செவ்வாய், 4 ஏப்ரல், 2017

நந்தினியின் கணவர்

டி.வி சீரியல் தொடர்கள், தொகுப்பாளர், சாகச நிகழ்ச்சி என அசத்திக்கொண்டிருப்பவர், நடிகை நந்தினி. இவரை, 'மைனா' என்று சொன்னால்தான் பலருக்கும் தெரியும். 
அந்த அளவுக்கு, மைனா கதாபாத்திரத்தின்மூலம் மக்கள் மனதைக் கவர்ந்தவர் நந்தினி. 
இவர், தி.நகரில் உள்ள ஜிம்முக்கு சென்றபோது, அதன்உரிமையாளர் கார்த்திக்கை காதலித்தார். 
இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் மதுரையில் திருமணம் செய்துகொண்டனர். 
நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 
தற்கொலைக்குத் தூண்டியதாக நந்தினியின் தந்தை ராஜேந்திரனிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவுசெய்தனர். 
கார்த்திக் எழுதிய கடிதத்தில், தன்னுடைய கடைசி ஆசையாக ஒன்றையும் குறிப்பிட்டுள்ளது, நடிகை நந்தினிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 திருமணம் முடிந்த சில நாட்களில் கார்த்திக்கின் சுயரூபம் நந்தினிக்குத் தெரியவந்தது. கார்த்திக்கிற்கு வெண்ணிலா என்ற பெண்ணுடன் பழக்கம் இருந்துள்ளது. 
நந்தினியை கார்த்திக் திருமணம் செய்ததால், வெண்ணிலா தற்கொலை செய்துகொண்டார். அப்போது, வெண்ணிலா எழுதிய கடிதத்தின் அடிப்படையில் கார்த்திக்கை போலீஸார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். 
இது, நந்தினி குடும்பத்தினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும், கார்த்திக் மீதுள்ள காதலால், அனைத்தையும் நந்தினி மறந்து, புதிய வாழ்க்கையை ஆரம்பித்தார். 
ஆனால், அது நீடிக்கவில்லை. சில மாதங்களிலேயே நந்தினி- கார்த்திக் காதல் திருமணம், கசக்கத் தொடங்கியது. 
இந்தச் சமயத்தில்தான், தனியார் தொலைக்காட்சியில் நடந்த சாகச நிகழ்ச்சியில், கார்த்திக்- நந்தினி தம்பதி பங்கேற்றனர். உண்மையிலேயே நடிகை நந்தினியின் இல்லற வாழ்க்கையும் சாகசம்போலவே இருந்தது, கார்த்திக்கின் தற்கொலைக்குப் பிறகுதான் தெரியவந்துள்ளது. 
இதுகுறித்து நம்மிடம் பேசிய நந்தினிக்கு நெருக்கமானவர்கள், "திருமண வாழ்க்கையில் நந்தினி அவசரப்பட்டுவிட்டார் என்றே சொல்லவேண்டும். கார்த்திக்கை குறித்த முழுமையான விவரங்கள் நந்தினி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெரியவில்லை. 
அவசர அவசரமாகத் திருமணம் செய்துகொண்டனர். அது, ஒரு ஆண்டுக்குள் இந்த முடிவை ஏற்படுத்திவிட்டது. வெண்ணிலா மூலம், நந்தினியின் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது. வெண்ணிலா தற்கொலைக்குப் பிறகு, நந்தினி மனம் உடைந்துவிட்டார். அதன்பிறகும் கார்த்திக் திருந்தவில்லை. 
இது, நந்தினிக்கும் அவரது குடும்பத்துக்கும் மனவேதனையை ஏற்படுத்தியது. கடந்த இரண்டு மாதங்களாக கார்த்திக்கைப் பிரிந்த நந்தினி, நடிப்பில் அதிக கவனம் செலுத்திவந்தார். அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சோகம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல், நிஜத்தில் நடித்தார். 
நந்தினி பிரிந்து சென்ற பிறகும் கார்த்திக்கிடமிருந்து அவருக்கு பல்வேறு தொந்தரவுகள் வந்தன. இதை, நந்தினியின் அப்பா தட்டிக்கேட்டுள்ளார். 
இதனால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போதுகூட நந்தினி அமைதியாகவே இருந்தார். கார்த்திக் தற்கொலை செய்துகொள்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. 
அவர், எழுதிய கடிதம் நந்தினியின் குடும்பத்தினருக்கு சிக்கலை ஏற்படுத்திவிட்டது" என்றனர்.
 
கார்த்திக் எழுதிய கடிதத்தில், "என் மரணத்துக்குக் காரணம், என் மாமனார் ராஜேந்திரன்தான் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். 
மேலும், என்னையும் என் மனைவியையும் பணத்துக்காக ராஜேந்திரன் பிரித்துவிட்டார். நான் பல முறை நந்தினியிடம் போனில் பேச முயற்சித்தேன். 
அதையும் அவர் தடுத்துவிட்டார். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால்தான்  தற்கொலை செய்துகொள்கிறேன். மேலும், நான் என் மாமனாரிடம் கெஞ்சிப் பேசினேன். அதையும் அவர் கேட்கவில்லை. இது, எனக்கு மேலும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது. 
என்னுடன் நந்தினியைப் பேசவிடாமல் தடுக்கும் வகையில் என்னுடைய போன் காலை பிளாக் செய்துவிட்டார். எங்கள் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட வைத்துவிட்டார். 
நான் சாக, முழுக்க முழுக்க காரணம் என் மாமனார் ராஜேந்திரன்தான்" என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கடிதம், கார்த்திக் தன் அக்கா ரம்யாவுக்கு எழுதியது. அதில்... ரம்யா, அம்மாவைப் பார்த்துக்கொள். எனக்கு வாழத் தெம்பு இல்லை. 
இத்தனை நாள் பிணமாகத்தான் வாழ்ந்தேன். என்னால் வாழ முடியவில்லை. இனிமேல் நான் இருப்பது வேஸ்ட். என் கௌரவம், மரியாதை போய்விட்டது. 
அம்மாவைப் பார்த்துக்கொள்.
 என் கடைசி ஆசை என்னவென்றால், வெண்ணிலாவைப் புதைத்த இடத்தின் அருகே என்னைப் புதைத்துவிடுங்கள். வெண்ணிலா பக்கத்தில் என்னைப் புதையுங்கள். ஃப்ளீஸ் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "கார்த்திக்கின் தற்கொலைக் கடிதத்தின் அடிப்படையில், நடிகை நந்தினியின் அப்பா ராஜேந்திரனிடம் விசாரணை நடத்த முடிவுசெய்துள்ளோம். விசாரணைக்குப் பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 
தற்கொலை என்றே வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு அதுமாறவும் வாய்ப்புள்ளது"என்றார். 
                                                                                                                                          - ரா.குமரவேல் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...