செவ்வாய், 13 மார்ச், 2018

இரண்டாவது நாம்தான்..


அதிக குற்றவியல் (கிரிமினல்) வழக்குகளில் சம்பந்தப்பட்ட எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடம் பெற்று பெருமையை சேர்த்துள்ளது .

மக்களின் பிரதிநிதிகளாக இருந்துகொண்டு பல்வேறு குற்றங்களில் ஈடுபடும் எம்.பி., எம்எல்ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக வலியுறுத்தப்படுகிறது.

 இந்நிலையில், முதல் முறையாக மத்திய அரசு எம்.பி., எம்எல்ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது.


அஸ்வனிக் குமார் என்ற வழக்குரைஞர் "குற்றவியல் வழக்குகளில் தொடர்பு கொண்டு தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் வாழ்நாள் முழுவதும் அரசியலில் தலைகாட்ட முடியாதபடி தடைவிதிக்கக் வேண்டும்எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது 13,500 க்கு அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளன.அவர்கள் வெற்றி பெற்றதால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை." என்று  உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். 
 இதில் பெரும்பான்மையினர் பாஜக வைச் சார்ந்தவர்கள் என்பதும் பெருமைக்குரியதே. 

 இந்த மனுவை2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது, எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க 12 சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உத்தரவிடப்பட்டது.
அதனையொட்டியே இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

======================================================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...