வெள்ளி, 16 செப்டம்பர், 2016

நட்டாற்றில் விட்டாய்.

விக்னேஷ் என்ற தம்பி காவிரி பிரச்னைக்காக தீக்குளித்து உயிரை இழந்திருக்கிறான்.
இதனால் இழப்பு அவனது குடும்பத்தினருக்குத்தான்.
விக்னேஷ் உயிரிழப்பால் காவிரி பிரச்னை ஓய்ந்துவிடுமா?

அப்பிரச்னை தமிழகத்தில்மழை பெய்ததும்ஓய்ந்துஅடுத்தாண்டுமீண்டும்எழும்.

காவிரி பிரச்னை நூற்றாண்டு பிரச்னை.
இவரது உயிரிழப்பால் தீர்ந்து போகும் பிரச்னை இல்லை.
அப்பிரச்னை தொடர்பாக நம் முதல்வரே இன்று வரை தீவிரநடவடிக்கையில்இறங்கவில்லை.
காவிரிநீரால் விவசாயம்செய்யும்விவசாயிகள்யாரும்இதுவரை தீக்குளிக்கவில்லை.

அவ்வலவுஏன்மேடை தோறும்தொண்டை நரம்புபுஅடித்துஎழ தமிழன்வீரம்பேசும் கட்சித்தலைவர் முப்பாட்டன்முருகனின்ஓட்டன்சைமன்இதுவரை தீக்குளிக்கவில்லையே.
ஈழமக்கள்படுகொலையை தடுக்க
அங்குசென்று
போராடாமல் கலைஞர் ஏன்
அப்படுகொலையை தடுக்கவில்லை என்று அடுத்தவர்களை மட்டும்தானே கேள்வி கேட்கும் அரசியல் செய்கிறார்.
அதை எல்லாம தம்பி விக்னேஷ் உணரவேண்டாமா?

இவரின்தீக்குளிப்பு மரணம் நாம் தமிழர் கட்சிவளரும் ஆனால் கட்சி அலுவலகத்தில் புகைப்படம் மாட்டி மாலையிடலுடன் உன் நினைவுகள் மறைந்து போகும். மக்கள் மனதில் இருந்தும் காலத்தினால் மறந்தும் போகும்.

ஆனால் உன்னால் தன் வாழ்வு செழிக்கும்,குடும்பம் தளைக்கும் என்று எதிர்பார்ப்பில் கனவில் இருந்தபெற்றோர்,உற்றோர் வாழ்வில் நீங்கா துயரம் தானே தங்கும்.
வாழ்வில் சாதிக்க எத்தனையோ சவால்கள் காத்திருக்க. ஆண்டாண்டு நீளும் காவிரி அரசியல் கண்டு மயங்கிபோனாய்,மாண்டும்போனாய்.

காவிரிபோராட்டத்தில்மாண்டதுநீ மட்டுமல்ல.
கர்நாடகாவில் இதே போராட்டத்தில் துப்பாக்கியால் இரண்டு வாலிபர்களும் மாண்டார்களே.
இதில் யார் செய்தது தியாகம் என்பது.

உன் மரணத்துக்குப் பின்னரும் காவிரி ஓடும்.
காவிரி போராட்டங்களும் இணைந்தோடும்.
அதில் உன் தியாகமும் கரைந்துபோகும்.
ஆனால் நீ செய்தது தியாகம் அல்ல.


அதானால் யாருக்கும் பயனில்லை.
(சீமானைத் தவிர.)
உன் குடும்பத்துக்கு துரோகம்.

காதலுக்காகஉயிரை விடும் பருவத்தில் நீயோ
காவிரிக்காக உயிரை விட்டாய்.
உன்னை நம்பிய உயிர்களை
நட்டாற்றில் விட்டாய்.

காவிரிநீரை அல்ல.
கண்ணீர் துளிகளையே
உன் கால்களில்
விடுகிறோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...