திங்கள், 24 ஏப்ரல், 2017

இரட்டை இலை பாஜக கையில்

இப்போது தமிழ் நாட்டில் அரசு என்றே ஒன்று இல்லாத நிலை.எல்லா துறைகளும் ,எல்லா நிலைகளிலும் முடங்கிப்போயுள்ளது.

நடக்கும் செயல்களும் அணைகளை தெர்மோகோல் அட்டை கொண்டு மூடும் நகை செயல்களே.
ஆனால் ஆட்ச்சியை பிடிக்கும் முயற்சிகளில்மட்டும் ஆளும் அதிமுக அடலேறுகள் முட்டிக்கொண்டும்,மோதிக்கொண்டும் திரிகின்றனர்.

அவர்களின் தினத்துக்கொரு பேச்சுக்கள் தான் நமது தொல்லைக்காட்ச்சிகளுக்கு அதிரடி செய்திகள்.பிரேக்கிங் நியூஸ்.

தொலைக்காட்ச்சிகளின் பிரேக்கிங்க்கில் தமிழக மக்களின் வாழ்க்கை தான் முறிந்து கொண்டிருக்கிறது.

அதிமுக எடப்பாடி,பன்னிர் அணிகளின் மோதல் முதல்வர் நாற்காலியை,பொதுசெயலாளர் பதவிகளை யார் பிடிப்பது என்னும் அதிகார போட்டி மட்டுமே.

இப்போதும் எடப்பாடி அணியை இயக்குவது சசிகலா குடும்பம்தான்.அவர்களின் வார்த்தைக்கு கட்டுப்பட மறுத்து தான்தோன்றித்தனமாக செயல்பட்ட தினகரனை விளக்கி வைக்கத்தான் இதுவரை நடந்த நாடகங்கள்.

இப்பொது தினகரன் போய் திவாகரன் வந்து விட்டார்.ஆக சசிகலா குடும்பத்தின் கையில்தான் இன்னமும் அதிமுக ஆடசி இருக்கிறது.


எத்தனை முறையானாலும்,என்னதான் ஆனாலும் பன்னிர்செல்வத்துக்கு முதல்வர் பதவியோ,பொதுசெயலாளர் பதவியோ கிடைக்கப்போவதில்லை.எடப்பாடி அணி கொடுக்கப்போவதில்லை.
அது சசிகலா குடும்ப மாபியாக்களில் ஒருவருக்குத்தான் ஓத்துக்கிட்டு செய்யப்பட்டுள்ளது.

என்ன ஒரு வித்தியாசம் என்றால் முன்பு பாஜகவை துளியூண்டு எதிர்த்த சசிகலா கடசி இப்போது மோடி,அமித் ஷா கால்களில் சரண்.

இன்றைய இரு அதிமுக அணிகளின்  முக்கணாங்கயிறும் பாஜக வசம்தான்.

அவர்களின் நூலுக்கேற்ப இங்கு அதிமுக பொம்மைகள் ஆடுகின்றன.

சசிகலா குடுமபம் இரு அணிகளையும் இணைத்து வைக்கக் காரணமே.

கட்சி  மற்றும் இரட்டை இலை சின்னத்தை கைப்பாற்றத்தான்.

இரட்டை இலை இருந்தால்தான் மக்களிடம் கொஞ்சமாவது வாக்குகளை பெற முடியும்.
இன்னமும் எம்.ஜி.ஆர்.ஆடசியில் இருக்கிறார் என்றலைகிற கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.

சசிகலா கும்பல் எண்ணம் இப்படி இருந்தால் இரட்டை இலையை ஒற்றுமையாக இருந்து கைப்பாற்றுங்கள் என்று சொல்லி புத்திமதி கூறுகிற மோடி கும்பல் என்னமோ "அதிமுக இரண்டு அணி களும் அடித்துக்கொள்கிற இடைவெளியில் திமுக ஆட்சிக்கட்டிலில் உட்கார்ந்து விடக்கூடாது என்பதுதான்.

தலை கீழாக நின்றாலும் இப்போதைக்கு ஆட்சி ஒருநாளும் பாஜகவுக்கு வரப்போவதில்லை.
ஆனால் ஜெயலலிதா கொத்தடிமைகள் கூட்டமான அதிமுக வை கையில் வைத்து ஆட்டம் காட்டலாம் அதற்கு இரட்டை இலை அவசியம்.

அதை வைத்து அதிமுக இரு அணிகளும் ஒன்றிணைந்து வென்றால் பாஜக ஆட்சியை தமிழத்தில் நடத்தலாம்.

பெயர் மட்டுமே அ .இ.அ.தி.மு.க ,ஆடசி .

பன்னிர்செல்வம் ,சசிகலா  மற்றும் அதிமுக அமைசர்கள் கொள்ளை,ஊழல்,முறைகேடுகள் எல்லாம் இப்போது மத்திய அரசு கையில் அதாவது பாஜக கையில்.


அதைவைத்தே பினாமி ஆடசி தமிழகத்தில் நடத்தலாம்.

அப்படியே திமுகவை தலை தூக்க விடாமல் மத்திய,மாநில அரசுகள் அதிகாரம் மூலம் செய்து விடலாம்.
இதுதான் இன்றைய அமிர்தா ஷா வின் (பகல்) கனவு.

ஆனால் ஜல்லிக்கட்டு ,மீத்தேன்,காவிரி ,விவசாயிகள்,எல்லை கற்களில் இந்தி,குடியரசுத்தலைவர்,அமைசர்கள் இந்தியில்தான் பேச வேண்டும் என்ற  பிரசினை களில் பாஜக,மோடி நடந்து கொண்ட விதம் தமிழக மக்கள் ஒவ்வொருவர் மனதிலும் அது பாஜகவினராக இருந்தாலும் கூட வடுவை உண்டாக்கியிருக்கிறது.

அது அவ்வளவு சீக்கிரம் பாஜகவை தமிழத்தில் தலை எடுக்க விடாது.

கொல்லைப்புற வழி ஆடசி கனவு தமிழிசை கூறியது போல் பகல் கனவுதான்.

பாஜக கனவுக்கு தங்களின் கொள்ளையடித்த சொத்துக்களை பாதுகாக்க அலையும் அதிமுக அணிகள் வேண்டுமானால் ஓத்துதலாம்.

ஆனால் அவர்களே கூட தாமரைக்கு வாக்களிக்க மாட்டார்கள்.


இரட்டை இலைக்கு மேல் தாமரை மலர விடமாட்டார்கள்.

=======================================================================================================
நானும் கச்சேரிக்குப் போனேன்” -- முதல்வர் பழனிச்சாமி..
                                                             --- திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிக்கை 
மிகப் பெரிய கடன் சுமையில் தமிழகத்தை தள்ளிய அ.தி.மு.க அரசின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் நடைபெற்ற நிதி அயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது குறைந்தபட்ச அளவிலாவது பலன்கள் கிடைத்து, நிதி நெருக்கடியிலிருந்து தமிழ்நாடு ஓரளவேனும் மீளாதா என்ற ஏக்கம் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள் பற்றி மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவும்-சொல்லவும் முதல்வர் தவறி விட்டார்.
தமிழகத்தில் “விஷன் 2023” பற்றி விலாவாரியாக பேசியிருக்கும் முதலமைச்சர் அந்த திட்டத்தினை செயல்படுத்த துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை என்பதை மறந்து விட்டு, ஏதோ அந்த திட்டத்தின் கீழ் “உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக மக்களுக்கு செய்து கொடுக்க” செயல்பட்டுக் கொண்டிருப்பது போல் நிதி அயோக் கூட்டத்தில் பிரதமர் முன்னிலையிலேயே இமாலயப் பொய்யை கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் குடிநீர் இல்லை, சுகாதார வசதிகள் இல்லை. சாலை வசதிகளும் இல்லை. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளைக் கூட மூட மனமில்லாமல் அந்த சாலைகளை மாநகராட்சி மற்றும் நகராட்சி சாலைகளாக வகை மாற்றியிருக்கும் அதிமுக அரசு தமிழக மக்களுக்கு “உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை” அளிப்பதற்கு செயல்பட்டு வருவதாக கூச்சமின்றி பொய் சொல்லியிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். ஆனால் அவர்களுக்கு தேசிய வங்கிகளில் கொடுக்கப்பட்ட விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து கொடுத்து வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ள விவசாயிகளை காப்பாற்றுங்கள் என்று கோரிக்கை வைக்கவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடி வருகிறாரர்கள். அந்த திட்டத்தை ரத்து செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கவில்லை.
அதிமுக அரசின் மோசமான நிதி மேலாண்மை சீர்கேட்டால் இன்றைக்கு தமிழகம் 5 லட்சம் கோடி கடனில் மூழ்கியிருக்கிறது. அது பற்றி நிதி அயோக் கூட்டத்தில் பேசி தமிழக அரசின் நிதி நிலைமயை சீராக்க எதையும் பேசவில்லை. இன்றைக்கு விவசாயிகள் சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்சினை அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் கட்டும் தடுப்பணைகளும், புதிய அணைகளுமே. ஆனால் அனைத்து மாநில முதல்வர்களும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் அண்டை மாநிலங்களுடனான இந்த முக்கிய தடுப்பணை பிரச்சினை குறித்து வாய் திறக்கவில்லை.
தமிழகத்தில் நதிநீர் இணைப்புத் திட்டங்களை கிடப்பில் போட்டது அதிமுக அரசு. குறிப்பாக தாமிபரணி- நம்பியாறு இணைப்புத் திட்டத்தில் முக்கால்வாசிப் பணிகளை கழக அரசு முடித்து விட்டுச் சென்ற நிலையில் அந்த திட்டத்தை இதுவரை நிறைவேற்றவில்லை. ஆனால் நிதி அயோக் கூட்டத்தில் நதிநீர் இணைப்பு பற்றி பேசியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி “அத்திக்கடவு- அவினாசி” திட்டம் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை.
மாநில உரிமைகள் பற்றி பேசினால் தன் பதவிக்கு ஆபத்து வந்து விடப் போகிறது என்ற அச்சத்தில் ஏற்கனவே மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மத்திய அரசிடம் எடுத்து வைத்த கோரிக்கைகளில் சிலவற்றை மட்டும் வலியுறுத்திப் பேசிவிட்டு, தமிழகம் இன்றைக்கு சந்தித்துக் கொண்டிருக்கும் கடும் வறட்சி, குடிநீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலை, அண்டை மாநிலங்கள் தமிழகத்தின் தண்ணீர் உரிமைகளைப் பறிப்பது உள்ளிட்ட மிக முக்கியமான வாழ்வாதாரப் பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் வந்திருப்பது வாக்களித்த மக்களுக்கு செய்துவிட்ட துரோகமாகும்.
மாநிலத்தில் நிலவும் முக்கியப் பிரச்சினைகள் குறித்தோ, மாநில அரசு கேட்ட வெள்ளம், வர்தா, வறட்சி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளில் இருந்து விவசாயிகளையும் தமிழக மக்களையும் மீட்டெடுக்க கேட்ட 88ஆயிரம் கோடி ரூபாய் நிதியை உடனடியாக தமிழகத்திற்கு வழங்குங்கள் என்பது குறித்தோ “நிதி அயோக்” கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்துக் கூறாதது உள்ளபடியே கவலையளிக்கிறது.
தமிழகத்தில் எதிர்கட்சிகளின் வற்புறுத்தலால், “நிதி கேட்டோ” “திட்டங்கள் கேட்டோ” ஏதோ பெயரளவில் கடிதம் எழுதி விட்டு பிரதமரையோ, அண்டை மாநில முதல்வர்களையோ நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது அந்த கடிதங்களில் குறிப்பிட்டுச் சொன்ன கோரிக்கைகள், பிரச்சினைகள் பற்றிக் கூட முதலமைச்சராக இருப்பவர் பேச மறுப்பதுடன், மாநில உரிமைகளை எப்படி தாரை வார்த்து தமிழக மக்களை துன்பத்தில் துயரத்தில் சிக்க வைக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
ஆகவே “நானும் கச்சேரிக்குப் போனேன்” என்ற போக்கில் “நிதி அயோக் கூட்டத்தில்” கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தும் தமிழக நலன்கள், தமிழகம் எதிர்நோக்கிக் காத்திருக்கும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் “நிதி அயோக்” கூட்டத்தில் எடுத்துரைக்காமல் வந்ததற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 
பழம்பெரும் இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்களை இயக்கி, நடித்தவர் கே.விஸ்வநாத். 
அதுமட்டுமல்லாமல் பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார். உலகநாயகன் கமல்ஹாசன் உடன் குருதிப்புனல் படத்தில் நடித்துள்ளார்.
இவர் இயக்கிய படமான சங்கராபரணம்(1979), 
சாகர சங்கமம் (1983) ஆகிய படங்கள் 100 சிறந்த திரைப்படங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 

திரைத்துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக பத்மஸ்ரீ விருது, நந்தி விருது, பிலிம்பேர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார்.

============================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...