வெள்ளி, 20 மார்ச், 2015

மாட்டிறைச்சி திண்பது

மும்பை உயர்நீதிமன்றத்தில் விசால் சேத் என்ற வழக்கறிஞரும் சைனாசென் என்ற மாணவரும் இணைந்து பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள் ளனர். அவர்கள் வழக்கின் மனுவில் கூறியுள்ளதாவது:
“நாங்கள் இந்துக்கள்.
மாட்டிறைச் சியை உணவாகக் கொள்பவர்கள்.
அது சத்துணவாகும் எங்களது உணவில் ஒரு பகுதியாகும்.மாட்டிறைச்சி உண்ணும் இந்துக்கள் பண்பாட்டு சிறுபான்மையினர் ஆகும். அவர்களுக்கு தங்களது உணவு மற் றும் பண்பாட்டு அடையாளத்தை பாது காத்துக்கொள்ள முழு உரிமை உண்டு மாட்டுத் தோல் வைத்திருந்தால் அது குற்றமாகாதாம். ஆனால் அதே சமயத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்தால் அது குற்றமாகும்.
இந்த தடை, அரசியல் சட்டத்தின் பிரிவு 21 மற்றும் 29ன்படி சிறுபான்மையினரை மொழி, மதம் மற்றும் பண்பாட்டின் அடிப்படையில் பாகுபடுத்துவதாகும். விலங்கு கொழுப்பு சத்து என்பதன் அடிப்படையில் மாட்டிறைச்சி மலிவாக கிடைப்பதாகும். எனவே இதை தடை செய்வதோ அல்லது அதன் இறக்குமதியை தடை செய்வதோ சட்டவிரோதமாகும்.
மாட்டிறைச்சி மற்றும் பசுவதைச் தடைச்சட்டம் என்பது, சத்துணவுக்கான குடிமக்களின் அடிப்படை உரிமையை பாதித்து விடும்.
மகாராஷ்டிர மாநிலத்தில் அம்மாநிலத்தின் பாஜக அரசினால் பசுவதைத் தடைச்சட்டம் அமலாக்கப் பட்டுள்ளது.
இச்சட்டத்தின்படி பசுவதைக்கப்படுவது மட்டுமின்றி மாட்டு இறைச்சி விற்பனையும் அதை உண்பதும் கடுமையான குற்றமாக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் 3ல் 1 பங்கு மக்கள், குறிப்பாக இஸ்லாமியரும் தலித் மக்களும் பிற்படுத்தப்படட மக்களும் மாட்டிறைச்சியை உணவாகக் கொள் கின்றனர். '
எனவே இச்சட்டத்தை கைவிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் கூறியதை விட இன்னமும் சில குறிப்புகள் உள்ளன.
உலகில் அதிக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய் யும் நாடு பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியா தான். 
இதன்மூலம் அந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்குக் கிடைக்கும் வருமானம் அதிகமானதாகும்.
மாட்டிறைச்சி ஏற்றுமதி யின் மூலம் இந்தியாவிற்கு ரூ.3500 கோடிக்கும் அதிக மான தொகை வருமானமாகக் கிடைக்கிறது.உலக அளவில் மிக அதிகம்பேர் இந்தியாவில் இருந்துஏற்றுமதியாகும் மாட்டிறைச்சியை விரும்பி உண்ணு கிறார்கள்.
இந்தியாவின் தோல் தொழில் உலக அளவில் பிரசித்திபெற்றதாகும். 2.5 மில்லியன் தொழிலாளர்கள் இந்தத் துறையில் வேலை பார்க்கிறார்கள். இதில் 30 சதவீதம் பெண்களாகும். இந்திய மக்கள் தொகையில் 60 சதவீதத்தினர் மாமிசம் உண்பவர்களாவார்கள். மாமிசம் உண்ணாதவர்கள் 31 சதவீதத்தினர். மீதம் 9 சதவீதத்தினர் கோழி முட்டை உண்பவர்களாவார்கள்.
ஐக்கிய நாடுகள் உணவு தானியக் கழகம் நடத்திய ஆய்வில் அதிகம்பேர் மாட்டிறைச்சி உண்பவர்களே என்று அறிவித்துள்ளது. (இந்த ஆய்வில் கோழி இறைச்சி சேர்க்கப்படவில்லை).
ஆண்டிற்கு 24 லட்சம் டன் மாட்டிறைச்சி நுகரப்படுகிறது.
இந்தியாவில் மாமிச உணவு உண்பவர்களில் அதிகம் பேர் விரும்புவது மாட்டிறைச்சியையே என்பது இதன் மூலம் தெளிவாகும்.
வயதான, உற்பத்தி சக்தியை இழந்த கால்நடைகள் விவசாயிகளைப் பொறுத்தவரையில் பெரும் பாராமாகும்.
இவற்றை இறைச்சிக்காக விற்பதற்கு பசுவதைத் தடைச் சட்டத்தை அமல்படுத்தியுள்ள மாநிலங்கள் அனுமதிப்பதில்லை.
அதனால் கால்நடைகளை வளர்ப்பவர்கள் அவற் றைத் தெருவில் விட்டுவிடுகிறார்கள்.
 ஹரியானா முதலான மாநிலங்களில் தெருவில் அலைந்து திரியும் கால்நடைகள் உண்டாக்கும் பிரச்சனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. நாட்டின் ஆண்டுக்கு மக்கள் தொகை உயர்வு1.58 சதவீதமாகும்.
ஆனால் கால்நடைகளில் இது 4.48 சதவீதமாகும்.
 பசு வதைத் தடை இந்த எண்ணிக்கையில் எவ்வித பின் விளைவுகளை உண்டாக்கும் என்பது நாம் உணரவேண்டிய ஒன்றாகும்.
கால்நடை வளர்ப்போரைப் பொறுத்தவரையில் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து வளர்க்கும் பசு கறவை வற்றி உற்பத்தித்திறனை இழந்த பிறகு அதை விற்பது என்பது எதார்த்தம்.
அவ்வாறு விற்பதுவும் பசுவின் மூலம் விவ சாயிக்குக் கிடைக்கும் ஒரு வருமானம் ஆகும்.
இவை எல்லாவற்றையும் விட மனிதன்,சிங்கம்,புலி,ஆடு,பன்றி,கோழி  போன்று மாடுகளும் ஒரு உயிரினம்தான்.விலங்குதான். மாடுகள் தரும் பலன் அதிகம்தான் .அதற்காக அதை ஏதோ தெய்வப்பிறவி போன்று காண்பித்து வணங்குவது உங்கள் [ஆளும் காவிகளின்]நம்பிக்கையாக இருக்கலாம்.அதை நீங்கள் கோவில் கட்டி கொண்டாடுங்கள்.
அதை யாரும் தடுக்கப் போவதில்லை.
ஆனால் அதை ஒரு உணவாக கொள்வோ ரிடம் ஏன் உங்கள் வேலையை காட்டுகிறீர்கள்.அவர்களை இதை சாப்பிடாதே,அதை சாப்பிடாதே என்று தடை போட அவர்கள் அளித்த வாக்குகளையே பயன் படுத்துவது சரியாகுமா?
சிவனின் வாகனமான மாட்டை [பசு வை] காப்பற்றும் நீங்கள் பிள்ளையாரின் வாகனமான எலியை ஏன் கண்ட இடத்திலேயே போ ட்டுத்தள்ளுகிறீர்கள் .முருகனின் சின்னம் கோழியை பிராயலரில் வளர்த்து விருந்தாக்குகிறீர்கள்.? அப்படியே போனால் ஒவ்வொரு மிருகமும் ஒரு சாமியின் வ உதவியாளராகத்தானே உள்ளது?
உங்களின் மகா விஷ்ணுவே பன்றியாக உருவெ டுத்தவ்ர்தானே?
இப்போ என்ன செய்வீங்க?
 பசுவதைத் தடைச் சட்டம் என்பது  மக்களின் உணவுப் பழக்கத்தின் மீதான அத்துமீறலாகும்.
உங்கள் நம்பிக்கையை உங்கள் வீட்டுக்குள்ளே வைத்துக் கொள்ளுங்கள்.அதை நாட்டு மக்கள் தலைகளில் திணிக்காதீர்கள்.
 அது  தனிமனித சுதந்திரத்தைக் கசாப்பு செய்வதாகும்.
காவி மனதில் இருக்கும் ஆசைகள் போல் வெள்ளை,பச்சை மனதுகளிலும் பல ஆசைகள் நம்பிக்கைகள் இருக்கும்.அதை மறந்து விடாதீர்கள்.

பசுவை கொல்லாதீர்கள்,தின்னாதீர்கள் என்று பரப்புரை செய்யுங்கள்.மதுக்கடைகளை திறந்து வைத்து விட்டு குடி,குடியை கெடுக்கும் என்று சொல்லும் ஆட்சியாளர்களுக்கு அது ஒன்றும் புதுசு இல்லையே .சிகரெட் பெட்டியில் உடல் நலத்துக்கு கேடு என்று மட்டும் போட்டு விட்டு வரி போட்டு வருமானம் பார்க்கும் அரசுக்கு இப்படி செய்வதில் ஒன்றும் அசிங்கம் வந்து விடாது.
"மாட்டிறைச்சி திண்பது காவிகளுக்கு எதிரானது"என்று மாட்டிறைச்சி கடைகளில் விளம்பரம் செய்யச் சொல்லுங்கள் அதுவே போதுமானது.
அதுதானே நம் அரசின் நடைமுறையும் கூட.
==========================================================================
==========================================================================


 சன்  குழுமத்தை விழுங்கும் அம்பானி, 

நெட்வொர்க் 18 தொலைக்காட்சி குழுமத்தை வாங்கிய முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் கார்ப்பரேட் கம்பெனி தற்போது சன்டிவி நெட்வொர்க்கை வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டுள்ளதாக செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ரிலையன்ஸ் கம்பெனி ஏற்கனவே பலதுறைகளில் கால்பதித்து நாட்டின் மிகப்பெரும் கார்ப்பரேட்டாக வளர்ந்து வருகிறது.
பெட்ரோலியம் , இயற்கை எரிவாயு, தொலைபேசி, கைபேசி மற்றும் பிராட்பேண்ட் போன்ற இணையதள சேவைகள் காய்கறி, மீன், இறைச்சி மற்றும் சில்லரை வணிகம், மின்சாரம், சினிமா தயாரிப்பு மற்றும் திரையரங்குகள் உள்ளிட்ட பல துறைகளில் நுழைந்து ஆதிக்கம் செய்து வருகிறது.
இக்கம்பெனி திட்டமிட்ட முறையில் அகில இந்திய அளவில் தன்னைநிலைநிறுத்திக் கொள்ள ஊடகத்துறையில் பெருமளவு முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் மூலம் அரசின் கொள்கை முடிவுகளை மாற்றுவதற்கு திட்டமிட்ட முறையில் பிரச்சாரம் செய்து கொண்டே இருக்க முடியும் என்று கருதுகிறது.ஊடக பலத்தால் அரசியலில் செல்வாக்கு செலுத்த முடியும் என்பதை உணர்ந்தே ஒவ்வொரு மீடியாகம்பெனிகளை வாங்கத் தொடங்கியுள்ளது.
சமீபத்தில் ஈடிவி எனப்படும் பிரபலமான ஈநாடு டிவி கார்ப்பரேட் குழுமத்தை வாங்கியது.
அதனைத் தொடர்ந்து நெட்வொர்க் 18ஐ வாங்கியது. இந்நிலையில், ரிலையன்சின் மூத்த அதிகாரிகள் சன்டிவி குழுமத்தின் மூத்த அதிகாரிகளிடம் சென்னையில் முகாமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 3 மாதங்களாக இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என தெஹல்காஇணைய ஏட்டின் செய்தியை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க வியாகாம் என்ற கம்பெனியின் ஆதரவுடன் மீடியாகம்பெனிகளை வாங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மீடியாவில் ஆதிக்கம் செலுத்தும் ரிலையன்சின் இத்தகைய முயற்சிகள் சுதந்திரமான மற்றும் பாரபட்சமில்லாத ஊடகத்தின் செயல்பாட்டிற்கு ஊறு விளைவிப்பதாகவே முடியும் என ஊடகச் சுதந்திரத்திற்கான செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
நெட்வொர்க் 18ஐ வாங்கும்போது அதில் பணியாற்றிக் கொண்டிருந்த மூத்த பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக பணியாற்ற முடியாது என்று அஞ்சி தங்களது பதவிகளை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்தது ஊடக உலகில் அதிர்வுகளை ஏற்படுத்தியது .
----------------------------------------------------------------------------------------------------------
 ரிலையன்சை எதிர்ப்பவர்களுக்கு என்ன நடக்கும் என்பதைகெஜ்ரிவால் விசயத்தில் நிரூபணமானது.
எரிவாயு தோண்டி எடுக்கும்விசயத்திலும் அது விலை நிர்ணயிப்பது குறித்தும் அந்த கம்பெனி மேற்கொண்ட முறைகேடுகள் குறித்தும் ஆம்ஆத்மி கட்சி நேரடியாக குற்றம் சாட்டி ரிலையன்ஸ் கம்பெனி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. இதற்கு பழிவாங்கும் விதமாக ஆம் ஆத்மி கட்சியும் அதன் தலைவர் கெஜ்ரிவாலும் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டனர். கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டதற்கு வேறு பின்னணிகள் இருந்தாலும், அதன்பின்னணியில் ரிலையன்ஸ் இருந்ததை மறுக்க முடியாது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------- 

அதுபோல கார்ப்பரேட் கம்பெனியின் உளவாளிகள் பெட்ரோலிய அமைச்சகத்தின் அலுவலகத்திலிருந்து முக்கிய ஆவணங்களை திருடியதிலும் முக்கியமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் ரிலையன்ஸ் கம்பெனியின் சைலேஷ் சாக்சேனாமற்றும் ரிஷி ஆன்ந்த் போன்றவர்கள்தான். இந்த நிகழ்வுகளில் முதலாவதானது, ரிலையன்ஸ் தன்னுடைய நலன்களுக்கு எதிராக யார் வந்தாலும் அவர்களைப் பழிவாங்குவதற்கு தயங்காது என்பதைக் காட்டியது.
அதே போன்று தனது நலன்களை காப்பதற்கு அது எந்த அளவிற்கும் செல்லும் என்பதும் நிரூபணமானது.
இவர்களின் ஆதிக்கம் ஊடகத் துறையில் பரவினால் நிச்சயம் அதன் தனித்தன்மையையும் சுதந்திரத்தையும் பாதிக்கும் என்று ஊடகவியலாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.சன் டிவி கார்ப்பரேட் குழுமம்2ஜி அலைக்கற்றை வழக்குகள், ஏர்செல் - மேக்சிஸ் ஊழல் பேரவழக்குஎன விடுபட முடியாத சூழலில் சிக்கிக் கொண்டுள்ளது.
அத்துடன் அது அஜய் சிங் என்பவரிடம் வாங்கி நடத்தி வந்த ஸ்பைஸ்ஜெட் நட்டமடைந்து மீண்டும் விற்றவருக்கே விற்கப்பட்டுள்ளதும் இக்குழுமத்தின் இறங்கு முகத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
வலிமையான அரசியல் அதிகார பலத்துடன் முதன் முதலாக தனியார் தொலைக் காட்சியாக களமிறங்கிய சன் டிவியின் இலாபம் பத்தாண்டுகளுக்கு முன்னதாக சில நூறு கோடிகளாக இருந்தது.
இப்போது பல ஆயிரம் கோடிகளைத்தாண்டி விட்டது என்பது அனைவருமே அறிந்த ஒன்று.
 இன்று சன் டிவி நெட்வொர்க்கில் 95 மில்லியன் குடும்பங்களை (ஒன்பதரைக்கோடி)சென்றடையும் 20 சேனல்கள் உள்ளன.
 வெளிநாடுகளில் வாழும் தென்னிந்தியர்களை அதிகம் கொண்ட அமெரிக்கா, நியூசிலாந்து போன்ற 27 நாடுகளிலும் சன் டிவி நெட்வொர்க் ஒளிபரப்பு எட்டுகிறது.3 45 எப்எம் வானொலி நிலையங்களை வைத்துள்ளனர்.
 கூட்டாக 1.2 மில்லியன் விற்பனை கொண்ட 2 நாளிதழ்கள், 4 பருவ இதழ்கள், 5.5 மில்லியன் சந்தாதாரர்களை எட்டும் சன் டைரக்ட் டி.டி.எச் சேவை,
கேபிள் சந்தையில் மூன்றில் இரண்டு பங்கை கையில் வைத்திருக்கும் 90 கோடி ரூபாய் புரளும் சுமங்கலி கேபிள் விஷன் என்ற கிளை நிறுவனம்.
 இவ்வளவு நிறுவனங்களோடு 2007 முதல்சினிமா தயாரிப்பு மற்றும் விநியோகத் தொழிலிலும் உள்ளது..
 சன் நெட்வொர்க்கின் மொத்த மதிப்பு ரூ.1000 கோடி.
மும்பை பங்குச் சந்தை இணையதளம் அளித்துள்ள தகவலின் படி சன் நெட்வொர்க்கின் மொத்தப் பங்குகளின் சந்தை மதிப்பு 2 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூபாய் 18 ஆயிரத்து 307 கோடி.
இந்திய அளவில் தனியார் துறையில் அதிக சம்பளம் ஈட்டியவர் சன் குழுத்தின் நிர்வாகி கலாநிதி மாறன் தான்.
அவரது சம்பளம் ரூ.37 கோடி ரூபாயாக இருந்தது.
ரிலையன்ஸ் தனது நலன்களுக்கு எதிராக யார் வந்தாலும் அவர்களைப் பழிவாங்குவதற்கு தயங்காது.தனது நலன்களை காப்பதற்கு அது எந்த அளவிற்கும் செல்லும் என்பதும் நிரூபணமானது. இவர்களின் ஆதிக்கம் ஊடகத் துறையில் பரவினால் நிச்சயம் அதன் தனித்தன்மையையும் சுதந்திரத்தையும் பாதிக்கும்.
 =========================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...