திங்கள், 6 ஜூன், 2016

மோ(ச)டி “திருவிளையாடல்கள்"!

இரண்டாண்டு சாதனையோ சாதனை! 

ஆட்சியைப் பிடிக்க அன்று, ஆட்சியை நிலைநிறுத்த இன்று மோ(ச)டியின் “திருவிளையாடல்!”
போட்டோஷாப் 1
நவம்பர் மாதம் சென்னையில் வெள்ளம் வந்த போது அதை பார்வையிட ஹெலிகாப் டரில் வந்த மோடி தனது சமூக வலைதளத்தில் படம் ஒன்றை வெளியிட்டி ருந்தார். 
பொதுவாக விமா னம் மற்றும் ஹெலிகாப் டரின் ஜன்னல் வழியாக எடுக்கப்படும் படங்கள் மங்கலாக இருக்கும். 
ஆனால் பிரதமர் அலுவல கம் ஜன்னல் வழியாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையை பார்வையிடுவது போல் போலியான படத்தை வெளியிட்டது.
போட்டோஷாப் 2
ஈழத்தில் போரால் பாதிக் கப்பட்ட தமிழ்க் குடும்பம் ஒன்றை அவுட்லுக் பத்திரிகை அட்டைப் படமாக வெளி யிட்டது, அதை வைத்துக் கொண்டு கேரளத்தில் ஊட்டச் சத்து குறைவினால் குழந்தை கள் பாதிக்கப்படுகின்றனர் என்று போட்டோஷாப் மூலம் மாற்றங்கள் செய்து காண்பித் தார் பிஜேபி தலைவர் அமித்ஷா. 
இவ்விவகாரம் தொடர்பாக உண்மை வெளிவந்த பிறகு அவுட் லுக் பத்திரிகை மீது பழியைப் போட்டுவிட்டு தங்கள் மீது தவறு இல்லை என்று விளக்கம் கூறினார்.
போட்டோஷாப் 3
2014- மார்ச் மாதம் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டு இருக்கும் போது மோடியின் தேர் தல் பேச்சை அமெரிக்க அதிபர் ஒபாமாவும் அவ ரது சகாக்களும் ஆர்வத் துடன் பார்ப்பது போன்ற ஒரு படம் அனைத்துப் பத்திரிகைகளிலும் வெளி யானது. 
ஆனால் அந்தப் படம் பாகிஸ்தான் அப்டா பாத்தில் ஒசாமா பின்லே டனை பிடிக்க நடந்த ஆபரேசன் ஜொரோமா நேரடி சம்பவங்களை கண்காணிக்கும் படமா கும். -
 அதை ‘உல்டா’ செய்து இப்படி வெளியிட் டுள்ளனர்.
போட்டோஷாப் 4
2014 நாடாளுமன்ற தேர்தலின் போது சீனாவின் ஷாங்காய் நகரத்தின் சாலையை குஜராத் தலைநகர் அகமதாபாத்தின் சாலையாக போட்டோஷாப் செய்து வெளியிட்டு மக்களை ஏமாற்றி வாக்கு வாங்கினார்கள்.
போட்டோஷாப் 5
சமூக வலைத்தளங்களில் பிரதமர் நரேந்திர மோடி தனது இளம் வயதில், ஆர்எஸ்எஸ் பொதுக்கூட்டம் ஒன்றில் துடைப்பம் எடுத்து தரையைப் பெருக்குவது போல் புகைப்படம் ஒன்று வெளிவந்தது. 
1988ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பில் சாதாரண தொண்டராக மோடி இருந்தபோது, அதன் பொதுக் கூட்டம் நடந்த இடத்தை பெருக்கியபோது எடுக்கப்பட்ட படம் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், அஹமதாபாதைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், அந்த புகைப்படம் உண்மை தானா என்பதை அறிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பதில் கோரியுள்ளார். 
இதையடுத்து வந்த பதிலில், அந்த புகைப்படம் உண்மையானது அல்ல என்றும் கணினி மூலம் மறு ஆக்க வேலை(போட்டோஷாப்) செய்யப்பட்டது எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
போட்டோஷாப் 6
பாஜகவின் இணையதளத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி முதல் அமைச்சராகவிருந்த குஜராத் அகமதாபாத்தில் புல்லட் ரெயில் ஓடுகிறது என்று ஒருபடம் வெளியிட்டிருந்தனர். 
இந்தியாவில் புல்லட் ரெயிலே இல்லை என்று சமூக வளைதளத்தில் பலர் கிண்டல் அடிக்க ஆரம்பித்ததும், யாரோ மோடி அனுதாபி மிகைப்படுத்தி இப்படத்தை வெளியிட்டு விட்டார்; என்றும் வேலைப் பளுவில் கவனிக்காமல் அந்தப் படத்தை வெப்சைட்டில் வெளியிட்டு விட்டோம் என்று அறிக்கை விட்டு ஏமாற்றினர்.
போட்டோஷாப் 7
2015-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்கா சென்ற மோடி வெள்ளை மாளிகையில் ஒபாமாவுடன் உரையாடி நடந்து வருவது போன்ற ஒரு செய்தியை பிரதமர் அலுவலகம் வெளியிட்டிருந்தது. 

ஆனால் அந்த படம் போலியானது என்றும் வெள்ளைமாளிகையில் ஒபாமாவும் அவரது மனைவியான மிகையிலும் நடந்து வரும் காட்சியில் மிகையிலின் படத்தை எடுத்துவிட்டு மோடியின் படத்தை ஒட்டிவிட்டனர்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இந்தப் போட்டோ மோடியின் உதவியாளர் அமெரிக்காவில் இருந்து அனுப்பியதாகவும் அது உண்மையா போலியா என்றும் பார்ப்பது எங்கள் வேலையில்லை என்று பத்திரிகையாளர்களிடம் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
அதை எல்லாம் விட அதிகப்படியான ஒன்று தமிழகத்தேர்தலில் பிரதமர் மோடி நடந்து கொண்ட முறைதான்.
வாக்கு எண்ணிக்கை துவக்கி11. 10 மணிக்கே அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு மீண்டும் முதல்வராவதற்கு வாழ்த்துகள் என்று வாழ்த்துச்செய்தி அனுப்பியதுதான்.
அப்போது தான் அதிமுக வென்றதாக ஒரு தொகுதிக்கு மட்டுமேயான முடிவு வந்திருந்தது.110 அதிமுகவும்,101 திமுகவும் முன்னிலையில் மாறி,மாறி வந்து கொண்டிருந்தது.
இந்த வேளையில் ஒரு நாட்டின் பிரதமர் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக நடந்து கொண்டு ஆட்சியமைக்க வாழ்த்தியது அதன் பின்னர் எண்ணப்பட்ட வாக்குகளின் நிலையையே மாற்றி விட்டதாக தீர்த்தல் அலுவலர்கள் கூறுகிறார்கள்.
பல தொகுதிகளில் தபால் வாக்குகள் எண்ணப்படவே இல்லை.தபால் வாக்குகளில் முன்னிலையில் இருந்த ராதாபுரம்,கோவில் பட்டி உட்பட்ட 40க்கும் அதிகமான தொகுதிகளில் தபால் வாக்குகள் மறு எண்ணிக்கை என்று கூறி அனைத்தும் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன.

அதை எதிர்த்தவர்கள் வெளியெற்றப்பட்டனர்.தேர்தல் ஆணைய விதிகளின் படி தேர்தல் அலுவலரின் கருத்துதான் இறுதி தீர்ப்பு என்பதால் இந்த மூசடிகள் பல இடங்களில் நடந்துள்ளன.இதை தவிர்க்க வேண்டிய தேர்தல் ஆணையமோ பிரதமரின் வாழ்த்துச்செய்தியை தங்களுக்கான ஆணையாகக் கருதி அதிமுக ஆட்சியமைக்க தேவையான இடங்களை வெற்றி பெறச்செய்து விட்டது.
அப்படியிருந்தும் திமுக வென்ற இடங்கள் வாக்கு எண்ணிக்கை இப்போது அறிவிக்கப் பட்டதை  விட அதிகம் .அல்லது தேர்தல் நடத்தும் அலுவலர்களின் மனசாட்சிப்படியான பணியால்தான்.
இது மாதிரி ஒரு பிரதமரை எங்காவது பார்த்திருந்தால், படித்திருந்தால் அவசியம் தெரியப்படுத்துங்கள்.

                                                                                                                                                                                               -மின்சாரம்.
=======================================================================================
 முகமது அலி 
(எ)  காசியஸ் மார்க்கெல்லஸ் கிளே
நாக் அவுட் நாயகன், குத்துச்சண்டை உலகின் முடிசூடா சக்கரவர்த்தி என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டு வந்த முகமது அலியின் இயற்பெயர் காசியஸ் மார்க்கெல்லஸ் கிளே என்பதாகும். 

அமெரிக்காவின் தென் பகுதி மாகாணமான கென்டக்கியில் கடந்த 1942-ஆம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதியன்று பிறந்தார். அவருக்கு ஒரு சகோதரியும், நான்கு சகோதரர்களும் உண்டு. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு குத்து சண்டை போட்டியில் தனக்கென தனி இடம் பிடித்தார். இவர் பெற்ற விருதுகளையும், பட்டங்களையும் பட்டியல் இட முடியாத அளவுக்கு சாதனை படைத்தவர்.இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாகவும், நூல்களாகவும் எழுதப்பட்டு உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானவர்​களை ஈர்த்துள்ளது.
 


கடந்த 1960-ஆம் ஆண்டு ரோம் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முகமது அலி, அதே ஆண்டில் தொழில்முறைக் குத்துச்சண்டை வீரராக உருவெடுத்தார். பின்னர், களமிறங்கிய அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிக் காற்று முகமது அலி பக்கமே வீசியது. 

தொடர்ந்து 4 ஆண்டுகளாக 19 குத்துச்சண்டை போட்டிகளில் வெற்றிபெற்ற முகமது அலிக்கு 20-வது போட்டி, உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியாக அமைந்தது. 

அந்தப் போட்டியில் அவருக்கு எதிராக அப்போதைய உலக ஹெவிவெயிட் சாம்பியனான சோனி லிஸ்டன் களமிறங்கினார். அன்றைய காலகட்டத்தில் உலகின் மிக ஆபத்தான வீரராக அறியப்பட்ட சோனி லிஸ்டனை 22 வயதே ஆன முகமது அலி எதிர்கொண்டார். இப்போட்டியின் 7-வது சுற்றில் "டெக்னிக்கல் நாக் அவுட்' முறையில் வெற்றி பெற்ற முகமது அலி, உலக சாம்பியன் ஷிப் பட்டம் வென்றார். 

கடந்த 1960-ஆம் ஆண்டில் தனது முதல் போட்டியில் களம் கண்ட காசியஸ் மார்க்கெல்லஸ் கிளே, 1964-ல் தன்னுடைய முதல் உலக சாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றவுடன் இஸ்லாத்திற்கு மதம் மாறினார். அதன் பின்னர் 1975-ஆம் ஆண்டில் சன்னி முஸ்லிம் பிரிவுக்கு முழுமையாக மதம் மாறினார். 

களம் கண்ட 61 போட்டிகளில் 56 வெற்றி பெற்றவர். அதில் 37 நாக் அவுட் வெற்றிகள். எனவே இவர் நாக் அவுட் நாயகன் என்றே அழைக்கப்பட்டு வந்தார். மேலும், வரிசையாக மூன்று முறை உலக சாம்பியன் பட்டங்களைப் பெற்றவர் முகமது அலி. குத்துச்சண்டை ஜாம்பவான்களான ஜோ ஃபிரேஸியர், ஜார்ஜ் ஃபோர்மன் ஆகியோரை வீழ்த்தி உலக ஹெவிவெயிட் பட்டத்தை பெற்றவர் முகமது அலி.
 
கடந்த 1960-ஆம் ஆண்டு ரோமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் லைட் ஹெவிவெயிட் பிரிவில் தங்கம் வென்றார். ஆனால், நிற பாகுபாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த தங்கப் பதக்கத்தை ஆற்றில் வீசியதாக அவர் மீது சர்ச்சை எழுந்தது. 

வியட்நாம் போருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அமெரிக்க ராணுவத்தில் சேர அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பண மோசடி காரணமாக கைது செய்யப்பட்டபோது குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டதுடன், அவரது குத்துச்சண்டை பட்டமும் பறிக்கப்பட்டது. 

குத்துச்சண்டை உலகின் முடிசூடா சக்கரவர்த்தியான முகமது அலி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பார்க்கின்சன் நோயால் அவதிப்பட்டு வந்தார். பார்கின்சன் என்பது மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி அதன் மூலம் மனித உடலின் இயக்கத்தை முடக்கக்கூடிய ஒருவிதமான வாத நோயாகும். 

முதுமை, குத்துச்சண்டை போட்டிகளின் போது தலையில் விழுந்த குத்துக்களின் தாக்கங்கள் காரணமாக, அவருக்கு வேறு சில உடல் நலக் கோளாறுகளும் ஏற்பட்டன. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அலி கடந்த சில நாட்களாக மரண போராட்டத்தில் இருந்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...