செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

"உலக அளவி"ல் பட வரிசை "பத்து,"

உலக அளவில் செய்தியாளர்களால் வெளிடப்பட்ட  புகைப்படங்களில் சிறப்பானவற்றை தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளனர்.
அந்த படங்களில் முக்கியமானவைகளில் சில ............,

இந்த புகைப்படம் 2012-ம்,ஆண்டில் வெளியான படங்களில் பொதுவான  செய்தி  படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது..


20-11-2012 -ல்  காசா நகரில் வீட்டில் இருந்த 2வயது சுகிப் ஹிசாஜி ,அவனது 3 வயது சகோதரன் முகமது ஆகியோர் இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலில் கொலை செய்யப்பட்டு அடக்கம் செய்ய கொண்டு செல்லப்படும் போது எடுக்கப்பட்ட படம்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 1-ம் பரிசுக்கான பொது செய்திப்  படம்.
14-4-2012சிரியாவில் அரசு படையினரால் கடத்தி கொல்லப்பட்ட தந்தையின் அருகில் மகள் .
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
2-ம் பரிசு பெற்ற பொது செய்திப் படம் .
31-7-2012 சிரியா கலவரத்தில் அரசுக்கு தங்களைப்பற்றி தகவல்களை போட்டுக்கொடுத்தவரை  கலவரக்காரர்கள் போட்டு தாக்கும் போது ,


-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 3-ம் பரிசுக்கான பொது செய்திப்  படம்.
17-4-2012 சூடான் உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட  போர் வீரன் வான் அடக்கம் செய்யப்பட்டபோது.
ஒசாமாவை கடலில் அடக்கினது நினைவு வருகிறதா?
தேர்வான  படங்கள் அனைத்தும் கொலைவெறி படங்களாகவே இருக்கிறதே?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
மேலும் தேர்வான சில படங்கள,






நம்புங்கள் மேலே உள்ளப்படமும் தே ர்வானவற்றில் ஒன்றுதான்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------

"புத்த" மத அரக்கர்கள்.




ஈழத்தில் ராஜபக்சேயின் கொடுர கொன்றொழிப்பை மறக்க நினைத்தாலும் மறக்க இயலவில்லை.
ஒரு இனத்தையே பூண்டொடு அழித்தொழிக்கும் நிகழ்வல்லவா அது.அந்த கொலைக்களத்திற்கு விடுதலைப்புலிகளின் மீதான கோபத்தை மட்டும் ஒரே காரணாமாக கொண்டு இந்திய மத்திய அரசு பலி வாங்கும் பூசாரிகளாக ஆதரவை கொடுத்து தனது கரங்களையும் ரத்தக்கறையாக்கிக் கொண்டது இன்னும் கொடுமையானது.
அந்த கொடுரங்களில் உச்சமாக 'மாவீரன் பிரபாகரன் 'மகனாக பிறந்த காரணத்தினால் சிங்கள ராணுவத்தால் சின்னஞ்சிறுவன் என்றும் பாராமல் துப்பாக்கிக் குண்டுகளால் மார்பில் சுட்டுக் கொல்லப்பட்ட "பாலச்சந்திரன்" கொலை காட்சிகள் வெளியாகி மனதை ரணமாக்கி விட்டது.
இப்படி சிறுவனையும் கொன்ற இந்த படையினர் மனித இனம்தானா என்பதில் சந்தேகம் வ ருகிறது.இவர்கள் அமைதிக்கு வழி கூறிய புத்த மதத்தை சார்ந்த அரக்கர்கள்.
 தற்போது வெளியாகியுள்ள ஒரு புகைப்படத் தொகுப்பில், மாவீரன்  பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனின் கொலை செய்யப்பட்ட விவரத்தை பட்டவர்த்தனமாக்கியுள்ளது.
 போரின் போது குண்டுகள் வீசப்பட்டதாலோ, மக்களை சுடும் போது இறந்திருக்கலாம் என்று இதுவரை இலங்கை அரசு சொல்லிக்கொண்டிருந்த  சிறுவன் பாலச்சந்திரனின் மரணம் இலங்கை அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்பதை இப்போது வெளியான படங்கள் வெளிப்படுத்துகின்றன .
படத்தில் ஒரு பதுங்குக் குழியில் மேல் ஆடை இன்றி அமர வைக்கப்பட்டுள்ளான் பாலச்சந்திரன். அவனுக்கு உண்ண ஏதோ பிஸ்கட் போன்ற ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. கண்களில் மிரட்சியுடன் அங்கும் இங்கும் பார்க்கும் அவன் பார்வை கொடுரக்கும்பளில் இருந்து தப்பிக்க வழியே இல்லையா என்று பார்ப்பது போல் உள்ளது.
அடுத்த படத்தில் அவன் தனது மார்பில்  குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்தக் கறைகள இல்லாத நிலையில்  உயிரி ழந்து கிடப்பது காட்டப்பட்டுள்ளது.
இதன் மூலம், இலங்கை ராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மாவீரன்  பிரபாகரனின் சின்ன மகன்  எவ்வாறுராஜபக்சேயின் அரக்க கூட்டம்  திட்டமிட்டு படுகொலை செய்துள்ளது என்ற கொடுர  உண்மை உலகிற்கு தெரியவந்துள்ளது.
மனம் படைத்த மனிதர்கள் இதை கண்டு கண்கலங்கி இலங்கை அரக்கர்களையும்,அதற்கு துணை போன சோனியா கும்பலையும் எண்ணி குமுறுவர்.
இத்தனை ஆதாரங்கள் கிடைத்த பின்னரும் இலங்கை ராஜபக்சே அரசை கண்டிக்காத-தண்டனை வழங்க வக்கற்ற  ஐ.நா, சபை 
எதற்கு என்ற கேள்விதான் எழுகிறது.
சிறுவன் பாலச்சந்திரன் நெஞ்சை 5 துப்பாக்கி குண்டுகள் துளைத்துள்ளசேனல் 4 வெளியிட்ட படங்கள் போலியானவை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.  
கரிய வாசம் 
இந்தியாவுக்கான இலங்கை தூதர் கரியவாசம், உள்நோக்கத்துடன் லண்டனில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாகவும்,
 இதற்கு பின்னால் விடுதலைப் புலிகள் ஆதரவு சக்திகள் இருப்பதாகவும்.
 இந்த குற்றச்சாட்டில் புதிதாக எதுவும் இல்லையென என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். 
நிச்சயம் கொலையையே வாடிக்கையாகக் கொண்டவர்களுக்கு இ தில் புதிதாக ஒன்றும் இருக்கப் போவதில்லைதான்.
உயிருடன் இருக்கும் சிறுவன் உயிர் இழந்து கிடப்பது எப்படி?
இதற்கு கரிய வாசம் என்ன பதில் சொல்லுவார்.
அது அவன் முன்பு விடுதலைப்புலிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் என்பாரோ?
நிச்சயம் இதுபோன்ற சிறுவர்கள்வயதானவர்கள்,பெண்கள் என அனைத்து தரப்பினரையும் தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காக கொன்றொழித்த ராஜபக்சே கும்பலுக்கு வரும் முடிவும் அவலமாகத்தான் இருக்கும்.அதற்கு துணைபோன கும்பலு க்கும்தான்.
உண்மையில் இதயம் உள்ளவர்கள் இதை கண்டு கண்ணிர் வடிப்பார்கள்.ஆனால் அந்த இடத்தில் பள்ளம் உள்ளவர்களை என்ன சொல்ல.
இத்தனை கொடுமை செய்யும் ராஜபக்சே பக்தனாக இந்தியாவில் தமிழ் நாடு வரை வருகிறான்.அதை இந்த மனிதாபிமான இல்லா மத்திய அரசும் அனுமதிக்கிறது.அதற்கு இங்குள்ள தமிழனும் காங்கிரசுக்காரன் என்ற பெயரில் பதவிக்காக வக்காலாத்து வாங்குகிறான்.
என்ன தமிழனின் இன உணர்வு?
------------------------------------------------------------------------------------------------------------------------------------

மின்சாரம் தவிர அனைத்தும் வருகிறது.
தமிழக  அரசு தன்மக்களுக்கு மின்சாரம் மட்டும்தான் தர இயலவில்லை.
ஆனால் மின் கட்டணம் முதல் அனைத்துக்கும்பல மடங்கு  கட்டண உயர்வை மட்டும் தாராளமாக அதிகரித்த து .
இப்போது மின் இணைப்புக்கான டிபாசிட், மின் மீட்டர் பொருத்துவது, பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவது போன்ற சேவை கட்டணங்களை உயர்த்த, மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. 
இதுவரை உபயோகித்த மின்சாரத்துக்கு கணக்கு பார்க்க மட்டுமே வீட்டில் இருந்த மீட்டருக்கும் இனி மாத வாடகை வாங்கவும் மிக புரட்சிகரமாக  முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கு, 2,500 கோடி ரூபாய் மின்வாரியத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம், 2.30 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில், 35 லட்சம் மின் இணைப்புகள், வணிக ரீதியிலானவை. 19 லட்சம் இலவச மின் இணைப்புகள், விவசாயம் மற்றும் குடிசை பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.கடந்த சில ஆண்டுகளாக, மின்பற்றாக்குறை காரணமாக, தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டு, சேவையின் அடிப்படையில், குறைந்த விலையில் நுகர்வோருக்கு, மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது. இதனால், மின்வாரியம், 54 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, நஷ்டத்தில் இயங்கி வருகிறது.
 இதையடுத்து, செலவினங்களை குறைத்து, வருவாயை அதிகரிக்க, மின்வாரியம் முடிவு செய்தது.முதல்கட்டமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம், மின்சார கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. இதனால், மின்வாரியத்துக்கு ஆண்டுதோறும், 7,500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்து வருகிறது.இந்நிலையில், புதிய மின் இணைப்பு, மின் மீட்டர் பொருத்துவது, பழுதடைந்த மீட்டர் பெட்டிகளை மாற்றுவது போன்றவற்றுக்கான கட்டணங்களை உயர்த்த, மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும், மின்சார கணக்கீடு எடுக்கவும், மின்சார அளவீடுகளை குறிக்க பயன்படும், வெள்ளை நிற அட்டைக்கான கட்டணத்தை உயர்த்தும் நடவடிக்கைகளில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ஒரு முனை மின் இணைப்பு பெற, தற்போதைய கட்டணம், 250 ரூபாயில் இருந்து, 900 ரூபாயாகவும்; மும்முனை இணைப்புக்கான கட்டணம், 500 ரூபாயில் இருந்து, 1,600 ரூபாயாகவும்; வணிக ரீதியிலான மும்முனை இணைப்பு கட்டணம், 3,000 ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும் என தெரிகிறது.
இதே போல், மின் மீட்டர்களுக்கு, மாதாந்திர வாடகை நிர்ணயம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, வீட்டு மின் மீட்டர்களுக்கு, 10 ரூபாயும், மும்முனை மின் மீட்டர்களுக்கு, 40 ரூபாயும், வணிக ரீதியிலான மின் மீட்டர்களுக்கு, 50 ரூபாயும் வாடகை வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய மீட்டர்களை பொருத்துவது, பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவது போன்றவற்றுக்கான கட்டணம், ஒரு முனை மின் இணைப்புக்கு, 150 ரூபாயில் இருந்து, 500 ரூபாயாகவும்; மும்முனை மின் இணைப்புக்கு, 150 ரூபாயில் இருந்து, 750 ரூபாயாகவும் உயர்த்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது.

மீட்டர்களுக்கான டிபாசிட் கட்டணம், ஒரு முனை மின் இணைப்புக்கு, 700 ரூபாயில் இருந்து, 825 ரூபாயாகவும்; மும்முனை எலக்ட்ரானிக் மீட்டர்களுக்கு, 2,000 ரூபாயில் இருந்து, 3,650 ரூபாயாகவும் உயர்த்தப்படலாம் என தெரிகிறது. 
மேலும், உயர் மின் அழுத்த மீட்டர்களுக்கான வைப்புத் தொகை, 40 ஆயிரம் ரூபாயில் இருந்து, 65 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார கணக்கீடு செய்ய, தற்போது எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. 
ஆனால், இனி, ஒவ்வொரு வீட்டுக்கும் மின்சார கணக்கீடு செய்ய, 10 ரூபாயும், குறைந்த மின் அழுத்த இணைப்புக்கு, 100 ரூபாயும், உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கு, 250 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட உள்ளது.மின்சார கணக்கீட்டை குறித்து வைக்கும், வெள்ளை அட்டையின் விலை, 5 ரூபாயில் இருந்து, 10 ரூபாயாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------













புதன், 13 பிப்ரவரி, 2013

பிப்ரவரி -14




இன்று காதலர் தினம் என்று பலர் மயக்கத்தில் அலைவார்கள்.
உண்மையில் இது காதலிப்போர் தினம் அல்ல.அன்பை கொண்டாடுவோர் அல்லது நேசிக்கும் மனதினருக்கான ஒரு நாள்.
என்ன வகையான் தினம் என்றாலும் அது மேலை நாட்டில் இருந்துதான் நமக்கு இறக்குமதி யாகிறது.
இந்த தினங்களில் குறிப்பிட்ட விடயத்தை விட வியாபர நோக்கங்களே அடிப்படை அமைப்பாக விருப்பமாக கொண்டுள்ளது.அதற்காகவே ஒவ்வொரு நாளும் அறிவிக்கப்படவும் செய்கின்றனர்.
அந்த நாளுக்காக ஏதாவது ஒரு காரணத்தை வரலாற்றின் பக்கங்களில் இருந்து சுரண்டி எடுத்து விடுகின்றனர்.
இந்த காதலர் தினத்தில் நாம் முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டியது ,காதல் என்ற பெயரில் ஒரு பெண்ணையே அமிலம் ஊத்தி கொன்ற கய்வனைப்போல் கண்மூடித்தனமான காதல் போதைக்கு ஆளாகக் கூடாது என்பதுதான்.ஒரளவு சிரித்தாற்பொல் பேசி விட்டாலே.அல்லது வழியில் பார்த்து அறிமுகமானவருக்கான சிரிப்பை வழிய விட்ட பெண்கள் எல்லோரும் தன்னை காதலிப்பது என்ற அவலமான முடிவுக்கு வந்து ஆசைகளை வளர்த்துக்கொள்வது மிக கொடுமை.
அது போல் ஒருவன் வளர்த்த காதல் என்ற தவறான முடிவுதான் வினோதினி என்ற இளம்பெண்ணை கல்லறைக்கு அனுப்பி விட்டது.

கஷ்டத்தில் வளர்த்து,துன்பத்தில் பொறியியல் பட்டதாரியாக்கி குடும்ப துன்பங்கள்-ஏழ்மை நீங்கிவிடும் என்று பனி கிடைத்த மகிழ்வில் இருந்த அனைவர் மனதிலும் தாளா சோகத்தை ஒரு மடையன் நொடிப்பொழுதில் தந்து விட்டான்.
அது போன்ற கனவுக்காதல் கொண்டு நீங்கள் ஏதாவது ஒரு பெண்ணுக்கு காதலர்தின வாழ்த்து-பரிசு அனுப்பி குடும்பத்திலும் ,அப்பெண்ணின் வாழ்க்கையிலும் களங்கத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்.
வினோதினியின் மரணம் அதைத்தான் நமக்கு கூறுகிறது.
காதலர் தினம் காதலிப்பவர்களுக்கு மட்டுமல்ல.நேசிப்பவர்களுக்கும்தான்.அந்த நேசிப்பை உனது தோழன்,குடுமபத்தினர்,உறவினர்களுக்கு தெரிவியுங்கள்.
உண்மையான நேசிப்பு தினத்தை கொண்டாடுங்கள்.
உங்கள் கொண்டாட்டம் அமைதியான குடும்ப பெண்கள் வாழ்வில் புயலை கொண்டுவந்து விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

இனி வாலண்டைன் தினம் உருவான கதை:

பிப்ரவரி -14ம் தேதி மத்திய இங்கிலாந்தில் பறவைகள் மூலமாகத் தங்கள் இணை களைத் தேர்வு செய்த ஆங்கிலேயர்கள் தான்  இந்த நாளை முதலில் கொண்டாடியதாக தெரிகிறது.
ரோமானிய அரசனின் ஆட்சிக் காலத்தில்தான் அந்த நாள்  வாலண்டைன் தினம் என கொண்டாடத்துவங்கியதற்கான  சான்றுகள் உள்ளன.
ரோமானிய மன்னன்  கிளாடிஸ் II கொடூரமாகவும், கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்த காலகட்டம் அது! முட்டாள் தனமாக தமது இராணுவத்திற்கு கட்டளை பிறப்பிப்பான். இதனால்இராணுவத்திலிருந்து வீரர்கள் வெளியேறினர். புதிதாக இராணுவத்தில் சேரயாரும் முன்வரவில்லை.
தனது மந்திரி பரிவாரங்களை அழைத்து ஆலோசனைநடத்தினான். உருப்படியாக ஒருவரும் சொல்லவில்லை என கோபப்பட்டான்.  அந்தப்புரத்தில் தனது அந்தரங்க நாயகியுடன் சல்லாபமாக கிளாடிஸ் இருந்தநள்ளிரவு வேளையில் திடீரென ஞானோதயம் ஒன்று பிறந்தது. மஞ்சத்தை விட்டுஎழுந்து மளமளவென அரசவுடை தரித்து தர்பாருக்கு கிளம்பினான். மூத்தஅமைச்சரை அழைத்து வரச் சொன்னான். அர்த்த ராத்திரியில் என்னமோ ஏதோவெனஅவரும் பதறியடித்து ஓடி வந்தார்.
"நாட்டு மக்களுக்கு ஓர் அறிவிப்பைஉடனடியாக அறிவிக்கச் செய்யுங்கள், ரோமாபுரி நாட்டில் இனி எவருமே திருமணமேசெய்து கொள்ளக்கூடாது. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களும் ரத்துசெய்யப்படுகிறது.
இந்த அரச கட்டளையை மீறுபவர்கள் யாராயினும் கைதுசெய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்னர்அறிவிக்கப்படும் ஒரு நாளில் பொது இடத்தில் அவர்கள் கல்லால் அடித்து தலைதுண்டிக்கப்பட்டுக் கொல்லப்படுவார்கள். இது இன்றே, இப்போதே அமலுக்குவருகிறது" என்றான் அரசன்.அமைச்சர் ஏதோ சொல்ல வாயெடுக்க...கிளாடிஸின் உறுமல்," மறை கழன்ற மன்னனிடம்பேசிப் பயனில்லை என முடிவு செய்து அவ்வாறே அறிவித்தான். அரசனின்அறிவிப்பை அறிந்து ரோமானியர்கள் அதிர்ந்து போனார்கள்.
அரசனின் அறிவிப்புக்கு காரணம், திருமணமானவர்கள் தங்கள் அன்பு மனைவியைப்பிரிந்து வரத் தயங்குகிறார்கள். திருமணமான வாலிபர்களோ தங்கள் காதலியைவிட்டுவிட்டுப் பிரிந்து வரத் தயங்குகிறார்கள். குடும்ப வாழ்க்கை,அன்புக் காதலி இல்லாதபட்சத்தில் மனம் வெறுத்து இராணுவத்தில் சேருவார்கள்.  போரிலும் மூர்க்கத்தனமாகப் போரிடுவார்கள்.
வெற்றி எளிதில் கிட்டும்என்று மன்னனுக்கு எழுந்த எண்ணமே இந்த அறிவிப்பை வெளியிடச் செய்தது.  திருமணங்கள் கனவாகிப் போனதை எண்ணி சோகக் கண்ணீரில் ரோம் மிதந்தது.
 இரு மன இணைப்பை அரசன் அறுத்தெறியத் துணிந்தது அநியாயம் என்றுகொதித்தெழுந்த கிறிஸ்தவ பாதிரியாரான வாலண்டைன் அரச கட்டளையை மீறி இரகசியமாகத் திருமணங்களை நடத்தி வைத்தார்.
எட்டப்ப ஒற்றர்கள் மூலம் இந்தச் செய்தி அரசனுக்கு எட்டிவிட வாலண்டைனைக் கைது செய்து, மரண தண்டனை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது.
இடைப்பட்ட காலத்தில் சிறையில் இருந்த பாதிரியார்வாலண்டைனுக்கும் சிறைக் காவலர் தலைவனின் பார்வை இழந்த மகள்அஸ்டோரியசுக்கும் அன்பு பூத்தது. மரணத்தின் வாசற்படியில் நின்றுகொண்டிருந்த வாலண்டைனை விடுவிக்க அஸ்டோரியஸ் முயன்றாள். இதை அறிந்தசிறைத் துறைத் தலைவன் மகளை வீட்டுச் சிறையில் வைத்தான். இழந்த கண்கள்கிடைத்தது போன்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த அஸ்டோரியஸின் கனவுகள்சிதைந்தது. உருக்குலைந்து போனாள், அஸ்டோரியஸ்.

அஸ்டோரியசுக்கு, அத்தனைகட்டுக் காவலையும் மீறி காகித அட்டை ஒன்று, செய்தி சுமந்து வந்தது.

"விழி இருந்தும்வழி இல்லாமல் - மன்னன்பழி தாங்கிப் போகிறேன்.விழி இழந்து - பார்க்கவழி இழந்து, நீ மனவலி தாங்காது கதறும்ஒலி கேட்டும், உனை மீட்கவழி தெரியாமல் மக்களுக்காகபலியாடாய் போகிறேன்; நீஒளியாய் வாழு! பிறருக்குவழியாய் இரு!! சந்தோஷஒளி உன் கண்களில்மிளிறும்!! 
-உன்னுடைய வாலண்டைனிடமிருந்து!

அன்றிலிருந்து இன்று வரை நேசிப்பாளர்களிடையேபரந்து  நிற்கிற வாசகமாகும்.
இந்த கதை  உண்மையாக இருந்தால்  உலகின் முதல் வாலண்டைன்அட்டை இதுவாகத்தான் இருக்கும்.

வாலண்டைனின் செய்தியை, தோழி வாசிக்க அஸ்டோரியஸின்  கண்ணீடன் கேட்டுக்கொண்டிருந்த  நேரத்தில்தான்  வாலண்டைன் கல்லால் அடித்து வதை செய்த பின்  தலை துண்டித்து எறியப்பட்டது .
அந்த நாள்270வது வருடம் பிப்ரவரி மாதம் 14ம் தேதி.அரச கட்டளையை மீறி மனங்களை இணைய வைத்து தன்னையே பலி கொடுத்த வாலண்டைன்  "ரோம் " மக்களின் மனங்களில் மறையாமல் நிறைந்திருந்தார்.
ரோமானியசர்ச்சுகள் ஐரோப்பியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த போது "பாகான்"விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டது. பாகான் என்றால் மதமற்றவன் என்றுபொருள். பின்னர் இதுவே வாலண்டைன் தினமாகக் கொண்டாடப்பட்டது. ஏறக்குறைய200 வருடங்களுக்குப் பிறகு போப்பாண்டவர் ஜெலாசியஸ் I (496 ம் ஆண்டு)"வாலண்டைனை"ப் புனிதராக அறிவித்தார். அன்றிலிருந்து மனிதப் புனிதர்வாலண்டைன் தினம் (St.Valentine's Day) உலகம் கொண்டாடப்பட்டது .
அது மெதுவாக காதலர் தினமாக இன்றைக்கு உருமாறி விட்டது.

======================================================================
"வாலண்டைன் டே" என்று நீங்கள் கூகிளில் கிளிக்கினால்   1,510,000,000 பக்கங்கள் திறக்கிறது. 
valentine's day gifts for him- என்ற கூகிள் தேடலில்   69,400,000 பக்கங்கள்வருகிறது.  
valentine's day gifts for her- என்று தேடினால்  85,500,000பக்கங்கள் .  
valentine's day gifts for husband-என்று தேடினால்  4,730,000பக்கங்கள்.  
  valentine's day gifts for wife- 164,000,000 .பக்கங்கள்.
, valentine's day movie- யாக எந்தப்படம் பார்க்கலாம் என்றால் 65,400,000 ஆலோசனை சொல்லும் பக்கங்கள்.
  valentine's day movie online- ல் பார்க்கலாமா என்றால்2,860,000 பக்கங்கள் இணையத்தில் வருகின்றது."
=======================================================================


வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

மீண்டும் உண்ணாவிரதம்

வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி டெல்லியில் மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக சமூக சேவகர் அன்னா ஹசாரே அறிவித்து உள்ளார்.

அன்னா ஹசாரே
திருத்தங்களுடன் கூடிய புதிய லோக்பால் மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. ஆனால் இந்த மசோதா பயன் இல்லாதது என்றும், ஊழலை ஒழிக்க வகை செய்யாது என்றும் கூறி சமூக சேவகர் அன்னா ஹசாரே இதை ஏற்க மறுத்து உள்ளார்.டெல்லியில்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:–
சி.பி.ஐ.
ஜன லோக்பால் மசோதாவை கொண்டு வரும் பிரச்சினையில் மக்களுக்கு மத்திய அரசு மீண்டும் நம்பிக்கை துரோகம் செய்து இருக்கிறது. இந்த பிரச்சினையில் மத்திய அரசு தொடர்ந்து உண்மைக்கு மாறாக பேசி வருகிறது. மத்திய அரசு கொண்டுவர இருக்கும் லோக்பால் மசோதா ஊழலை ஒழிக்க உதவாது என்பதால் அதை ஏற்க முடியாது.சி.பி.ஐ., மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் ஆகியவற்றை தேர்தல் ஆணையம் போல் தன்னாட்சி பெற்ற அமைப்பாக மாற்ற வேண்டும். அப்போதுதான் ஊழலை ஒழிக்க முடியும். சி.பி.ஐ.யும், மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையமும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை ஊழலை ஒழிக்க முடியாது.
நீதி கிடைக்காது
சி.பி.ஐ. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்திருக்குமானால் பல மந்திரிகள் சிறைக்கு போய் இருப்பார்கள். 1 முதல் 4–வது பிரிவு வரையிலான அதிகாரிகளையும் ஜன லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரவேண்டும்
 வலுவான லோக்பால் மசோதா இல்லாவிட்டால் மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய முடியாது.நேர்மையானவர்கள் பாராளுமன்றத்துக்குள் செல்லும் வரை ஜன லோக்பால் மசோதாவை கொண்டு வர முடியாது. வலுவான ஜன லோக்பால் மசோதாவை வலியுறுத்தி நான் தொடர்ந்து போராடுவேன். இந்த பிரச்சினையை நான் மக்களிடம் கொண்டு செல்வேன். மத்திய அரசு தனது வாக்குறுதியில் இருந்து பின்வாங்கி விட்டதாக அவர்களிடம் எடுத்துக்கூறுவேன்.
மீண்டும் உண்ணாவிரதம்
லோக்பால் மசோதா அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்று எனக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி இருந்தார். நானும் அவருக்கு கடிதம் எழுதினேன். அதிகாரம் விஷத்தை போன்றது என்று சோனியா காந்தி கூறுகிறார். அதிகாரம் விஷம் என்றால் அதை கைப்பற்ற ஏன் எல்லோரும் துடிக்கிறார்கள்?அரசாங்கத்துடன் எனக்கு எந்த விரோதமும் கிடையாது. வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வந்தால் அரசாங்கத்தை நான் பாராட்டுவேன். ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போகுமானால் நான் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவேன். தேவைப்பட்டால் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நான் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன்.இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.
ராஜ்நாத் சிங்
சி.பி.ஐ.யை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற யோசனையை நிராகரித்ததன் மூலம், ஊழலை ஒழிப்பதில் மத்திய அரசுக்கு அக்கறை இல்லை என்பது தெளிவாகிறது என்று பாரதீய ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் கூறினார்.டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில் மேற்கண்டவாறு கூறிய அவர், ஊழலை ஒழிக்க வலுவான சட்டம் வேண்டும் என்று பாரதீய ஜனதா தொடர்ந்து கூறி வருவதாகவும், சி.பி.ஐ.யை தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பாக மாற்ற தங்கள் கட்சி தொடர்ந்து போராடும் என்றும் தெரிவித்தார்.
------------------------------------------------------------------------------------------------
சில நேரங்களில் எதிர்பாராமல் வந்து சேரும் அதிர்ஷ்டம் ஒருவரை திக்குமுக்காட வைத்து விடும். அது போன்றதொரு சம்பவம் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கென் வில்மேன் (50) என்பவருக்கு நேரிட்டது. அவர் தனது வளர்ப்பு செல்லப்பிராணியான நாயை அழைத்துக்கொண்டு கடற்கரையில் நடைபயிற்சிக்கு சென்றார். அப்போது இந்த நாய் திடீரென்று மோப்பம் பிடித்து கெட்டியான பாறைத்துண்டு போன்று கிடந்த பொருளை கண்டுபிடித்தது. அது மஞ்சள், கருப்பு நிறத்துடன் வித்தியாசமாக இருந்தது. அதோடு ஒருவகையான நாற்றமும் வீசியது.
அதை எடுத்து சென்று ஆய்வு செய்ததில் திமிங்கலத்தின் வாந்திப்பொருள் எனவும், அது மிகவும் அரிதானது என்றும் தெரியவந்தது. அதுமட்டுமின்றி இது மருந்து மற்றும் வாசனைதிரவியம் தயாரிக்க உதவும் மூலப்பொருள் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் விளைவு அதற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுவிட்டது. அதற்கு ரூ.35 லட்சம் விலையை கென் வில்மேன் நிர்ணயித்துள்ளார்.
-----------------------------------------------------------------------------------------------

ஆளுங்கட்சியின் அரசியல்




உலக நாயகன் கமல்ஹாசன் ரசிகர்கள் பக்குவப்பட்டவர்கள் .கட்டுப்பாட்டோடு இருப்பவர்கள் என்பதற்கு பல உதாரணங்களைக்கூறலாம்.
இப்போது இசுலாமிய எதிர்ப்பு என்பதெல்லாம் தாண்டி விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிக்கப்பட்டதன் நோக்கம்  ஆளுங்கட்சியின் அரசியல் ,சொந்த வெறுப்பு,பழிவாங்கல் என்று தெரிந்தும் கட்டுப்பாட்டுடன் இருப்பது கண்டிப்பாக வரவேற்கப்படவேண்டிய விடயம்தான்.
இதோ நண்பர் கோவிந்தராஜூ பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள இரு வேண்டு கோள்கள்.
கமல்ஹாசன் ரசிகர்கள் அனைவரும் எத்தனை தடைகள் போட்டாலும் திரையரங்கில்தான் பார்ப்பேன்.திருட்டு விசிடி யில் பார்க்கமாட்டேன் என்று உறுதியுடன் இருந்தாலே  போதும். 


அது என்ன கரை என்பது புரியும்.ஆனால் திரையரங்கை தாக்க அக்கரை வேட்டியில் வர மாட்டார்கள் என்பதும்.இசுலாமிய வேடம்தரித்து வருவார்கள் என்பதும் புரியாதவர்களா நீங்கள்.?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
அம்மாவின் அருள்வாக்கு,

இத்தனை நாட்களுக்குப்பிறகு நம்மை ஆளும் அம்மா வாயைத்திறந்துள்ளார்.பொதுவாக இது போன்ற பரபரப்புகளில் வாயை திறக்காமல் காரியத்தில் கண்ணாயிருக்கும் அவர் இப்போது அறிக்கை விடுகிறார் என்றால் தன்னையறியாமல் ஒரு அச்சத்துக்கு ஆளாயிருக்கிறார் என்றுதான் அர்த்தம்.
 இப்போதைய வழக்கும் தீர்ப்பு அரசுக்கு எதிராக வந்து விடும்.தனக்கு அது அவமானமாகி விடும் என்ற கவலைதான் வாயை திறக்க வைத்திருக்கிறது.
ஆனால் இத்தனை சிரமப்பட்டு இரவு 11.30 அரசு தடை வாங்க நீதிபதியின் தூக்கத்தை கெடுத்து மேல்முறையீடு செய்து தடை நீக்கத்துக்கு தடை வாங்க என்ன காரணம் என்று அறிக்கையில் சொல்லப்படவில்லையே?
இசுலாமிய தலைவர்கள் கூட "நாங்கள் கூறிய காட்சிகளை கமல் நீக்க ஒத்துக்கொண்டார்.முதலில் தடை சரி.பின் இரண்டாவது ஒடி சென்று இத்தனை அவசரப்பட்டு தடை வாங்க வெண்டிய அவசியம் அரசுக்கு என்ன வந்தது.சன்டைககாரர்கள் ஒத்துமையாக போனபின் இவர்கள் தடை செய்ய அலைவதுக்கும் எங்களுக்கும்    தொடர்பில்லை.எங்கள்   பிரச்னை முடிந்தது."என்கிறார்கள்.
இந்தியா முழுக்க படம் வெளியான பின் தமிழ் நாட்டில் மட்டும்,அதுவும் தமிழன் எடுத்த படத்தை வெளியிட தடை என்றால் அது தமிழக அரசுக்கும் அவர்கள் ஆட்சியில் வாழும் மக்களுக்கும்தான் அசிங்கம்.
ஒன்று மட்டும் வெளிப்படையாகத்தெரிகிறது.ஜெயலலிதா என்றஜெயா  தொலைக்காட்சியின் 
மறைமுக பங்குதாரருக்கும் கமல்ஹாசன் என்ற படத்தயாரிப்பாளருக்குமான பிரச்னைதான் மூல வேர்.
அல்லது இப்படிகூட மாற்றி யோசிக்கலாம்.
90 கொடிகளுக்கும் மேல் படத்தில் போட்டு விட்டு இத்தனை பணம் வருமா?என்று கவலைப்பட்ட கமல்ஹாசனுக்கு உதவவே இத்தடை நாடகமாக இருக்கலாம்.
இதன் மூலம் தமிழ் நாட்டிலுள்ள அனைவருக்குமே விஸ்வரூபத்தில் அப்படி என்னதான் இருக்கிறது அதையும் பார்த்து வைப்போம் என்று திரையரங்குக்கு வர ஆவலைத்தூண்டிவிட்டார்கள் அல்லவா?
கையை பிசைந்து நின்ற கமலுக்கு அரசு செய்த இலவச விளம்பரம்.
அதனால்தான் "தடையால் நட்டம் என்று பணம் அரசிடம் கேட்கக்கூடாது"என்று அம்மையார் வரிகளை சேர்த்திருப்பாரோ?  
கமல் தனக்கு எதிரி அல்ல என்று ஜெயா கூறியதை நம்ப இயலாது. 
அன்பத்தேடி படத்தில் புத்தர் வேட கமலை ஜெயலலிதா மயக்கி ஆடும் காட்சியிலேயே கமலின் நடிப்பை விமர்சித்து திரை உலகில் அடையாளம் தெரியாத  ஆளாக இருந்த கமலை வாங்கு வாங்கு என்று வாங்கியவர்.
அதன் பின் மூன்றாம் பிறை யில் கமல் தேசிய விருது பெற்றமைக்காக எம்ஜிஆர்  பாராட்டு விழாவை நடத்தக்கூடாது என்று எம்ஜிஆரிடம் சண்டையிட்டவர் இதே ஜெயலலிதா.அதன் பின் விக்ரம் பட விளம்பர விவகாராம்,இப்போது சிதம்பரம் கூட்ட பேச்சு,ஜெயா டிவிக்கு அடிமாட்டு விலைக்கு கொடுக்காமல் விஸ்வருபத்தை நல்ல விலைக்கு அடுத்த தொலைக்காட்சிக்கு விற்றது என்று  பல உள்குத்துக்கள் உள்ளன.
அதை எல்லவற்றையும் விட தடை விதிக்கப்பட்டவுடன் ஜெயலலிதாவை சந்தித்து கூழைக்கும்பிடு போடாமல் இருந்தது அவருக்கு தடையை நீக்க முடியாமல் சட்டம் ஒழங்கு பிரச்னை வந்து விட்டது. 
அட அப்போது கூட சந்திக்காமல் இருந்தது சரி.தடையை நீக்கும் உத்திரவுக்கு பின்னால் ,இசுலாமியருடன்  சுமுகமாக பேசி தீர்வு காண நீதிபதி சொன்னபோது கமல் இசுலாமியர்களுடன் பேசி சில காட்சிகளை நீக்க ஒப்புக்கொண்டதும் -அவர் வருவார் என்றும் அப்போது அம்மாவை பாருங்கள் அம்மா பெருந்தன்மையுடன் மன்னித்து விடலாம் என்று 
 கூற தலைமைச்செயலர்,உள்துறை செயலர் என்ற அதிகார மட்டங்கள் காத்திருந்த போது கமல் வராமல் பிரச்னையை இசுலாமியருடன் முடித்துக்கொண்டதும் தான் அம்மா விஸ்வரூப ம் எடுத்துஇரவு நீதிபதி வீட்டை  11.30 க்கு தட்ட வைத்து விட்டது.
அதுவும் போதாது என்று காவல்துறைக்கு எந்த  திரையரங்கிலும் தடை நீக்கம் என்று படத்தை போட்டு விடக்கூடாது.மதியம் மீண்டும் தடையை எப்படியும் வாங்கி விடுவோம் என்ற ஆணை பறந்து அதன் படியே ஏவல் மன்னிக்கவும் காவல்துறை படத்தை நிறுத்தி ரசிகர்களை அடித்து விரட்டியது.
அது போதாது என சிலரை எற்பாடு செய்து கமல் விளம்பர பதாதைகளை எரிக்க செய்தது.திரையரங்குகளை கல்லை எரியச்செய்தது.
 இதன் மூலம்  சட்டம்-ஒழங்கை நீதிமன்றத்தில் காட்டி அரசின் வாதத்தை வலுப்பெறச்செய்யலாம் என்பதுதான் ஆளுங்கட்சியின் தலைமையின் திட்டம் .
அரசு அல்லது ஆளுங்கட்சிதான் செய்தது என்பதற்கு ஆதாரம் பல.
சென்னை தேவி திரையரங்கில் இருந்து ரசிகர்கள்  ஆயிரக்கணக்கானோர் காவல்துறையால் வெளியேற்றப்பட்டு வாயில் கள்  பூட்டி காவல்துறையினர் நின்று கொண்டனர்.வெளியே ரசிகர்கள் கூட்டம்.ஆனால் உள்ளே கமல் பேனர்கள் தீப்பிடித்து எரிகிறது.காவல்துறையினர் அதை அப்புற ப்படுத்துகின்றனர்.யாரோ பெட்ரோல் குண்டை வைத்து எரித்து விட்டு ஒடி விட்டனராம். மு.தா.அறிக்கை பதிவு செய்து விட்டு செய்தியாளர்கள் வரும் முன் எதுவும் நடக்காதது போல் சுத்தமாக துடைத்து விட்டு ஒன்றும் இல்லையே என்று சொல்லியிருக்கிறது காவல்துறை.ஆனாலும் சுவரில் உள்ள கரியை படம் பிடித்து திரும்பியுள்ளனர் செய்தியாளர்கள்.இசுலாமிய மக்கள் மீது தானே இக்குற்றசாட்டு விழுகிறது?

அடுத்து வாங்க பழகலாம் ரினாஷ் கான் தன்பதிவில் எழுதிய சம்பவம் .

இதுவும் தமிழ் நாட்டில் பதட்டத்தை ஏற்படுத்திய விவகாரம்.இந்த பழியும் ஒன்றுமறியா இசுலாமியர் மீதுதான் விழுந்திருக்கும்.ஆனால் பூனை வெளியெ வந்து பிசுபிசுத்து விட்டது.

"[flash news ] என்ன வென்றால் கோவையில் முஸ்லிம் மக்கள் அதிக வாழும் இடங்களில் கோவை கரும்புக்கடை .ஆசாத் நகரில்   ..சில மர்ம நபர்களால் பதிக்குவைக்கப்பட்ட  பெட்ரோல் குண்டு ..கண்டு பிடிக்க பட்டது ...இந்த பெட்ரோல் குண்டு எதற்க்காக  பதிக்கு வைக்கப்பட்டது ..யார் பதிக்கு வைத்தார்கள் ..விஸ்வரூபம் படத்தை திரையிடாமல் தடுக்க சில மர்ம நபர்களால் பதிக்க வைக்க பட்டதா ??? என்று போலீசார் ..விசாரணை செய்து கொண்டு வருகிறார்கள் ......
 என்ற செய்தி வளம் வந்து கொண்டு இருந்தது ..இதை கண்டு நான் பெரிதும் வறுத்த பட்டேன் ..ஏன் என்றால் ..நானும் கோயம்புத்தூர் காரன் தான் அதுவும் நான் வசிப்பதும் கரும்புகடையில் தான் .....எனக்குள்ளே என் சமூதாயம் மக்களின் மேல் கோவம் வந்தது ஏன் என்றால் எதற்காக நம் மக்கள் இப்படி பெட்ரோல் குண்டுகளை எல்லாம் வைத்து இருப்பதனால்தானே ..மாற்று மத சகோதரர்கள் நம்மை தீவிரவாதி என்று எண்ணி கொண்டு இருக்கிறாகள் ..இதனால் இந்த பெட்ரோல் குண்டுகளினால் அவை  உறுதி செய்ய படுமே   என்று ..வருத்தப்பட்டேன் ...ஆனால் 
இன்று காலையில் நான் வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக ரெடி ஆகி கொண்டு இருந்தேன் ..உடனே என் தந்தை வந்து ஒரு செய்தி சொன்னார்கள் அது என்ன வென்றால் 

நேற்று போலீசார் ..கரும்புகடைக்கு வந்ததாகவும் .. அங்கே   ஆசாத் நகரில் அன்வர் என்ற நபர் கரி [இறைச்சி ]கடை  நடத்தி வருகிறார்  ..அந்த கடைக்கு அருகில் ஒரு காலி குடோன் இருந்தது ..அதை சாதகமாகா பயன் படுத்தியே போலீசார் .இந்த அன்வரை ..தனியாகா அழைத்து அந்த குடோனில் ..பெட்ரோல் குண்டு இருந்ததாகா அதை அன்வர் பார்த்து போலீசாரிடம் ..கூறியதாகவும்...உடனே வந்த போலீசார் அந்த பெட்ரோல் குண்டை .பறிமுதல் செய்து ..அந்த அன்வரை சாட்சியாகா ..அவரிடம் இருந்து கை எழுத்து வாங்கி கொண்டு வந்ததாகவும் .....ஒரு பொய்யான தகவலை போலீசார் நேற்று செய்து ..இருக்கிறார்கள்....
அன்வர் அவர்களும் போலிசார் சொல்லும் பொழுது பயந்து கொண்டு ..ஆம் நான் அந்த பெட்ரோல் குண்டை பார்த்தேன் என்று கை எழுத்து போட்டு குடுத்து விட்டார் ..ஆனால்  அவரின் மனசு அந்த பொய்யான தகவல்களுக்கு இடம் கொடுக்க வில்லை உடனே அவர் .அங்கே உள்ள ஜமாத்திடம் வந்து நடந்த உண்மையை சொல்லி விட்டார் ..இந்த செய்தியால் எங்கள் ஏரியாவில் ஒரே பரபரப்பு ......

மக்களிடம்...ஒற்றுமைக்ககா பாடு படும் அரசு ..இப்படி மக்களின் நடுவே பிளவை ஏற்படுத்தி .ஒருவருக்கொருவர் சண்டைஏற்படுத்த  பித்தனா  பண்ணி கொண்டு இருக்கிறது....இதனால் எனக்கு அமைதி படை படம் பார்த்த நியாபகம் தான் வருகிறது அந்த படத்தில் ...சத்யராஜ் மக்களின் ஓட்டுக்காக ..கீழ் சாதிக்கும் மேல் சாதிக்கும் சண்டையை ஏற்படுத்தி விட்டு ..அதை சிரித்த படி வேடிக்கை பார்ப்பார் ..சத்யராஜ்... பின்பு எல்லோரும் அடித்து சாகும் பொழுது ..சமாதானம் பேசுவது போல் ..வந்து தடுத்து நிறுத்துவார் .. ..."
 


.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...