புதன், 12 அக்டோபர், 2016

பொறுப்பில்லா முதல்வர் .....!

"களவானி" படத்தில் இன்றைய அதிமுக தொண்டர் கஞ்சா கருப்பு பாலிடால் குடித்ததாக கூறி "களவாணி"கும்பலால் பொய்யாக மருத்துவமனையில் வைக்கப்பட்டிருப்பார்.


அவரை விசாரிக்க வரும் ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு ஆமாம் என்று தலையாட்டுவதாக கூறி களவாணி கும்பலில் ஒருத்தன் கருப்பு தலையை ஆட்டி கொண்டிருப்பார்.

"கட்டுன பொண்டாட்டி மேலயே  சந்தேகமாடா ?"
ஆமாம் தலையாட்டல் .

"உனக்கு வெட்கமா இல்லையா?"

இல்லை என்று தலையாட்டல்.

அவர் கருத்துப்பி விட்டு செல்வார்.

 இதை எதற்காக இங்கே சொல்லுகிறேன் என்று மண்டையை பிய்த்து வேறு விபரீதமான கற்பனைகளை ஓட விட வேண்டாம்.

நேற்று உள்ளூர் தொலைக்காட்சியில் பார்த்த நகைச் சுவையை பகிர்ந்து கொள்கிறேன்.அவ்ளோதான்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------

திருநாவுக்கரசு,வைகோ போன்ற பெருந்தலைவர்கள் எல்லோரும் ' திமுக சொல்வது போல்  பொறுப்பு முதல்வர் தேவை இல்லை.ஜெயலலிதாவே நீடிக்க வேண்டும் ' என்று சொல்வதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.


தளபதி ஸ்டாலின் "தமிழ் நாடு நிர்வாகம் முடங்கிப்போய்விடக் கூடாது .
பொறுப்பான முதல்வர் தேவை" என்கிறார்.

ஆனால் திருநாவுக்கரசு,வைகோ போன்ற தமிழக பெருந்தலைவர்கள் "இதுவரை என்ன நிர்வாகம் ஜெயலலிதா ஆடசியில் தமிழ் நாட்டில் நடந்ததை திமுகவினர் கண்டனர்.

இனியும் என்ன நிர்வாக முடக்கத்தை கண்டு பிடிக்கப்போகிறார்கள்? "என்கிறார்கள்.

இப்போது நீங்கள் சொல்லுங்கள் .அதுவும் சரிதானே?

=    =   =    =    =    =   =   = = = = = = = = = = = = = = = = = = = = = = =  =  =  =  =  =  =  =  =  =  =  =

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் படுத்து செயல்படா நிலையில் இருக்கையில்
பொறுப்பு,அல்லது தற்காலிக முதல்வர் என்று ஒருவரை முறைப்படி அதிமுகவினர் தேர்ந்தெடுத்திருந்தால் ஆளுநர் கட்டுப்பாட்டில் தமிழக ஆடசி போயிருக்க வேண்டிய நிலை உருவாகியிராது.

உட்கட்சியில் தலைமை பொறுப்பை ஏற்க உண்டான மவுன யுத்தத்தால் ஆளுநர் கூப்பிட்டு மிரட்ட வேண்டிய நிலை உண்டாகி விட்டது.

இனி எந்த அரசு முடிவு கோப்புகளும் ஆளுநர் ஆணையில்லாமல் வெளியாகாது.
இதே நிலை ஒரு பொறுப்பு இருந்தால் ஆளுநர் வெறும் மேலொப்பம்போடுவதுடன் தனது அதிகாரத்தை அடக்கிக் கொண்டிருப்பார்.

ஆனால் அது  இனி நடவாது.

எல்லா முக்கிய முடிவு கோப்புகளும் ஆளுநர் கையசைவில்தான்.
கிட்டத்தட்ட ஆளுநர் ஆட்சிதான்.அதற்காகத்தான் மோடியும் ,ஆளுநரும் அதிமுகவை அப்போலோவாவுடன் முடக்கி விட்டார்கள்.

------------------------------------------------------------------------------------------------------------------------------

கையசைக்க முடியவில்லை. தற்போது ஒரு முறை கண்ணை திறந்து பார்த்தார் .செயற்கை சுவாசம்தான்.

இவை எல்லாம் இன்றைய  பொறுப்பில்லா முதல்வர் ஜெயலலிதா உடல்நிலையாக தலைமைச் சசெயலகம் அப்போலோவில் இருந்தும் ,மக்கள் தொடர்பு தொலைக்காட்சியுமான தந்தி யிலும்  வெளியான செய்திகள்.

ஆனால் இந்த நிலையிலும்  தன்னை பொறுப்பில்லா முதல்வராகி ஓ.பி.பன்னீர் செல்வத்தை பொறுப்பானவராக மூன்றாம்தர முதல்வராக மன்னிக்கவும் மூன்றாம் தரம் அதாவது முறை முதல்வராக்கியுள்ளார் ஜெயலலிதா.

ஜெயலலிதா ஆலோசைனைப்படி ...அப்படித்தான் ஆளுநர் அறிக்கை சொல்லுகிறது.
என்னதான் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்டாலும் மாநில ஆளுநர் அல்லவா ஜெயலலிதா ஆணைப்படி என்று கூற கூட்சம் இருக்கத்தானே செய்யும்.

முன்பு 22 மணிநேரமும் மக்களுக்காக உழைத்தவரல்லவா ஜெயலலிதா.

ஆனாலும் ஒரு நண்பர் இப்படி ஜெயலலிதா ஆலோசனைகளை சொல்லுவதில் இருந்தும் பிரதமர் மோடி பொறுப்பில்லாத முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கவருவதை தவிர்த்ததில் இருந்தும் சில உண்மைகளை கண்டு பிடித்ததாக சொன்னார்.

"ஜெயலலிதா நல்ல முறையில் இருக்கிறார்.எதற்காகவோ அது சொத்து குவிப்பு வழக்கு உட்ச நீதிமன்ற தீர்ப்பால் கூட இருக்கலாம்.சற்று உணர்ச்சி வசப்பட்டு அதற்காக மருத்துவமனை சென்றவர் தீர்ப்பு வரும் வரை ஓய்வெடுக்கலாம் என்றே இன்னமும் அப்போலோவில் இருக்கலாம் "
-என்கிறார்.

         'எப்பொருள் யார் வாய் கேட்கினும் -
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு" என்ற குறள்   நினைவுக்கு வருகிறது,
அதற்கு கலைஞர் என்ன குறளோவியம் எழுதியுள்ளார் என்று பார்க்கப்போகிறேன்.

========================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...