வியாழன், 6 நவம்பர், 2014

கமல்ஹாசன்:மணி விழா

” உலக நாயகன்”.


எத்தனையோ மனிதர்கள் சுலபமாக 60 வயதை கடந்து விடுகிறார்கள்.ஆனால் வெகு சிலரின் வாழ்நாட்கள்தான் மக்களால் கொண்டாடப்படுகின்றன.
அவர்களின் சாதனையே அப்படி செய்ய வைக்கின்றது.
எத்தனையோ நடிகர்களை கலைஞர்களை திரை உலகம் கண்டிருக்கிறது-கண்டு கொண்டிருக்கிறது.

ஆனால் கலைஞர் கருணாநிதி, பட்டுக்கோட்டை கல்யான சுந்தரம்,கண்ணதாசன்,எம்.ஜி.ஆர்,சிவாஜி என்று சிலரைத்தான் மக்கள் இன்றைய அளவிலும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

அந்த வரிசையில் வருகிறார் உலக நாயகன் கமல்ஹாசன்.
இவரை நடிகர் என்பதா?
பாடகர் என்பதா?
திரைக்கதை-வசனகர்த்தா என்பதா?
எல்லாவற்றையும் தாண்டி சகலகலா வல்லவன் என்றுதான் கமல்ஹாசனை கூற வேண்டும்.

திரையுலக நுட்பங்களையும் தாண்டி சமுக அறிவியலிலும்,உலக நடப்புகளிலும் தனது முத்திரையை பதித்திருக்கிறார்.பதித்துக் கொண்டிருக்கிறார்.

கமல்ஹாசனுக்கு இன்றைய தொழில் நுட்பம் முதல் உலக அரசியல்,வரை அத்தனையும் அத்துப்படி.
அவருடன் நீங்கள் புறனானூறு பற்றியும் பேசலாம் ..
ஆப்பிரிக்காவை அச்சுறுத்தி உலகை நடுங்க வைத்து வரும் எபோலா பற்றியும் பேசலாம்.

ஹாலிவுட் படங்களில் தற்போதைய புதிய தொழில் நுணுக்கம் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

தான் திரையுலகில் சம்பாதித்த பணத்தை எல்லாம் அதிலேயே செலவிட்டுக்கொண்டிருப்பவர்.
சில ஆண்டுகளுக்கு பின்னர் வர வேண்டிய திரைப்பட கருவை,தொழில் நுட்ப வசதிகளை இன்றே எடுத்து மக்களை புது ரசனைக்கு தயார் செய்பவர்.

அதானாலேயே தனது பணத்தையும் இழந்தவர்.

அவை எல்லாவற்றையும் விட திரைத்துறையில் வெள்ளையில் சம்பளத்தை வாங்கி வருமானவரியை அரசுக்கு சரியாக கட்டி வருபவர்.
அதானல் வருமானவரி விளப்பரங்களில் வருபவர்.

இதுவரை வருமான வரித் துறையினரின் சோதனைக்கு ஆளாகாத உச்ச நட்சத்திரம்’கமல்ஹாசன் மட்டுமே.

கருப்பும்-வெள்ளையும் பாயும் திரையுலகில் வெள்ளையில் மட்டுமே சம்பளம் வாங்குவதாலேயே தனது ஊதியத்தை ஓரளவுக்கு மேல் உயர்த்த முடியாமல் இருப்பவர் கமல்ஹாசன்.

உலகநாயகன் என்ற பட்டத்துக்கு முற்றிலும் பொருத்தமானவர் கமல்ஹாசன்.

இதுவரை உலகில் எந்த நடிகருக்கும் இல்லாத அளவில் தமிழில் மட்டும் 32 படங்கள் 25 வாரங்கள் ஓடி வெள்ளி விழா கண்டுள்ளன.

அவர் நடித்து பிற  மொழி மரோ சரித்ரா,ஏக் தூஜே கலியே,சுவாதி முத்யம்  உடபட இந்தி,மலையாளம்,தெலுங்கு,கன்னடம்,ஒரிய,வங்க ப்
படங்களையும் சேர்த்து 51 படங்கள் வெள்ளி விழாவை கண்டுள்ளது.பாலு மகேந்திராவின் "கோகிலா "கன்னடப்படம் பெங்களூரில் 300 நாட்களைத்தாண்டி ஓடி கன்னட திரையுலகில் வரலாறு பதித்துள்ளது.அதன் சாதனையை இன்றுவரை வேறு படம் முறியடிக்கவில்லை.
முதல் படம் “களத்தூர் கண்ணம்மா”
எம்ஜிஆருடன் நடித்த ஒரே படம்’ஆனந்த ஜோதி’
சிவாஜியுடன் பல படங்கள் அதில் ”பார்த்தால் பசி தீரும்,புண்ணிய பூமி,தேவர் மகன் குறிப்பிடத்தக்கது.
கதாநாயகன் முதல்படம்”பட்டாம் பூச்சி”
இரட்டை வேடங்கள்”சட்டம் என் கையில்”
மூன்று வேடங்கள்”அபூர்வ சகோதரர்கள்”
நான்கு வேடம்”மைக்கேல் மதன காமராஜன்”
பத்து வேடங்கள் தசாவதாரம்”
கலைஞர் கொடுத்த பட்டம்’கலைஞானி’
எம்ஜிஆர் கொடுத்த பட்டம்”இளைய வள்ளல்”[கமல் தான் செய்யும் உதவிகளை பத்திரிகைகளில் வரச்செய்வதில்லை.அதே போல் மற்ற திறமைசாலிகளை முகத்துக்கு நேராக புகழ்ந்து முகஸ்துதி செய்வதில்லை.
மற்றவர்களிடம்தான் அவர்களை பாராட்டிப் பேசுவார்.]
பால்ச்சந்தர் இயக்கத்தில் 23 படங்களில் நடித்துள்ளார்.முதல் படம் “அரங்கேற்ற்ம்”
பாரதிராஜா வின் இயக்கத்தில்”பதினாறு வயதிலே”முதல்படம்.அடுத்து சிகப்பு ரோஜாக்கள்’பின்னர் கைதியின் டைரி”அனைத்தும் வெள்ளி விழா கண்டவை.
தயாரித்த முதல்படம்”ராஜ பார்வை”
கம்ப்யூட்டர் கிரபிக்ஸ் பயன் படுத்தப் பட்ட முதல் தமிழ்ப் படம்”உயர்ந்த உள்ளம்”
100 நாட்களைத்தாண்டி ஓடிய படங்கள்128
24 படங்களில் ஸ்ரீ தேவியுடன் நடித்துள்ளார். வசனமே இல்லாத படம்”பேசும் படம்”
ரஷ்யாவில் “பேசும்படம்”திரையிடப்பட்டு பரிசுகளை அள்ளியது.
68 நாடுகளில் முதன் முதலில் வெளியிடப்பட்ட இந்திய திரைப்படம்”பஞ்ச தந்திரம்”
முதன் முதலில்  தனது முதல் தயாரிப்பான “ராஜ பார்வை படத்துக்கு திரைக் கதை வசனம் எழுதினார்.தேவர் மகன் கதை,திரைக்கதை,வசனம்,பாடல் எழுதியுள்ளார்.
திரைக்கதை எழுதிய படங்கள்’சத்யா”,இந்திரன் சந்திரன்,விக்ரம்,சதிலீலாவதி,அபூர்வ சகோதரர்கள்,.
1978 இல் தெலுங்கில் பாலச்சந்தர் இயக்கிய கமல்ஹாசன் நடித்த “மரோசரித்ரா”1100 நாட்கள் ஓடியுள்ளது.அது பின்னர் மலையாளத்தில்’திரகள் எழுதிய கதா”,வாக மொழி மாற்றம் செய்யப்பட்டு வெள்ளி விழா கண்டது.பின்னர் ஏக் துஜெ கெலியே என இந்தியில் எடுக்கப்பட்டு வெள்ளி விழா கண்டது.
இந்திய திரை உலக வரலாற்றில் முதன் முதலில் ஒரு காட்சியில் புன்னகை மன்னனிலும்,படம் முழுக்க அபூர்வ சகோதரர்களிலும் குள்ளமாக நடித்து அனைவரையும் வியக்க வைத்தார்.
முதன் முதலில் “அந்தரங்கம்”படத்தில் ஞாயிறு ஒளி மழையில்”பாடலை சொந்த குரலில் பாடினார்.
பின்னணி பாடிய படங்கள் 34.
இதில் பிற நடிகர்களுக்கும் பாடியுள்ளார்.
மிருதங்கம்  வாசிக்க6 மாதங்களாக கற்றுக்கொண்டார்.அபூர்வ ராகங்களுக்காக,பால முரளி கிருஷ்ணாவிடம் இரண்டு ஆண்டுகள் கர்னாடகா சங்கீதம் கற்றுக் கொண்டார்.முன்பே பரத நாட்டியம் கற்று நடன நிகழ்ச்சிகளை நடத்தினார். டான்ஸ் மாஸ்டர் தங்கப்பனிடம் உதவியாளராக பல திரைப்படங்களுக்கு நடனம் அமைத்துள்ளார். எம்ஜிஆரின் நான் ஏன் பிறந்தேன் படத்துக்கு நடன உதவி என கமல்ஹாசன் பெயர் திரையில் வரும்.
தேவர் மகன் படத்துக்கு சிலம்பம் கற்றுக்கொண்டார்.
சகலகலா வல்லவரான கமல்ஹாசன் நடனம்,சண்டை[கராத்தே],பாட்டு,இசை,சிலம்பம்,பின்னனி பாடகர்,கவிதை எழுதுவது,சிறுகதைகள் எழுதுவது[இதயம் பேசுகிறது வார இதழில் ”தாயம்”என்ற தொடர்கதையும் எழுதியுள்ளார்.]என்று தனது திறமைகளை பல கரங்களாக திரை உலகில் பரப்பியுள்ளார்.
சமுக நடவடிக்கைகளிலும் ஈடு பாடு கொண்டவர்.
இந்தியாவிலேயே முதன் முதல் கண்தானம்,உடல் தானம் செய்த பெருமை கமல்ஹாசனுக்கே உரித்தானது.
தான் பல முறை ரத்ததானம் செய்ததுடன் மட்டுமின்றி தனது ரசிகர்களை வைத்தும் இன்றுவரை பல ரத்ததான ,கண் தான முகாம்களை நடத்தியுள்ளார்.
நடத்தி வருகிறார்.
தனது படங்களை எந்த விளம்பரங்களிலும் பயன் படுத்தக்கூடாது என்று கடுமையாக கடை பிடிப்பவர்.
ஆனால் தானக முன் வந்து செய்யும் விளமபரப்படங்களாக எய்ட்ஸ் விழிப்புணர்வு,புற்று நோய விழிப்புணர்வு,அனாதை இல்லக் குழந்தைகளுக்கு ஆதரவு நிதி பெறும் விளமபரங்களாக மட்டும் அமைத்துக்கொண்டுள்ளார்.
வெளி விளம்பரப் படங்களுக்கு கிடைக்கும் வருமானத்தை அப்படியே எய்ட்ஸ் நோயால பாதிக்கப்பட்ட சிறார் உதவி இல்லங்களுக்கு வழங்கும் ஏற்பாட்டினை செய்துள்ளார்.
 திரையுலகில் தனக்கு படிக்கட்டுகளை அமைத்து தந்த வர்களுக்கு வெளியே ஊடகங்களுக்கு தெரியாமல் உதவிகளை செய்துள்ளார்.செய்து வருகிறார்.
 மீண்டும் கோகிலா இயக்குனர் ஜி.என்.ரங்கராஜன் நொடித்த நிலையில் இருக்கையில் அவருக்கும்,பஞ்சு அருணாசலத்துக்கும் உதவ “மகராஜன்” படத்தில் பணம் பெறாமல் நடித்து கொடுத்தார்.அதில் வாங்கிய இல்லத்துக்கு ராஜ லட்சுமி இல்லம் என்று கமல் தாயார் பெயரை ரங்கராஜன் வைத்துள்ளார்.
தன்னை அறிமுகப்படுத்திய ஏவிஎம் நிறுவன தொழிலாள்ர்கள்,எஸ்.பி.முத்துராமன் குடும்ப உதவிக்கு பணம் வாங்காமல் நடித்த படம்”பேர் சொல்லும் பிள்ளை”
பதினாறு வயதினிலே படத்த்யாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ் கண்ணுவுக்கு உதவ தனது தயாரிப்பான “மகாநதி”யில் அவரை இணைத்த்யாரிப்பாளராக வைத்து உதவினார்.அதே போல் ஹரி க்கு உதவ “அவ்வை சண்முகி”ரவிக்குமாருக்கு தெனாலி. சிங்கிதம் சீனிவாசராவ் வுக்கு “மும்பை எக்ஸ்பிரஸ்’.விஸ்வ நாத்துக்கு “பாசவலை; இப்படி பல.இடது கைக்கு தெரியாத உதவிகள்.
இன்னும் எத்தனையோ வீடயங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.மணி விழா நாயகன்.இன்னும் பல விழாக்களை காண வாழ்த்துகிறோம்.

”கலையே உன் பெயர்தான் கலைஞானி கமலோ”
இது  பிறவிக் கலைஞன் கமல்ஹாசனை பார்த்து கலைஞர் கூறிய வியப்பு
வினா?

இனி கமல்ஹாசன் ரசிகர்களின் கலக்கல்.




















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...