புதன், 6 ஜனவரி, 2016

பாதுகாப்பையே கேலிக்கிடமாக்கி விட்டது ?




பதான்கோட் விமானப்படைத் தளத்தை அத் தளத்திற்கு அருகிலேயே ராணுவ வீரர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும் போது அவர்களை அழைக்காமல் ,தொலைவில் உள்ள  தில்லியிலிருந்து தேசிய பாதுகாப்புப் படை (என்.எஸ்.ஜி) வீரர்களை அழைத்தது ஏன்? 
6 தீவிரவாதிகளை சமாளிக்க 5 நாட்கள் போராட்டமும் ,7 வீரர்கள் மரணமும் தேவையா?
என்று கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.இந்திய நாட்டின் பாதுகாப்பையே இன்றைய மோடி அரசு தவறாகக் கையாண்டு கேலிக்கிடமாக்கி விட்டது என்று உலக அரங்கில் பேச்சு எழுந்துள்ளது.
விமானப்படை தளத்திற்குள் பயங் கரவாதிகள் ஊடுருவலை தடுப்பதில், தேவையற்ற காலதாமதத்தை இதுஏற்படுத்தி விட்டதாகவும், இச்சம்பவத் தில் என்.எஸ்.ஜி. வீரர்களை ஈடுபடுத் தியது தவறு என்றும் ராணுவ மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.“
பயங்கரவாதத்துக்கு எதிரானநடவடிக்கை எப்படிக் கையாளப் பட வேண்டுமோ அப்படி கையாளப்பட வில்லை;
உண்மை என்னவெனில் அதிக காலம் எடுத்துக் கொள்ளப்பட்டது. ராணுவம் அழைக்கப்பட்டிருந்தால் அதன் பலத்துக்கு இன்னும் விரைவில் முறியடிக்கப்பட்டிருக்கும்“ என்று முன்னாள் ராணுவ நடவடிக்கைகள் தலைமை இயக்குநரான லெப்.ஜெனரல் விநோத் பாட்டியா குறிப்பிட்டுள்ளார்.
“இந்திய ராணுவம் பல ஆண்டு களாக பயங்கரவாத எதிர்ப்பு மோதல் களை திறம்பட கையாண்டு வருகிறது. 
ராணுவத்திடம் ஒப்படைத்திருந்தால் உயிரிழப்புகளும் கூட இருந்திருக்காது. காஷ்மீருக்கு எத்தனை முறை இத்தகைய பயங்கரவாத முறியடிப்பு நடவடிக்கைகளுக்காக என்.எஸ்.ஜி.கமாண்டோக்கள் அனுப்பப்பட்டுள் ளனர்? இல்லை. 
அங்கு ராணுவம்தான் இதனை திறம்பட முறியடித்து வரு கிறது” என்று பணியிலிருக்கும் மற் றொரு ராணுவ அதிகாரி கூறியுள்ளார்.
பதான்கோட் ல் வீரமரணமடைந்த தேசிய பாதுகாப்பு படை (என்எஸ்ஜி)
லெப்டினன்ட் கலோனல் நிரஞ்சன் குமாரின் மனைவி.
“அவர்கள் (பாதுகாப்புத்துறை) செய்ததை எங்களில் பலரால் நம்பவே முடியவில்லை. ராணுவத்தின் 29 காலாட்படை பிரிவு பதன்கோட்டைத்தான் தலைமையகமாக கொண்டு செயல்படுகிறது. அங்கு 40 ஆயிரம் துருப்புகள் உள்ளன. 
அருகிலேயே இரண்டு இன்ஃபாண்ட்ரி பிரிவுகளும், இரண்டு ஆயுதப் படைப்பிரிவுகளும் உள்ளன. 
வடக்கு ராணுவ தலைமைச் செயலகமும் உள்ளது. 
குறிப்பாக 4 பாரா (எஸ்.எப்.), 9 பாரா (எஸ்.எப்.) படைப்பிரிவுகள்  உள்ளன.
இந்தப் படையினர் பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கென்றே சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். 
ஆனால் விமானப்படை தளத்துக்கு என்.எஸ்.ஜி. படையினர் சிலரை வரவழைத்தது காலதாமதத்துக்கே வழிவகை செய்தது” என்று பதான் கோட்டுக்கு அருகே உள்ள ராணுவ தளத்தில் பிரிகேடியராக இருக்கும் வீரர் ஒருவர் கூறியுள்ளார்.
இதேபோல லெப்டினன்ட் ஜெனரல் பிரகாஷ் கடோச், “ஒரு குறிப்பிட்ட இலக்கைத் தாக்க என்.எஸ்.ஜி. கமாண்டோ பயன்படும்; 
ஆனால் ஒட்டுமொத்த பகுதியையும் அதனால் கையாள முடியாது; என்.எஸ்.ஜி.யை அனுப்பியதில் தீங்கொன்றும் இல்லை;
ஆனால், திட்டவட்டமான கட்ட ளைகளும், கட்டுப்பாடும் இருப்பது அவசியம்; எல்லையோர காவல் படை, என்.எஸ்.ஜி. ஆகியவற்றை மனம் போன போக்கில் அழைத்து விட முடியாது; 
இங்கு ஏதேனும் கட்டளைகளும், வழிகாட்டுதலும், கட்டுப்பாடும் இருந்ததா? 
இதற்கெல்லாம் ராணுவமே சிறந்தது” என்று தெரிவித்துள்ளார்.
இதையே முன்னாள் ராணுவ தளபதிவி.பி.மாலிக்கும் கூறியுள்ளார். “என்.எஸ்.ஜி. சரியான தேர்வா என்பது எனக்கு ஐயமாக உள்ளது. 
அவர்கள்தில்லியிலிருந்து வந்தனர்; மாறாக உள்ளூரை நன்கு அறிந்த படையினரிடமே பொறுப்பை ஒப்படைத் திருக்க வேண்டும்“ என்று அவர் கூறியுள்ளார்.“
10 சிறப்புப் படைப் பிரிவுகள் கொண்ட ராணுவம், அல்லது குறைந்தது உதம்பூரில் இருந்து ஒரேயொருபடை பதான்கோட்டுக்கு 2 மணி நேரங்களில் வந்திருக்க முடியும்; 
நாங்கள்இத்தகைய திடீர் தாக்குதல்களை முறியடிக்கவே சிறப்புப் பயிற்சி பெற்றுள்ளோம்; 
மாறாக நீங்கள் (பாதுகாப்புத்துறை) என்.எஸ்.ஜி. கமாண்டோக்களை அனுப்பினீர்கள்; 
வெறும் 160 கமாண்டோக்களுடன் 24 சதுர கிலோ மீட்டர் பகுதியை அவர்களால் சிறப்பாக பாதுகாக்க முடியும் என்று யார் கூறினார்கள்?” என்று மற்றொருராணுவ அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்ளூர் ராணுவப்படை இத்தகைய தாக்குதலை எதிர்கொள்ள பயிற்சி பெற்று தயாராக இருந்துள்ளது;
ஆனால்தாக்குதலை எதிர்கொள்வதற்கான சமயம் வந்தபோது இவர்கள் பயன்படுத்தப்படவில்லை; இது பெரும் தவறு என்றே பலரும் கூறியுள்ளனர். 
எனவே, பதான்கோட் பயங்கரவாதிகள் தாக்குதலைப் பொறுத்தவரை, பாதுகாப்பு நடவடிக்கைக்கான உத்தரவுகளை பிறப்பித்தது யார்? 
எவருடைய தலைமையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன? 
என்று அடுக்கடுக்கான கேள்விகள் முன்னுக்கு வந்துள்ளன.
காவல் கண்காணிப்பாளர் சல்விந்தர்சிங் நடவடிக்கைகள் மீது சந்தேகம் வந்து அவரை விசாரிப்பதாக தெரிகிறது.
இதைப்போன்று நாட்டின் பாதுகாப்பையே கேலிக் கூத்தாக்கும் நடவடிக்கைகள் மத்திய அரசு,உள்துறை,பாதுகாப்புத்துறைக்கு அவமானத்தையே உண்டாக்கியுள்ளது.மோடி பாகிஸ்தானுக்கு தனது நண்பர்கள் வியாபரத்திற்கு தரகு பார்க்க செல்லும் வேளையில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள தீவிரவாதத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க அங்குள்ள பிரதமரை கேட்டுக்கொள்ளும் பணியையும் செய்யலாமே?
===========================================================================================
இன்று,
டிசம்பர்-06.
  • வில்லியம் கென்னடி டிக்சன், அசையும் படத்துக்கான காப்புரிமம் பெற்றார்(1894)
  • அமெரிக்காவில் முதல் முறையாக அரசு தலைவர் தேர்தல் நடைபெற்றது(1789)
  • புரூணை, ஆசியான் அமைப்பில் உறுப்பு நாடாக இணைந்தது(1984)

                                  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதல்வர் முஃப்தி முகம்மது சயீத் காலமானார்
===========================================================================================

ஐரோப்பாவுக்கு  அகதிகள் வருகை பரிசு பெற்ற புகைப்படம்.
ஜப்பானியர்களால் கற்பழிக்கப்பட்ட கொரியப் பெண்கள் போராட்டம்.
                                          வட கொரியா ஹைட்ரஜன் குண்டு வெடித்த இடம்.
ஹைட்ரஜன் அணுகுண்டுப் பரிசோதனையொன்றை முதல் தடவையாக நடத்தியுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ள து.
ஆனால் வடகொரியாவின் அறிவிப்பை நம்புவதா என்பதில் நிபுணர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
இரண்டாம் உலகப் போரில் ஹிரோஷிமா நாகசாகி மீது வீசப்பட்ட குண்டை விட இருபத்தையாயிரம் மடங்கு அதிக வலுக்கொண்டவை இவையென்று கருதப்படுகிறது.
உண்மையாக இருக்கும் பட்சத்தில் வடகொரியா உலகின் 7 அணுஆயுத வல்லரசாக   முன்னேறியுள்ளது .

ஏப்ரல் -15 -டிசம்பர்-15 வரையிலான வருமான வரி வரவு ரூ  2.5 லட்சம் கோடிகள் .







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...