செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

இலவசங்களால் தற்கொலை ?

இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி சப்ளை செய்த நிறுவனங்களுக்கு, 1,200 கோடி ரூபாயை தராமல், தமிழ்நாடு அரசும் நுகர்பொருள் வாணிபக் கழகமும் இழுத்தடித்து வருவதால், இலவச பொருட்களை சப்ளை செய்த நிறுவனங்களின் உரிமையாளர்கள், கடும் விரக்தியில் உள்ளனர். 
அவர்களுக்கு  கடன் வழங்கிய வட்டிக்காரர்கள் மிரட்டல் விடுத்து வருவதால், தற்கொலை முடிவில் இருப்பதாகவும், அவர்கள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர். 
 கருணாநிதியின் தி.மு.க., ஆட்சியில், ஏழை மக்களுக்கு இலவச கலர், 'டிவி' வழங்கப்பட்டது. 
அதை பின்பற்றி,ஜெயலலிதா  அரசு பொறுப்பேற்ற, 2011ல் இருந்து, ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் குடும்பங்களுக்கு, இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி அல்லது மின் அடுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை, தனியார் நிறுவனங்களிடம் இருந்து, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்கிறது; வருவாய் துறை வினியோகம் செய்கிறது. 
35 லட்சம் பொருட்கள்:கடந்த, 2011 - 12ல், 1,200 கோடி ரூபாய்க்கு, 25 லட்சம் இலவச பொருட்கள் வாங்கப்பட்டன. 2012 - 13, 2013 - 14ல், தலா, 35 லட்சம் பொருட்கள் வாங்கப்பட்டன. 
இவற்றின் மதிப்பு, 3,000 கோடி ரூபாய். இதன்பின், 80 லட்சம் இலவச பொருட்களை, 3,200 கோடி ரூபாய்க்கு வாங்க முடிவு செய்யப் பட்டது. 
அதன்படி, 27நிறுவனங்களிடம் இருந்து, 80 லட்சம்பொருட்கள் வாங்கும் பணி, 2015 பிப்ரவரியில் துவங்கியது. தற்போது, கொள்முதல் முழுவதும் முடிந்து விட்டது. 
ஆனால், 1,200 கோடி ரூபாயை, இலவச பொருட்கள் சப்ளை செய்த நிறுவனங்களுக்கு தராமல், தமிழ்நாடு அரசு  இழுத்தடித்து வருவதாகவும் , கொள் முதல் செய்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பணம் வழங்கும் என்று கூறு வதாகவும் ஆனால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்  பணம் வழங்குவதை கண்டு கொள்ளாமல் இழத்தடிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வாணிபக் கழகம் இறுதிகட்டமாக, 80 லட்சம் பொருட்களை மட்டும் சப்ளை செய்யும்படி கூறியது. அவை, 2015 இறுதியில், சப்ளை செய்யப்பட்டு விட்டன. 
பொருட்கள் சப்ளை செய்ததற்கு, 1,200 கோடி ரூபாய் தர வேண்டும். ஆனால், அதை தராமல் இழுத்தடித்து வருகின்றனர். இதனால், உற்பத்தி ஆலைகளில் பணிபுரியும், 10 ஆயிரம் ஊழியர்களுக்கு, சம்பளம் தர முடியவில்லை; வங்கிக் கடனை கட்ட முடியவில்லை; உதிரிபாகங்கள் சப்ளை செய்தநிறுவனங்களுக்கு, பணம் தர முடியவில்லை.
வட்டிக்காரர்கள், 'பணம் தரவில்லை என்றால், கொலை செய்து விடுவேன்' என, மிரட்டி வருகின்றனர். இதனால், தற்கொலை முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலையில் நாங்கள் இருக்கிறோம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 300 கோடி ரூபாய் வழங்கும்படி, வாணிபக் கழகத்திற்கு, தமிழக அரசு உத்தரவிட்டது; 
ஆனாலும், பணம் தரவில்லை. 
தேர்தல் தேதியை அறிவித்து விட்டால், பணம் பெறுவது சிரமம். 
அதை மனதில் வைத்தே, நிலுவைத்தொகையை தராமல், வாணிபக் கழகம் இழுத்தடித்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
தமிழக அரசு, ரேஷன் கடைகளில் அரிசி பெற தகுதியுடைய, 1.85 கோடி நலிந்த குடும்பங்களுக்கு, இலவச பொருட்கள் வழங்குவதாக அறிவித்தது. 
ஆனால், அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் என, அதிக வருவாய் ஈட்டும், 10 லட்சம் பேர், அரிசி கார்டு வைத்து உள்ளனர். 
இதனால், 1.75 கோடி இலவச பொருட்கள் மட்டுமே வாங்கப்பட்டு, அவற்றின் வினியோகம் முடியும் தருவாயில் உள்ளது.அவைகளை எல்லாம் வாக்குகளாக மாற்ற ஜெயலலிதா அரசு முயற்சிக்கிறது.
ஆனால் அடிமாட்டு விலை ஒப்பந்தத்தில் இலவச பொருட்களை கந்து வட்டியில் மூலப்பொருட்கள் வாங்கி தயாரித்து கொடுத்தவர்கள் நலிந்த நிலைக்கு சென்று தற்கொலை முயற்சிகளில் ஈடுபடும் நிலையில் உள்ளனர்.
==========================================================================================================




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...