ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

போயஸ் தோட்ட கலவரம்....,

ஜெயலலிதா மறைவுக்குப் பின், போயஸ் தோட்டத்தில் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் ஒன்று கூடினர். 

ஆனால், தொடர்ச்சியாக நடந்து வரும் அசம்பாவிதங்களுக்குப் பின், போயஸ் கார்டனுக்கு செல்வது என்றாலே, சசிகலாவின் உறவினர்கள் அச்சத்தில் புலம்புகிறார்கள் .

 ஜெயலலிதா போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்துக்கு வந்த பின் தான், அவரது வாழ்வின் உச்ச்சத்தை தொட்டார்.
அதேபோல, சாதாரண நிலையில் இருந்த சசிகலா, ஜெயலலிதாவுடன் சேர்ந்து, போயஸ் தோட்டத்திலேயே தங்க ஆரம்பித்ததும்தான், அவரது வாழ்க்கையில் மட்டுமல்ல, குடும்பத்தினர் பலருடைய வாழ்க்கையிலும் வசந்தம் வீச ஆரம்பித்தது.

அங்கிருந்தபடியேதான், சசிகலா எல்லாவிதமான ஏற்றங்களையும் சந்தித்து வந்தார். கிட்டதட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஜெயலலிதாவும், சசிகலாவும் போயஸ் தோட்டத்தில் இருந்தபடியேதான், தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்தனர். 


கட்சியும் இருவரது கரங்களிலும் கட்டுக்கோப்பாக இருந்து வந்தது. அதற்கு காரணம், போயஸ் தோட்டம் என்ற அதிர்ஷ்டம் தான் என்றும், சசிகலா அடிக்கடி சொல்லி வந்தார்.

அதனால்தான், ஜெயலலிதா மறைந்த பின், ஜெயலலிதா உறவு என சொல்லிக் கொண்டு, போயஸ் தோட்டம் உள்ளிட்ட ஜெயலலிதா சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடிய அவரது அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோரை, போயஸ் தோட்டம் பக்கம் வராமலேயே செய்தார் சசிகலா.

ஆனால், ஜெயலலிதாவை சசிகலாவும் அவரது  குடுமப்த்தினர்களும்தான்  கொன்று விட்டனர் என ஐயம்  பரவியதும், போயஸ் தோட்டத்து பக்கம் யார் சென்றாலும், அவர்களுக்கு கெட்ட விஷயங்களே நிறைய நடக்க ஆரம்பித்து விட்டது. 


குறிப்பாக சசிகலா குடும்பத்தில் நிறைய துர் சம்பவங்கள் வரிசையாக நடக்கத் துவங்கி விட்டன.

ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து கீழே இறக்கிய சசிகலா, தன்னை கட்சியின் பொதுச் செயலராக நியமித்துக் கொண்டார். இதையெல்லாம் எதிர்க்கத் துவங்கிய பன்னீர்செல்வம், தனி அணியாக இயங்கத் துவங்கினார். 


சசிகலாவை முதல்வராக விடாமல், கவர்னர் மூலம் தடுத்தார். 

அடுத்ததாக, போயஸ் தோட்டத்தில் இருந்த சசிகலா, இளவரசி ஆகியோர், சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கி, நான்காண்டு தண்டனையுடன், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். 
சுதாகரனும் சேர்த்து அடைக்கப்பட்டார்.

அடுத்த கட்டமாக, சசிகலா வகிக்கும் பொதுச் செயலர் பதவியை பறிக்க, பன்னீர்செல்வம் தரப்பு, தேர்தல் கமிஷனில் மனு போட்டு, அது விசாரணைக்கு வர உள்ளது. 


தேர்தல் கமிஷனில் இரட்டை இலைக்கும் பன்னீர்செல்வம் தரப்பு மல்லுக்கட்ட, இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. 

சசிகலாவின் ஆசி பெற்ற சேகர் ரெட்டி சிறையில் அடைக்கப்பட்டார். 

அதேபோல, தலைமைச் செயலராக இருந்த ராம் மோகன் ராவ் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அவர், பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்ட தினகரன், பணத்தை வாரி வழங்கிய காரணத்துக்காகவே, தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 


அதையடுத்து, பணத்தை வாரி வழங்கிய காரணத்துக்காக, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றியது. 

வருமான வரித் துறை சோதனை நடந்த போது, ஆவணங்களை திருடிய காரணத்துக்காக, தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் மற்றும் அதிகாரிகளை மிரட்டிய காரணத்துக்காக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், காமராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 


அவர்களும், எந்த நேரமும் கைது செய்யப்படலாம்.

அடுத்ததாக, தற்போது, தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். தினகரனையும், சசிகலாவையும் அரசியலை விட்டே விலகுமாறு, கட்சியின் மூத்த தலைவர்களும், அமைச்சர்களும் வலியுறுத்தத் துவங்கி உள்ளனர். 


அதேபோல, தினகரன் மீதான பெரா வழக்கு இத்தனை நாட்களும் அமுங்கி கிடந்தது. 

தற்போது, அவ்வழக்கு விசுவரூபம் எடுத்துள்ளது. 

அந்த வழக்கை வேகமாக நடத்தினால், அதில், அவர் கட்டாயம் தண்டிக்கப்படக்கூடும். 
சிறைக்கு  போகவாய்ப்பு அதிகம் .

இப்படி எல்லா விஷயங்களிலும், சசிகலா மற்றும் குடும்பத்தினருக்கு எதிரான நிகழ்வுகளே தொடர்ந்து நடந்து வருவதால், போயஸ் தோட்டத்து நிலவரம் கலவரமாக இருப்பதே  காரணம் என அதிமுகவினரால்  நம்பப்படுகிறது. 


எல்லாவிதங்களிலும் அதிர்ஷ்டகரமானதாக இருந்து வந்த போயஸ் தோட்டம் ஜெயலலிதா மறைவுக்குப் பின், துரதிருஷ்டமானதாக மாறி உள்ளதாக, நடந்த சம்பங்களை வைத்து, சசிகலா உறவுகள் அனைத்தும் கூறுகின்றன. 

சசிகலா ஜெயலலிதா போல் உருமாறி அரசியல் செய்ய ஆரம்பித்தபோது ஜெயலலிதாவின் அறையையே உபயோகிக்க ஆரம்பித்த்தாகவும்,அப்படி படுக்கையறையில் படுத்திருக்கையில் நள்ளிரவில் எதோ உருவம் நடமாட்ட்டத்தை உணர்ந்து சசிகலா துக்கம் வராமல் தவித்ததாகவும்.

அவ்வுருவம் அவரை பயமுறுத்தியதாகவும் அது ஜெயலலிதாவின் ஆன்மாதான் என்றும் உறுதி செய்யப்படாத செய்திகள் பரவலாக உள்ளது.

இருநாட்கள் சசிகலா ஜெயலலிதாவின் அறையை பயன் படுத்தியதும் அதன் பின்னர் அந்த அறையை விட்டு வெளியேறி பூசைகள் செய்ததும் அதை உண்மைதானோ என என்ன செய்கிறது.

இதனால், போயஸ் தோட்டத்தில் இருந்து, சசிகலாவின் உறவுகள் அத்தனையும் வெளியேறி விட்டன. அங்கு, ஜெயலலிதா மறைவுக்குப் பின், அடிக்கடி வந்து கொண்டிருந்த தினகரன், தற்போது, அங்கு வருவதையே குறைத்துக் கொண்டு விட்டார். 


ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் மட்டும், அடிக்கடி போயஸ் தோட்டம் வந்து செல்கிறார். சில வேலையாட்கள் மட்டுமே அங்கு உள்ளனர்.

 மற்றபடி ஆட்கள் இல்லாமல், போயஸ் தோட்டம் களை இழந்து மர்மமாக கிடக்கிறது.  

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அவரின் போயஸ்  மாளிகையை பார்க்கவந்த கொண்டிருந்த தொண்டர்கள் கூட தற்போது வருவதில்லை.
                                                                                                                =பிரஸ் ஏட்டையா ரா.குமரவேல் ,

சிறு குறிப்பு:
" 15 ஜூலை 1967ல், சென்னை, போயஸ் தோட்டத்தை ஜெயலலிதாவின் தாயார் சந்தியா, தன் பெயரில் வாங்கினார். 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான அந்த நிலத்தில், 21 ஆயிரத்து 662 சதுர அடிக்கு, கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தின் சர்வே எண்; 15/67. வருவாய் ஆவணங்களின் அடிப்படையில், போயஸ் தோட்டம் இல்லம், சென்னை, தேனாம்பேட்டை கிராமத்தை சேர்ந்தது.  18, வேதா இல்லம், போயஸ் தோட்டம் என்று முகவரியிடப்பட்டுள்ள அந்த இடத்தின் மதிப்பு, முந்தைய , அரசாங்க வழிகாட்டு மதிப்பின்படி, 43.96 கோடி ரூபாய் என உள்ளது. ஆனால், அப்போதைய உண்மையான சந்தை விலை மதிப்பு 72.09 கோடி ரூபாயாக ஆவணங்கள் கூறுகின்றன. அந்த இடத்தின் இன்றைய மதிப்பு நூறு இருபது கோடிகளைத் தாண்டும். "
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...