செவ்வாய், 19 ஏப்ரல், 2016

100% வாக்குப்பதிவு சரி.100% நேர்மை ?

தமிழ் நாட்டில் 100% வாக்குப்பதிவுக்கு ஆடாத ஆட்டமெல்லாம் ஆடும்  தேர்தல் ஆணையம்,ராஜேஷ் லக்கானி தேர்தலை 100% நேர்மையாக நடத்துவதை மட்டும் கண்டு கொள்வதில்லை.

மால்களில் தேர்தல் ஆட்டம் போடுவதை குறைத்து ஆளுங்கட்சியினர் நடத்தும் தேர்தல் விதிமுறைகள் மீறல் அலங்கோல ஆட்டத்தை நிறுத்தி நடத்த தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?

மேற்கு வங்கத்தில் ஆளுங்கட்சியான திரினாமுல் காங்கிரசு வெற்றிப்பெறுவது கடினம் என்று தெரிகிறது.தமிழ் நாட்டைப் போல் இல்லாமல் அங்குள்ள தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின்
அத்து மீறல்களை அவ்வப்போது கிள்ளி எறிந்து விடுகிறதாம்.

கிட்டத்தட்ட எல்லா மாவட்ட ஆட்சியர்கள்,காவல்துறை அதிகாரிகள் என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியவர்களை  விட்டதாம்.இதற்கெல்லாம் டெல்லியில் அனுமதி கேட்டு காத்திருக்க வில்லையாம்  மே.வங்க தேர்தல் ஆணையம் தனது அதிகாரத்தை வைத்தே இதை அது செய்துள்ளது.
மே .வங்கத்தில் யார் வென்றாலும் அது 90% நேர்மையான வெற்றி என்பதாக  தேர்தல் ஆணையம் செயல்பாடு உள்ளதாம்.

தமிழ் நாட்டில்  100% வாக்கு பதிவுக்கு   மட்டுமே உத்திரவாதத்தை தமிழக தேர்தல் ஆணையம் தனது நடனங்கள் மூலம் தந்து வருகிறது.

 அரசு இயந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்துவதிலும் எவ்வித தயக்கமும் காட்டுவதில்லை. கடந்த 5 ஆண்டுகளாக அமைச்சர்களை மிஞ்சும் அடிமைகளாகிவிட்டார்கள் அதிகாரிகள். 
ஊழல் வழக்கில் ஜெயலலிதா  தண்டிக்கப்பட்டிருந்த காலத்தில் அ.தி.மு.கவினர் நடத்திய ‘நேர்த்திக் கடன்’களில் கலெக்டர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நேரடியாகவே பங்கேற்றனர். 
‘அம்மாவின் உத்தரவுப்படி’ என்ற வார்த்தை இல்லாமல் எந்த அதிகாரியும் எதையும் பேசிவிடமுடியாது என்பதே எழுதப்படாத சட்டம். அதனால்தான் ஒரு கலெக்டர் பேட்டியளிக்கும்போது தன்னியல்பாக, “அம்மாவின் உத்தரவுப்படி மழை பெய்தது” என்றார். 

அந்த அதிகாரி உள்பட அத்தனை பேரும் இன்னும் சக்திமிக்க பதவிகளில்தான் உள்ளனர். எவரையும் இடமாற்றம் செய்யவில்லை. மேற்குவங்கத்திலும் தேர்தல் நடைபெறுகிறது. அங்கே 37 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
ஆனால், தமிழகத்தில் தி.மு.க, பா.ம.க என வரிசையாக பல எதிர்க்கட்சிகள் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையரிடம் புகார் மனுக்கள் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. 
ஒரே நபருக்கு ஒன்பது பெயர்களில் தனித் தனி வாக்காளர் அட்டை என அதிமுகவினரின் பரிந்துரையை ஏற்று செயல்படுவதில் தொடங்கி 
 ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சார ஏற்பாடுகள் அனைத்திலும் ஆளுந்தரப்பின் விதிமீறல்கள் 200% உள்ள நிலையில், ஓட்டுப்பதிவு 100% என விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்துவதும் அதற்காக அதிகாரிகள் டான்ஸ் ஆடுவதும், கடமை தவறும் தங்களின் செயல்பாடுகளை திசை திருப்பும் நடவடிக்கைகளே ஆகும். 


2011 தேர்தல் தி.மு.க ஆட்சியில் இருந்தபோது பணப்பட்டுவாடா புகார்கள் எழுந்த நிலையில், ‘அதிரடி’ அதிகாரிகள் திடீர் குபீர் என வெளிப்பட்டு நடவடிக்கை எடுத்தனர்.
 ‘மாற்றத்துக்கு வாக்களியுங்கள்’ என்று புதுவகை விழிப்புணர்வு ஊட்டிய அதிகாரிகளும் அப்போது உண்டு. 
ஆனால், அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நடைபெறும் 2016 தேர்தலில் எதிர்க்கட்சிகள் பல புகார்களை அளித்தும் தேர்தல் ஆணையர் அமைதி காக்கிறார். 
200% விதிமீறல்களைக் கண்டுகொள்ளாமல் 100% வாக்குப்பதிவு என அதிகாரிகள் டான்ஸ் ஆடுகிறார்கள். 

100% வாக்குப்பதிவுக்காக நீங்கள் இப்படியெல்லாம் சிரமப்படவேண்டியதில்லை.
 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது ஒரு பூத்தில் 120% வாக்குப்பதிவு என்கிற சாதனையை உங்களின் கண் முன்னாலேயே நிகழ்த்திக் காட்டியது ஜெயலலிதாவின் உத்தரவுப்படி நடக்கும் அ.தி.மு.க. எனவே, 100% வாக்குப்பதிவு நடக்கவேண்டும் என்றால், நீங்கள் வழக்கம்போல விதிமீறல்களைக் கண்டுகொள்ளாமல் மீடியாக்களில்  முகம் காட்டி பேட்டி கொடுங்கள். 
வாக்குப்பதிவு 100 சதவீதத்தைத் தாண்டும் சாதனையை ஆளுந்தரப்பு கச்சிதமாக செய்துமுடித்துவிடும்.       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...