வெள்ளி, 15 ஏப்ரல், 2016

அருப்புக்கோட்டை ஜெயலலிதா கூட்டம் , ஒரு நேரலை.

தமிழக முதல்வர் ஜெயலலிதா வெள்ளியன்று அருப்புக்கோட்டையில் மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மதியம் 2 மணிக்கு ஜெயலலிதா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் காலை 10 மணி முதலே ஆட்கள் திரட்டிவரப்பட்டனர். 
அவர்கள் கொளுத்தும் வெயிலில் திறந்தவெளியில் அமரவைக்கப்பட்டிருந்தனர்.
ரூ. 200 மற்றும் உணவுபொட்டலம், இரண்டு தண்ணீர் பாக்கெட்டுகள், தொப்பியும், விசிறியும் வழங்கப்பட்டது. என  கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டவர்களிடமிருந்து  தெரிந்தது.

மதுரை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த வாகனங்கள் அருப்புக்கோட்டை-விருதுநகர் சாலை வழியே வந்ததால் அருப்புக்கோட்டை நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வழக்கமாகச் செல்லக்கூடிய பேருந்துகள் இருசக்கர வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் பொதுமக்கள் தவித்தனர்.
மதுரை-சாத்தூர் நான்குவழிச்சாலையில் உள்ள அணுகுசாலைகள் மூடப்பட்டன. 
இதனால் இருசக்கர- நான்கு சக்கர வாகனங்கள் செல்லமுடியவில்லை.
கூட்டத்திற்கு வந்திருந்த அருப்புக்கோட்டையை அடுத்துள்ள புளியம்பட்டியைச் சேர்ந்த சண்முகநாதன் மனைவி சுந்தரி (40) தவறி கீழே விழுந்ததில் அவரது கை முறிந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் எஸ்தர் பிரேமா, வெயிலின் கொடுமை தாங்காமல் குறைந்த ரத்தம் அழுத்தம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். 
இவர் நடமாடும் மருத்துவக்குழு மூலம் கல்லமநாயக்கன்பட்டி அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.
பொதுக்கூட்டம் நடந்த பகுதியில் நான்கு பெண்கள் மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு அங்கேயே குளுக்கோஸ் கொடுத்து உட்காரவைக்கப்பட்டனர்.
இது போல் மயக்கம் அதிகமாக இருப்பதால் தண்ணீருடன் இந்த கூட்டத்தில் குளுகோசும் கொடுக்கப்பட்டது.
மீண்டும் “கட்-அவுட்” கலாச்சாரம் தலை தூக்கியதை அருப்புக்கோட்டையில் காணமுடிந்தது. 
40 அடி முதல் 50 அடி உயரத்தில் முதல்வர் ஜெயலலிதா கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
எம்.ஜி.ஆர் படங்களை பார்க்க முடியவில்லை. 
பொதுக்கூட்ட மேடையில் மட்டும் அண்ணா, பெரியார் மற்றும் எம்ஜிஆர் படங்கள் பேருக்கு சிறிய அளவில் இடம் பெற்றிருந்தன.
 ஜெயலலிதாவின் பேச்சை குறிப்பெடுக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் அலைக்கழிக்கப்பட்டனர். 
 வேட்பாளர்கள் 11 மணிக்குள் மேடை அருகே வந்துவிடவேண்டும். 
கூட்டம் கேட்க வருபவர்களை  12 மணிக்குள் கூட்டம் இடத்தில் உட்கார வைத்து விட  வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிமுகவினர் கூறினர்.
பொதுக்கூட்ட மேடையின் பின்புறம் ஜெயலலிதாவிற்காக குளிர்சாதன வசதிகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு வைக்கப்பட்டிருந்த குளிர்சாதனப் பெட்டிகளை பத்திரிகையாளர்கள் யாரும் படமெடுத்துவிடக்கூடாது என்பதற்காக அவை துணியால் மூடி மறைக்கப்பட்டிருந்தன.
 தவிர காவல்துறையினரும் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்தனர்.
 மேடை அருகே ஜெயலலிதாவின் ஹெலிகாப்டர் இறங்குவதற்கான தளம் அமைக்கப்பட்டிருந்தது. பத்திரிகையாளர்கள் படமெடுக்க காவல்துறை அனுமதிக்கவில்லை. 
அதுவும் உயரமான பந்தல் போட்டு மறைக்கப்பட்டிருந்தது.
கூட்டத்திற்கு வந்திருந்த ஆண்களில் ஏராளமானோர் அப்பகுதியில் உள்ள டாஸ்மாக்கடைகளுக்குச் சென்று தங்களது தாகத்தை தணித்துக்கொண்டனர். 
இதனால் அக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. பலர் சரக்குகளை வாங்கிக்கொண்டு தண்ணீர் பாக்கெட்டுகளுடன் ஆங்காங்கே மர ஓரங்களில் கூட்டம் கூட்டமாக நின்று தங்களை உற்சாகப்படுத்திக்கொண்டனர்.
 கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா, வழக்கமான ‘படிப்படியாக மதுவிலக்கு’ பல்லவியை அவர்களிடமே பாடினார். 
5 வருடங்களில் மேற்படி 14 தொகுதிகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் பற்றியும், நடைபெற்று வரும் பணிகள் பற்றியும் அடுக்கிக் கொண்டே போனார். 
வந்திருந்தவர்கள் ஏதும் ஜெயலலிதா பேசுவதி கேட்காமல் தங்களுக்குள் பேசிக்கொண்டும் ஜெயலலிதா தனது பேச்சை நிறுத்தி கூட்டத்தை பார்க்கும்போது சொல்லிக்கொடுத்தது போல் கைத்ட்டைக்கொண்டுமிருந்தனர்.
அரசு கலைக் கல்லூரிகள் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூரில் அமைக்கப்பட்டுள்ளதாக உண்மைக்குப் புறம்பான தகவலை அவர் தெரிவித்தார். 

ஆனால், சிவகாசியில் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. வாடகை கட்டிடத்திலேயே கலைக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
 விருதுநகர் மாவட்டத்தில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். 

ஆனால், விருதுநகர் ,கோவில்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் இன்னும் இத்திட்டம் குழாய்களே பதிக்கப்படாத போது  திட்டம் துவங்கி நடைபெற்று வருவதாக ஜெயலலிதா கூறினார.

அதற்கும் கூட்டத்துக்கு வந்திருந்த அப்பகுதி மக்களே கைத்தட்டினர்.அதுபற்றி அவர்களிடம் கேட்டபோது "அதெல்லாம் என்ன பேசினார் என்று தெரியாது.அவர் பேசியதை யார் கேட்டார்கள்.எங்களை கூட்டி வந்தவர் ஜெயலலிதா பேச்சை நிறுத்தி கூட்டத்தை பார்க்கும்போதெல்லாம் விடாமல் கைத்தட்ட வேண்டும் என்று சொல்லித்தான் 200 ரூபாய் தந்தார்.
அதை நாங்கள் சரியாக செய்தோம்"

என்றார்.கூலிக்கு மாரடிப்பது என்பது இதுதானோ?

jaya intro 2016 04 15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...