சனி, 27 ஏப்ரல், 2013

"ரமணா" !

உண்மை கதை இதுதான்.........,!!
மதுரையில் உள்ள ராம் நகரில் இருந்து ஒரு பத்துவயது வெங்கட்ரமணன் என்ற சிறுவன் திருவண்ணாமலைக்குப் போகிறான். 
அப்போது உண்ண உணவில்லாமல் பசியால் மயக்கம்போட்டுக் கீழே விழுந்து விடுகிறான். அருகிலிருந்தவர்கள் பார்த்து விட்டுத் தண்ணீர் தெளித்து மயக்கம் தெளிவிக்கிறார்கள். சோர்விலிருந்து மீண்ட சிறுவன் ஏதேதோ உளறுகிறான். அதை என்னவென்று புரியாத மக்கள் அவரை பால யோகி என்று மூடத்தன கொண்டு  திடீரென்று அந்தச் சிறுவன் காலில் விழுகிறார்கள். 
சிலர் விழுந்ததைப் பார்த்து பலர் விழுகிறார்கள். 
கூட்டம் கூடுகிறது. வெங்கட்ரமணன் பெயர் மாறி "ரமணா" ஆகிறான்.
 கொஞ்சநாளில் ரமணரிஷி ஆகிறான். 
அப்பாவி மக்கள் பக்தர்களாகக் கூடுகிறார்கள். 
வழக்கம் போல் மக்கள் பலர் காணிக்கை என்ற பெயரில்  கொண்டு வந்து கொட்டுகிறார்கள். நிறையச் சொத்துகள் சேர்ந்து விடுகிறது. 
கோடிக்கணக்கில் பெருகி விடுகிறது. 
ஆசிரமம் அமைத்து ஒரு நல்ல நிலையில் அமர்கிறான்.மற்றவர்களுக்கு நல்ல வழி காட்டுகிறாரோ இல்லையோ சாமியார்களுக்கு நல்ல வழி பிறந்து விடுகிறது.
உடனே ஊரில் இருந்து தன் தம்பியை அழைத்து வந்து சொத்துக்களை நிர்வகிக்கச் செய்கிறான்.
அடுத்து   தன் தாயாரையும் அழைத்து வந்து விடுகிறான். 
ரமணரிஷி இப்போது ரமண மகான் ஆகிறான். இப்போதுதான் அவரின் சம் வெளியாகிறது.ஆசிரம் மூலம் சம்பாதித்த அத்தனை சொத்துக்களையும் தன் தாயார் பெயரில் உயில் எழுதி மாற்றம் செய்து விடுகிறான். 
அதை  தொடர்ந்து மற்றவர்களால் ஆசிரம சொத்து தொடர்பான  பிரச்சினைகள் வந்து விடுகின்றன. 
இதெல்லாம் நடந்தது 1930-ஆம் ஆண்டு வாக்கில்.
 திருவண்ணாமலை முனிசிபல் நீதி மன்றத்தில் இந்த சொத்து தொடர்பான வழக்கு நடந்தது.

 வழக்கு விசாரணைக்கு வருகிறது.
 அதற்கு முன் இருந்த வெங்கட்ரமணன் ரமணாவாகி ரமணரிஷி ஆகி ரமண மகான் ஆகி ரமண பகவான் ஆகிவிட்டார். 
பகவான் நீதிமன்றம் எல்லாம் வரமாட்டார் என்று அவரது பக்தர்கள் சொல்லி விட்டார்கள்.
 நீதிமன்றம் ஒரு கமிஷன் அமைத்தது. இரண்டு வழக்குரைஞர்கள் விசாரித்தார்கள். பக்தி மார்க்கத்தில் இருக்கும் நீங்கள் பொதுமக்கள் கொடுத்த சொத்தை தாயார் பெயரில் உயில் எழுதி வைத்து விட்டீர்களே என்று கேட்டபோது" நான் சந்நியாசம் வாங்கவில்லையே. அதனால் என் தாயாருக்கு நான் எழுதி வைத்த உயில் செல்லும்' என்று சொல்லி விட்டார் ரமன   மகரிஷி .
சொத்து விவகாரம் வந்த பின்னர்தான் ரமணரின் சொந்த விவகாரம் வெளி உலகிற்கே தெரிகிறது.அவர் சந்நியாசம் வாங்காமல் துறவியாக ,மனிதப்புனிதராக அல்லது மனித கடவுளாக இருந்த கதை.அல்லது வரலாறு. அவருக்கு அதாவது அந்த கடவுளுக்கு கடைசி காலத்தில் வந்தது இந்த உலகில் பாவிகளுக்கு வர வெண்டும் என்று வேத ஞானிகள் ஒதுக்கி வைத்திருந்த புற்று நோய்.அதுதான் அவரின் உயிரையே பறித்தது.
அதையும் சில பக்தர்கள் உலகின் மக்கள் பாவத்தை அவரே ஏற்றுக்கொண்டதால் தான் இந்நோய் அவரை தாக்கியதாக கூறி பெருமை ப்பட்டுக்கொண்டார்கள்.
ஆனால் இப்போதும் பாவங்கள் உலகில் மிச்சம் இருக்கிறதே என்ன காரணம்.விளக்கம்தான் இல்லை.
இன்றுவரை அந்த ரமணரின் சொத்து பிரச்னை நீதிமன்றத்தில் அப்படியே முடங்கி கிடக்கிறது. பிரச்சினை தீரவில்லை.
"நாங்கள் சொல்வது எல்லாம் ஆதாரமில்லாமல் சொல்லவில்லை. ரமணரிஷியின் மர்மம் என்ற புத்தகத்தில் உள்ளது."

"பக்தி என்ற பெயரில் பிறர் சொத்துக்களை எல்லாம் தன் பெயருக்கு மாற்றி தன் தாயாருக்கும் தம்பிக்கும் மாற்றம் செய்த ரமணமகரிஷியின் பக்தி வே ட ம் எங்கே?
பெரும் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து மக்களுக்கு உழைப்பதையே தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு தான் சேர்த்த சொத்துக்களை தன் சொத்துக்களை எல்லாம் மக்களுக்காகச் சேர்த்து அறக்கட்டளை ஆக்கி அதை பின் தங்கிய மக்கள் எல்லாம் அய்ஏஎஸ் அய்பிஎஸ் அதிகாரிகளாகவும் பெண்கள் உட்பட தாழ்த்தப்பட்டவர்கள் எல்லாம் உயர் நீதிமன்ற உச்சநீதிமன்ற ஜட்ஜ்களாகவும் உயர்வதற்குப் பாடுபட்ட தலைவர் தந்தை பெரியாரின் உயர்ந்த மனிதநேயச் சிந்தனை எங்கே என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்."
                                                                                                                                          -கி.வீரமணி 
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 தமிழ்த்திரைப் படங்கள்  தரம்.

தமிழ் படங்கள் இந்திய சினிமா -100 இல் இடம் பெறாதது தொடர்பான இடுகையில் தோழர் ஒருவர்" தமிழ்ப்படங்கள் தரம்" பற்றி சந்தேகத்தை கிளப்பி விட்டார்.
நியாயமானது.அவர் கேள்வி.
அது தொடர்பான எனது கருத்துக்கள்.
இந்த தரம் எதை வைத்து அளவிடப்படுகிறது?

இந்த நூற்றாண்டு காலத்தில் தமிழ் சினிமாவில் தரம்வாய்ந்த படம் ஒன்று கூடாவா இல்லாமல் போய் விட்டது.மற்ற மொழி படங்கள் மட்டும் தரத்துடன் உள்ளதா?
குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஒரு தரமான படம் கூட தமிழகத்தில் எடுக்கப்படவே இல்லையா?
சரி.இந்த உலகப்படம் என்றால் என்ன?அதற்கு தரம் எந்த அளவுகோலால் நிர்ணயிக்கப்படுகிறது.
ஆஸ்கார் பரிசுகள் ஆங்கில மேலை நாட்டு பட்ங்க்களுக்கான் பரிசு.அதை வாங்குவதையே சிலர் தங்கள் லட்சியம் என்பது மிகத்தவறு.ஆஸ்கார் வாங்க உங்கள் படம் ஆங்கிலத்தில் பேச வே ண்டும்.  முக்கியமாக இடது சார்பான நிலை இருக்க கூடாது.இடது சாரிகளை அதாவது கம்யூனிஸ்ட்களை விமர்சித்தால் கூடுதல் வாய்ப்பு.
மக்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்தியவைதான்ஒரு படத்தின் தரமாக கொள்ளவேண்டும்.
அதை விட்டு,விட்டு ஒரு சிறுமி பள்ளியில் இருந்து வீடு போவதை மட்டுமே ஒருமணி நேரம் காட்டி  வெறும் பேருந்து ஓசையும்,ஆட்கள ஆங்காங்கே பேசும் சத்தம் மட்டுமே பின்னணியாக கொண்டதுதான் இவர்கள் கூறும்  தரமா?

உலகப்படமா?
அவரவர் மொழி,கலாச்சாரத்துக்கு தக்கதான் கலாச்சார படைப்புகள் இருக்கும்.இதில் தரமும் அவர்கள் கலாச்சாரம் அடிப்படை யில்தான் அமைய வே ண்டும்.ஜப்பானிய அகிரா குரோசவே போல்,ஹாலிவுட் படம் போல்  தமிழன் படம் எடுக்க வெண்டும் என்று அடம் பிடிக்க கூடாது.தமிழ் படம் போல் எடுங்கள் என்று நாம் அடம் பிடித்து படம் பிடிக்க கூடாது.உடை,மொழி,கலை,மாற்றம் ஒவ்வொரு மக்களுக்கும் ஒரு பாணியில் இருக்கிறது.அவைதான் மற்றவைகளில் பிரதிபலிக்கும்.கமல்ஹாசன் ஹாலிவுட் பாணியில் எடுத்த விஸ்வரூபம் தமிழக மக்கள் மனதில் இடம் பிடிக்க முடிய வில்லையே ஏன் ?
----------------------------------------------------------------------------------------------------------------------------------
suran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...