ஞாயிறு, 19 அக்டோபர், 2014

லஞ்சப் பணங்கள் எங்கே போகிறது?


இந்தியாவில் வாழும் பெரும் பணக்காரர்கள், அரசியல் தலைவர்கள், மாபியா கூட்டாளிகள் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த பணத்தை, வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்கின்றனர். சுவிட்சர்லாந்து, ஜெர்மன் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் வங்கிகளில் இந்தியர்களின் கறுப்புப்பணம் அதிகமாக முதலீடு செய்யப்படுகிறது.
“வெளிநாட்டு வங்கிகளில் 70 லட்சம் கோடி ரூபாய், இந்தியர்களால் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றின் கணக்கை காட்ட முடியாது’ என மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இந்நிலையில், கறுப்புப்பணம் எப்படி கைமாறுகிறது; இதில், யார், யாரெல்லாம் ஈடுபடுகிறார்கள் என்பது குறித்து விசாரித்தால், தலை கிறு கிறுக்கிறது. ஏனெனில், அந்தளவிற்கு, “ஹைடெக்’ முறையிலும், பல்வேறு “குறியீடுகள்’ மூலமும் இந்த தொழில் நடக்கிறது.
இது குறித்த பரபரப்பு தகவல்கள்:வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்ய இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான ஏஜன்டுகள் கள்ளத்தனமாக செயல்படுகின்றனர். இந்திய ஏஜன்டுகள் பெரும்பாலும் ஹவாலா மோசடி செய்யும் தொழிலில் கை தேர்ந்தவர்கள். இவர்கள், சென்னை, மதுரை, ராமநாதபுரம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இருந்து இயங்குகின்றனர்.இதேபோல், கேரள மாநிலம் கண்ணூர், பாலக்காடு, கொச்சி மற்றும் மும்பை ஆகிய நகரங்களிலும் ஹவாலா ஏஜன்டுகள் பெருமளவில் உள்ளனர்.
ஹவாலா மோசடி திலகம் அப்ரோஸ்
வெளிநாட்டு வங்கியில் முதலீடு செய்ய விரும்புவோர், முதலில் மாநிலத்தில் உள்ள சப்-ஏஜன்டுகள் மூலம், மெயின் ஏஜன்டை பிடித்து பணம் கொடுக்கின்றனர். இவர்கள், வெளிநாடுகளில் உள்ள தங்கள் ஏஜன்டுகளுக்கு தகவல் அளித்து, எவ்வளவு பணம், எந்த வங்கியில் கட்ட வேண்டும் என தெரிவிப்பர்.அதன்படி, அவர்கள் அங்கே சம்பந்தப்பட்ட வங்கியில் பணத்தை முதலீடு செய்வர். வெளிநாட்டு வங்கிகளின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பிரதிநிதிகள், வெளிநாட்டில் இருக்கும் இந்திய ஏஜன்டுகளுக்கு, முதலீட்டு தொகைக்கு ஏற்ப அதிக அளவு கமிஷன் தருகின்றனர்.
இந்தியாவில் பணம் வாங்கிய ஏஜன்ட், வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் உள்ளவர்களுக்கு தர வேண்டிய பணத்தை, வெளிநாட்டு ஏஜன்டுகளின் கட்டளைக்கு ஏற்ப இங்கேயே பிரித்து கொடுக்கிறார். இம்முறை “உண்டியல்’ என்ற ரகசிய பெயரால் அழைக்கப்படுகிறது.
இதில், பெரும்பாலும் படித்து வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தான் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒரு குறிப்பிட்ட முகவரிக்கு சென்று பணத்தை பத்திரமாக சப்ளை செய்தால், 1,000 ரூபாய் முதல் 1,500 வரை கமிஷன் தரப்படுகிறது. ரயில், பஸ்களில் பயணித்து இவர்கள் ரொக்கப்பணத்தை சப்ளை செய்கின்றனர்.
 பண சப்ளையின் போது, கொள்ளையர்களிடமோ, போலீஸ், உளவுத்துறை, லஞ்ச ஒழிப்பு, வருமான வரித்துறை, அமலாக்கத்துறையிடம் மாட்டினால் பணத்தை அனாதையாக விட்டு, தப்பி விடுவர்.இந்த ஏஜன்டுகள் “குருவிகள்’ என ரகசிய குறியீட்டுடன் அழைக்கப்படுகின்றனர்.
தற்போது கூரியர் மேன், பார்சல் பாய் என்றெல்லாம் புதிய, புதிய சங்கேத பெயர்களையும் பயன்படுத்த துவங்கியுள்ளனர். பண பறிமாற்றத்தில் “குருவிகள்’ முகவரி மாற்றி பணத்தை தராமல் இருக்க, சிறிய கைக்குட்டை, டோக்கன், மொபைல் எண், வித விதமான பொம்மைகள் என பலவற்றை பயன்படுத்துகின்றனர். வெளிநாட்டில் பணம் கட்டுபவருக்கு ஒரு டோக்கன் அல்லது ரகசிய அடையாளம் கொண்ட பொருள் தரப்படும்.
அந்தப் பொருள், கூரியர் மூலம் இந்தியாவில் பணம் பெறக்கூடியவருக்கு அனுப்பப்படும். அதேநேரம் அதேபோன்ற பொருள் அல்லது ரகசிய குறியீட்டு எண், இந்தியாவில் பணம் சப்ளை செய்யும் “குருவிகளுக்கும்’ தரப்படும்.”குருவிகள்’ பண சப்ளை செய்யும் முகவரிக்கு சென்று, அவர்களிடம் இருக்கும் ரகசிய அடையாள பொருள் அல்லது எண்ணை சரிபார்த்து பணம் தருவர். இந்த முறை பல ஆண்டுகளாக இந்தியாவில் கடைபிடிக்கப்படுகிறது.
தற்போது, மொபைல் போன் வசதி வந்து விட்டதால், மொபைல் எண் அடிப்படையில் மிக சுலபமாக பணம் சப்ளை செய்யப்படுகிறது.வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிய பணத்தை மொத்தமாக கொண்டு வருவதற்கு, அன்னிய முதலீட்டு முறையும், தொண்டு நிறுவனங்கள் வழியாகவும், தங்கம் மற்றும் விலை மதிப்புள்ள பொருட்களை வாங்கி, சுங்கத்துறையை ஏமாற்றியும் பணத்தை இந்தியாவுக்குள் கொண்டு வருகின்றனர்.
தாராளமயமாக்கல், அன்னிய முதலீடு, வெளிநாட்டு இந்தியருக்கு வரிச்சலுகை போன்ற மத்திய அரசின் பல சலுகைகள் பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுவதை விட, ஹவாலா, கறுப்புப்பண முதலைகளுக்கு மிக எளிதாக பயன்படுகிறது. இது மட்டுமின்றி, இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர் மற்றும் வெளிநாடு சென்று வரும் இந்தியர்கள் கொண்டு வரும் வெளிநாட்டு கரன்சி, விமான நிலையத்திலேயே சட்ட விரோதமாக இந்திய பணமாக மாறி விடும்.
இந்தியாவில் கறுப்புப் பண ஏஜன்டுகளாக இருப்போர், விமான நிலையங்களில் தங்களது ஆட்களை இந்திய பணக்கட்டுடன் நிறுத்தி வைத்து, வெளிநாட்டு கரன்சி கொண்டு வருவோருக்கு, கூடுதல் விலை கொடுத்து இந்திய பணத்தால் அவற்றை வாங்கி விடுவர். 
இவ்வாறு பெறப்படும் பணம் மிக எளிதாக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள வங்கிகளில் முதலீடு செய்யப்படுகிறது.
மோடி பிரதமாரன உடனே வெளி நாடுகளில் ,வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள70 லட்சம் கோடிகள் பணத்தை வெளிக் கொண்டுவரப்பொவதாக முழங்கினார்.அந்த முழக்கம் இன்று சின்ன முனங்களாக கூட இல்லை.
சரி இவ்வளவு பணம் வெளினாடுகளுக்கு எப்படி போய் சேர்த்து வைக்கப்பட்டது.?
இந்த ஹவாலா மோசடி, சென்னை, மும்பை, கொச்சி விமான நிலையங்களில் போலீஸ், சுங்கத்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தே நடக்கிறது. இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் பதுக்கப்பட்ட பணம், நல்ல பணமாக (ஒயிட் மணி) தொழில் துவங்க வரும் வெளிநாட்டினர் வழியே ஏஜன்டுகள் மூலம் இந்தியாவிற்குள் கொண்டு வரப்படுகிறது. இதேபோல், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அந்தமான் வழியே பணத்தை கொண்டு வர சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி கொள்கின்றனர். மேலும், வெளிநாடுகளில் வாழும் இந்தியர் (என்.ஆர்.ஐ.,) வங்கிக் கணக்கு வழியிலும் கறுப்புப்பணம் பெருமளவு கொண்டு வரப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.
இப்படி பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் ஒரு பக்கம் இருந்தாலும், கறுப்பு பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வர முடியுமா?
 முடியாதா, இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமா, எடுக்காதா என்பதைப் பற்றி ஆங்காங்கே பட்டிமன்றங்கள் நடத்தாத குறையாக விவாதிக்கப்படுகிறது. எனினும், வெளிநாடுகளில் முடங்கும் பணத்திற்கு இந்தியாவில் வரிச்சலுகை வழங்கி, அவற்றை இந்தியாவின் வளர்ச்சிக்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வெளிநாடுகளில் இருந்து கறுப்புப் பணத்தை நல்ல பணமாக கொண்டு வருவதில், தொண்டு நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வெளிநாட்டு பணத்தை கொண்டு வர விரும்பும் தொண்டு நிறுவனங்கள், தங்களது தொண்டுகளை காட்டி, வெளிநாட்டு பணம் பெறுவதற்கான உரிமத்தை பெறுகின்றன. இந்த எண் பெற்றால், எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும், தடையின்றி, வரியின்றி கொண்டு வர முடியும். ஆனால், தொண்டு நிறுவனங்கள் உண்மையானவையா என இந்திய உளவுப்பிரிவான “ரா’ விசாரித்து அனுமதி தரும்.எப்.சி.ஆர்.ஏ., எனப்படும், “பாரின் கான்ட்ரிபியூட்டட் ரெகுலேஷன் ஆக்ட்’ என்ற வெளிநாட்டு பணப்பங்கு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ், தடையில்லா எண் வழங்கும் முறை மாவட்ட கலெக்டரின் அதிகாரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
இதனால், சில போலியான தொண்டு நிறுவனங்கள், கலெக்டர் அலுவலக ஊழியர்களை வசப்படுத்தி தடையில்லா எண் பெற்று, வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களின் கறுப்புப் பணத்தை நன்கொடை என்ற பெயரில் கொண்டுவந்து, பின் கமிஷன் பெற்று உரியவர்களிடம் ஒப்படைக்கின்றன.இதை “ரா’ அதிகாரிகள் கண்டுபிடித்து, தடையில்லா எண்ணை ரத்து செய்ய முயற்சித்தால், கோர்ட் மூலமே ரத்து செய்வதில் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதனால் கறுப்புப்பண நடமாட்டத்தை அரசு நினைத்தால் மட்டுமே கடுமையான சட்ட திட்டத்தால் தடுக்க (கொஞ்சம் குறைக்காவாது )முடியும் என்பதே உண்மை.
===============================================
ஏன் தீபாவளி கொண்டாடுகிறோம்?

தீபாவளி என்றால் என்ன?







                                                                                                                     



- 


தந்தை பெரியார்-



புராணம் கூறுவது
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் 
உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு 
போய் 
கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது 
மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) 
எடுத்துக் 
கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று 
உலகத்தை மீட்டு வந்து  விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன்  கலவி  செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு)  பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாக பூமி  கர்ப்பமுற்று நரகாசுரன் என்ற பிள்ளையையும் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசுரனுடன் போர்  துவங்கினார்.
8. விஷ்ணுவால்  அவனைக் கொல்ல முடியவில்லை.  விஷ்ணுவின் மனைவி 
நரகாசுரனுடன் போர்தொடுத்து  அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10.  இந்த மகிழ்ச்சி (நரகாசுரன் இறந்த தற்காக)  நரகாசுரனின்  இனத்தாரான 
திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.
இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!
இந்த 10 விஷயங்கள்தான் தமிழரைத் தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே 
அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? 
இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர் களுக்குப் பூமிநூல்கூடத் 
தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது.
பூமி தட்டையா? உருண்டையா?
தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப்  பாயாகச் சுருட்ட

முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது?
சுருட்டினால் தூக்கி கட்கத்திலோ, தலைமீதோ எடுத்துப் போக முடியுமா?
எங்கிருந்து தூக்குவது?
கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்?
விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால், பூமிக்கு  பன்றிமீது காதல் 
ஏற்படுவானேன்?
பூமி மனித உருவமா? மிருக உருவமா?
மனித உருவுக்கும், மிருக உருவுக்கும் கலவியில் மனிதப்  பிள்ளை உண்டாகுமா?
பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?
இதற்காக நாம்  ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?
இவைகளைக் கொஞ்சமாவது தீபாவளி கொண்டாடும் -  தமிழ்ப் புலவர்கள், 
அறிஞர்கள் சிந்திக்கவேண்டாமா? 
நரகாசுரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது 
நர்மதை ஆற்றின்  கரையில்  இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகித் ஜோஷா என்று 
சொல்லப்படுகிறது. 
இது  வங்காளத்தில் விசாம் மகாணத்து அருகில் இருக்கிறது. 
இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள்.

வங்காளத்தில் தேவர்களும், அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்? 
இவை 
ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல் 
கிறான் என்பதற்காகவும் நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி  
உடுத்துவதும்,  பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து கங்கா 
ஸ்நானம் ஆயிற்றா? என்று கேட்பதும், கூவம் ஆற்றுத்தண்ணீரில் குளித்த நாம் 
ஆமாம் என்று சொல்லி கும்பிட்டுக் 
காசு கொடுப்பதும், அவன்  காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் 
என்றால் இதை என்னவென்று சொல்வது?
சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!
=======================================================================

புதன், 15 அக்டோபர், 2014

ஆவின் முறைகேட்டை தொடர்ந்து டாஸ்மாக்




                                                                                                                                                                               -ஐ.வி.நாகராஜன்
சமீபத்திய ஆவின்பால் முறைகேட்டை தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் நடந்த கையாடல் விவகாரம் குறித்து உயர் அதிகாரிகள் குழு மாநிலம் முழுவதும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு நாளும் விற்பனை யாகும் தொகையை கடைகளில் பணியாற்றும் சூப்பர்வைசர்கள் கையாடல் செய்ததாக பல புகார்கள் வந்து சிலர் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர். அவர்கள் கையாடல் செய்த பணம் மட்டும் இன்னும் திரும்ப பெறவில்லை.
இது மாநிலம் முழுவதும் பல கோடி ரூபாய் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக வேலூர் மாவட்டம் அரக் கோணத்தில் ஒரு கடையில் மட்டும் ரூ.15 லட்சம் வரையும், திருப்பத்தூரில் ஒரு கடையில் ரூ.5 லட்சம் வரையும் கையாடல் நடந் துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு அந்த கடைகளின் சூப்பர்வைசர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாநில அளவில் 6835 டாஸ்மாக் கடைகளிலும் நடந்துள்ள முறை கேடுகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு 18 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மாநிலம் முழுவதும் ஒவ் வொரு மதுபானக்கடைகளிலும் விசாரணை நடத்த உள்ளனர். இந்த விசாரணை நேர்மையாகவும் முறையானதாகவும் நடக்கும்பட்சத் தில் ஆவின் முறைகேடுகளை தொடர்ந்துடாஸ்மாக் முறைகேடுகளும் அதிர்ச்சி யளிக்கும் வகையில் வெளிவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
டாஸ்மாக் மதுபான விற்பனையை கடந்த 2003ம் ஆண்டு தமிழக அரசுஏற்றது. இதற்கு மாவட்ட அளவில் மேலாளர் களாக எம்.பி.ஏ பட்டதாரிகள் பணி நியமனம் செய்யப்பட்டனர். 2006-ல் தி.மு.க. ஆட் சிக்கு வந்த பிறகு இவ்வாறு நியமனம் செய்யப் பட்ட எம்.பி.ஏ பட்டதாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக பணியி லிருந்த துணை கலெக்டர்கள் மாவட்ட மேலாளர்களாக நியமிக்கப்பட்டனர். மீண்டும் 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு தி.மு.க ஆட்சியில் பணி நீக்கம் செய்யப்பட்ட எம்.பி.ஏ பட்டதாரிகள் பழையபடியே டாஸ்மாக் மேலாளர்களாக மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர். 
ஆனால் அந்த எம்.பி.ஏபட்டதாரிகள் தொகுப்பூதிய பணியாளர் களாகவே இருந்து தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்த சூழலில் பணிப்பாதுகாப்பு இல்லாத நிலையில் மதுபானக்கடை மேலாளர்கள் மட்டுமல்லாமல் விற்பனையாளர்களும் சேர்ந்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடவேண்டிய சூழலை அரசே அனுமதிப்பதாகவும் தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ளாத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் டாஸ்மாக் நிர்வாக வட்டாரங்கள் குறை கூறுகின்றன. இதன் பின்னணியில் உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில் டாஸ்மாக் நிறுவனங் களில் நிர்வாக ரீதியாக 38 மாவட்ட மேலாளர் கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 17 துணை கலெக்டர்கள். மற்றவர்கள் எம்.பி.ஏபட்டதாரிகள். இந்த பட்டதாரி மேலாளர்களை பணி நியமனம் செய்தது தற்போது மாநில தேர்தல் ஆணையராக உள்ள சோ.அய்யர்தான். இவர் டாஸ்மாக் மேலாண் இயக்குநராக இருந்தபோது அன்று டாஸ்மாக்கின் முக்கிய பொறுப்பில் பணியாற்றியவர்தான் தற்போது டாஸ்மாக்கின் இணை மேலாண் இயக்குநராக பணியாற்றும் மோகன் என்பவர்.மோகன் மேலாண் இயக்குநராக பதவியேற்றதிலிருந்து அய்யரால் நியமிக்கப்பட்ட எம்.பி.ஏ பட்டதாரிகளான மாவட்ட மேலாளர்களுக்கு ஆதரவாகவும், துணை கலெக்டர்களுக்கு எதிராகவும் செயல்பட தொடங்கி யுள்ளார்.
இதுவரை 10க்கும் மேற்பட்ட துணை கலெக்டர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்டு குற்றச்சாட்டுகளையும் பதிவு செய்துள்ளார். இதனால் துணை கலெக்டர்களான டாஸ்மாக் மேலாளர்கள் தலைமை செயலாளர் மற்றும் உள்துறை செயலாளரை சந்தித்து மோகன் மீது புகார் கொடுக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் டாஸ்மாக் அதிகாரி களுக்கு நகர்புறங்களில் உள்ள கடைகளில் ரூ.2 ஆயிரத்திலிருந்து 3 ஆயிரம் வரையும், கிராமப்புற கடைகளில் ரூபாய்.ஆயிரத்தி லிருந்து 2 ஆயிரம் வரையும் இதை தவிர்த்து உதவி அதிகாரிக்கு ரூ.500, கலால் அதிகாரிக்கு ரூ.500, கலால் அலுவலர்களுக்கு ரூ.250 என மாதந்தோறும் மாமூல் வழங்கப்படுகிறது. இந்த மாமூல் பணத்தை ஒவ்வொரு கடையின் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் மொத்தமாக கொண்டு செல்கிறார்கள். இதை வசூலிக்கும் அலுவலருக்கு ஒவ்வொரு கடைக்கும் மாதம் ரூ.200 முதல் 500 வரை கொடுக்க வேண்டியுள்ளது.
இதையும் தாண்டி மாதந்தோறும் டாஸ்மாக் கடைகளின் விற்பனை கணக்குகளை அலுவலகத்தில் சமர்ப்பிக்கும்போது டேபிள் வாரியாக கணக்கிட்டு அதற்கு ஒரு தொகை வழங்க வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது என்றும் இதற்கெல்லாம் எங்கிருந்து பணத்தை கொடுப்பது என் பதை அதிகாரிகள் விளக்கினால் கூடுத லான விலைக்கு மதுபானங்களை விற்பது, மதுபானத்தில் தண்ணீர் கலப்பது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட வேண்டிய அவசி யம் எங்களுக்கு இல்லை என்கிறார்கள் டாஸ்மாக் ஊழியர்கள். கடந்த 1983-ல் 183 கோடியாக இருந்த மதுபான விற்பனை இன்று 22 ஆயிரம் கோடியை தாண்டி விட்டது. மாநிலம் முழுவதும் உள்ள 6835 கடைகளி லும் 7039 சூப்பர்வைசர்கள், 15ஆயிரத்து 431 விற்பனையாளர்கள்,3634 பார் உதவி யாளர்கள் என துணை கலெக்டர்கள், மேலாளர்களை சேர்க்காமல் 26 ஆயிரத்து 104 பேர்பணியாற்றுகிறார்கள்.
தமிழ்நாட்டில் நடை பெறும் டாஸ்மாக் கடைகளுக்கு அரசு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 11க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மதுபானங்களை சப்ளை செய்கிறது. இதிலிருந்து கிடைக்கும் ரூ.22 ஆயிரம் கோடி வருமானம் தமிழக அரசின் பற்றாக்குறையை சரி செய்கிறது.
 அது மட்டுமல்லாமல் திமுக, அதிமுகவின் இலவச திட்டங்களுக்கும் விலையில்லா பொருட்கள் வழங்குவதற்கும் பேருதவியாக இருக்கிறது. இதில் நடைபெறும் முறைகேடுகள் மட்டும் அல்ல. இங்குள்ள குறைபாடுகளையும் கவனிப்பதற்கு அரசு முன்வர வேண்டும். கையாடல் குறித்து விசாரிப்பதற்கு போடப்பட்டுள்ள விசாரணைக்குழு முழுமையாகவும், நேர்மையாகவும் விசாரணை நடத்தும் பட்சத்தில் ஆவின் முறைகேட்டை தொடர்ந்து அதிர்ச்சியளிக்கும் பல செய்திகள் வெளிவரக்கூடும்.

ஜெயலலிதாவின் முக்கிய பினாமி

தாது மணல் கொள்ளையன்  வைகுண்டராஜன் 

நீதிபதி குன்ஹா தீர்ப்பின் பின்னணியில் வெளியாகும் புதிய தகவல்கள்

மைக்கேல் டி.குன்ஹாவின் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பின் மூலமாக "ஜெயலலிதாவின் ஒரு மிகப் பெரிய பினாமியாக, தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ள எஸ்.வைகுண்டராஜன் உள்ளார் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது" என ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.
இதுதொடர்பாக, அக்கட்சியின் தமிழ்நாடு பிரிவு செவ்வாயன்று வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:

'பெங்களூரு நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பில் ஜெயலலிதா சொத்து குவிக்க 32 பினாமி நிறுவனங்களை உபயோகித்ததுஉறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதில் முக்கியமான நிறுவனமாகத் திகழ்வது ரிவேர்வே அக்ரோ ப்ராடக்ட்ஸ் ப்ரைவேட் லிமிடெட் ஆகும். 
இந்தநிறுவனம் மூலம் ஜெயலலிதா1190 ஏக்கர் நிலங்களை தூத்துக்குடி,திருநெல்வேலி மாவட்டங்களில் 1994ம் வருடம் வாங்கியுள்ளார். ஜெயலலிதா தனது ஊழல்பணத்தை இந்த நிறுவனத்திற்கு கொடுத்து அதன் மூலமாக வாங்கப்பட்டது என்பதும் ஊர்ஜிதமாகியுள்ளது.
மேலும் ஜெயா தொலைக்காட்சியிலும் வைகுண்டராஜனுக்கு பெரும்பான்மையான பங்கு உண்டு.
அவர் தற்போது சானல் 7 என்ற பெயரிலும் தொலைக்காட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இந்த 1190 ஏக்கர் நிலம் மற்றும் இப்படிசட்டவிரோதமாக வாங்கப்பட்ட அனைத்து நிலங்களையும் அரசுடைமையாக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஆனால் வெளியுலகத்திற்கு தெரியாத உண்மை என்னவென்றால் இந்த ரிவேர்வே அக்ரோ நிறுவனத்தின் இயக்குநராக 2003 முதல் இன்று வரை இருப்பவர் தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டிருக்கும் எஸ்.வைகுண்டராஜன் என்பதுதான். 

அவர் தான் இந்த 1190 ஏக்கர்நிலத்தை பாதுகாத்து வந்தவர்
.இந்தப் பின்னணியில் தான்ஜெயலலிதா, வைகுண்டராஜனையும், அவரது நிறுவனமான வி.வி.மினரல்சையும் காப்பாற்ற கடந்த ஒரு வருடமாக முயற்சித்து வருகிறார். 
வி.வி ,மினரல்ஸ் நிறுவனத்தின் மணல் கொள்ளையை கட்டுப்படுத்திய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார்  இதானால்தான் உடனே மாற்றம் செய்யப்பட்டார்.அந்த முறைகேடு அப்படியே ஊத்தி மூ டப்பட்டது.


சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயத்தைசட்டவிரோதமாக நடைபெறும் தாது மணல் மற்றும் கிரானைட் கொள்ளைபற்றி விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் நியமனம் செய்தது.


ஆனால், வைகுண்டராஜனை காப்பாற்றவே ஜெயலலிதாஅரசு இந்த நியமனத்தை ரத்துசெய்யும்படி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் உச்சநீதிமன்றம் அந்தமனுவை ஏற்கவில்லை. 

இதையெல்லாம் பார்க்கும்போது, தாதுமணல் கொள்ளையில் ஜெயலலிதாவிற்கும் பங்கு உண்டா?என்ற கேள்வி எழுகிறது. 


தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் உள்ள தாதுமணல்களின் மதிப்பு 2ஜிஊழலை விட 720 மடங்குஅதிகம் என கணக்கிடப்பட்டது 
இங்கே குறிப்பிடத்தக்கது.'

இவ்வாறு அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.


தமிழக ஆம் ஆத்மி கட்சி நேற்று முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா 

அவர்களுக்கும் கனிம வளங்களை கொள்ளையடிக்கும் குற்றச்சாட்டில்

 சிக்கியிருக்கும வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜனுக்கும் உள்ள வியாபார

 தொடர்பை ஆதாரங்களுடன் நிரூபித்து அதை அனைத்து மாநில மற்றும்

 தேசிய பத்திரிகைகளுக்கும் அனுப்பி அவர்களை சந்தித்து இது தொடர்பான 

விளக்கங்களையும் அளித்தது. 

ஆனால் இந்த செய்தியை முற்றிலும் புறக்கணித்து தமிழ் தினசரிகள்.தின

 தந்தி,தினமணி,தினமலர்.தமிழ் இந்து,தினகரன் .இந்த நாளேடுகள்தான் 

ஜனநாயகத்தின் நான்காவது தூணின் இன்றைய நிலையை நமக்கு 

உணர்த்தியது.



இந்த செய்தியை வெளியிட்டது  கேப்டன் டிவி .






சோ ஏன் ஜெயலலிதாவுக்கு பயங்கரமாக சொம்பு தூக்குகிறார் என்று இப்போது தெரிகிறதா?
டாஸ்மாக் வியாபாரத்தில் 75%மிடாஸ் சரக்குகள்தான்.அதன் உரிமையாளர் ஜெயலலிதாவின் பினாமி இந்த "சோ "

சனி, 4 அக்டோபர், 2014

தில்லானா மோகனாம்பாள் வைத்தி

 வைத்திய நாதன் ஆசிரியரானதில் இருந்து கொஞ்சம் ,கொஞ்சமாக படிப்பதை நிறுத்தி விட்டேன்.நான் மட்டுமா என்றால் இல்லை.கடைக்காரரே சொன்னார்.10 விற்ற இடத்தில் இப்போது விற்பனை இல்லை.முகவரும் விற்காததை திருமப் வாங்க மாட்டேன் என்பதால் இப்போது 3 அல்லது 2 மட்டுமே வாங்குகிறேன்.அதுவும் ஞாயிறுதான் எல்லாம் விற்கும் என்றார்.
நான் வாங்காதற்கு காரணம்.
நடுனிலை என்பதற்கு உதாரணமாக இருந்த ,இந்தியாவின் மிகப்பெரிய ஊழல்களை அரசு முறைகேடுகளை வெளிக்கொண்டுவந்த பெருமை கொண்ட தினமணியின் பாஜக,அதிமுக ,ஜெயலலிதா சார்பான செயல்பாடுகள்தான்.
 வைத்தியின்  ஆசிரியர் பொறுப்புக்கு பின்னர் இலை மறைவு காய மறைவாக ஆரம்பித்து இப்போது  நமது எம்ஜிஆரை விட கட்சி பத்திரிக்கையாகி விட்டது.வைத்திய நாதன் பாரதியாரின் மீசையும் ,அவரின் வரிகளை பத்திரிக்கையிலும் வைத்திருக்கிறாரே ஒழிய அவர் தில்லானா மோகனாம்பாள் வைத்தியாகவே மாறி விட்டார்.
அது சரி.இப்போ எதற்கு வைத்தியின் தினமணி புகழ்.
02.10.2014 [காந்தி பிறந்த நாளில்தான்]தினமணியில் வெளி வந்த கட்டுரை தான் இப்படி நம்மை உசுப்பேத்தி விட்டது.
-----------------------------------------------------------------------------------------------------------------------
தினமணி தலையங்கம் : சட்டமும் சமுதாயமும் 
By இரா. சோமசுந்தரம்

First Published : 02 October 2014 01:42 AM IST
சில முக்கிய கருத்துக்குவியல் பகுதிகள்
ஒரு குடும்பத்தில் ஒருவர் சிறை செல்லும்போது அந்தக் குடும்பத்தின் அங்கத்தினர்கள் அழுகிறார்கள். மிகப்பெரும் துக்கம் கவிழ்கிறது.
சிறை சென்ற நபர் அடிதடியில் ஈடுபட்டிருக்கலாம். கொலை, திருட்டாக இருக்கலாம். எத்தகையக் குற்றமாக இருந்தாலும், அந்தக் குடும்பம் அந்த நபருக்காக கண்ணீர் சிந்தவும், தண்டனையிலிருந்து அவரை மீட்கவுமே முயலும். நீதிமன்றம் தண்டித்ததற்காக குடும்பமும் அவரை தண்டிப்பதில்லை.
எல்லாமும் எல்லாருக்கும் தெரியும். தலைவர்களின் குறை, நிறைகளோடுதான் மக்கள் ஏற்கிறார்கள். தேர்தலில் வாக்களித்து வெற்றி பெறச் செய்கிறார்கள். சமூகம் ஒருபோதும் அப்பாவித்தனமாக வாக்குகளை அளிப்பதேயில்லை.
ஒரு சமூகம் எந்தெந்தக் குறைகளை பெரிதாகக் கருதவில்லையோ அந்தக் குறைகளை அந்த சமூகம் அதன் தலைவனிடமும் காணாது; பெரிதுபடுத்தாது.
இதே உளவியலைத்தான் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான வழக்கிலும் நாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.
இதுதான் தமிழ் நாட்டு மக்களின் கண்ணீரா?ஒருவராவது ஜெயலலிதா இல்லாத அமைச்சரவையில் நான் அமைச்சராக மாட்டேன் என்று சொன்னார்களா?எல்லாம் கிளிசரின் கண்ணீர்.யார் ரொம்ப அழுவது என்று போட்டிதான் பதவியேற்பு விழாவில்..
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதன் மூலம் அவர் இந்த சமுகத்திற்கு குறிப்பாக நீதிபதிக்கு சொல்லும் கருத்து மிகத்தெளிவாக இருக்கிறது.ஜெயலலிதா கொலையே செய்தாலும் விடுவிக்க வேண்டும்.காரணம் அவர் மக்கள் வாக்குகளைப் பெற்று முத்ல்வராக இருக்கிறார்.
என்ன தெளிவான பார்வை.அப்படி என்றால் ஜெர்மனிய மக்களின் அபிரிதமான செல்வாக்கைப்பெற்ற் ஹிடலர் செயல்கள் நியாயம்,முசொலினி செய்தது நியாயம்.
ஏன் கசாப் மும்பை தாஜ் ஓட்டலில் அப்பாவிகளை கொன்று குவித்தானே.அவனை தூக்கில் போடும் போது அவன் உற்வினர்கள் அழுதார்களே.அவன் ஒன்றும்செய்யவில்லை என்று பாகிஸ்தான் அரசே சொன்னதே.அவனை தூக்கிலிட்டது தவறு.அப்படீத்தானே சோம,சுந்தரம் அவர்களே.
இன்னுமும் சில கேள்விகள்:
 ஜெயலலிதா எவ்வளவுதான் மக்கள் சொத்தை கொள்ளையடித்து சொத்துக்களை குவித்தாலும் மக்கள் வாக்களித்ததால் அவரை ஒன்றும் செய்யாமல் ஆட்சி செய்ய அனுமதிக்க வேண்டும்.அப்படி என்றால் இங்கு நீதிமன்றம்,உயர் நீதிமன்றம்,உச்ச நீதிமன்றம் எல்லாம் எதற்கு அரசியலமைப்பு சட்டம் எதற்கு. சோம சுந்தரம் தினமணி கட்டுரை எழுதுவதற்காக சோமாறி சுந்தரமாக மாறியது ஏன்?இதே கருத்தை 2ஜி இழப்பீடு வழக்குக்கும் பொருத்தி பார்க்காமல் ஆ.ராசா நாமா என்று கொட்டை எழுத்தில் தினமணி செய்தி வெளியிட்டது மகா தப்புதானே.உங்கள் தலைவி ஜெயா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி  வசமாக மாட்டிக்கொண்டு கணக்கு காண்பிக்க இயலாமல்தான் இந்த வழக்கையே 18 ஆண்டுகள் இழுத்தடித்தார்.கடைசியில் மாட்டிக்கொண்டார்.
ஆனால் 2ஜி யில் இந்த 176 லட்சம் கோடி ஊழல் அல்ல.ஏலம் முறை மாற்றியதால் அரசுக்கு ஏற்பட்டுள்ள் இழப்பீடுதான் என்று தெளிவாக கணக்கு தணிக்கை அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.அப்படி நடந்த ஒதுக்கீட்டில் பிரதமர் மன்மோகன் சிங்,நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு பங்கிருக்கிறது.
அவர்களுக்கு தெரிந்து,அவர்கள் வழிகாட்டுதலின் பெயரில்தான் நட்ந்துள்ளது.ஆ.ராசா வெறும் அமைச்சர் ,அம்பு மட்டும்தான் என்றும் தெரிவித்துள்ளார்.ஆனால் தினமணி உடபட் ஊடகங்கள் திமுக,ஆ.ராசா,கனிமொழி ஆகியோர் மட்டும் இவ்வளவு பணத்தை விழுங்கி விட்ட்தாக எழுதி,எழுதி உண்மையான குற்றவாளியிடமிருந்து மக்களை திசை திருப்பியது எவ்வளவு பெரிய முறை கேடு. இப்போதைய உங்களின் புதிய சூத்திரப்படி ஜெயலலிதாவுக்கு நீங்கள் தரும் வக்காலத்து அப்படியே ஆ.ராசா,கனிமொழி வழக்குக்கும் பொருந்தும் அல்லவா?அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதி நிதிகள் தானே?அதைவிட முக்கியம் அவர்கள் தங்கள் வழக்குகளை பொய் வழக்கு என்று ஆரம்பம் முதலே சொல்லிவருகிறார்கள்.
வாய்தாக்கள் வாங்கவில்லை.
நீதிபதி முன் தாங்களே வாதங்களை எடுத்து வைக்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக  குற்றவாளிகள் என்று தீர்ப்பு வரும் முன்னரே திகார் சிறையில் தண்டனை அனுபவித்திருக்கிறார்கள்.
அது மட்டுமல்ல சிங்கிகளே.ஜெயலலிதா வீட்டில் அள்ளியது போல் கணக்கில் வராத பணம்,நகைகள்,செருப்புகள்,கைக்கடிகாரங்கள் சொத்து ஆவணங்கள் மூட்டை,மூட்டையாக அள்ளப்படவில்லை.இப்போது  இந்த முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்த வினோத் ராய் மன்மோகன் சிங்,ப.சிதம்பரம் இருவருக்கும் தெரிந்து அவர்கள் கூறியபடிதான் ஆ.ராசா செயல்பட்டார் என்று ஆதாரப்பூர்வமாக புத்தகமே வெளியிட்டுள்ளார்.இப்போது ஊடகங்கள் ஊதி பெரிசாக்கிய ,திமுகவை குர்றவாளியாக்கிய 2ஜி வழக்கே திசை மாறி தடுமாறிக்கொண்டிருக்கிறது.இது பத்திரிகையாளர்களான் உங்களுக்கு தெரியாததா?தெரிந்தே மன சாட்சியின்றி இனவெறியுடன் செயல்படுகிறீர்கள் என்று பகிரங்கமாகவே குற்றம் சாட்டம் படுகிறீர்கள். ஆ.ராசா வீட்டில்,அவரது நண்பர்கள்,உறவினர்கள் வீடெல்லாம் சோதனையிட்டும் ஒன்றும் பிடிபடவில்லை.ஒரு குற்றமும்செய்யாமல் திகாரில் அடைக்கப்பட்ட ஆராசா வும் அவர் குடும்பமும் உங்கள் கருத்துப்படி ரொம்பவும் மகிழ்ச்சியாக வா இருந்தார்கள்.அவர்கள் வேதனை உங்களை சும்மா விடுமா?உங்கள் தலைவி மாட்ட அதுவே காரணமாக இருக்கலாம் என்று நீங்கள் நம்பும் ஊழ்வினைப் பயனை நாங்கள் நம்பாவிட்டாலும் உங்கள் நம்பிக்கைக்காக சுட்டிக்காடுகிறோம். 2011இல் ஆட்சிக்கு வந்த உடன் ஜெயலலிதாவால் முதலில் கைது செய்து சிறையில் அடைத்து விட்டு பின்னர் யாரிடமாவது முன் தேதியிட்டு புகார் வாங்கி நில அபகரிப்பு வழக்கு தொடுக்கப்பட்டதே.அப்போது அவர்களின் குடும்பத்தினர என்ன பட்டாசு வெடித்து அல்வா வாங்கி வழங்கினார்களா?அழத்தானே செய்தனர்.அவரை தங்கள் குடும்பத்தலைவராகத்தானே வைத்திருந்தார்கள் உங்கள் சூத்திரப்படி அவர் குர்றவாளியா?இல்லையா?
சிறையில் அடைத்தது தவறா?இல்லையா?
ஜெயா சிறையில் அடைத்தவர்களில் 99 சதவிகிதம் பேர் குர்றவாளி இல்லை என்று வெளியே வந்து விட்டார்களே அது தினமணிக்கு தெரியுமா?
அது எப்படி கொஞ்சமும் வெட்கமின்றி ஒரு குற்றவாளி என்று 18 ஆண்டுகால விசாரணைக்குப்பிறகு சிறை தண்டனை அளிக்கப் பட்ட வருக்கு ஆதரவாக எழுத முடிகிறது.
கொஞ்சம் கூட மனசாட்சி உங்களை உறுத்தவில்லையா.
அப்படி மனசாட்சியே இல்லாத நீங்கள் ஊடகத் துறையில் இருப்பதும் தினமணி என்ற பாரம்பரிய மிக்க இதழில் எழுதுவதும் வேதனையான கால்ம்.தினமணி,இந்தியன் எக்ஸ்ப்ரஸ் இதழ்கள் எத்தனை பெரிய ஊழல்களை,ஆட்சியாளர்களின் முறைகேடுகளை வெளிக்கொண்டு வந்துள்ளது.தினமணி செய்திகள் உண்மையானவை.
அதை படிப்பது மட்டுமல்ல கையில் ஏந்தி செல்வதே பெருமை என்றிருந்த காலம் உண்டு.
அது ரொம்ப முன்பு கூட அல்ல.
தில்லானா மோகனம்பாள் வைத்தி கதாபத்திரத்தையே வெட்கச்செய்யும் வைத்திய நாதன் வருவதற்கு முன்புள்ள காலம்தான்.
.பாரதியின் வரிகளை மேலே எழுதியும் அவரை போல் மீசையும் வைத்துக் கொண்டு கோயபல்ஸ் பணியை செய்வது ..வேறென்ன சொல்ல ..?
காலத்தின் கட்டாயம்.
அறுக்க மாட்டாதவன் இடுப்பிலே அம்பத்திரெண்டு அருவாளாம்.அல்லது பினைவாங்க முடியாதவருக்கு ஐநூறு வக்கீல்களாம்.

இதோ நியாயமான விகடன் தலையங்கம்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காமெடி கண்ணீர் கலாட்டா..?






ஜாமீன் கிடைக்கலையா..?

’என்ன பன்னீர் ஜாமீன் கிடைக்கலையா?’
”பெங்களூர் முழுக்க அலைஞ்சிட்டேமா.எல்லா மீனும் கிடைக்கிற ஜெத்மலானி கடையில் கூட ஜாமீன் கிடைக்கலை.கனி மொழியோட காலியாகிட்டுனுட்டாங்கம்மா.”
‘இங்கேயே அலைந்தால் எப்படி.தமிழ் நாட்டில் போய் தேடு”
“அங்கே அம்மாவ உள்ளே வைச்சதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீன் பிடிக்கவே மீனவர்கள் போகலையாம்மா.”
”மொத்தத்துல இப்போதைக்கு என்னை வெளியே எடுக்க மாட்டீங்க இல்லே’
“அம்மா.உங்களுக்கு ஆதரவா,நீதிக்கு எதிரா தமிழ் நாடு முழுக்க பொது மக்கள் உண்ணா விரதம்,கடையடைப்பு,பேருந்து கொளுத்தல்,கருணாநிதி கொடும்பாவி எரிப்புனு அதகளப்படுத்தி வராங்க.உங்களுக்கு கூட ”மக்களின் முதல்வர்”னுபுதுசா பட்டம் தந்திருக்கங்கமா.”
“போதும்.போதும்.இப்படி என்னை உசுப்பேத்தியே என்னை உள்ளே தள்ளிட்டு,நீ முதல்வராகிட்டு எனக்கு புதுப்பட்டமா தர்றீங்க.வெளியே வந்து வச்சுக்கிறேன்’
“சரிமா.உங்க ஆணைப்படி வெளியே போய் முதல்வர் வேலையை பார்க்கிறேமா.தினமும் உங்க படத்தை பார்த்து அஞ்சு நிமிசம் அழுதுட்டு தாமா அமைச்சர்கள் பனியை திடங்குகிறோம்.’
‘இனி என்னை பார்க்க வராதே.போயா வெளியே.”
-அழுது கொண்டே சிறை வாசல் வரை வந்த மான்புமிகு முதல்வர் பன்னீர் செல்வம் தேசிய கொடி பறக்க காரில் செல்லும் போது சிறையிலும் தேசியக் கொடி பறப்பதை பார்த்து மீண்டும் கண்கலங்குகிறார்.

இந்த இடத்தில் எனக்கு முழிப்பு வந்து விட்டது.சே என்ன சோகமான ஒரு கனவு.


.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...