றத்தை அல்ல அதிக பணத்தை.லேப்டாப் வாங்க தனது வகை விற்றுள்ளார்.வருங்கால தலைவரான மாணவர்களே பணத்துக்கு வாக்கை கொடுத்து விட்டு மாற்றம்,முன்னேற்றம்,ஊழல் ஒழிய வேண்டும் என்று வீர வசனம் பேசுவது இந்திய அதிலும் முக்கிய தமிழக அரசியல் போக்கை கவலையுடன் பார்க்க வைக்கிறது.வடக்கே மதத்தை காட்டி வாக்குகள் தமிழகத்தில் பணம்.திமுக-அதிமுக வராமல் மாற்றம் எதிர்பார்ப்பவர்கள் அதிமுகவில் இருந்தவர் அங்கு இன்னமும் ஆட்சியை கைப்பற்ற போராடுபவர் என்ற நிலையில் உள்ள தினகரனுக்கு வாக்களிப்பது மாற்றம் தரும் மனமாற்றமா?

அப்படி பட்ட உண்மை நிலையில் இருந்தால் பணத்தை எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும்.எத்தனை சுயேட்சைகள்,நாம் தமிழர் என்று போட்டியில் இருந்தனர்.அவர்களில் ஒருவருக்கு வாக்களிப்பதுதானே சரியானதாக இருக்கும்.

ஊழல் பேர்வழி என்று உலகறிந்த பல வழக்குகளை எதிர் கொண்ட தினகரனுக்கு வாக்களித்ததுஅதுவும் பணத்தை ஆயிரக்கணக்கில் வாங்கிக்கொண்டு  மாற்றத்தை கொண்டுவர என்ற வாக்கு மூலம் மிகப்பெரிய ஏமாற்றுத்தனம்.

வாக்குப்பணம் வாங்கிக்கொண்டு வாக்களித்தாக சொல்லும் மக்களை விட இந்த மாற்றம் விரும்பிகள்தான் மிகப்பெரிய ஊழல்வாதிகள்.
அது தினகரனை விட அதிகம்தான் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...