ஞாயிறு, 15 மார்ச், 2015

"பொய்யைச் சொன்னாலும், ..... பொருத்தமா சொல்லுங்கடா;

போக்கத்த பசங்களா"!
பொதுநல விரோத ஆதரவுக்குப் 
 பின்னே உள்ள சுயநலம்!!.
சட்டத் திருத்தங்களை முதலில் தீவிரமாக எதிர்த்த அ.தி.மு.க. என்ன காரணத்தாலோ (?) ஏதோவொரு உள்நோக்கத்தோடு திடீரென்று ஆதரவு தெரிவித்து வாக்களித் துள்ளது"" என்று குறிப்பிட்டதால்தான் ஜெயலலிதா பதில் அளித்திருக்கிறாராம்.
 அ.தி.மு.க. வின் இரட்டை நிலை பற்றி நான் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள அத்தனை நாளேடுகளும், அரசியல் தலைவர்களுமே, இந்த மசோதாவை அ.தி.மு.க. ஏற்கனவே எதிர்த்ததையும், பா.ஜ.க.வின் தோழமைக் கட்சிகளாக இருந்தவைகள் கூட, ஆதரிக்காத நிலையில் தற்போது விழுந்தடித்துக் கொண்டு, இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் ஆதரித்தது பற்றியும் விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இப்படிப் பேசியதையெல்லாம் மறந்து விட்டு அல்லது மறைத்து விட்டு ஏதோ அன்று சுட்டிக் காட்டிய குறைகள் அனைத்தும் இன்று நிவர்த்தி செய்யப்பட்டு விட்டதைப் போல, தற்போது நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் பா.ஜ.க. அரசு கொண்டு வந்த திருத்தங்களையெல்லாம் ஆதரித்து இந்த மசோதாவை மக்களவையில் ஆதரித்துள்ளது.
இவ்வாறு இந்த இரட்டைவேடம் ஏன் என்று நான் கேட்டதற்குத் தான் அ.தி.மு.க. வின் தலைவி, ஜெயலலிதா அவருக்கே உரிய "நாகரிகமான" மொழி நடையில் எனக்குப் பதிலளித்து ஒரு நீண்ட அறிக்கை விடுத்துள்ளார்.
அந்த அறிக்கையில், "தமிழகத்தின் நன்மைக்காகவும், தமிழக மக்களின் நன்மைக்காகவும் அல்லும் பகலும் அயராது பாடுபடும் அ.தி.மு.க., தமிழகத்தின் நன்மைக்காகவே நில எடுப்பு திருத்த மசோதாவை மக்களவையில் ஆதரித்தது" என்று விளக்கமளித்திருக்கிறார். "பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்வதை அ.தி.மு.க. ஒரு போதும் ஏற்காது" என்று மக்களவைத் தேர்தலின் போது உறுதி அளித்து விட்டு, பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள காப்பீட்டு மசோதாவின் மூலம் அன்னிய முதலீட்டின் உச்ச வரம்பு 49 சதவிகிதமாக உயர்த்தப்படுவதை மறந்து விட்டு அதை ஆதரிப்பதற்கு முன் வந்தது தான் தமிழக மக்களின் நன்மைக்கான காரியமா?
 காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பது மக்களுக்கு எதிரான காரியமா?
 "அம்மா"வின் கேள்வி உண்மையென்றால், 29-8-2013 அன்று அதே நாடாளுமன்றத்தில் இதே மசோதா மீது சண்டமாருதம் செய்து பேசி விட்டு அவையிலிருந்தே வெளி நடப்பு செய்தது ஏன்?
 2013இல் மசோதாவுக்கு அ.தி.மு.க எதிர்ப்பு - 2015இல் மசோதாவுக்கு அ.தி.மு.க. ஆதரவு ஏன் இந்த இரட்டை நிலை?
 சொத்துக் குவிப்பு வழக்கு மேல் முறையீட்டின் மீது இப்போது தானே விசாரணை முடிந்திருக்கிறது;
 எனவே தான் இந்த நிலை என்று பதில் கூறுவார்களோ?
 ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உணவு பாதுகாப்பு மசோதாவைக் கொண்டு வந்த போது அதிலிருந்த நன்மைகளையெல்லாம் மறைத்து விட்டு அரசியல் காரணங்களுக்காக அதனை எதிர்த்த அ.தி.மு.க., தற்போது பா.ஜ.க. அரசின் உணவுப் பாதுகாப்பு சட்டத்தை ஆதரிப்பதற்கு என்ன பெயர்?
இரட்டை நிலை தானே?
பா.ஜ.க. இந்த மசோதாவில் கொண்டு வந்த ஒன்பது திருத்தங்களில் ஒன்று அ.தி.மு.க. வின் முடிவு என்றும், அதனால் தான் இந்தச் சட்டத் திருத்த மசோதாவிற்கு அதிமுக ஆதரவளித்தது என்றும் ஜெயலலிதா வக்காலத்து வாங்குகிறார்.
 நான் விடுத்த அறிக்கை ஒன்றில், "இந்தச் சட்டத் திருத்தங்களை முதலில் தீவிரமாக எதிர்த்த அ.தி.மு.க. என்ன காரணத்தாலோ (?) ஏதோவொரு உள்நோக்கத்தோடு திடீரென்று ஆதரவு தெரிவித்து வாக்களித் துள்ளது"" என்று குறிப்பிட்டதால்தான் ஜெயலலிதா பதில் அளித்திருக்கிறாராம்.
 அ.தி.மு.க. வின் இரட்டை நிலை பற்றி நான் மட்டுமல்ல; தமிழ்நாட்டில் உள்ள அத்தனை நாளேடுகளும், அரசியல் தலைவர்களுமே, இந்த மசோதாவை அ.தி.மு.க. ஏற்கனவே எதிர்த்ததையும், பா.ஜ.க.வின் தோழமைக் கட்சிகளாக இருந்தவைகள் கூட, ஆதரிக்காத நிலையில் தற்போது விழுந்தடித்துக் கொண்டு, இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் ஆதரித்தது பற்றியும் விளக்கமாகச் சொல்லியிருக்கிறார்கள்.
தமிழக விவசாயிகள் தம்மை அ.தி.மு.க. வஞ்சித்து விட்டது என்பதைப் புரிந்து கொண்டு விட்டார்கள்.
எனவே ஜெயலலிதா என் மீது கோபப்பட்டுப் பயனில்லை. பெங்களூர் சொத்துக் குவிப்பு வழக்கில் மேல் முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அ.தி.மு.க. இந்த மசோதாவை வலியச் சென்று ஆதரிக்கும் என்பது, தமிழ்நாட்டில் உள்ள சிறு பிள்ளைகளைக் கேட்டால் கூட தெரிந்த கதை தானே என்பார்கள்!
 இதைச் சமாளிக்கவும், ஏற்பட்டு விட்ட ஆழமான புண்ணுக்குப் புணுகு தடவிடவும் ஜெயலலிதா இவ்வளவு பெரிய அறிக்கை விட்டு, "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்பதைப் போல தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத் தேவையில்லை;
வேஷம் கலைந்து விட்டது என்பது விவசாயிகளுக்குத் தெரியும்!
இந்த மசோதா தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் நன்மை பயக்கும் என்பதால் அ.தி.மு.க. நாடாளுமன்றத்தில் ஆதரித்ததாம்!
 "பொய்யைச் சொன்னாலும், பொருத்தமா சொல்லுங்கடா; போக்கத்த பசங்களா" என்று உடுமலைக் கவிராயர் தான் சொல்வார்!
 அதைப் போலத் தான் - விவசாயிகளின் மன உளைச்சலை மேலும் அதிகப்படுத்திடும் வகையில் தான், ஜெயலலிதாவின் அறிக்கை உள்ளது! நாடாளுமன்றத்தில் இந்த மசோதா மீதான விவாதத்திற்குப் பதிலளிக்க வேண்டிய அமைச்சர் கூட, அம்மையார் அறிக்கையிலே தெரிவித்துள்ள இத்தனை கருத்துகளைத் தெரிவிக்கவில்லை.
 அந்த அளவுக்கு விவசாயிகளின் நலன்களுக்கெதிரான பாஜ.க. அரசின் மசோதாவுக்கு ஆதரவாக விளக்கமளித்துள்ளார்.
ஜெயலலிதா அறிக்கையில் பெரும் பகுதியில் என்னைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். அதாவது என்னைக் கடுமையாகத் தாக்குவதாக எண்ணிக் கொண்டு, தி.மு.கழகம் கூட்டணியிலே இடம் பெற்றிருக்கிற போது எந்த அளவுக்கு விசுவாசமாக இருக்கும்,
இருந்தது என்பதையெல்லாம் சுட்டிக் காட்டி யிருக்கிறார். அதைத் தான் இந்திரா காந்தி அம்மையார் கடற்கரை கூட்டத்தில் பேசும்போது தி.மு. கழகம் உறவாக இருந்தாலும் உண்மையாக இருக்கும் என்று கழகத்தின் கூட்டணி தர்மம் பற்றி எடுத்துக் கூறினார்.
செயற்கையாக என்ன சமாதானம் கூறினாலும், அ.தி.மு.க. நிலம் கையகப் படுத்தும் மசோதாவில் பா.ஜ.க. வை ஆதரித்ததற்கான அடிப்படைக் காரணத்தை மறைக்க முடியாது. பூனைக்குட்டி வெளியே வந்துவிட்ட உண்மை உலகத்திற்கு நன்றாகவே புரியும்!
                                                                       -முன்னாள்முதல்வர் கலைஞர் கருணாநிதி.

தமிழகத்தில் வேளாண் துறைக்குப் பொறுப்பேற்றிருந்த அமைச்சர் ஒருவர் கொடுத்த நெருக்கடியின் காரணமாக தமிழக வேளாண்மைபபொறியியல் துறையின் மூத்தப் பொறியாளர் முத்துக்குமாரசாமி மன உளைச்சலினால் தற்கொலை செய்து கொண்டு மாண்டிருக்கிறார். 
இந்தச் செய்தி ஊடகங்களில் வெளிவந்து அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அ.தி.மு.க. அரசுக்கு எதிராகப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியவுடன் அவசர அவசரமாக அந்த அமைச்சரை, கட்சிப் பொறுப்பிலிருந்தும், அமைச்சரவையிலிருந்தும் விலக்கியிருக்கிறார்கள்.
 இதிலிருந்தே அதிகாரியின் தற்கொலைக்குக் காரணம் அமைச்சர் தான் என்பதை அ.தி.மு.க. அரசே ஒப்புக் கொண்டு விட்டதாக நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.

அரசு அதிகாரிகள் தற்கொலை என்பது அ.தி.மு.க. ஆட்சியில் தொடர் கதையாகி விட்டது. ஏற்கனவே ஈரோட்டில் வீட்டு வசதி வாரியத்தில் பணியாற்றி வந்த பழனிசாமி என்ற அதிகாரி, நெல்லையிலே ஒரு வட்டாட்சியர், பொதுப் பணித்துறையிலே ஒரு பொறியாளர் என்று தற்கொலைப் பட்டியல் நீளும்.


=======================================================================
இன்று[15 மார்ச் .]

  • உலக நுகர்வோர் தினம்
  • தென்னாப்பிரிக்கா காமன்வெல்த் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது(1961)
  • முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே மெல்பேர்ணில் நடைபெற்றது(1877)
  • முதலாவது இணைய டொமைன் பெயர் பதியப்பட்டது(1985)
  • சூரிய குடும்பத்தில் அதிவேகமான பொருளான 90377 செட்னா கண்டுபிடிக்கப்பட்டது(2004).
==========================================================================

                            இன்றைய தமிழக அரசு நிர்வாகம்?

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...