ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

பாகவதர்.


கிருஷ்ணன் பாகவதர்


                           
நகைச்சுவை அரசு கிருஷ்ணனும், இசை உலக ஜோதி பாகவதரும் சிறையில் இருக்கிறார்கள். அவர்கள் உயிர் இப்போது எப்படி துடித்துக் கொண்டும், உள்ளம் எவ்வளவு துயரத்தில் மூழ்கி வேதனைப்பட்டுக் கொண்டும் இருக்கும் என்பதை உள்ளபடி எடுத்துக்காட்ட எவராலும் முடியாது என்றாலும், அவ்விருமணிகளுக்கும் மறுமணிகள் இனி யார்? என தமிழ் மக்கள் ஏங்கித் தவித்துக் கொண்டு இருப்பதை சரியானபடி விளக்கிக் காட்டுவது அதனிலும் முடியாத காரியமேயாகும்.

சரி இவை நடந்துவிட்ட காரியம். இனி நடக்கும் காரியத்தை அதாவது இத்துயரத்தையும்  துன்பத்தையும் தீர்த்துக் கொள்ள அவ்விரு மணிகளையும் வெளியாக்கிக் கொண்டு வர வேண்டிய காரியத்தைப்பற்றி யோசித்து ஆவன செய்ய வேண்டியதே அறிவுடையோருடையவும் அவர்களைப்பற்றிய ஆவலுடையோரு டையவும் தவிர்க்கவொண்ணாக் கடமையாகும்.

பாகவதர், கிருஷ்ணன் தனித்தனி மனிதர்களானாலும் அவர்கள், அவர்களுடைய, அல்லது அவர்கள் மக்கள் மனைவிகள் சுற்றம் உறவினர், அவர்களால் பிழைக்க வாழும் மக்களின் மனிதர்களல்லாத தமிழ் மக்களின் - தமிழ் மக்களுக்கே சொந்தமான மணிகளாவார்கள். இதை ஒவ்வொரு தமிழனும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். இன்று தமிழ்நாட்டில் இணையில்லா பேறு பெற்ற தமிழர்களின் செல்வங்களாவார்கள்.

ஆதலால் இவர்களை விடுதலை செய்யும் முயற்சியை அவர்கள் (கிருஷ்ணன் - பாகவதர்) சொந்த சுயநல முயற்சியாய்க் கருதாமல் தமிழர்களின் பொதுநல முயற்சியாகக் கருத வேண்டுமென்று வலியுறுத்துகிறோம். இதற்கு ஆக ஒரு பொதுக் கூட்டம் சடுதியில் கூட்டப்பட வேண்டும். அதில் ஒரு செல்வாக்கான கமிட்டி நியமிக்கப்பட வேண்டும்.

நிதி திரட்ட வேண்டும். முனிசிபாலிட்டி ஜில்லா போர்டு, யூனியன் போர்ட் ஆகியவைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும். கலைவாணர்கள் கூட்டம் உறங்கிக் கிடக்காமல் தக்க முயற்சி செய்து தக்கதொரு நிதி திரட்ட வேண்டும். திருச்சியில் 11ஆம் தேதி தோழர் வேதாசலம் அவர்களால் தோழர் சங்கரன் தலைமையில் கூட்டப்பட்ட கூட்டத்திற்கு பலர் ஆதரவு அளித்திருப்பது குறித்து மகிழ்ச்சி எய்துகிறோம்.
குடிஅரசு - துணைத் தலையங்கம் - 17.11.1945
=====================================================================================
 
[தங்கச்] சுரங்க [ஊழல்]மன்னன்.
                   .
சட்டவிரோத சுரங்க ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட கருநாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி வீட்டில் வைரம் பதிக்கப்பட்ட தங்க சிம்மாசனமும், வைர நெக்லஸ் உள்ளிட்ட நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கு சிக்கிய நகை குவியலை பார்த்து அதிகாரிகள் திகைத்து போனார்கள்.
கருநாடக முன்னாள் அமைச்சர் ஜி.ஜனார்த்தன ரெட்டி. இவர் `ஓபுலாபுரம் மைனிங் கம்பெனி' என்ற சுரங்க நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம், சட்டவிரோதமாக சுரங்கங்களில் இரும்பு தாது வெட்டி எடுத்து கடத்தி வருவதாக புகார் எழுந்தது. அதன்பேரில், சி.பி.அய். அதிகாரிகள் கடந்த 5ஆம் தேதி ஜனார்த்தன ரெட்டியையும், அவருடைய மைத்துனர் சீனிவாச ரெட்டியையும் கைது செய்தனர். இருவரும் விசாரணைக்காக, 19ஆம் தேதிவரை சி.பி.அய். காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.
அதிகாரிகள் திகைப்பு
இந்நிலையில், பெல்லாரியில் உள்ள ஜனார்த்தன ரெட்டியின் வீட்டில் சி.பி.அய். அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு தங்க நகை குவியலே இருப்பதை பார்த்து அவர்கள் திகைத்து விட்டனர்.
அரச சிம்மாசனம் போன்ற தங்க சிம்மாசனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. அதில் வைரமும் பதிக்கப்பட்டிருந்தது. அந்த நாற்காலியின் 4 கால் களிலும், இதர பகுதிகளிலும் தங்கம் தாராளமாக உபயோகிக்கப்பட்டு இருந்தது. நாற்காலியில், `ஜி.ஜே.ஆர்.' என்ற ஆங்கில எழுத்துகள் தங்கத்தில் பொறிக்கப்பட்டு இருந்தன. அது, `காளி ஜனார்த்தன ரெட்டி' என்று ரெட்டியின் முழுப்பெயரை குறிக்கும். நாற்காலியில் சிவப்பு நிற குஷன் வசதி செய்யப்பட்டு இருந்தது.
அங்கிருந்த வைர நெக்லஸ் ஒன்றும் சி.பி.அய். அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் மற்றும் பத்மாவதியின் தங்க விக்ரகங்கள், தங்கத்தட்டு, தங்கத்தால் செய்யப்பட்ட பூஜை சாமான்கள், பிளாட்டினம் நகைகள் மற்றும் எண்ணற்ற தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன. இவற்றில் பெரும்பாலான நகைகள், பெல்லாரியில் வாங்கப்பட்டவை.
இந்த தங்க நகைகளை மதிப்பிடும் பணியையும் உடனடியாக சி.பி.அய். அதிகாரிகள் தொடங்கினர். அவர்கள் நகைகளை மதிப்பிட்டு முடிப்பதற்கு அதிகாலை 1.30 மணி ஆகிவிட்டது.
மேலும், ரொக்கப்பணம் ரூ.3 கோடி கைப்பற்றப்பட்டது. அதை நோட்டு எண்ணும் எந்திரத்தின் உதவியால் அதிகாரிகள் எண்ணி முடித்தனர்.
சோதனையின்போது, ஒரு உறவினரின் திருமண விழாவுக்கு அணிந்து செல்வதற்கு சில நகைகளை விட்டு தருமாறு ஜனார்த்தன ரெட்டியின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர். அதனால் அந்த நகைகளை மட்டும் அதிகாரிகள் விட்டுவிட்டு சென்று விட்டனர்.
இதற்கிடையே, ஜனார்த்தன ரெட்டியின் மைத்துனர் சீனிவாச ரெட்டி, தனியார் வங்கி மூலம் கோடிக்கணக்கான ரூபாய் பண பரிமாற்றம் செய்திருப்பது தெரிய வந்ததால் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், பினாமி பெயர்களில் 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை அவர் தொடங்கி இருக்கிறார். சட்டவிரோத சுரங்க தொழிலில் சம்பாதித்த பணத்தை அந்த வங்கி கணக்குகள் மூலம் அவர் பரிமாற்றம் செய்தது தெரிய வந்துள்ளது.  சீனிவாச ரெட்டிக்கு  வங்கியில் சொந்தமாக 6 லாக்கர்கள் உள்ளன. அவற்றில் 4 லாக்கர்களை சி.பி.அய். அதிகாரிகள் திறந்து சோதனை நடத்தினர். அந்த லாக்கர்களில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் இருந்தன. அவற்றையும், சில ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றினர்.
மேலும், பெல்லாரியில், ஜனார்த்தன ரெட்டியின் நெருங்கிய கூட்டாளிக்கு சொந்தமான அரிசி ஆலையிலும் ஒரு சி.பி.அய். அதிகாரிகளின் குழு சோதனை நடத்தியது. மற்றொரு குழு அனந்தப்பூரில் உள்ள ரெட்டியின் ஓட்டுநர் உள்ளிட்ட இதர கூட் டாளிகளின் வீடுகளில் சோதனை நடத்தியது. அதில் ரூ.20 லட்சம் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. இன் னொரு சி.பி.அய். அதிகாரிகள் குழு, ஆந்திர-கரு நாடக எல்லையில் உள்ள ரெட்டியின் சுரங்கங்களில் ஆய்வு செய்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...