சனி, 26 மார்ச், 2016

கருணாநிதி முகநூலை வாங்கி விட்டார்

வைகோ தான் இன்றைய கார்டூனாக இருக்கிறார்.


மக்கள் நலக் கூட்டணி ஒருங்கினைப்பாளருக்கு இப்படி ஒரு நிலை வந்ததற்கு அவரைத்தவிர வெறு யாருமே காரணம் இல்லை.
கருணாநிதி விஜயகாந்தை 80 சீட்டுகள்,500 கோடிகள் என்று பேரம் பேசி திமுக வுடன் கூட்டணி வைக்க அழைத்தார் என்று கூறியது புயலைக் கிளப்பி விட்டது.

ஏற்கனவே வைகோவின் மேல் கோபத்தில் இருந்த திமுக இதை நிரூபிக்கக் கூறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது.அதிர்ந்த வைகோ ஊடகத்திடம் மெட்டு விடாமல் நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் என்று சொல்லி விட்டார்.

ஆனால் பேரம் உண்மையில் நடந்தாலும் கூட பகிரங்கமாக ஒப்புக்கொள்ள பிரேமலதா அரசியல் தெரியாதவரா?

"அப்படி பேரம் ஒன்றும் நடக்க வில்லை.வைகோ கூறினால் அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் எங்களுக்கு பேரம் என்றால் என்ன என்றே தெரியாது" என்று தன்னை கேள்வி கேட்ட நிருபர்களிடம் சொல்லி விட்டார்.

வசமாக மாட்டிக்கொண்ட வைகோ "நான் நாளிதழ்களில் வந்ததைத்தான் சொன்னேன்."என்று அவர் வழக்கமான பல்டியை அடித்தார்.அத்துடன் விடாமல் பிரேமலதா மூலமாக 'அண்ணன் வைகோ மீதான வழக்கை கருணாநிதி பெருந்தன்மையுடன் வாபஸ் பெற வேண்டும்" என்று சொல்ல வைத்தார்.
ஆனால் திமுக வைகோ மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருக்கிறது.தேர்தல் நேரம் அல்லவா?

இத்துடன் வைகோ வாலை  சுருட்டிக்கொண்டிருக்கலாம் .ஆனால் "எதையும் ஆழ்ந்து யோசித்துதான் பேசுவேன் "என்று கூறியவருக்கு யோசனை ஊட்ட 2ஜி யே ஸ்டாலினால்தான் முறைகேடாக முடிந்தது என்று அடுத்த கணையை தொடுத்துள்ளார்.

2ஜிக்கும் ஸ்டாலினுக்கும் என்ன தொடர்பிருக்கும்?எப்படி அதில் ஸ்டாலின் மூக்கை நீட்டினார் என்பதை அடுத்து வைகோ விளக்குவார் என்று நம்புவோம்.

ஆனால் அதற்குள் அடுத்த வக்கீல் நோட்டீஸ் வைகோவுக்கு போய்விடும் என்று தெரிகிறது.

விசாரிக்கும் சைனி யே 2ஜி ஊழலா.முறைகேடா என்று தீர்ப்பு வழங்க பலத்த யோசனையில் உள்ளார்.ஏ.ஜி.வினோத் ராய் தனது அறிக்கையில் "இப்படி முதலில் வந்தோருக்கு என்று இல்லாமல் ஏலம் விட்டிருந்தால் இவ்வளவு கிடைத்திருக்கும்.ஆனால் இப்போது இவ்வளவுதான் வந்துள்ளது .அரசுக்கு இழப்பு 150000 கோடிகளாக இருக்க வாய்ப்பு உள்ளது."என்று குற்றம்தான் சாட்டியுள்ளார்.

அதை திமுகவை தன பிடிக்குள் வைக்க எண்ணிய காங்கிரசு சிபிஐ விசாரனையாக்கி ஆ.ராசா,கனிமொழி இருவரையும் திகார் சிறையில் வேறு அடைத்து அசிங்கம் செய்தது.
ஆனால் இன்றைய பாஜக அரசு 2ஜி,3ஜி பொது ஏலத்தில்  ஆ.ராசா ஈழத்தொகையை விட சில லட்சங்களே அதிகமாக வந்துள்ளது.
வினோத் ராய் கூறிய லட்சங் கோடிகள் வெறும் மனக்கணக்காகவே போய் விட்டது.இன்று 2ஜி முறைகேடு கணக்கு அடித்தளத்தையே  தற்போதைய ஏலம் ஆட்டங்காண வைத்து விட்டது.
இந்த நிலையில் ஸ்டாலினை 2ஜி உள்ளே இழுத்துப் போட எண்ணுவது வைகோவின் சின்னப் பிள்ளைத்தனமான ஸ்டாலின்,திமுக மீதான கோபத்தைத்தான் காட்டுகிறது.

தற்போதைய பரவல் செய்தி "கருணாநிதி முகநூலை வாங்கி விட்டார் .அதானால்தான் என்னை கிண்டல் செய்து இடுகைகள் அதிகமாக வருகிறது"என்று வைகோ பேசியதாக கிண்டல் செய்யப்படுகிறது.

வைகோவின் இன்றைய செயல்பாடுகள் அவர் அப்படி சொல்லியிருப்பார் என்றே நம்பத்தூண்டுகிறது.
விஜய் காந்தை முன்னாள் மக்கள் நலக் கூட்டணியும் தற்பொதைய கேப்டன் நல அணியுமான அணி முதல்வர் வேட்பாளராக அறிவித்ததும் வைகோவின் திரு விளையாடல் என்றே தெரிகிறது.
நல்லக்கண்ணு,திருமாவளவன்,வைகோ என்று முதல்வராக யார் என்ற பேச்சு கிளம்பிய போது "தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர்தான் முடிவெடுக்க வேண்டும் என்ற தீர்மான செயல்திட்டத்தில் ஏறியது.

ஆனால் விஜய் காந்த் சேர்ந்த பொழுதே வைகோ "விஜயகாந்த்தான் முதல்வர் வேட்பாளர்.இனி ம.ந.கூ ட்டணி விஜயகாந்த் அணி"என்றார்.அதுவும் "நான் எதையுமே ஆழமாக சிந்தித்துதான் பேசுவேன்"என்ற அடைமொழியுடன்.

விஜயகாந்த் அணி என்ற பெயர் வைகோ வைத்தவிர வேறு யாருக்கும் பிடிக்கவில்லை.
அது அவ்வப்போது குமிழியாக வெடித்துக் கொண்டிருக்கிறது.

விஜயகாந்த் ,வைகோ,ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒரே இனம்.அதனால்தான்நல்லக்கண்ணு, தலித் திருமாவளவன் முதல்வர் வேட்பாளர்கள் என்றபோது தட்டிக்கழித்த வைகோ விஜயகாந்த் என்றவுடன் யோசிக்காமல் முதல்வராக்கி விட்டார்.

இனம் காரணம் இல்லாவிட்டால் 500 கோடிகளை பேரம் பேசிய திமுகவிடமிருந்து விஜயகாந்தை இங்கு கூட்டி வர அதை விட அதிகமாகவும் ,முதல்வரையும்  கொடுத்தாரா?

அப்படி என்றால் அதிமுக வாக்குகளை சிதறடித்து மீண்டும் ஜெயலலிதாவை முதல்வராக்கத்தான்சிலர் கூறுவது போல்  1500 கோடிகளை வாங்கிகொண்டு இப்படி கூட்டணி உருவாக்கிக்கொண்டு அலைகிறாரா?

இது போன்ற சிந்தனைகள் மக்களிடம் மற்றுமின்றி மக்கள் நலக் கூட்டணி இரண்டாம் கட்டத்தலைவர்கள்,தொண்டர்கள் மத்தியில் வந்து விட்டது.

முன்பு திமுக மாநாட்டுக்கு வந்து கொண்டிருப்பதாக அலைபேசியில் பேசிக் கொண்டே போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவுடன் தொகுதி உட ன் பாடு கண்ட நம்பிக்கை நாயகர்,நானயஸ்தர்தானே இந்த வைகோ.

திமுகவில் இருந்து எட்டு மாவட்ட செயலர்களைப் பிரித்துக்கொண்டு வந்து கட்சி ஆரம்பித்தார் வைகோ.ஆனால் அவர்கள் தற்போது திமுகவுக்கு மீண்டும் சென்று விட்டவுடன் திமுக தனது கட்சியை அழிக்க முயற்சிப்பதாக புலம்பினார்.அப்படி என்றால் இவர் முன்பு செய்ததற்கு பெயர் என்ன?

இன்றைய வைகோ எண்ணம்,மூளை,ரத்தம் அனைத்திலும் ஊறி இருப்பது திமுக எதர்ப்பு.குறிப்பாக ஸ்டாலினை ஒழிப்பது.அதற்காக அவர் எந்த எல்லைக்கும் செல்வார்.
என்னவேனுமானாலும் பேசுவார்.
என்ன வேண்டுமானாலும் செய்வார்.

அதைத்தான் இன்றைய வைகோ செயல்பாடுகள் காட்டுகிறது.எ தை தின்றால் பித்தம் தெளியும் என்ற வெறி.

ஆனால் வைகோ ஒன்றை மட்டும் மறந்து விட்டார்.அது கலைஞரிடம் உள்ள சாணக்கியம்.

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

அதை வைகோ உறுதிபடுத்தி வருகிறார்.
=======================================================================================
ஜெயலலிதா+சசிகலா =பிரேமலதா .
விஜய்காந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்துள்ளனர்.
குதிரைக் கொம்பாக கே.ந.கூ ட்டணி வென்றால் பெயருக்குத்தான் விஜயகாந்த் முதல்வர் அதிகார மையமோ அண்ணி பிரேமலதாதான்.
இதை ம.ந.கூட்டணி மற்றக் கட்சித்தலைவர்கள் உணர்ந்தார்களோ இல்லையோ.நடக்கப்போவது அதுதான்.
இன்றைய பொழுதில் எந்திரன் விஜயகாந்தை இயக்கம் ரிமோட்  பிரேமலதா தான்.இது ஊரறிந்த ரகசியம்.
பிரேமலதா  ஜெயலலிதாவுக்கு சற்றும் குறைந்தவர் அல்ல.அது எதில் என்பது அவர் பேச்சை,பேட்டியை கெட்டவர்களுக்கு தெரியும்.அத்துடன் சசிகலாவும் அவருள் அடக்கம்.அதாவது ஜெயலலிதா+சசிகலா =பிரேமலதா .
அது இப்போதே நடைமுறைக்கு வந்து விட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளாக பொது வெளியில் விஜயகாந்தின் பேச்சு மற்றும் செயல்பாடு எப்படி உள்ளது என்பது நாடறிந்த விஷயம். 
குறிப்பாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர் போய் சிகிச்சைப் பெற்று வந்தபிறகு இந்த இரு ஆண்டுகளில் ரொம்பவே மோசம். தன்னிலை மறந்து அவர் காணப்படுகிறார். ஒன்றுக்கொன்று தொடர்பின்றி ஏதேதோ பேசுகிறார். அந்தப் பேச்சிலும் தெளிவில்லை. தன்னால் சிரிக்கிறார்... அல்லது கண்ணீர் வடிக்கிறார். நடையில் பெரும் தள்ளாட்டம். 
அவரைக் குறை சொல்வதற்காக இப்படி எழுதவில்லை. 
இருக்கும் நிஜத்தைச் சொல்ல வேண்டும் அல்லவா? 
விஜயகாந்தை கூட்டணிக்குள் கொண்டுவர திமுக பகீரதப் பிரயத்தனம் செய்து வந்தபோதே, திமுகவுக்குள்ளேயே இருக்கும் மூத்த தலைவர்கள் சிலர், 'இவரைக் கூட்டணிக்கு அழைப்பது நமக்குத்தான் பாதகமாக முடியும். 
இவரை வைத்துக் கொண்டு எப்படி பிரச்சாரம் செய்வது? 
மேடைகளில் இவர் செய்யும் கோமாளித்தனங்களை நாமல்லவா சமாளிக்க வேண்டி இருக்கும். விழுகிற கூடுதல் ஓட்டுக்களைப் பிரிக்க அது போதாதா?' என்று கேட்டு வந்தனர். 
விஜயகாந்திடம் மக்கள் நலக் கூட்டணி பேச ஆரம்பித்ததுமே, அந்த அணியில் உள்ள நான்கு கட்சிகளின் ஆதரவாளர்களும் இதைத்தான் சுட்டிக் காட்டினர். 
ஆனால் கடைசியில் மநகூ - தேமுதிக தேர்தல் உடன்பாடு எட்டப்பட்டுவிட்டது. 
அத்துடன் வெளியில் தெரியாத தேர்தல் பிரச்சார உடன்பாடு ஒன்றையும் போட்டுள்ளதாம் இந்த கூட்டணி. இனி தேர்தல் பிரச்சாரங்களில் விஜயகாந்த் பேசமாட்டார்.. அல்லது ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு முடித்துக் கொள்வார்.
 மற்ற அனைத்தையும் அவர் மனைவி பிரேமலதாவும் மச்சான் சுதீஷும் பார்த்துக் கொள்வார்கள். வைகோ, திருமா, ஜி ராமகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்ட தலைவர்களுடன் பிரச்சாரத்துக்குப் போகும்போது, அங்கேயும் வாக்காளர் பெயரைக் கூறி (அதிலும் பெரும் பிரச்சினை இருக்கே!) விஜயகாந்த் வாக்குக் கேட்பதோடு சரி. 
மீதி எல்லாவற்றையும் இந்தத் தலைவர்களே பார்த்துக் கொள்வார்களாம். 
அதாவது விஜயகாந்தை அழைத்துப்போய் ஊர் ஊராகக் காட்டுவதுதான் இந்தக் கூட்டணியின் புதிய உத்தி! 
இதற்கு வெள்ளோட்டமாக இப்போதே முதல் ரவுண்ட் பிரச்சாரத்தை தன்னந்தனியாக ஆரம்பித்துவிட்டார் பிரேமலதா. 
ஒருவேளை கூட்டணி ஜெயித்துவிட்டால், ஆட்சி முறையும் இப்படித்தான்?
=====

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...