ஞாயிறு, 14 பிப்ரவரி, 2016

யார் யாரோ ஆட்சியை

 அனுபவிக்கிறார்கள்.


மதுரையில் நான் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது திங்கள்கிழமை மனுநாளில் மனு வாங்கி முடித்துவிட்டு வெளியில் வந்தேன்.
கைலி, அழுக்கு சட்டையோடு 45 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் என் எதிரே
வந்தார்.
 'ஏன் முன்னாடியே வரக் கூடாதா? கிளம்பும்போது வருகிறீர்களே... நீங்கள்
யார்?’ 
என்று அவரிடம் கேட்டேன். 
"அய்யா... நான் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் பேரன். நானும் என் தம்பியும் கட்டடங்களுக்கு பெயின்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறோம். சமீபத்தில் ஒரு உயரமான கட்டடத்துக்கு பெயின்ட் அடிக்கும்போது என் தம்பி தவறி விழுந்துவிட்டான். இப்போது உடம்பு சரியில்லாமல் இருக்கிறான். அவனுக்காக உதவி கேட்டு இங்கே வந்தேன். வெளியில் இருக்கும் காவலாளி என்னை உள்ளே விடாமல் துரத்தி
அடித்தார். அவரை சமாளித்துவிட்டு வர இவ்வளவு நேரம் ஆகிவிட்டது’ என்று பரிதாபமாகச் சொன்னார். 
நான் அதிர்ந்துபோனேன்.

'உனக்கு இங்கே நிற்கும் உரிமையை வாங்கிக்கொடுத்ததே என் பாட்டன்தானடா என்று முகத்தில் அடித்ததுபோல சொல்ல
வேண்டியதுதானே?’ என்று சொல்லி அவரை ஆசுவாசப்படுத்தினேன். 

அதன் பிறகு அவருக்கு 50 ஆயிரம் பணம் கடன் ஏற்பாடு செய்துகொடுத்து உழவர் உணவகம் தொடங்கச் செய்தேன்.

வ.உ.சி-யின் குடும்பமே வக்கீல் குடும்பம்.
வெள்ளைக்காரனுக்கு எதிராக சுதேசி கப்பல்விட்ட கம்பீரமான வ.உ.சி-க்கு ஆங்கிலேய அரசு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. உடம்பு முழுவதும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவரைச் செக்கிழுக்கச் சொல்லி உத்தரவிட்டது.


தேசத்துக்காக சொத்துக்களை இழந்து ,சுதேசி கப்பலை ஓட்டி வெளையாரால் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று செக்கிழுத்தவரின் வாழ்க்கையை ஓட்ட பேரன்கள் பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். 
சம்பந்தமே இல்லாத யார் யாரோ தியாகிகள் என்று ஆட்சியின் பலனை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
                                                                                            - சகாயம் ஐ.ஏ.எஸ்
===============================================================================================
"நமக்கு நாமே
ஸ்டாலின் அரசியல் வாழ்வில் ஒரு மைல் கல்!
திருமணமாகி ஒரு சில மாதங்களே முடிவுற்ற நிலையில் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்....
அன்று சந்தித்த அதே ஸ்டாலினைத் தான், நான் 12-2-2016ஆம் தேதி காலையில் கோபாலபுரத்தில் சந்தித்தேன்....
12-2-2016 அன்று காலையில் என்னுடைய உதவியாளர் நித்யா என்னிடம் வந்து தளபதி அண்ணன் இன்றோடு 234 தொகுதிகளிலும் தான் மேற்கொண்ட "நமக்கு நாமே" பயணத்தை முடிக்க விருக்கிறார்.
 அந்தப் பயணம் முடிந்தவுடன் நேரில் உங்களைச் சந்தித்து வாழ்த்து பெற வருகிறார் என்று கூறியவுடன் அவசர அவசரமாகக் குளித்து விட்டு பொருளாளர்" வருகைக்காக "தலைவர்" நான் காத்திருந்தேன்! அப்போது என்னுடைய கவனமும் நினைவும் எதிரே இருந்த தொலைக் காட்சி பெட்டியிலே பதியவில்லை; என்னிடம் சொல்லாமலேயே 1976ஆம் ஆண்டுக்குப் போய் விட்டன.
1976ஆம் ஆண்டு நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, "மிசா" சட்டத்தின்படி கழகத்தினர் வேட்டையாடப்பட்டார்கள். 
கழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி, இன்றைய திராவிடர் கழகத் தலைவரும், அன்றைய பொதுச் செயலாளருமான இளவல் கி. வீரமணி, விடுதலை சம்பந்தம், நடிகவேள் எம்.ஆர். இராதா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பழைய காங்கிரஸ் கட்சியினர் எனப் பலரும் கைது செய்யப்பட்டு சிறையிலே இருந்தனர். சென்னை மாவட்டத்தில் கைதான சிலரைக் குறிப்பிட வேண்டுமென்றால் முரசொலி மாறன், ஆற்காடு வீராசாமி, ஏ.வி.பி. ஆசைத்தம்பி, நீலநாராயணன், மு.க. ஸ்டாலின், சிட்டிபாபு, ஆர்.டி. சீத்தாபதி, டி.ஆர். பாலு, அ. செல்வராசன், சா. கணேசன், சோ.மா. ராமச்சந்திரன், பழக்கடை ஜெயராமன், ஆயிரம் விளக்கு உசேன், வழக்கறிஞர் ஆர். கணேசன் என்று நீண்ட பட்டியலே உண்டு. 
சென்னையைப் போலவே மற்ற மாவட்டங்களிலே உள்ள கழக முன்னணியினர் எல்லாம் கைது செய்யப்பட்டுச் சிறைக் கொட்டடியில் தள்ளப்பட்டனர்.
திருமணமாகி ஒரு சில மாதங்களே முடிவுற்ற நிலையில் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். ஸ்டாலினைச் சுற்றி சிறை அதிகாரிகள் சூழ்ந்து நிற்க, முழுக்கை சட்டை போட்டுக் கையை மூடிக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் காண நேரிட்டது. 
என்னைக் கண்டதும், தன் கண்களில் ததும்பியிருந்த கண்ணீரை வெளிவராமல் மறைத்துக் கொண்டு என் எதிரே அமர்ந்திருந்தார். "அடித்தார்களாமே; உண்மையா?" என்று கேட்டேன். 
"இல்லை" என்று தலையை மட்டும் ஆட்டினார். வாய் திறந்து வார்த்தைகளில் சொன்னால் கதறி அழுது விடக் கூடும் என்ற உணர்ச்சி நிலை!
அன்று சந்தித்த அதே ஸ்டாலினைத் தான், நான் 12-2-2016ஆம் தேதி காலையில் கோபாலபுரத்தில் சந்தித்தேன். அதுவரை என் மனதிலே நிழலாடிக் கொண்டிருந்த நினைவுகளை ஒதுக்கிவிட்டு, ஸ்டாலினை நெஞ்சார வாழ்த்தினேன். 
234 தொகுதிகள் - 2015 செப்டம்பர் 20ஆம் தேதி கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையருகே ஸ்டாலின் தொடங்கிய "நமக்கு நாமே" விடியல் மீட்புப் பயணம், 2016 பெப்ரவரி 12ஆம் தேதி தியாகராயநகரில் நிறைவடைந்துள்ளது. 
நடுவே 146 நாட்களில், இடையில் ஒரு சில நாட்கள் வேறு சில கழக நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டு விட்டு, மற்ற நாட்களில் எல்லாம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சட்ட மன்றத் தொகுதியையும் உள்ளடக்கி தனது பயணத்தை தம்பி ஸ்டாலின் வெற்றிகரமாக முடித்துள்ளார். 
தமிழகத்திலே உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதிகளையும் அழைத்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளையெல்லாம் நேரடியாகக் கேட்டிருக்கிறார். 
இடையில் பெரு வெள்ளத்தினாலும், மழையினாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் சென்று அங்கேயுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, நிவாரண உதவிகளையும் வழங்கியிருக்கிறார். 
அவருடைய இந்தப் பயணம் முழு வெற்றி பெற, மாவட்டக் கழகச் செயலாளர்கள் எல்லாம் அல்லும் பகலும் அயராமல் ஆற்றிய அரும் பணியைப் பாராட்டாமல் இருக்க முடியாது. 
ஆனால் எந்த மாவட்டக் கழகச் செயலாளரும், அந்தப் பணியைச் சுமையென நினைக்காமல், சிரமமாக நினைத்துப் பாராமல் மிகுந்த மகிழ்ச்சியோடும், ஆர்வத்தோடும் அந்தப் பணியினை மேற் கொண்டார்கள் என்பதை நான் அறிவேன். இன்னும் சொல்லப் போனால், அந்தப் பயணத்தின்போது ஸ்டாலின் உடல் அளவில் அங்கெல்லாம் சென்ற போது, அவரது உணர்வுகளில் எனது நினைவுகளும், எண்ணங்களும் தான் நிறைந்திருந்தன.
                                                                                                                         -   கலைஞர் கருணாநிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...