ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

போட்டுத்தள்ளுவதில் உ.பி. முதலிடம்


 போலி என்கவுன்டர் நடந்ததில் உத்தர பிரதேசம் மாநிலம் முதலிடத்திலும், மணிப்பூர் மாநிலம் இரண்டாவது இடத்திலும் உள்ளது. ரவுடிகளை போலீசார் பிடிக்கச் செல்லும் போது, அவர்கள் போலீசாரை தாக்குவதுண்டு. அப்போது போலீசார் பதிலுக்கு தாக்குதல் நடத்துவார்கள். இந்த என்கவுன்டரில் இருதரப்புக்கும் காயம் ஏற்படலாம். ஆனால், என்கவுன்டரில் பெரும்பாலும் ரவுடிகள்தான் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். 

இதனால், போலீசுக்கு பிடிக்காத ரவுடிகள் அல்லது ஆளும் கட்சிக்கு பிடிக்காதவர்கள் இந்த ‘போலி’ என்கவுன்டரில் சுட்டு கொல்லப்படுகிறார்கள் என்று பரவலாக கூறப்படுகிறது. இது குறித்து நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான புகார்கள் தேசிய மனிதஉரிமை ஆணையத்துக்கு வருகிறது. 

கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு ஜூன் வரை மனித உரிமை ஆணையத்தில் 369 போலி என்கவுன்டர் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 90 வழக்குகளில் போலி என்கவுன்டர் நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4.54 கோடி நிவாரணம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்னும் 271 வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

போலி என்கவுன்டர் புகார் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது உத்தர பிரதேசம். இங்கு கடந்த 3 ஆண்டுகளில் 120 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக புகார் வந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 40 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலம் 2வது இடத்தில் உள்ளது. இங்கு கடந்த 3 ஆண்டுகளில் 60 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். தீவிரவாத அச்சுறுத்தல் உள்ள ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த ஆண்டில்தான் அதிகபட்சமாக 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

நக்சல் அபாயம் உள்ள சட்டீஸ்கர் மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஜார்கண்ட்டில் 13 பேரும், ஒரிசாவில் 12 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அமைதிபூங்கா என கூறப்படும் தமிழ்நாடு,மத்திய பிரதேசத்தில் கடந்த 3 ஆண்டுகளில் தலா 15 பேர் போலி என்கவுன்டரில் பலியாகியுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 23 பேரும், தலைநகர் டெல்லியில் 6 பேரும் என்கவுன்டரில் பலியாகியுள்ளனர்
.
உத்திர பிரதேச மாநில கால்நடை மற்றும் பாலவளத்துறை அமைச்சர் ஆவாத்பால் சிங் யாதவ் மீது அம்மாநில போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். தனியார்த்துறை பாதுகாப்பு அதிகாரியான சந்தோஷ் ஜூன் 10ம் தேதியன்று சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது சகோதரர் அளித்த புகாரின் பேரில் மாவட்ட நீதிபதி சந்தோஷ் புத்திசாகர் மிஸ்ராவின் உத்தரவின் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். உடன் பணிபுரியும் விஜய் வர்மா மற்றும் அவரது மகன் மிதுன் வர்மா ஆகியோரால் சந்தோஷ் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை சம்பவத்தின் பின்னணியில் அமைச்சர் ஆவாத்பால் இருப்பதாக சந்தோஷின் சகோதர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதே போன்று மேலும் 2 கொலை வழக்குகளில் முக்கிய குற்றவாளியாக அமைச்சர் ஆவாத்பால், அவரது சகோதரர் மற்றும் மகன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் கொண்டுவரப்பட்ட லோக் ஆயுக்தா மசோதாவில் ஊழல் புரிந்தவர்கள் பட்டியலிலும் அமைச்சர் ஆவாத்பால் பெயர் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 
_____________________________________________________________________________________________________________
நித்யானந்தாவின் கூத்து


 நித்யானந்த தியான பீடம் சார்பில் ஒரு நாள் அடையாள பட்டினி போராட்டம் அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் மணிமண்டபம் எதிரில் நேற்று நடந்தது. தியான பீடத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர். பெண்கள் 20 பேர் மட்டுமே இருந்தனர். காலை 10 மணிக்கு போராட்டம் தொடங்கியது.
அங்கிருந்த ஒரு மரத்தில் ஆணி அடித்து நித்யானந்தா போட்டோ மாட்டியிருந்தனர். நேரம் செல்ல செல்ல கூட்டத்தில் இருந்தவர்கள் தனித்தனியாக வெளியே சென்றனர். 

அருகே உள்ள கடைகளுக்கு சென்று வாழைப்பழம் வாங்கி சாப்பிட்டனர். பின்னர் ஆப்பிள், ஆரெஞ்சு ஜூஸ் குடித்து விட்டு, மீண்டும் வந்து போராட்டத்தில் அமர்ந்து கொண்டனர். பட்டினி போராட்டத்தில் அவ்வப்பொழுது தண்ணீர் பாட்டில், ஐஸ் கிரீம், ஸ்நாக்ஸ் வகைகள் வினியோகிக்கப்பட்டது. அவற்றை சாப்பிட்டுக் கொண்டே உண்ணாவிரதம் இருந்தனர். கூட்டத்தில் கலந்து கொண்ட இளம்பெண்கள் இறுக்கமான முகத்துடனேயே அமர்ந்து இருந்தனர். 

அவர்களை வலுக்கட்டாயமாக போராட்டத்தில் ஈடுபடுத்தியிருப்பது தெரிந்தது. பேசிய ஒவ்வொருவரும் நித்தியானந்தா, நடிகை ரஞ்சிதா படுக்கை அறை காட்சிகள் தொடர்பாகவே பேசினர். அப்போதெல்லாம் பெண் சீடர்கள் தலையை குனிந்து கொண்டு சிரித்தனர். ஒரு சிலர் முகம் சுழித்தனர். மதியத்திற்கு பிறகு பலர் ஓரமாக சென்று தூங்கி விட்டனர்.  
உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக பொதுமக்கள் ஒருவர் கூட வரவில்லை. பாதுகாப்புக்கு போலீசார் மட்டுமே வந்திருந்தனர்.

அந்த வழியாக நடந்து சென்றவர்களில் சிலர் வேடிக்கை பார்த்தனர். தங்களுக்குள் கமென்ட் அடித்து சிரித்தபடியே கலைந்ததை மட்டுமே காண முடிந்தது. வேடிக்கை பார்ப்பவர்கள் பார்வையில் படுவதை தவிர்க்க, பெண் சீடர்கள் தலையை குனிந்து கொண்டனர்.

ரஞ்சிதா வராததால் கூட்டம் இல்லை

போராட்டத்திற்கு நடிகை ரஞ்சிதா வருவார் என்ற எதிர்பார்ப்பு சிலரிடம் இருந்தது. அவரை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் சிலர் வந்திருந்தனர். ‘‘ரஞ்சிதா வருவாரா?’’ என்று கூட்டத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். ஆனால், தியான பீடம் நிர்வாகிகள் பதில் ஏதும் கூறவில்லை. ரஞ்சிதா வரவில்லை என்று தெரிந்ததும், அவர்கள் சென்று விட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...