சனி, 10 செப்டம்பர், 2016

பேஸ்புக் பணிந்தது.

வியட்நாம் போரின் போது, நபாம் குண்டு வீச்சுக்கு பயந்து ஒரு சிறுமி நிர்வாணமாக ஓடிய புகைப்படம் வெளியிட்டதை நீக்கிய பேஸ்புக் நிறுவனம், நார்வே நாட்டின் கடும் எதிர்ப்பால் பணிந்து, அதை மீண்டும் பிரசுரம் செய்தது.
கடந்த 1972-ம் ஆண்டு நடந்த அமெரிக்கா-வியட்நாம் போரில் அமெரிக்கா வீசிய நபாம் குண்டு வீச்சுக்கு பயந்து, சில குழந்தைகளுடன் கிம் பக் என்ற 9 வயது சிறுமி நிர்வாணமாக, அழுதுகொண்டே ஓடிவருவது போன்ற புகைப்படம் எடுக்கப்பட்டது.
இந்த புகைப்படத்தை வியட்நாமைச் சேர்ந்த புகைப்படகலைஞர் நிக் உட் காங் ஹுன் ‘அசோசியட் பிரஸ்’ நிறுவனத்துக்காக எடுத்தார். வியட்நாம் போரின் கொடுமையை உணர்த்தும் விதமான இருந்த இந்த புகைப்படத்துக்கு புலிட்சர் விருதும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன், நார்வே நாட்டைச் சேர்ந்த டாம் ஈக்லான்ட் என்ற எழுத்தாளர், போரின் புகைப்படங்கள் என்ற தலைப்பில் இந்த புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு, பகிர்ந்து கொண்டார்.
ஆனால், பேஸ்புக் நிறுவனம், தங்கள் நிறுவனத்தின் கொள்கைப்படி நிர்வாணப் புகைப்படங்களை பிரசுரம் செய்ய அனுமதியில்லை என்று கூறி இந்த புகைப்படத்தில் உள்ள ஒருசில பகுதியை மாற்றி அமைத்தது. மேலும், இந்த புகைப்படத்தை வெளியீடும் அனைவரின் கணக்கில் இருந்தும் பேஸ்புக் நிறுவனம் கடந்த சில நாட்களாக புகைப்படத்தை நீக்கத் தொடங்கியது. சிலரின் கணக்கையும் முடக்கியது.
வரலாற்று முக்கியத்துவம் , போரின் கொடூரத்தை உணர்த்தும் இந்த புகைப்படத்தில் உள்ள சிறுமியின் நிர்வாணம், ஆபாசம் அல்ல என்ற கோணத்தில் பார்க்க கூடாது என பேஸ்புக் நிறுவனத்துக்கு நார்வே நாட்டு மக்களும் புகைப்படத்தை வெளியிட்ட டாம் ஈக்லாண்டின் ஆதரவாளர்களும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நார்வே நாட்டின் பிரதமர் எர்ணா சோல்பெர்க் கணக்கில் இருந்தும் இந்த புகைப்படம் நீக்கப்பட்டதால் அவரும் கடும் கோபமும், எரிச்சலும் அடைந்து, கருத்து, பேச்சு சுதந்திரம் நசுக்கப்படுவதாக கண்டித்தார்.
இது குறித்து சமூகவலைதளமான பேஸ்புக் மீது கடும் விமர்சனம் எழுந்தது. நார்வே நாட்டில் இருந்து வெளிவரும் மிகப்பெரிய நாளேடான ஆப்டன் போஸ்ட் தனது முதல் பக்கத்தில் பேஸ்புக்கின் லோகோ, நிறுவனர் ஜூகர்பெர்க் புகைப்படத்தை வெளியிட்டு கருத்து சுதந்திரத்துக்கு எதிராக செயல்படுகிறார் எனக் கண்டனம் தெரிவித்தது.
இது குறித்து பிரதமர் எர்ணா சோல்பெர்க் கூறுகையில், “ பேஸ்புக் நிறுவனம் சமூகவலைதளத்தில் குழந்தைகளின் மான்பைக் குலைக்கும் புகைப்படங்களை வெளியிடக்கூடாது என்பதை நான் வரவேற்கிறேன்.
அதேசமயம், நபாம் சிறுமி புகைப்படம் என்பது, வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது, இதை நீக்கி இருக்கக் கூடாது. அதை திருத்தி இருக்கவும் கூடாது. என்னுடைய குழந்தைகளும், மற்றவர்களின் குழந்தைகளும் சமூகத்தில் வளரும்போது, வரலாற்றில் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி இருக்கும் போது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புகைப் படத்தையும், நிகழ்வுகளையும் திருத்துவது, நீக்குவது என்பது வரலாற்றை மாற்றுவதற்கும், உண்மையை மறைப்பதற்கு சமம்'' எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, பேஸ்புக் நிறுவனம் ஒருவாரத்துக்கு பின், மீண்டும் அந்த புகைப்படத்தை திருத்தமின்றி பிரசுரம் செய்வதாக தெரிவித்து மன்னிப்பு கோரியது. “ நிர்வாணமாக ஓடிவரும் சிறுமியின் புகைப்படம் சமூகத்தின் மதிப்புகளை குலைக்கும் என நம்பப்படுகிறது. சிலநாடுகளில் இது அபாசமாக கருதப்படுகிறது. ஆனால், இந்த விசயத்தில், வரலாற்று மற்றும் சர்வதேச முக்கியத்துவம் கருதி இந்த புகைப்படத்தை வெளியிடுகிறோம்'' என தெரிவித்தது.
பேஸ்புக் நிறுவனத்தின் முடிவை வரவேற்ற நார்வே பிரதமர் மகிழ்ச்ிச தெரிவித்து, “ சமூக வலைதளத்தின் மூலமே அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்'' என்று தெரிவித்தித்தார்.👀

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...