ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

உலகிலேயே ஏழைகள் நாடு

SURAN


"உலகிலேயே  ஏழைகள் அதிகம் வாழும் நாடு இந்தியா"தான் என உலக வங்கியின் ஆய்வறிக்கை வெளியிட்டு ள்ளது.
எப்படியோ இந்தியா வல்லரசாகிக்கொண்டிருக்கிறது.
இந்திய அரசின் திட்டங்கள் எல்லாம் பகாசுர பணக்கார நிறுவனக்களுக்கும் -அந்நிய நிறுவனங் களுக்குமாக இருப்பதால்தான் இந்த நிலை.
எல்லா வழிகளும் பணக்காரர்கள் மேலும் பணத்தை குவிக்கும் வழியாகவே காங்கிரசு அரசு செய்து வருகிறது.உலகமயமாக்கல் ,தனியார் மயமாக்கல்,தாரள [கொள்ளை]மயமாக்கல் போன்ற அரசின் கொள்கைதான் ஏழை-பணக்காரன் வித்தியாசத்தை 1950களுக்குப்பின்னார் மீண்டும் கொண்டு வருகிறது.
விடுதளைக்குப்பின்னார் நேரு,இந்திரா காந்தி  போன்ற பிரதமர்கள் கொண்டூவந்த தேசியமயமாக்கல் மூலம் விலகிய ஏழ்மை கோடு குறைவு  அதே காங்கிரசு அரசின் இன்றைய ஆட்சியாளர்களால் தனியார் மயமாக்கலால் மீண்டும் அதிகரித்து வருகிறது ஏழ்மை.
உலக நாடுகளில் 1.2 பில்லியன் ஏழைகள் வாழ்வதாக தெரிவித்துள்ள அந்த அறிக்கை, இவர்களில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் தொகை இந்தியாவில் வாழ்வதாக கூறியுள்ளது.
2030-ம் ஆண்டுக்குள் உலக நாடுகளில் ஏழ்மையை ஒழிக்கும் திட்டத்திற்காக உலக வங்கி நடத்திய ஆய்வின் மூலம், உலகின் ஏழ்மை அதிகமாக உள்ள நாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியர்களில் பலர் நாளொன்றுக்கு ரூ.65க்கும் குறைந்த செலவில் வாழ்ந்து வருவதாகவும் அது இன்றைய இந்திய விலைவாசியில்   அன்றாட தேவைக்கு 80%க்கும்  மிக குறைவானது" என்றும்  அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

=============================================#
சகுந்தலா தேவி .6 வயதிலேயே மைசூர் பல்கலைக்கழகத்தில் தனது கணித திறமையை காண்பித்து மற்றவர்களை அசர் வைத்தவர் சகுந்தலா தேவி .
தனது கணித திறமையை காட்டி  கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ள சகுந்தலா தேவி பெங்களூரில் இன்று மரணமடைந்தார்.
 அவருக்கு தற்போது வயது 83.
sakunthala devi
மிக சிக்கலான கணக்குகளை சில நொடிகளுக்குள் தீர்த்து வைக்கும் 'மனித கம்ப்யூட்டர்' என புகழப்பட்ட கணித மேதை சகுந்தலா தேவி.

1980-ம் ஆண்டு லண்டன் இம்பிரீயல் கல்லூரியின் கணினி பிரிவினர் அளித்த 7,686,369,774,870 X 2,465,099,745,779 என்ற 13 இலக்க பெருக்கல் கணக்கிற்கு 28 வினாடிகளில் விடையளித்து உலகையே வியக்க வைத்தவர், சகுந்தலா தேவி என்பது குறிப்பிடத்தக்கது.

கணித நுணுக்கம் தொடர்பான பல்வேறு நூல்களை எழுதியுள்ள இவர், கடந்த சில வாரங்களாக சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.

பெங்களூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சகுந்தலா தேவி இன்று மரணமடைந்தார்.

முதல்வர் மம்தா க்கு தொடர்பில்லை.
---------------------------------------------------- --------------------------
 மேற்குவங்க மாநிலத்தில் உள்ளது சாரதாகுழுமம்.
இக்குழுமம் பல்வேறு வங்க மொழிபத்திரிகைகள் மற்றும்நிதி நிறுவனத்தையும் நடத்தி வந்தது. இந்த நிறுவனம் திரிணாமுல் காங்கிரசு முக்கியத்துவர்களால் நடத்தப்படுகிறது.திரிணாமுல்  கட்சி சார்பாக பத்திரிக்கைகளும் வெளியிடுகிறது முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இந்நிறுவனத்தில் பங்குகள் உண்டு என்றுதெரிகிறது.
சாரதா நிதிநிறுவனம்சமீபத்தில் நிதி நெருக்கடியால் இழுத்துமூடப்பட்டது. இதில் முதலீடு செய்தவர்களுக்கு  காசோலைகள் எல்லாம்  பணமில்லாமல் திரும்பி விட்ட து.
இந்நிறுவனத்தின் தலைவரும்  திரினாமுல் காங்கிரசு தலைகளில் ஒருவருமான சதீப்தா சென் கடந்த மார்ச் 26-ம் தேதி நிதிநிறுவனம் மூடப்படுவதாக அறிவித்து விட்டு தலைமறைவாகி விட்டா ர்.
சாரதா குழுத்தின் தலைமைநிர்வாகியும்  , திரிணாமுல் காங்.எம்.பி.யுமான குணால்கோஸ்  "நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தொடர்பில்லை.அவருக்கு இந்த விடயங்கள் தெரியாது " என்று  கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...