புதன், 10 செப்டம்பர், 2014

ஐந்தாண்டு செலவு 12 கோடிகள் ?

1991 முதல் 1996 வரை செய்த 248 செலவுப் பட்டியல்களை அரசு வழக்கறிஞர் பவானி சிங்கின் ஜூனியர் மராடி வாசித்தார்.

மராடி வாசித்த செலவுப் பட்டியலில் இருந்து...

சென்னை அபிராமபுரம் இந்தியன் வங்கியில் ஜெயா பப்ளிகேஷன் வாங்கிய 1.5 கோடிக்கு கடனுக்குச் செலுத்திய வட்டி ரூ.50,93,921. 
இதே வங்கியில் சசி என்டர்பிரைசஸ் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்திய தொகை ரூ.18,32,683. இதே கிளையில் லெக்ஸ் ப்ராபர்ட்டீஸ் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியது ரூ.17,52,069.
ஆர்.பி.எஃப் நிதி நிறுவனத்தில் இளவரசி வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியது ரூ.4,41,569. மயிலாப்பூர் கனரா வங்கியில் இருந்து சேலம் ஸ்டோர்ஸுக்கு ஜெயலலிதா வங்கிக் கணக்கில் இருந்து செலுத்திய தொகை ரூ.12,73,642.
இதே வங்கியில் இருந்து பி.பி.எல். கேலரிக்கு ஜெயலலிதா வங்கிக் கணக்கில் இருந்து செலுத்திய தொகை ரூ.1,28,530. இதே வங்கியில் இருந்து கே.கே.வேணுகோபால் அவர்களுக்கு ஜெயலலிதா கணக்கில் இருந்து செலுத்திய தொகை ரூ.5,95,000. இதே வங்கியில் இருந்து மதுரை காமராஜர் யுனிவர்சிட்டிக்கு ரூ.5,00,000. மௌலி அட்வர்டைஸுக்கு ரூ.11,00,000- ம் ஜெயலலிதா கணக்கில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது.

1987 - 88 ஆம் ஆண்டுக்கான வருமான வரி ரூ.2,50,445; 1988 - 89 ஆம் ஆண்டுக்கு ரூ.5,63,482; 1989-  90 ஆம் ஆண்டுக்கு ரூ.8,18,161; 1990 - 91 ஆம் ஆண்டுக்கு ரூ.30,61,549... இப்படி ஜெயலலிதா 1997 வரை வருமான வரி கட்டியுள்ளார். 88-  89 ஆண்டுக்கு ரூ.89,619; 1989 - 90 ஆண்டுக்கு ரூ.2,68,475; 92- 93 ஆம் ஆண்டுக்கு ரூ.13,51,590 என சொத்து வரி கட்டியுள்ளார்.

இதேபோல் சசிகலா 91-ல் இருந்துதான் வருமான வரி கட்டுகிறார். 91-  92 ஆம் ஆண்டுக்கு ரூ.2,23,750; 92 - 93 ஆம் ஆண்டுக்கு ரூ.3,00,550; 93 - 94 ஆம் ஆண்டுக்கு ரூ.7,62,151 என வருமான வரி கட்டியுள்ளார். 91- 92 ஆம் ஆண்டுக்கு ரூ.14,240; 92 - 93 ஆம் ஆண்டுக்கு ரூ.1,17,955 என சொத்து வரி கட்டியுள்ளார்.

ஐந்தாண்டில் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் வேலைபார்த்த ஆட்களின் சம்பளம் மற்றும் பராமரிப்பு செலவு ரூ.16,15,500. ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் - சத்தியலட்சுமி திருமணச் செலவு ரூ.6,45,04,222. கொடநாடு பங்களா கட்டிய செலவு ரூ.12,20,310. மன்னார்குடியில் செங்கமலம் தாயார் நினைவு மகளிர் கல்லூரிக்கு டைல்ஸ் மற்றும் மார்பிள்ஸ் வாங்க சசிகலா கொடுத்த தொகை ரூ.10,82,420.

ஜெயா பப்ளிகேஷன் கட்டிய மின்சாரக் கட்டணம் ரூ.2,69,102. 1993 முதல் 96 வரை ஆஞ்சநேயா பிரின்டர்ஸ் கட்டிய மின்சாரக் கட்டணம் ரூ.7,38,433. குமரன் சில்க்ஸுக்கு ரூ.4,84,712, ஜேம்ஸ் ஃபிரெட்ரிக் -ரூ.30,00,000. இப்படி 1991 முதல் 1996 வரை செலவுசெய்த மொத்த செலவு தொகை ரூ.12,00,59,338.
இவ்வளவு செலவும் மாதம் ஒரு ரூபாய் சம்பளமாக முதல்வர் ஜெயலலிதா பெற்ற காலகட்டத்தில் உள்ள செலவுகள்தான்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
சுரன் 10092014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...