ஞாயிறு, 31 ஜூலை, 2011


தமிழக அரசை கண்டித்து தி.மு.க ஆர்ப்பாட்டம்
                                            

அ.தி.மு.க அரசின் அடக்குமுறையை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க சார்பில் நாளை அறப்போராட்டம் நடக்கிறது.
வடசென்னையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு தி.மு.க.வினர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தி.மு.க.வினர் மீது பொய் வழக்குகள் போடும் அ.தி.மு.க அரசின் அடக்குமுறையை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 1ம் திகதி அறப்போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க தலைமை அறிவித்தது. போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த வேண்டும் என கோவையில் நடந்த பொதுக்குழுகூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி மாவட்ட தலைநகரங்களில் நாளை போராட்டம் நடத்தப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளை தி.மு.க.வினர் செய்து வருகின்றனர். சென்னையில் 2 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. வடசென்னை மாவட்டம் சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடக்கும் போராட்டத்துக்கு தி.மு.க பொருளாளரும் முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார்.
இதில் மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், முன்னாள் எம்.எல்.ஏ சேகர்பாபு மற்றும் நிர்வாகிகள் உள்பட ஏராளமான தொண்டர்கள் பங்கேற்கின்றனர். தென்சென்னை மாவட்ட தி.மு.க சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் மேயர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
திருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் மாவட்ட பொறுப்பாளர் எஸ்.சுதர்சனம் தலைமையிலும் காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் அருகில் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதேபோல மற்ற மாவட்டங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கின்றனர். தி.மு.க போராட்டம் நடக்கும் இடங்களில் பொலிஸ் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

போலி விசா மோசடி: இந்திய மாணவர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

விசா தரகர்களின் மோசடி வளையத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா வரும் இந்திய மாணவர்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை செய்துள்ளது.
விதிமுறைகளை மீறி அதிக அளவில் மாணவர்களை சேர்த்த மோசடியில் அமெரிக்காவிலுள்ள நார்தர்ன் வெர்ஜீனியா பல்கலைகழகம் சிக்கியுள்ளது. இங்கு விதிமுறைகளை மீறி மாணவர்கள் சேர்க்கப்படிருந்ததை அந்நாட்டு புலனாய்வுத் துறை கண்டுபிடித்துள்ளது.
மேலும், அந்த பல்கலைகழகத்தில் அதிரடி சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம், அங்கு பயிலும் இந்திய மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், அந்த பல்கலைகழகத்தில் பயிலும் இந்திய மாணவர்கள் வேறு பல்கலைகழகத்தில் சேர்ந்து கொள்ள அனுமதி அளிப்பதாக அமெரிக்க அரசு உறுதி கூறியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா வந்து படிக்க திட்டமிட்டுள்ள இந்திய மாணவர்கள் விசா தரகர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அந்நாட்டு எச்சரித்துள்ளது. இதுபோன்ற, மோசடி வளையத்திற்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அரசின் செய்திதொடர்பாளர் மார்க் டோனர் கூறியதாவது, மோசடி விசா சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். இதுதொடர்பாக, இந்திய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வருகிறோம். டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகம் இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் இதுகுறித்து விரிவாக விளக்கியுள்ளது.
விசாரணை நடந்து வரும் நிலையில் இதுகுறித்து மேற்கொண்டு எதுவும் கூற இயலாது. மோசடி விசா மற்றும் போலி ஆவணங்களை விற்கும் தரகர்களிடம் இந்திய மாணவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அமெரிக்கா வர திட்டமிட்டுள்ள இந்திய மாணவர்கள் மோசடி விசா வளையத்திற்குள் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தார்.

ஜொள்ளிந்தியா[ஜொள்+இந்தியா]


ஹீனா ரப்பானி கார் - எஸ்.எம்.கிருஷ்ணா
எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் ஹீனா
விவர்மாவின் அந்தக்கால அல்ட்ரா மாடர்ன் பட்டுடை உடுத்திய காளிதேவி போன்ற ஷேப்பில் இருக்கும் பாரதமாதாவை பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளின் வீடுகளுக்குச் சென்றால் தவறாமல் தரிசிக்கலாம். கோவில் சிலைகளில் அம்மணத்தை ஆடையாகக் கொண்டு ஆடிய பழங்குடியான காளி, பாரதமாதாவான கதை தனிக்கதை! ஆனால் அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதமாதாவை, பர்தா போட்டு வந்த ஒரு பாகிஸ்தான் தேவதை வென்றுவிட்டாள்! பாரத் மாதா கி நகி! பாக் அழகி கி ஜெய்!
34 வயதானா ஹீனா ரப்பானி கார் எனும் பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவு அமைச்சர், டெல்லி விமானப்படை தளத்தில் (சரி, இந்திய விமானப்படைத் தளத்தில் பாக் விமானம் இறங்கினால் எல்லா இரகசியங்களையும் செல்போனில் சுட்டுவிடுவார்களே என்று யாரும் ஏன் கேட்கவில்லை) இறங்கி வந்து ஒரு பேஷன் ஷோ மங்கை போல கைப்பையை தூக்கிக் கொண்டு நடந்து வந்தாரா…… அவ்வளவுதான் முழு இந்தியாவும் அதன் மனசாட்சியுமான இந்திய ஊடகங்களும் அவுட்! மூன்றாவது அம்பையர், டி.ஆர்.எஸ் இதிலெல்லாம் சோசோதித்தறிய தேவையில்லாத கிளீன் போல்டு! தேசபக்தியை வீழ்த்திக் காட்டிய அழகு!
தமிழ்ப் பதிவுலகம் நன்கறிந்த ஜொள்ளர்களெல்லாம் சினிமா நடிகைகளை ஜொள்ளுவதையெல்லாம் கிண்டலடித்து வந்த ”ஹை கிளாஸ்” அம்பிகளெல்லாம் ஹீனா ஜன்னி பிடித்து சமூக வலைத்தளங்களை பிராண்டுகிறார்கள். டிவிட்டரில் இரண்டு நாட்களாக ஹீனாதான் பேரரசியாக கோலேச்சுகிறார். கசாப்பை தூக்கில் போடு, அப்சல் குருவை சுட்டுப்போடு என்று டெம்பிளேட் தேசபக்தி முழக்கங்களை காப்பி அடித்துப் போடும் இந்திய டவிட்டர்கள் இன்று ஹீனாவை மாய்ந்து மாய்ந்து உருகுகிறார்கள். “இந்தியா – பாக் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தையில் எந்தப் பிரச்சினையையும் பேசித் தீர்க்க முடியாது, ஏனெனில் ஹீனா என்றொரு அழகான பிரச்சினை இருக்கும் போது வேறு எதைப்பற்றி பேசுவது?” இது ஒரு டிவிட். எனில் மற்ற ஜொள் (டிவிட்டு) களைப் பற்றி விளக்கத் தேவையில்லை.
  • “பாகிஸ்தான் தனது அழகான முகத்தை இறக்கியிருக்கிறது” – இது டைம்ஸ் ஆப் இந்தியா.
  • “மாடல் நடிகையைப் போன்ற அமைச்சரால் இந்தியாவே வேர்த்துக் கிடக்கிறது” – இது இந்தி நாளிதழான நவபாரத் டைம்ஸ்.
  • “அனைவரது விழிகளும் அந்த கவர்ச்சியான பாக் அமைச்சர் மேல், அழகும்-சிந்தனையும் கச்சிதமாக கலந்தவள்தான் அந்தப் பெண் என்பது மட்டும் நிச்சயம்” இது ரீடிப் இணையத்தளம்.
  • “காலநிலைக்கு பொருத்தமான நீலநிற உடையில் அந்த 34 வயது அமைச்சர் டெல்லி விமான நிலையத்தை அடைந்தபோதே, ஆடை அலங்காரப் பிரிவில் முழு மதிப்பெண்களையும் பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்” – இது மெயில் டுடே.
  • புதன்கிழமை காலையில் டெல்லியில் பெய்த மழையைப் போன்று ஹீனாவுக்கான கவரேஜூம் இருந்தது என்று கூறுகிறார், பத்திரிகையாளரும் எழுத்தாளருமான சீமா கோஸ்வாமி.
  • “ரசிக்கத்தக்க உபகரணங்கள், ரோபெர்ட்டோ கவாலி சன்கிளாஸ், பெரிய எர்மெஸ் பிர்கின் பை, பாரம்பரிய முத்து மாலை – எல்லாம் சேர்ந்து அவளது கவர்ச்சிக்கு மெருகூட்டுகிறது” – இது ஒரு பத்திரிகை செய்தி.
என்னதான் கசாபின் மண்ணிலிருந்து வந்தவரென்றாலும் இந்த அழகு தேவதையை ஆராதிக்கவில்லை என்றால் யூத் உலகோடு இடைவெளி வந்துவிடும் என்பதாலோ என்னமோ பா.ஜ.க தலைவர் அத்வானியும் அழகான ஒரு பொக்கேயை கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டார். இந்தியா – பாக் நாடுகளின் சண்டை வரலாற்றை கிண்டல் செய்யும் வண்ணம், ” இந்தியாவில் இறங்கிய பாக் குண்டு” என்று குறிப்பிட்டது, மும்பையின் மிரர் பத்திரிகை.
79 வயது வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, தனது விலையுயர்ந்த டிசைனர் கோட்டு சூட்டுடன் பெருமையாக உலா வந்தாலும், ஹீனாவுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கப்பட்ட போதெல்லாம் அவரால் மற்றவர் கவனத்தை கவர்ந்திழுக்க முடியவில்லையாம்.
இப்படியாக ஹீனா ரப்பானி காரின் சௌந்தரிய புராண விளக்கத்தை இந்திய ஊடகங்கள் விதவிதமாக வருணித்து அதையும் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருக்கின்றன. பாக்கிற்கு எதிரான இந்திய வெத்துவேட்டு தேசபக்திக் கூச்சலை ஒரு இயக்கமாக பரப்புகின்ற டைம்ஸ் ஆப் இந்தியாதான் இந்த அலங்கார வருணணைகளை தொகுத்து அளித்திருக்கிறது! தேசபக்தி நாணயத்தின் மறுபக்கம் அள்ள அள்ளக் குறையாத ஜொள்ளு! இது நகை முரணல்ல, இயல்பான உள்ளத்தைக் காட்டும் கண்ணாடி!
இரு குழந்தைகளுக்குத் தாயான ஹீனா ஒரு உலக அழகி போல ரசிக்கப்படுவார் என்று தெரிந்துதான் பாக் அரசு அனுப்பியிருக்கிறதோ என்னமோ! பெனாசீர் பூட்டோ போல பாக்கின் பஞ்சாப் மாநிலத்தின் செல்வாக்கு மிக்க நிலவுடமை குடும்பத்தைச் சேர்ந்தவர் ஹீனா. இந்தியாவைப் போல பாக்கிலும் இத்தகைய பாரம்பரிய பணக்காரக் குடும்பங்களே அரசியலிலும், தொழிற்துறையிலும் கோலேச்சுகின்றன.
அந்த வகையில் ஹீனாவின் வருகை ஒன்றும் அதிசயமல்ல. ஆனால் அவர் அமைச்சராக்கப்பட்ட நேரம்தான் முக்கியமானது. பின்லேடன் மரண நாடகத்திற்குப் பிறகு பொதுவெளியில் அமெரிக்க – பாக் உறவு எள்ளும் கொள்ளும் வெடிப்பதான பாவனையில் இருக்கும்போது உலக மகா ஜொள்ளர்களான அமெரிக்கர்களை குஷப்படுத்துவதற்கும், அப்படியே உள்ளூர் ஜொள்ளர்களான இந்தியர்களின் பேச்சை மாற்றுவதற்கும் கூட ஹீனா பயன்படவேண்டுமென்று பாக் ஆளும் வர்க்கம் நினைத்திருக்கலாம்.
இருந்தாலும் ஒரு உண்மையை ஒத்துக் கொள்ளவேண்டும். பாக்கிலிருந்து யார் வந்தாலும் அது முஷராப்போ, ஜர்தாரியோ, நவாஸ் ஷெரிப் என்று யாராக இருந்தாலும் அவர்களது ஆளுமை, பேச்சு, வாதம் எல்லாம் இந்திய அம்பிகளை விட மேம்பட்டே இருக்கிறது. டைம்ஸ் நௌவின் அம்பி ஆர்னாப் கோஸ்வாமி உள்ளூர் அரசியல்வாதிகளையெல்லாம் டி.டி.எஸ் அலறில் கடித்துக் குதறுவார். அப்படிப்பட்ட அம்பியே பின்லேடன் மரணம் தொடர்பாக முஷராப்புடன் பேசும் போது அடிபட்ட பாம்பு போல அடங்கிக் கிடந்தார். எதிர்த்துக் கேட்க ஆளில்லாத மேடையில் மட்டும்தான் இந்திய திறமை பளிச்சிடும் என்பதை ஜனநாயகம் வளராத பாக்கின் தலைவர்கள் நிரூபித்திருக்கிறார்கள்.
சரி பாக், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அப்படி என்ன பேசி சாதிக்கப் போகிறார்கள்? வந்த செய்திகளைப் பார்க்கும் போது “இதுவரை பேச்சு வார்த்தை திருப்தி அளிக்கிறது, இனி தொடர்ந்து பேசுவதற்கு ஊக்கமூட்டுகிறது” இதுதான் அந்த சாதனையின் சிகரம். பேசுனோம், பேசிகிட்டு இருக்கோம், பேசுவோம் என்பதுதான் சாதனை என்றால் அர்த்தமில்லாமல் வளவளவென்று பேசும் எப்.எம் ரேடியோ ஜாக்கிகளையே அமைச்சராக்கலாமே?
தீவிரவாதத்தை எதிர்க்க இருநாடுகளும் இணைந்து பணிபுரிய பேசுவார்களாம். பணிபுரிவது இருக்கட்டும், மும்பை 26/11 தாக்குதலுக்காக பாக்கில் உள்ள குற்றவாளிகளை ஒப்படைக்க வேண்டுமென்று இந்தியா கேட்டால், சம்ஜூத்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பிற்கான இந்திய குற்றவாளிகளை பாக் கேட்கிறது. மும்பையில் கொல்லப்ப்பட்டது இந்தியக் குடிமகன்களென்றால், சம்ஜூத்தாவில் கொல்லப்பட்டது பாக் குடிமகன்கள். அடுத்து காஷமீர் பிரச்சினை குறித்து இந்தியா ஏதாவது வாயைத் திறந்தால் மாட்டிக் கொள்ளும். முழு காஷ்மீரத்து மக்களும் ஏகோபித்த நிலையில் இந்திய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் போது அங்கும் பாக்கின் கையே ஓங்கி நிற்கிறது. தற்போது காஷ்மீர் மக்கள் இயக்க பிரதிநிதிகளை ஹீனா சந்தித்ததை இந்திய அரசு கண்டித்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. காஷ்மீர் மக்கள் பிரதிநிதிகளை பிரிவினைவாதிகள் என்று சொல்லும் இந்திய ஊடகங்கள் இதனாலொன்றும் ஹீனாவை அவ்வளவாக கண்டித்து விடவில்லை. மேலும் இந்தியா வந்து காஷ்மீர் போராட்டக்காரர்களை சந்திப்பதற்கு ஒரு தில் வேண்டுமே?
ஆக இறுதியில் என்னதான் பேசினார்கள்? இரண்டு காஷ்மீர்களிலிருந்தும் மக்கள் வணிக, பக்தி சுற்றுலாவிற்கு வந்து போகலாம், பஸ் விடலாம், வர்த்தகத்தை அதிகப்படுத்தலாம் என்பதைத்தான் பேசியிருக்கிறார்கள். இவையெல்லாம் நல்ல விடயங்கள்தான். ஆனால் மக்கள் வந்து போகும் இந்த விசயத்தைக் கூட செய்ய முடியாதபடி இந்திய தேசபக்தி வெறி அவ்வப்போது சாமியாடுகிறதே? அதைத் தீர்ப்பது எப்படி? பாக்கும் கூட காஷ்மீரின் தோழன் என்று தனது உள்நாட்டு பிரச்சினைகளை திசை திருப்புவதற்கு பயன்படுத்துகிறது, அதை யார் கேட்பது? மதச்சார்பற்ற முறையில் போராடிய காஷ்மீர் மக்களை மதம் சார்ந்து திணித்த பாவத்தை இருநாடுகளும் குறைவில்லாமல் செய்திருக்கின்றன.
ஒன்று மட்டும் உண்மை. இந்திய பாக் கவுரவப் பிரச்சினைகள் இருநாட்டு ஆளும் வர்க்கங்களுக்கும் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். அதை வைத்து மக்களை திசைதிருப்புவதற்கு அவர்களுக்கு கிடைத்திருக்கும் அழியாத சாக்கு. அதனால்தான் நேற்று வரை பாக் காஷ்மீரில் குண்டு போட்டு அழிக்க வேண்டும் என்று சாமியாடிய இந்திய ஊடகங்கள் இன்று பாக்கிலிருந்து வந்திருக்கும் தேவதையை ஆராதிக்கின்றன. அந்த வகையில் இந்த பேச்சு வார்த்தையில் முழு வெற்றி அடைந்திருப்பது பாகிஸ்தான்தான்.
இந்திர பதவிக்கு ஆப்பு வைத்த மாமுனிவர்களின் தவத்தை கலைத்த ரம்பா, ஊர்வசி, மேனகை என உலகின் முதல் ஜெள்ளாயுத்தை தயாரித்த இந்த புண்ணிய பூமிக்கு இது  வெட்கக்கேடல்லவா? அவர்களில் ஒருவர் யாராவது வெளியுறவு அமைச்சராக இருந்தால் இந்தியாவும் பேச்சு வார்த்தையில் வெற்றி வாகை சூடலாமே? அப்படி ஒன்றும்  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பணி என்பது கஷ்டமானதில்லையே? ஐ.நா சபையில் பக்கத்து சீட்டில் இருந்து வேறு ஒரு நாட்டு பிரதிநிதியின் உரையை எடுத்து படித்தவர்தானே நம்ம எஸ்.எம். கிருஷ்ணா? இந்த ஈயடிச்சான் காப்பி வேலையை பாலிவுட், கோலிவுட், டோலிவுட் முதலிய இந்திய வுட்களின் நடிகைகள் யாராவது செய்ய முடியாதா என்ன?
கமான் இந்தியா, கமான்… ஒரு அழகு தேவதையை தேர்ந்தெடு, உலக அழகி போட்டிகளிலெல்லாம் வென்று காட்டிய உன் நாட்டில் அழகிகளுக்கா பஞ்சம்? அழகியை அமைச்சராக்கு, பாக்கை வென்று காட்டு! ஜொள் ஹிந்த்.

திங்கள், 20 ஜூன், 2011

ஆன்மிக விபசாரிகள்,,,


தொழிலதிபர்களே துறவிகளாக, அடிமைத்தனமே ஆன்மீகமாக!

தொழிலதிபர்களே துறவிகளாக, அடிமைத்தனமே ஆன்மீகமாக!

இங்கிலாந்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்ற வெள்ளையர் இலண்டனில் துறைமுக நடவடிக்கைகளை ஒழுங்கு செய்து தரும் ஒரு தரகு நிறுவனத்தை நடத்தி வந்தார். ஓரிரு வருடங்களாக தொழிலில் நட்டத்தைச் சந்தித்து வந்த வில்லியம்ஸ் அதிலிருந்து மீள தனது நண்பரொருவரின் ஆலோசனைப்படி கேரளாவிலிருக்கும் ஒரு சாமியாரைச் சந்திக்க முடிவு செய்கிறார். ஆலோசனை தந்தவர் இலண்டனில் வாழும் ஒரு என்.ஆர்.ஐ மலையாளி. கேரளாவின் கோட்டக்கல்லில் சிவா சிரிங்க ஆஸ்ரமத்தை நடத்தி வந்த ஞானசைதன்யா என்ற சாமியாரை வில்லியம்ஸ் குடும்பத்துடன் சந்திக்கிறார்.
வில்லியம்ஸின் தொழில் சிக்கலுக்கு ஞானசைதன்யாவின் ஆன்மீகத் தீர்வு என்ன? வில்லியம்ஸின் மகள் அமரந்தா முற்பிறப்பில் சைதன்யாவின் மனைவியாக இருந்தவளாம். இப்பிறப்பிலும் அந்த உறவு தொடர்ந்தால்தான் வில்லியம்ஸின் பிரச்சினை தீருமாம். இதை அந்த வெள்ளையர் ஏற்றுக்கொண்டு தனது மகளை சாமியாருக்கு மணமுடிக்கிறார். சீர் வரிசையாக பதினைந்து இலட்சம் பணமும், டாடா சஃபாரி காரும் கொடுக்கப்படுகிறது. நாலைந்து மாதம் குடும்பம் நடத்திய பிறகு சாமியாரின் சித்திரவதை தாங்காமல் அந்த வெள்ளைக்காரப் பெண்மணி ஆசிரமத்திலிருந்து தப்பித்து போலீசாரிடம் புகார் கொடுக்க தற்போது சாமியார் சிறையில்!
சாமியாரின் பூர்வாசிரமப் பெருமைகள் என்ன? சுதாகரன் என்ற பெயர் கொண்ட அந்தச் சாமியார் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று மூவரைக் கொன்ற ஒரு கொலை வழக்கில் பதினான்காண்டுகள் சிறையிலிருந்து பின்னர் ஆசிரமம் ஆரம்பித்து ஞானசைதன்யாவாக அவதாரம் எடுத்தவர்.
வில்லியம்ஸின் கதையை நம்ப முடிகிறதா? சில ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நாகரீக உலகில் வாழும் ஒரு பணக்கார வெள்ளையரது குடும்பம் ஒரு பக்கா கிரிமினலிடம் ஏமாந்ததை என்னவென்று சொல்ல? இதை வெறும் முட்டாள்தனம் என்று மட்டும் புரிந்து கொள்ளக்கூடாது.
மாறிவரும் வாழ்க்கைப் பிரச்சினைகளுடன், வாழ்க்கை குறித்து மக்கள் கொண்டிருக்கும் மாறாத மயக்கத்தை இணைத்து, “ஆன்மீகத்தை அண்டினால் உடனடிப் பயன் கிடைக்கும்’ என்று நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நம்பிக்கையூட்டும்படி மக்களிடம் உபதேசிப்பதுதான் காலத்திற்கேற்பப் புதுப்பிக்கப்படும் மதத்தின் இரகசியம். மதத்தைச் சுரண்டல் லாட்டரி போல மாற்றியிருப்பதுதான் இன்றைய நவீன சாமியார்களின் மிக முக்கியமான சாதனை.

கோடிகளில் புரளும் ஆன்மீக வர்த்தகம்

பங்காரு அடிகளார்
பங்காரு அடிகளார்
இந்தியாவில் உலகமயமாக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இருபது ஆண்டுகளில் தரகு முதலாளிகள் மட்டும் செழிக்கவில்லை, பல பணக்காரச் சாமியார்களும் தலையெடுத்திருக்கிறார்கள். இவர்களின் வர்த்தக மதிப்பு நீங்கள் எதிர்பாராத அளவிலானது.
பெங்களூருக்கு அருகில் ஒரு மலையை அரசிடமிருந்து 99 வருட குத்தகைக்கு எடுத்து “வாழும் கலை’யைக் கட்டணம் வாங்கிக்கொண்டு கற்றுக்கொடுக்கும் ஸ்ரீஸ்ரீ இரவிசங்கரின் வருடாந்திர வர்த்தக மதிப்பு 400 கோடி. டெல்லியில் ஆசிரமம் வைத்து நடத்தும் ஆஸ்ரம் பாபுவின் ஆண்டு வர்த்தகம் 350 கோடி. நாடு முழுவதும் தியான நிலையங்களை நடத்திவரும் சுதன்ஷன் மகராஜூக்கு 300 கோடி.
பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் முதலானவற்றை வர்த்தக நோக்கில் நடத்திவரும் மாதா அமிர்தானந்த மாயியின் ஓராண்டு வரவு செலவு 400 கோடி. வட இந்தியாவில் யோக சிகிச்சை மற்றும் மருந்துகளை விற்பனை செய்யும் பாபா ராம்தேவின் வணிகம் 400 கோடி. பணக்காரர்களுக்காக மட்டும் சில ஆயிரங்களைக் கட்டணமாக வாங்கிக் கொண்டு அருளுரை கூட்டங்கள் நடத்தும் முராரி பாபுவுக்கு 150 கோடி. இவையெல்லாம் ஓராண்டுக்குரிய வரவு செலவு மட்டும்தான். இவர்களின் சொத்து மதிப்பு இதனினும் பல மடங்கு அதிகம். எடுத்துக்காட்டாக அமிர்தானந்த மாயியின் சொத்து மதிப்பு மட்டும் 1200 கோடியைத் தாண்டுகிறது.
பங்காரு சாமியார் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஓட்டல்கள், பல பினாமி தொழில்கள் போக, மேல்மருவத்தூர் எனும் நகரையே தனக்காக உருவாக்கிக் கொண்டவர். ஜெயந்திரனின் சங்கர மடம் மற்றும் சாயிபாபா ஆசிரமங்களின் மதிப்போ சில ஆயிரம் கோடிகளைத் தாண்டும் என்கிறார்கள். மகரிஷி மகேஷ் யோகி ஆழ்நிலை தியான மையங்கள், ரஜினீஷின் ஆசிரமம், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கிளைகள், வேதாத்திரி மகரிஷியின் குண்டலினி மையங்கள், ஜக்கி வாசுதேவ், பிரார்த்தனையிலேயே “குணமாக்கி’ நற்செய்திக் கூட்டங்கள் நடத்தும் டி.ஜி.எஸ் தினகரன் முதலானோரும் மேற்கண்ட கோடீசுவர சாமியார்களின் பட்டியலில் உள்ளவர்கள்தான்.
அமெரிக்காவில் வெள்ளையர்க ளுக்கு ஆழ்நிலை தியானமும், யோகாசனமும் கற்றுத்தரும் தீபக் தாக்கூர், இந்தியாவின் ஆன்மீகப் “பெருமையை’ மேற்குலகில் பல மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்து ஒரே நேரத்தில் ஆன்மீகவாதியாகவும், இளம் தலைமுறையின் தொழில் முனைவராகவும் விளங்குகிறார்.
ஹரித்வார் நகரில் பாபா ராம்தேவின் யோக மையத்தில் உறுப்பினராக்குவதற்கு கட்டணங்களை எழுதி மிகப்பெரிய விளம்பரப் பலகையை வைத்திருக்கிறார்கள். சாதாரண உறுப்பினர் கட்டணம் ரூபாய் 11,000, மதிப்பிற்குரிய உறுப்பினர் கட்டணம் ரூ. 21,000, சிறப்பு உறுப்பினர் கட்டணம் ரூ. 51,000, வாழ்நாள் உறுப்பினர் கட்டணம் ரூ. 1,00,000, முன்பதிவு உறுப்பினர் கட்டணம் 2.51 இலட்சம், நிறுவன உறுப்பினர் கட்டணம் 5 இலட்சம் என்று வெளிப்படையாக ஒரு நகைக்கடை விளம்பரம் போல் கூவி அழைக்கிறார்கள்.
“”எல்லாவற்றையும் இலவசமாக செய்வோமென்று நாங்கள் வாக்குறுதி ஏதும் தரவில்லை. அது சாத்தியமில்லை. வணிகரீதியில்தான் நாங்கள் இயங்க முடியும்” என்று ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் ஒத்துக்கொள்கிறார் பாபா ராம்தேவ். “”நாங்கள் ஒரு பன்னாட்டு நிறுவனம் போலத் தான் இயங்கமுடியும், எங்களை நாடி வரும் பக்தர்களுக்குரிய தரமான வசதிகளை நாங்கள் செய்ய வேண்டியிருக்கிறது” என்று வர்த்தகரீதியாகச் செயல்படுவதை நியாயப்படுத்துகிறார் ரவி சங்கர்.

வாழ்வின் நெருக்கடி சாமியார்களின் வளர்ச்சிப்படி

ஜக்கி வாசுதேவ்
ஜக்கி வாசுதேவ்
ஆன்மீக குருஜீக்களின் ஆசிரமங்கள் பன்னாட்டு நிறுவனங்களைப் போல பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பது எப்படிச் சாத்தியமாயிற்று? பெரும்பான்மை உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மெல்லவும், விரைவாகவும், இடத்திற்கேற்ப அரித்தும் அழித்தும் வரும் புதிய பொருளாதாரக் கொள்கை நடுத்தர மக்களுக்கு சில வழிகளில் தற்காலிகமாகவேனும் முன்னேற்றத்தைக் காட்டி வருகிறது. ஆயினும் இது ஒரு பாதிதான். மறுபாதியில் அந்த முன்னேற்றம் வாழ்க்கையில் புதுப்புதுச் சிக்கல்களை அன்றாடம் உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.
செலவு பிடிக்கும் உயர் கல்வி, மருத்துவ மற்றும் காப்பீட்டுச் செலவுகள், உயர்ந்து வரும் வீட்டுக்கடன் வட்டி, வாழ்க்கைத்தரத்திற்காக வாங்க வேண்டிய வாகனக் கடன்கள் எல்லாம் சேர்ந்து அச்சுறுத்துகின்றன. ஒரு நாளில் நடைபெறும் பங்குச்சந்தையின் குறியீட்டெண் வீழ்ச்சியோ, ரியல் எஸ்டேட்டின் மதிப்புச் சரிவோ இலட்சக் கணக்கான நடுத்தர வர்க்கத்தினரின் சில ஆண்டு நிம்மதியைக் குலைக்க போதுமானது.
ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஏ.எஸ், மருத்துவபொறியியல் படிப்புகள் அரசு பதவிகள், வங்கி வேலைகள், தனியார் நிறுவன உயர் பதவிகள், அதி வருவாய் கிடைக்கும் கணினித் துறையின் முக்கியப் பதவிகள் முதலானவை எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லை. ஆயிரக்கணக்கான துணை இயக்குநர்கள் துணை நடிகர்கள் மத்தியில் ஒரு சிலருக்குத்தான் வெள்ளித்திரையின் கடாட்சம் கிடைக்கும்.
எனினும் அனைவருக்குள்ளும் “வாழ்வின் உச்சத்தைத் தொட்டுவிடமுடியும்’ என்ற மாயை நீக்கமற நிரப்பப்பட்டிருக்கிறது. இந்த இலக்கு உருவாக்கும் ஆசை, ஆசை ஏற்படுத்தும் போட்டி, போட்டிக்குப் பின்னான தோல்வி… இறுதியில் சித்தத்தின் சமநிலை சீர் குலைகிறது. கிடைக்காத வாழ்க்கை மாயமானாக ஓடுகிறது. கைக்கெட்டிய வாழ்க்கையோ கறிக்கடையைச் சுற்றி வரும் நாய்போல ஏக்கத்தில் உழல்கிறது.
சமூக இயக்கத்திற்கான உற்சாகத்தைத் தரவேண்டிய ஓய்வு, பரபரப்பாய் பசி அடக்கி பிணியெழுப்பும் நொறுக்கு தீனியாகியிருக்கிறது. வாழ்வின் முன்னேற்றத்தை, பண்பாட்டை கனவு கண்டு, நனவில் படைக்கத் தூண்டவேண்டிய பொழுதுபோக்கு என்பது வக்கிரத்தின் வடிகாலாகப் பரிணமித்திருக்கிறது. மனிதனின் உழைப்பு நேரத்தை மிச்சப்படுத்தி ஓய்வு தந்து அவனது ஆளுமை பரிணமிக்க உதவ வேண்டிய நவீனத் தொழில் நுட்பமோ எதிர்த்திசையில் பயன்படுகிறது. உழைப்பின் சுமையை சகிக்கவொண்ணாதவாறு கூட்டுகிறது.
நகர வாழ்க்கை, பரபரப்பு, வேகம், போட்டி, பொறாமை, சதி, வஞ்சகம்,வெறி, வக்கிரம், இயலாமை, பதட்டம், மன அழுத்தம், மனச்சிதைவு, இரத்த அழுத்தம், முதுமையில் வரவேண்டிய சர்க்கரை நோயும் மாரடைப்பும் இளமையையே காவு கேட்பது…… என முடிவேயில்லாமல் அலைக்கழிக்கிறது வாழ்க்கை என்ற இந்த நச்சுச் சுழல். வாழ்வின் பிரச்சினை சிந்தனையில் சீர் குலைந்து, உடல் நலிவாய் வெளிப்பட்டு, “என்னை மீட்பார் யாருமில்லையா’ என்று புலம்புகிறது, குமுறுகிறது, அழுகிறது, வெடிக்கிறது, சில வேளை தற்கொலையிலோ, வேறு வகை வன்முறைகளிலோ முடிகிறது.
இருப்பினும் ஆகப் பெரும்பான்மையினர் இந்த விஷச்சூழலிலிருந்து சிறிதாகவோ, பெரிதாகவோ பணம் செலவழித்து கடைத்தேறிவிட முடியும் என்ற நம்பிக்கையை நவீன ஆன்மீக ஆளும் வர்க்கம் பரப்பி வருகிறது. நடப்பில் சாதாரணமாகவும், கனவில் அசாதாரணமாகவும் வாழும் நடுத்தர வர்க்கம் இந்த ஆன்மீகச் சந்தையின் வலையில் சிக்கிக் கொள்வதற்குக் காத்திருக்கிறது. தங்களது தனித்துவத்தை மார்க்கெட் செய்துகொள்ளும் திறமை மட்டுமே ஆன்மீகவாதிகளுக்குத் தேவைப்படுகிறது. அவர்கள் தனிநபர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக் காட்ட வேண்டியதில்லை.

சாமியார்களின் தனித்துவம் சோப்புக்கட்டிகள் பலவிதம்!

பாபா ராம்தேவ்
பாபா ராம்தேவ்
மஹரிஷி மகேஷ் யோகியின் சீடராக இருந்த ரவிசங்கர் பிரிந்து வந்து, “வாழும் கலை’ என்ற கவர்ச்சிகரமான “கான்செப்ட்’ஐ உருவாக்கி ஸ்ரீஸ்ரீ ரவி சங்கராக தனது பேரரசைப் பரவச்செய்தார். தியானம், யோகம், அறிவுத் திறன் வகுப்புக்கள் முதலானவற்றைக் கலந்து ஒரு புதிய கட்டமைப்பில் பன்னாட்டு நிறுவனங்கள் விளம்பரப்படுத்தும் புதிய சோப்புக்கட்டி போல அறிமுகப்படுத்தி வெற்றி பெற்றார். இவரது குருவான மரித்துப் போன மகேஷ் யோகி மேலை நாடுகளில் மணிக்கு சில ஆயிரங்கள் டாலர் கட்டணத்தில் ஆழ்நிலை தியானத்தைக் கற்றுக்கொடுத்து பிரபலமானார். இதே சரக்கை ஹாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவன நிர்வாகிகளுக்கு ஏற்ப விற்று, அவர்கள் மூலம் புகழ் பெற்றார் தீபக் தாக்கூர்.
ஒத்த பெயர் கொண்ட ஷிர்டி சாயி பாபாவின் மகிமையைப் பயன்படுத்திக்கொண்டு பஜனைகள் மூலமும், பல நூறு கோடி நன்கொடையின் சிறு பகுதியை தர்ம காரியங்கள் செய்தும், முக்கியமாக மாஜிக் வழியாக லிங்கங்கள், மோதிரங்கள், நகைகளை வினியோகித்தும் பெயர் பெற்றார் சாயி பாபா. இவரது சிறிய நகல்தான் தற்போது கடலூர் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் பிரேமானந்தா.
சாயி பாபாவின் சத்ய நகர் ஆசிரமத்தில் சில ஆண்டுகள் தங்கி பின்பு கேரளாவில் தனி ஆசிரம் ஆரம்பித்தவர் அமிர்தானந்த மாயி. மற்ற குருமார்களைப் போல வாய் சாமர்த்தியம் இல்லாத மாயியை அம்மன் போல அலங்காரம் செய்து, பக்தர்களைக் கட்டிப் பிடிக்கும் டெக்னிக்கைப் பயன்படுத்திப் பிரபலமடைய வைத்தார்கள். கடந்த 30 ஆண்டுகளில் மாயி அரவணைப்பால் “ஆன்மீக ரீசார்ஜ்’ செய்யப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியாம்.
வட இந்தியாவில் யோகாசனத்தையும், ஆயுர்வேத மருந்துகளையும் வைத்து எய்ட்ஸைக் கூட குணப்படுத்த முடியும் என்று பிரபலமானவர் பாபா ராம்தேவ். இதை அறிவியலும், மருத்துவர்களும் உண்மையல்ல என்று நிராகரித்து விட்டாலும் மக்களை புற்றீசல் போல இழுப்பதில் ராம்தேவ் தோல்வியடையவில்லை. ஆஸ்ரம் பாபு, சுதன்ஜி மகாராஜ், மற்றும் முராரி பாபு முதலானோர் டெல்லியின் பண்ணை வீடுகளில் பணக்காரர்களுக்கு மட்டும் தலைக்கு ரூபாய் 5,000 முதல் 10,000 ரூபாய் வரை கட்டணம் வாங்கிக்கொண்டு ஆன்மீக வகுப்பு நடத்துகிறார்கள். முடிந்தபின், இதே பண்ணை வீடுகளில் மேட்டுக்குடி குலக்கொழுந்துகள் கேளிக்கைக் கூத்துக்களை நடத்துவது வழக்கம்.
90ஆம் ஆண்டு இறந்து போன ரஜனீஷ் சாமியாரின் நிறுவனம் முன்பு போல் வீச்சாக இயங்கவில்லை என்றாலும் செக்ஸ் குரு என்று செல்லமாக அழைக்கப்பட்ட ரஜனீஷீன் புத்தகங்கள், ஒலிஒளிக் குறுந்தகடுகள் பல பத்து மொழிகளில் இன்றும் கிராக்கியுடன் விற்கப்படுகின்றன. செக்ஸ், நிர்வாணம், தியானம், யோகம் முதலியவற்றைக் கலந்து பிரபலமான ரஜனீஷின் பக்தர்களில் வெளிநாட்டவர் அதிகம். வாழ்வின் வற்றாத இன்பங்களைத் தேடி அலைந்த மேலைநாட்டவருக்கு இவர் வடிகாலாகத் திகழ்ந்தார்.
நடனம், பஜனை, கிருஷ்ண வழிபாடு மற்றும் ஆச்சாரமான பார்ப்பன பண்பாட்டை முன்னிறுத்திய ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம் 80,90களில் உச்சத்தை அடைந்தது. இவர்களுக்கும் உலகெங்கும் கிளைகள் உண்டு. இயற்கை வாழ்வு, யோகம், தியானம் முதலானவற்றை முன்னிறுத்தி ஈஷா யோக மையத்தை நடத்தி புகழ் பெற்றவர் ஜக்கி வாசுதேவ். “வாழ்க வளமுடன்’ என்ற முத்திரையுடன் பிரபலமானவர் வேதாத்ரி மகரிஷி.
மேல் மருவத்தூரின் பங்காரு சாதரணமக்களை ஈர்க்கும் வண்ணம் சிவப்பாடை, பெண்கள் பூசை, ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம், வருடம் முழுக்க சடங்குகள் என்று வளர்ந்திருக்கிறார். மேல் மருவத்தூர் சென்றால் நோய் தீரும், திருமணம் நடக்கும், வியாபாரம் செழிக்கும் என்று பல கதைகளை பக்தர்களே இலவசமாய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
வசதியான தனிநபர்களின் மன அமைதி, மகிழ்ச்சி, கலைத் தவங்கள் என்று பிரபலமானது பாண்டிச்சேரி அரவிந்த் ஆசிரமம். சங்கர மடம் பற்றி அதிகம் விளக்கத் தேவையில்லை. கல்லூரிகள், மருத்துவமனைகள் போக அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம், முதலாளிகள் முதலான மேல்மட்டத்தின் பிரச்சினைகளைத் தேர்ந்த தரகன் போல தீர்த்து வைத்து தனி சாம்ராச்சியத்தையே உருவாக்கியவர் ஜெயந்திரர்.
நற்செய்திக் கூட்டங்களில் “முடவர்கள் நடக்கிறார்கள், குருடர்கள் பார்க்கிறார்கள்’ என்று சாட்சியங்களை சொல்ல வைத்து, பெரும் மக்கள் கூட்டத்தை நம்பவைத்து பெயரெடுத்தவர் டி.ஜி.எஸ் தினகரன். தொலை பேசி எண்ணில் பிரச்சினைகளைச் சொல்லி கட்டணத்தை அனுப்பி வைத்தால் பிரார்த்தனை செய்து தீர்ப்பதற்கென்றே ஒரு பெரும் அலுவலகத்தை நடத்தி வருகிறார். பரிசுத்த ஆவியை எழுப்பி, அதை வைத்து ஒரு பல்கலைக் கழகத்தையும் சேர்த்து எழுப்பியிருக்கிறார்.
இந்தியாவில் பள்ளிக்கூடங்களை விட கோவில்களும் சாமியார்களும் அதிகம். எனவே, பட்டியலை இம்மட்டோடு நிறுத்திக் கொள்வோம். சாமியார்களில் பழைய பாணி சாமியார்களை விட நவீன பாணி சாமியார்களுக்கு மவுசு அதிகம். இருப்பினும் இரண்டு பாணிகளும் சொல்வது ஒரே மாதிரியான விசயங்களைத்தான்.
“”குரங்கு போல தவ்விச் செல்லும் மனதை கட்டுப்படுத்துங்கள், அதற்கு தியானம் செய்யுங்கள், மனதை வழிக்குக் கொண்டு வர உடலைக் கட்டுப்படுத்துங்கள், அதற்கு யோகாசனம் செய்யுங்கள், பேராசைப் படாதீர்கள், கிடைத்ததைக் கொண்டு வாழுங்கள், சைவ உணவு உண்டு, இயற்கையோடு ஒன்றி வாழுங்கள், வருவாயில் சிறு பகுதியையாவது தர்மம் செய்யுங்கள், பொறாமை, அகங்காரம், கோபம் முதலியவற்றை விட்டொழியுங்கள், செய்யும் தொழிலை ஈடுபாட்டுடன் செய்யுங்கள், உலகுடன் அன்பு எளிமை அழகுடன் உறவு கொள்ளுங்கள்”, முதலான பொத்தாம் பொதுவான விசயங்களைத்தான் அனைத்து குருமார்களும் ஓதுகின்றனர். இது போக சாமியார்களின் மகிமைகளை பக்தர்களே கண் காது மூக்கு வைத்து ஊதிப்பெருக்கிப் பிரச்சாரம் செய்வதும் இயல்பாக நடக்கிறது.

ஆன்மீக “அமைதியும்’ அறிவியல் உண்மையும்!

சாமியார் கம்பேனி பிரைவேட் லிமிடெட் !உண்மையில் பக்தர்கள் தங்களது வாழ்க்கைப் பிரச்சினைகளை மேற்கண்ட சாமியார்களின் விதவிதமான முறைகளின் மூலம் தீர்த்துக்கொள்ள முடியுமா? பலராலும் பூடகமாக வியந்தோதப்படும் ஆன்மீகத்தின் பொருள் என்ன? பல்வேறு முறைகளில் பயிற்சி செய்யப்படும் யோகா முறை ஒரு மனிதனுக்கு நிம்மதியைத் தருமா? நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்ட சாமியார்களின் உரைகளில் சீடர்களுக்கு தெளிவு பிறக்க வாய்ப்புள்ளதா?
“மனதைக் கட்டுப்படுத்துதல், கட்டுப்படுத்தினால் இறுதியில் பேரானந்தம்’ என்பது ஆன்மீகம் என்பதற்கு இவர்கள் தரும் இலக்கணம். மனதையே ஆன்மா, ஜீவன், உடலுக்கும் உயிருக்கும் அப்பாற்பட்டது என்றெல்லாம் கற்பித்துக்கொள்கிறார்கள். இத்தகைய அரூபமான விளக்கத்தில் உண்மையோ, பொருளோ இல்லை. அறிவியல்பூர்வமாக மனது என்பது மூளையின் செயல்பாடுகளில் ஒன்று. அதே சமயம் அதற்கென்று தனித்துவமான இடமும் உண்டு. ஆனால் அது தனியாய் பிறந்து வளர்ந்து செயல்படுவதில்லை. மனிதனின் உடற்கூறியலைக் கொண்டு குழந்தையின் மூளை இயல்பாக மனித மூளையாக உருவாகியிருந்தாலும் ஆரம்பத்தில் அது தன்மையில் விலங்குகளின் மூளையைப் போன்று சாதாரணமாகவே இருக்கிறது. புற உலகோடு கொண்டுள்ள தொடர்பால் மட்டுமே அது மனித மூளையின் செயல்பாட்டைப் பெறுகிறது.
உடலுக்கு வெளியே சுயேச்சையாக இயங்கிக் கொண்டிருக்கும் இயற்கையை, சமூகத்தை, முழு உலகைப் புரிந்து கொள்வதாலும், தொடர்பு கொண்டு வினையாற்றுவதன் வாயிலாகவும்தான் தனித்துவத்தைப் பெறுகிறது மனித மனம். சூழ்நிலையும், வாழ்நிலையும்தான் மனதின் அகத்தை வடிவைமைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. உணர்ச்சிகளாலும், அறிவுத்திறனாலும், மனிதர்கள் வேறுபடுவதன் காரணமும் இதுதான்.
மனதின் தோற்றமும், இருப்பும், செயல்பாடும் இவையென்றால் அதனால் உருவாகும் பிரச்சினைகளுக்கு என்ன தீர்வு? மனதின் பிரச்சினை என்பது மனிதனின் பிரச்சினை; மனிதனின் பிரச்சினை என்பது அவன் வாழ்வதற்காகப் புற உலகோடு கொண்டுள்ள தவிர்க்கமுடியாத உறவினால் ஏற்படும் பிரச்சினை. இத்தகைய பிரச்சினைகளினால் மனிதனிடம் இரண்டுவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஒன்று உடல் ரீதியானது. இரண்டாவது கருத்து ரீதியானது. இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தும் பிரிந்தும் வினையாற்றுகின்றன.
உடல் ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளில் மூளையும், அதனால் பாதிக்கப்படும் ஏனைய உடல் அங்கங்களும் அடக்கம். கருத்து ரீதியான பிரச்சினைகளை அவ்வளவு சுலபமாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஒரு குறிப்பிட்ட சமூக உறவில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கும் மனிதன், பிரச்சினை வரும்போது சமூகத்தில் தனது இடம் குறித்த குழப்பமும், பயமும், அடைகிறான். இது முற்றும் போது சமூகத்தோடு முரண்படத் துவங்குகிறான். முரண்படுதலின் வீரியத்திற்கேற்ப அவனது சமூக வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.
ஆக மனிதனது உடல் நலமும் அல்லது மூளை நலமும், சிந்தனை முறையும் ஒத்திசைந்து இருந்தால் அவன் ஆரோக்கியமாக இருக்கிறான் என்று பொருள். ஆயினும் வர்க்க சமூகத்தில் இந்த ஒத்திசைவு குலைவது தவிர்க்க இயலாதது. வர்க்கப் பிளவுகளையும் நிச்சயமற்ற தன்மையையும் அதிகரிக்கும் இன்றைய உலகமயமாக்க காலம், மக்கள் ஆன்மீகத்தை நோக்கி ஓடுவதையும், சாமியார்கள் வாழ்க வளமுடன், வாழுவதே கலையென்று ஆடுவதையும் சாத்தியமாக்கியிருக்கிறது. இருப்பினும் மன நலன் மற்றும் சமூக நலன் இரண்டையும் சீரடையச் செய்வதற்குரிய பொருத்தமான மருந்துகள் சாமியார்கள் மற்றும் அவர்களது யோக முறைகளில் நிச்சயம் இல்லை. ஏன்?
வாழ்க்கைப் பிரச்சினைகளால் மனிதனும், மனதும் பாதிக்கப்படுகின்றனர் என்றால் மூளை பாதிக்கப்படுகிறது என்பதே சரி. கோபம், அச்சம், சலிப்பு, சோர்வு, விரக்தி, சோகம், பதட்டம், படபடப்பு, மன அழுத்தம், போன்றவை எல்லோருக்கும் எப்போதாவது ஏற்படக்கூடிய உணர்ச்சிகள். குறிப்பிட்ட காரணங்களால் இவை அடிக்கடி ஏற்பட்டு நாளடைவில் தொடர்ந்து நீடித்தால் மனம் மெல்லமெல்லச் சிதைவது நடக்கிறது. மனச் சிதைவின் விளைவால் மூளையில் உள்ள உயிர்ம வேதியல் சக்திகளின் சமநிலை குலைகிறது. இதன் தொடர் விளைவால் பல உடல் பிரச்சினைகளும், வாழ்க்கை மீதான விரக்தியும் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வென்ன?
மூளை இழந்து விட்ட சக்திகளை திரும்பப் பெறுவதன் மூலமே புண்ணாண மூளையையும், மனதையும் நேர் செய்ய முடியும். அதை மனித உடலையும், நோய்க்கூறுகளையும் அறிவியல் பூர்வமாக கற்றுக்கொண்ட ஒரு உளவியல் மருத்துவரால்தான் கண்டுபிடித்துக் குணமாக்க முடியும். மாறாக, தியானம் செய்வதன் மூலமாக, மூளை இழந்த பௌதீக ரீதியான சக்திகளைப் பெறமுடியாது.
ஏனெனில், இது வெறும் கருத்துப் பிரச்சினையல்ல. உடல் நோய்வாய்ப்படுவது என்பது பொருளின் பிரச்சினை. பொருளுக்கு கருத்து மருந்தல்ல. எளிமையமாகச் சொல்வதாக இருந்தால் தலைவலி, காய்ச்சல், வயிற்று வலி, எலும்பு முறிவு, மற்றும் எளிதில் குணப்படுத்த இயலாத எய்ட்ஸ் முதலான நோய்களுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்ளுகிறோம். இதை தியானம் செய்வதால் தீர்க்கமுடியாது. மனம் அல்லது மூளையின் பிரச்சினைகளும் அப்படித்தான்.
இருப்பினும், மனம் நோய்வாய்ப்படுவதற்கும், உடல் நோய்வாய்ப்படுவதற்கும் வேறுபாடு உண்டு. உணவின்மை, சத்துக்குறைவான உணவு, சுகாதரச் சீர்கேடுகள், நுண்கிருமிகள் முதலியவற்றால் உடல் நோய்வாய்ப்படுகிறது. ஆனால் மூளையோ, வாழ்க்கைப் பிரச்சினைகளால் குறிப்பிட்ட கருத்து நிலைக்கு தொடர்ந்து ஆட்படுவதால் சக்தியை இழந்து நோய்வாய்ப்படுகிறது.
இத்தகைய பலவீனமான மூளையால் உடலின் சமநிலை குலைந்து ஏனைய உடல் பாகங்களும் பாதிப்படைந்து, செயல்பாடு சீர்கேடு அடைகின்றது. பாதிப்படையும் மனதிற்குப் பின்னே இத்தனை உண்மைகள் இருக்கும் போது, சாமியார்கள் அடிமுட்டாள்தனமாக “குணப்படுத்துவேன்’ என்று திமிராகப் பேசுவது அயோக்கியத்தனம். நியாயமாக இவர்களை போலி மருத்துவர்கள் என்று கைது செய்து உள்ளே தள்ளுவதே சரி.
யோகா போன்ற முறைகளால் நோயைக் குணப்படுத்தமுடியும் என்பதுதான் மூட நம்பிக்கையே தவிர தன்னளவில் அவை ஒரு உடற் பயிற்சிக்குரிய நன்மையைக் கொண்டிருக்கின்றன. உடற்பயிற்சியால் ஒரு மனிதனின் உடல் நலம் பொதுவில் ஆரோக்கியமாக இருக்கும் என்பது உண்மைதான். இருப்பினும் இந்த ஆரோக்கியம் வெறும் உடற்பயிற்சியால் மட்டும் வந்து விடுவதில்லை. அது ஊட்டச் சத்து, சுகாதாரம், போதுமான ஓய்வு, உறக்கம் போன்றவையுடன் தொடர்புள்ளது. சுருக்கமாகச் சொன் னால் வசதி அல்லது வர்க்கம் சம்பந்தப்பட்டது.
அடுத்து, தியானம் என்பது மனம், அதாவது மூளையின் ஒரு பகுதிக்கு அல்லது செயல்பாட்டிற்குச் செய்யப்படும் பயிற்சியாகும். தியானத்தின் மூலம் மட்டுமல்ல, ஒரு நல்ல இசையைக் கேட்பதிலோ, ஒரு குழந்தையைக் கொஞ்சுவதிலோ, இயற்கைக் காட்சியுடன் ஒன்றுவதிலோ கூட மனம் பயிற்சியையும் ஓய்வையும் பெறமுடியும். இவை ஒவ்வொருவரின் விருப்பம், இரசனை, பண்பு, வாழ்க்கையைப் பொறுத்தது. ஆயினும் அழுத்திச் செல்லும் வாழ்க்கையின் இடைவெளிகளில் பலருக்கு இவை சாத்தியப்படுவதில்லை. அதனால் பிரச்சினை வரும்போது ஓய்வு பெறாத மனம் விரைவில் துவண்டு விடுகிறது.
மனதிற்கு அப்படிச் சிறப்பாகப் பயிற்சியையும், ஓய்வையும் தந்திருப்பவர்களுக்குக் கூட வாழ்க்கைப் பிரச்சினைகளால் மனது பாதிக்கப்படுவது நடக்கும். இதிலிருந்து மீள்வதற்கு மருத்துவமே பெருமளவுக்கு உதவும் என்பதையும் தியானம் உதவாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
அதேபோல, மனதைச் சிதைத்து வதைக்கும் வாழ்க்கைப் பிரச்சினைகளால் நோயுற்ற ஒரு மனிதனை எல்லா உளவியல் மருத்துவர்களாலும் குணமாக்கி விட முடியாது. “நான்’ எனப்படும் தன்னிலையை வைத்து வாழும் மனிதனின் அடிப்படை, உண்மையில் “நாம்’ எனும் சமூக மையத்தில்தான் சுழல்கிறது. அந்த மையம் மனிதர்களது விருப்பு, வெறுப்பின்படி அமைந்ததல்ல; அது சமூக உறவுகளால் பின்னப்பட்ட ஒரு நிர்ப்பந்தம். இந்த நிர்ப்பந்தத்தின் அழுத்தம் பல இன்னல்களை ஏற்படுத்துகிறது. இதனைப் புரிந்துகொள்ளும் சமூக அறிவியல் கண்ணோட்டம் கொண்ட ஒரு உளவியல் மருத்துவரால்தான் இந்த நோயின் காரணத்தையே புரிந்து கொள்ள இயலும்.

வாழ்வின் சிக்கல்களை அருளுரைகள் தீர்க்காது!

முதலாளிகளின் சம்மேளனத்தில் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர்
முதலாளிகளின் சம்மேளனத்தில் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர்
ஆன்மீகமோ அதன் காரணங்களை அறியக்கூடாது என்பதில்தான் குறியாயிருக்கிறது. விதியும், வினைப்பயனும், மரணத்துக்குப் பிந்தைய சொர்க்கமும் நிகழ்காலத் துயரங்களுக்காக மதம் கட்டியமைத்த கற்பனையான எதிர்காலங்கள். கூடவே விதிக்கப்பட்ட வாழ்வை அல்லது அடிமைத்தனத்தைச் சகித்துக் கொள்வதற்கு மட்டுமின்றி அதனை ஆன்மீக ருசியுடன் இரசிப்பதற்கும் நவீன சாமியார்கள் கற்றுத் தருகிறார்கள். பக்தர்கள் தமக்குக் கிடைத்த வாழ்க்கையை இனிமையாக வாழுவதற்கு சாமியார்கள் தேனொழுகப் பேசுவதெல்லாம் ஆளும் வர்க்கம் அடக்கப்படும் வர்க்கத்திற்குச் செய்யும் உபதேசமேயன்றி வேறல்ல.
ஏற்றத்தாழ்வான, அநீதியான இந்தச் சமூக அமைப்பே மனிதர்களின் துன்ப துயரங்களுக்கு அடிப்படையாக அமைகின்றது. இந்த அமைப்பை மாற்றாத வரை துயரங்களுக்கும் விடிவில்லை. ஆன்மீகவாதிகளோ இதற்கு நேரெதிராக நிலவும் சமூக அமைப்பைத் தக்க வைப்பதில்தான் கருத்தாயிருக்கிறார்கள். அதனாலேயே தனி மனிதனின் வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு வக்கற்றும் இருக்கிறார்கள்.
தங்களுக்கு வரும் கோடிக்கணக்கான நன்கொடைப் பணம் எத்தகைய வழிகளில் சம்பாதிக்கப்பட்டது என்பது குறித்து அவர்களுக்குக் கவலையில்லை. ஒருவேளை, “”நேர்மையற்ற முறையில் வரும் பணத்தையும், கருப்புப் பணத்தையும் ஏற்கமாட்டோம்” என்று அவர்கள் அறிவித்தால் அடுத்த கணமே தெருவுக்கு வந்துவிடுவார்கள். ஆன்மீக நிறுவனங்கள் உயிர்வாழ்வதன் அச்சாணியே இதுதானென்றால் தனி மனிதனின் நன்னடத்தைக்கும், நிம்மதிக்கும் எப்படி வழிகாட்ட முடியும்?
பங்குச் சந்தையில் சில சமயம் இலாபமடையும் நடுத்தர வர்க்கம், பல நேரங்களில் இந்தச் சூதாட்டத்தில் சில இலட்சங்களையும் கூடவே நிம்மதியையும் இழக்கிறது. இவர்களுக்கு சாமியார்கள் என்ன தீர்வு தர முடியும்? “”பங்குச் சந்தை என்பது சூதாட்டம், அதில் முதலீடு செய்யாதீர்கள் என்று சாமியார்கள் கூறுவதில்லையே!” “”பேராசைப் படாதீர்கள், சிறிய அளவு இலாபத்துடன் திருப்தி அடையுங்கள், முதலீடு செய்யும் போது சற்று எச்சரிக்ககையாக இருங்கள்” என்றுதானே உபதேசிக்கிறார்கள்?
தற்போது துணை நடிகை பத்மாவின் பாலியல் லீலைகளை பத்திரிக்கைகள் பக்கம் பக்கமாக நாறடிக்கின்றன. இவரைப் போன்ற விளம்பர உலகில் இருக்கும் பெண்களுக்கு சாமியார்கள் என்ன நிம்மதியைத் தந்துவிட முடியும்? துகிலுரித்து தோலைக் காண்பிப்பதையே தொழிலாகக் கொண்டிருக்கும் இவர்கள் இத்தொழிலை தலைமுழுகினால் மட்டுமே நிம்மதி பெற முடியும் என சாமியார்கள் வழிகாட்டுவதில்லை. மாறாக, பல திரை உலக நடிகர்களைப் பக்தர்களாகப் பெற்று தமது விளம்பரத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்கள் மற்ற பிரிவினரைவிட ஊதியம் அதிகம் பெறுவதோடு ஊக்கத்தொகையாக பிரச்சினைகளையும் கணிசமாகப் பெறுகின்றனர். இரவுப் பணி, முடிவற்ற வேலைப் பளு, இரக்கமற்ற பணியிறக்கம், வேலை நீக்கம், பண்பாட்டுச் சீர்கேடுகள், நுகர்வு வெறி, தனிநபர் வாதம், வாழ்க்கை உறவுகள் நசித்துப் போதல், முதலியனவற்றால் அல்லலுறும் இவர்களுக்குத் தேவைப்படும் தீர்வென்ன? ஒரு துடிப்பான தொழிற்சங்கங்கத்தைக் கட்டியமைத்தால் குறைந்த பட்சமாக பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு சுயமரியாதையுடன் பணியாற்றும் சூழலை உருவாக்கிக் கொள்ளலாம். ஊழியர்களை எந்திரம் போலத் தேய்த்துவரும் முதலாளிகளை அடக்கியும் வைக்கலாம்.
ஆயினும் இந்தத் தீர்வை எந்தச் சாமியாரும் தர இயலாது. மாறாக, ஊழியர்களின் இறுக்கத்தைத் தளர்த்துவதற்காக கேளிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யும் முதலாளிகள், சாமியார்களை வைத்து யோகா, ஆன்மீக வகுப்புக்களையும் நடத்துகின்றனர். மொத்தத்தில் கேளிக்கை என்ற மதுவை ஊட்டி, ஆன்மீகம் எனும் அடிமைத்தனம் கற்றுத்தரப்படுகிறது. தொழிற்சங்கத்தைக் கட்டாமல் இருக்க அடியாட்களை நியமிக்கும் “அநாகரிகம்’ தேவைப்படாமல், தற்போது அந்தப் பணியினை ஆன்மீகவாதிகளை வைத்தே முடித்துக்கொள்கிறார்கள் முதலாளிகள்.

அம்பலமானாலும் ஆன்மீக அடியாட்கள் வீழ்வதில்லை!

ஆன்மீக அடியாட்கள்
அதனால் சாமியார்கள் எவ்வளவுதான் அம்பலப்பட்டுப் போனாலும் ஆளும் வர்க்கம் அவர்களைக் கைவிடுவதில்லை. ஜெயேந்திரனின் வண்டவாளங்கள் சந்தி சிரித்த பின்னும் ஊடகங்கள் அவரை சங்கராச்சாரியார் என்று மரியாதையுடன்தான் அழைக்கின்றன. சீடர்களை பாலியல் உறவு கொள்ளச் சொல்லி ரசித்துப் பார்ப்பதைப் பொழுதுபோக்காகக் கொண்ட ரஜனீஷ் அமெரிக்கா சென்று ரோல்ஸ்ராய்ஸ் காரில் சென்றால் சமாதி நிலை அடைவதாக 96 கார்களை வாங்கிக் குவித்தார். வரி ஏய்ப்பு, இதர மோசடிகளுக்காக அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு மீண்டும் இந்தியா வந்து செத்துப்போன ரஜனீஷின் அருளுரைகள் இன்றும் தமிழில் வெற்றிகரமாக விற்கப்படுகின்றன.
சாயிபாபா குழந்தைகளையும், இளைஞர்களையும் பாலியல் உறவுக்குப் பயன்படுத்தும் வக்கிரம் கொண்டவர் என்பதை இங்கிலாந்தின் டெய்லி டெலிகிராப் பத்திரிக்கையும், ஒரு ஆவணப்படத்தின் மூலம் டென்மார்க் அரசுத் தொலைக்காட்சியும் அம்பலப்படுத்தியிருக்கின்றன. இதன் பொருட்டே ஐ.நா.சபை சாயிபாபா ஆசிரமத்துடன் சேர்ந்து செய்ய விருந்த நலப்பணித் திட்டங்களை ரத்து செய்தது. புட்டபர்த்தியில் பல பாலியல் வக்கிரக் கொலைகளும் நடந்திருக்கின்றன. ஆனாலும் சாயிபாபா இந்திய ஊடகங்களால் இன்றும் பூஜிக்கப்படுகிறார். முன்னாள் அரசவைக் கோமாளி அப்துல் கலாம் பாபாவின் பிறந்த நாளில் கலந்து கொள்கிறார். ஐ.நா.செயலர் பதவிக்குப் போட்டியிட்ட சசி தரூர் பாபாவின் மாஜிக் மோசடிகளை அற்புதங்கள் என்று புகழ்கிறார். கருணாநிதி தன் மனைவியை பாபாவின் காலில் விழச்செய்கிறார்.
மருத்துவக் கல்லூரி சீட்டுக்கு தலா 40 இலட்சம் வாங்கும் அமிர்தானந்த மாயியின் காலில் அத்வானியும், மத்திய அமைச்சர் அந்தோணியும் விழுகிறார்கள். மாயியின் வருமான வரி ஏய்ப்புக்கு அரசே வழி செய்கிறது. வேறெங்கும் வரிசையில் நிற்க விரும்பாத பணக்காரர்கள் மாயியின் “கட்டிப்பிடி’ ஆன்மிகத்திற்காக நீண்ட வரிசையில் நிற்கிறார்கள்.
விதர்பா பகுதியில் கொத்துக்கொத்தாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளுவதற்குக் காரணம் அவர்கள் படிப்பறிவற்றவர்கள் என்று திமிராகப் பேசும் இரவி சங்கரை தகவல் தொழில் நுட்ப யுகத்தின் குரு என்று பத்திரிக்கைகள் செல்லமாக அழைக்கின்றன.
அயோத்திப் பிரச்சினையில் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் இணைந்து நின்ற ராம்விலாஸ் வேதாந்தி, பைலட்பாபா, கீர்த்தி மஹாராஜ் முதலான சாமியார்கள் கமிஷன் வாங்கிக் கொண்டு, பலகோடி ரூபாய் கருப்புப் பணத்தைக் வெள்ளைப் பணமாக மாற்றித் தரும் மோசடியை சி.என்.என்-ஐ.பி.என். தொலைக்காட்சி கையும் களவுமாக அம்பலப்படுத்தியது. ஆயினும் சங்கபரிவாரங்கள் இச்சாமியார்களைக் கைவிடவில்லை.
அம்பலமாகும் சாமியார்கள் அவ்வளவு சீக்கிரம் நீர்த்துப் போவதில்லை. ஒருவேளை இவர்கள் செல்வாக்கிழந்தாலும் புதிய சாமியார்கள் களமிறக்கப்படுவார்கள். எல்லா இன்பங்களையும் காசு கொடுத்துத் துய்க்கும் நடுத்தர வர்க்கம் ஆன்மீகத்தையும் அப்படி நுகர்வதற்குப் பழக்கி விடப்பட்டிருப்பதால் அருளாசி வழங்க நமட்டுச் சிரிப்புடன் எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறார்கள் நவீன சாமியார்கள்.
________________________________________
புதிய கலாச்சாரம், செம்படம்பர் 2007

ஞாயிறு, 19 ஜூன், 2011

குற்றவாளிகள்,,,,,,

பெண்களும் ஈடுபடும் பயங்கரம் ஆபத்தான ஆசனவாய் கடத்தல்

% ஆசனவாய் மூலமாக நகைகள், ரத்தினக் கற்கள் போன்றவற்றை கடத்துபவர்களுக்கு குடல் புண், வயிற்று வலி ஏற்படும். புண் அதிகமாகி புற்றுநோய் வரவும் வாய்ப்பு இருக்கிறது என்று டாக்டர்கள் கூறினர்.

வெளிநாடுகளில் இருந்து தங்க பிஸ்கட், வைர கற்கள் போன்றவற்றை ஆசனவாயில் மறைத்து வைத்து கடத்தி வருவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பணத்துக்கு ஆசைப்பட்டு ஏராளமானோர் இவ்வாறு கடத்தல் தொழிலில் ஈடுபடுகின்றனர். இந்த கடத்தில் பெண்களும் ஈடுபடுகின்றனர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இதுகுறித்து டாக்டர்கள் கூறியதாவது:

முதலில் கடத்தப்பட வேண்டிய நகை, ரத்தினக் கற்கள் போன்றவற்றை ஆணுறையில் நிரப்பி நூல் போன்றவற்றால் கட்டுகின்றனர். இதை ஆசனவாய் வழியாக உள்ளே திணித்து கடத்துகின்றனர். வாய் வழியாக என்றால், ஆணுறையை தேனில் நனைத்து விழுங்க செய்கின்றனர். 48 மணி நேரத்தில் எளிதாக வெளியே வந்து விடும். இனிமா கொடுத்தால் உடனே வந்துவிடும் என்பதால் கடத்தலுக்கு இம்முறையை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
உயிருக்கு ஆபத்து இல்லை. என்றாலும், வயிற்றுவலி, குடலில் புண் போன்ற கோளாறு உள்ளவர்கள் இவ்வாறு செய்தால் தீராத பிரச்னைகளை ஏற்படுத்தும். புண் அதிகமாகி புற்றுநோய் வரவும் வாய்ப்பு இருக்கிறது. வயிற்றுக்குள் ஆணுறை எதிர்பாராதவிதமாக கிழிந்தால், கடத்தல் பொருட்கள் வெளியேறி, குடலை அறுத்துவிடும் அபாயமும் இருக்கிறது.  ஆபத்து இல்லை என்று கருதி பெண்களும் இத்தொழிலில் அதிகம் ஈடுபடுகின்றனர்.

புதன், 13 ஏப்ரல், 2011

’சூரியன்’ வளர்ந்த கதை,,


endhiran-movie-audio-launch-stills_36_085223123ருகிறார்          கலாநிதி மாறன்



 டான்பாஸ்கோ பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, லயோலா கல்லூரியில் பட்டப் படிப்புக்கு பிறகு, அமேரிக்காவில் எம்பிஏ படித்தவர். எம்பிஏ படித்து விட்டு, இந்தியா திரும்புகிறார். சில காலம், குங்குமம் இதழில் பணியாற்றுகிறார்.
endhiran-movie-audio-launch-stills_26_084719123
டுடே நிறுவனம், அப்போது வீடியோ மேகசின் என்ற புதிய உத்தியை கண்டு பிடித்து, ந்யூஸ் ட்ராக் என்ற வீடியோ பத்திரிக்கையை தொடங்கியது.
இதைப் பார்த்து, தமிழிலும் இது போல் தொடங்க வேண்டுமென திட்டமிட்டார் தயாநிதி மாறன். அதன் படி, முதன் முதலில் 1990ல் தொடங்கப் பட்டதுதான் “பூமாலை“. இந்த பூமாலை மாதமிருமுறை வரும் வீடியோ கேசட். இதில் தற்போது, இந்த வார உலகம் என்று தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் வருகிறதல்லவா ? அதைப் போலவே, தொடங்கப் பட்டது.
ஆனால், இந்த பூமாலைக்குப் பின்னால், கருணாநிதியின் பின்புலம் செயல்பட்டது.   இந்தியா டுடேவின் ந்யூஸ் ட்ராக் போல, சந்தாதாரர்கள் இல்லாததால், தமிழகத்தில் உள்ள அத்தனை வீடியோ கடைகளும், மிரட்டப் பட்டன. மாதந்தோறும், பூமாலை கேசட்டுகள் ஒவ்வொரு கடையும் 10 வாங்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தப் பட்டன. தவறும் கடைகள் மீது, நீலப் படம் வைத்திருந்த வழக்கு பாய்ந்தது. (அப்போவும் போலீஸ் இப்படித்தான்).   இதை வைத்து மிரட்டி, மிரட்டி பூமாலை வீடியோ கேசட்டை ஓட்டினார்கள்.
அதன் பிறகு தாராளமய பொருளாதாரக் கொள்கை வந்த பிறகு, சன்டிவி தொடங்கப் படுகிறது.   1993ம் ஆண்டு சன் டிவி தொடங்கப் படுகிறது.   இந்த சன் டிவி தொடங்கப் பட்டதற்கு பின்னணியில் ஒரு சுவையான கதை இருக்கிறது. இப்போது போல, அப்போதெல்லாம், ட்ரான்ஸ்பாண்டர்கள் குறைந்த விலையில் கிடைக்காது. இப்போது ஒரு கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு டிவி சேனல் தொடங்கி விடலாம்.   அத்தனை மலிவாகி விட்டது.   உடனே, ஆண்டிமுத்து ராசா நினைத்திருந்தால், ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி சேனல்களை தொடங்கியிருக்கலாமே என்று யோசிக்காதீர்கள்.   1993ல் சென்னையில் ப்ரூனே சுல்தானின் உறவினர் ஒருவர் இருந்தார். அவருக்கு சொந்தமான ட்ரான்ஸ்பாண்டர் ஒன்று இருந்தது. அவரோடு நட்பு ஏற்படுத்தி, அந்த ட்ரான்ஸ்பாண்டரை இலவசமாக பெறுகிறார் கலாநிதி மாறன். இப்படித் தான் சன்டிவி தொடங்கப் பட்டது.
சன்டிவி தொடங்கிய உடனேயே பிரபலமாக ஆனதன் காரணம், அப்போது வேறு டிவி சேனல்கள் இல்லை என்றாலும் கூட, தரமான நிகழ்ச்சிகளை வழங்கியது ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது.   எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும், சேனலின் நம்பகத்தன்மையை போக்கும் வகையில் எந்த நிகழ்ச்சியையும் ஒளிபரப்ப மாட்டேன் என்பதில், கலாநிதி பிடிவாதமாக இருந்தார்.   மற்ற சேனல்களில் வருவது போல், சன் டிவியில், டெலி ஷாப்பிங்கோ, சுவிசேஷக் கூட்டங்களோ, போலி மருத்துவர்களின் நேரடி நிகழ்ச்சியோ இடம் பெறாது. ஏனெனில், இது போன்ற நிகழ்ச்சிகள் ஒரு முறை வந்தால் கூட, சேனலின் நம்பகத்தன்மை போய் விடும் என்று கலாநிதி நம்பினார்.
இது 1993 முதல் 1996 வரை தான். 1991 முதல் 1996 வரியிலான ஜெயலலிதாவின் ஆட்சி, அராஜகம் மற்றும் ஊழலின் மொத்த உருவமாக இருந்ததால், மாற்று ஊடகத்தில் வரும் செய்திகளுக்கு மக்கள் ஏங்கினார்கள். இந்த ஏக்கத்தைப் பயன்படுத்தி, அன்றைய எதிர்க்கட்சி வேலையை சன்டிவி குழுமத்தினர் நன்றாகவே செய்தனர். தூர்தர்ஷன் செய்திகளுக்கு வேறு மாற்றே இல்லை என்பதால், மக்களும், இதை ரசிக்கவே செய்தார்கள்.
இப்போது ஜெயா டிவியில் இருக்கும், ரபி பெர்னார்ட் அப்போது சன்டிவியில் இருந்தார். ஜெயலலிதா அரசாங்கத்தில், பத்திரிக்கையாளர்களுக்கு செய்திகளுக்கு குறையே இல்லை.   தினம் தினமும் செய்திகள் புதிது புதிதாக வந்து கொண்டே இருக்கும்.   அப்போது ஜெயலலிதாவின் அதிமுகவிலிருந்து, தினந்தோறும் ஒருவர் விலகி, ஜெயலலிதாவின் ஊழல்களைப் பற்றியும், சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கத்தைப் பற்றியும் செய்திகளை வெளியிட்டுக் கொண்டே இருப்பார்கள்.   இவ்வாறு விலகி வந்தவர்களை வைத்து ரபி பெர்னார்ட் நடத்திய நேருக்கு நேர் நிகழ்ச்சி அப்போது அவ்வளவு பிரபலம்.
4293346778_21fb94341d_o
1997 செப்டம்பர் 7 அன்று ஜெயலலிதாவின் விருப்பத்திற்குறிய வளர்ப்பு மகனாக இருந்த சுதாகரனின் திருமணம் வெகு விமர்சையாக இருந்தது. அப்போது சன் டிவி வழங்கிய செய்திகள், மக்கள் மனதில் அப்படி ஒரு இடம் பிடித்தது.   வளர்ப்பு மகன் திருமணத்திற்காக ட்ரான்ஸ்பார்மர்களிடமிருந்து மின்சாரம் திருடியது, அதிகாரிகளை மிரட்டியது, போன்ற அத்தனை விஷயங்களையும் படம் பிடித்துக் காட்டியது. இன்றைய தலைமுறையினர் முன்னூறு சேனல்களோடு பிறந்ததால், அந்தச் செய்திகள் அப்படி சிறப்பாகத் தோன்றாவிட்டாலும், அப்போது தூர்தர்ஷன் செய்திகளைப் பார்த்துப் பார்த்து சலித்துப் போயிருந்த கண்களுக்கு, சன் டிவியின் செய்திகள் புத்துணர்வை தந்தது.   வளர்ப்பு மகள் திருமணத்தின் போது, அந்த மணமகன் வரவேற்பு ஊர்வலத்தில், பட்டாடையுடன், ஜெயலலிதாவும், சசிகலாவும், உடல் முழுக்க நகை ஜொலிக்க நடந்து வந்ததையும், ஏடிஎம் மிஷின்களுக்கு பணம் எடுத்து வரும் வண்டியில் பாதுகாப்புக்காக வரும் துப்பாக்கி ஏந்திய காவலர் போல, அவர்களுக்குப் பாதுகாப்பாக, துப்பாக்கியோடு, அப்போது நடந்து வந்த வால்டர் தேவாரமும் நடந்து வந்த கண்கொள்ளா காட்சியை மலர் மருத்துவமனை மாடியிலிருந்து சன்டிவியின் கேமரா மேன் கண்ணன் என்பவர், படமெடுத்தார்.
இப்போது எல்லைப் பாதுகாப்புப் படை டிஜிபியாக உள்ள விஜயகுமார், அப்போது ஜெயலலிதாவின் பாதுகாப்புக்காகவே எஸ்எஸ்ஜி என்ற படையை உருவாக்கினார். அந்தப் படையைச் சேர்ந்தவர்கள், மலர் மருத்துவமனையின் மாடியிலிருந்து படமெடுத்த கண்ணனை ஜெயலலிதாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக கைது செய்தனர். இந்த கைது சன்டிவியின் பரபரப்பை பெருமளவில் அதிகரித்தது. இந்தக் கைதை பெரிய செய்தியாக்கிய சன் டிவி, இது தொடர்பாக ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா, அப்போதைய உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவாண், ஆகியோருக்கு புகார் அனுப்பியது.
1996. இதற்குப் பிறகுதான், மாறன் சகோதரர்களின் அசல் முகம் தெரியத் தொடங்கியது.   கருணாநிதி ஆட்சியைப் பிடித்தவுடன், சன் டிவி எடுக்கும், நெடுந்தொடர்களுக்கு திரைப்பட நடிக நடிகையரை மிரட்டுவதில் இருந்து, சன் டிவிக்கு விளம்பரம் தருமாறு, தனியார் நிறுவனங்களை மிரட்டுவதில் தொடங்கி கேடி சகோதரர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது.   திமுக ஆட்சி என்பதால் தனியார் நிறுவனங்களும், திரைத் துறையினரும், வாய் மூடி மவுனிகளாக இருந்தனர்.
அறிவாலயத்தில் தனது அலுவலகத்தை வைத்திருந்த சன் டிவி, மெல்ல மெல்ல, அறிவாலயத்தையே தன் வசம் கொண்டு வந்தது. அறிவாலயத்தில் ஒரு அலுவலகம் வைத்திருந்த, வேலூர் எம்எல்ஏ காந்தியை, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி காலி செய்ய வைத்தார் கலாநிதி மாறன்.
Rajini_and_Kalanidhi_Maran_endhiran_2
அழகிரி, அதிரடி அரசியல் செய்து தனது பெயரை கெடுத்துக் கொண்டார் என்றால், கேடி சகோதரர்கள், அழகிரி செய்வதைப் போல பத்து பங்கு செய்தாலும் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.   கேடி சகோதரர்களைப் போல திமுக ஆட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தியவர்கள், கருணாநிதி குடும்பத்தில் ஒருவருமே இல்லை.
அப்போதெல்லாம், இப்போது போல கேபிள் யுத்தம் பெரிதாக இல்லை. சேனல்களும் குறைவாக இருந்ததால், கேபிள் தொழில் அவ்வளவு போட்டி நிறைந்ததாக இல்லை.   ஆனால், ஒரு ஆக்டோபஸ் போல கேபிள் தொழிலை கேடி சகோதரர்கள் வளைக்கத் தொடங்கினர். எஸ்.சி.வி என்ற கேபிள் விநியோக நிறுவனத்தை தொடங்கியவர்கள் முதலில் சென்னை நகரில் மட்டும் கேபிள் விநியோகத்தை நடத்தி வந்தனர். எஸ்சிவிக்கு போட்டியாக சென்னையில் இருந்தது மும்பையைச் சேர்ந்த ஹாத்வே நிறுவனம். ஹாத்வே நிறுவனத்தின் முக்கிய சந்தாதாரர்கள் மிகப் பெரிய பணக்காரர்கள்.  வசதி படைத்தவர்கள் இருக்கும் குடியிருப்புப் பகுதிகளில் ஹாத்வே நிறுவனம் கொடிகட்டிப் பறந்தது.   96-2001ல் ஹாத்வேயை விட்டு வைத்த கேடி சகோதரர்கள், 2006ல் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், கேபிள் தொலைக் காட்சியில் தங்கள் ஏகபோகத்தை நிலைநாட்டினர்.
2006ல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே தமிழகம் முழுக்க கேபிள் தொழிலை தங்கள் கட்டுப் பாட்டில் கொண்டு வந்தவர்கள் தான் கேடி சகோதரர்கள். 2006ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், பலத்தை பிரயோகித்து, ஹாத்வே நிறுவனத்தை சென்னை நகரத்தை விட்டே துரத்தினர். தமிழகம் முழுக்கவும், கேபிள் தொழில், கேடி சகோதரர்களின் கட்டுப் பாட்டில் வந்தது. 2004ல் தயாநிதி மாறன், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆனதும், கேபிள் தொழில் இவர்கள் கட்டுப் பாட்டில் கொண்டு வருவதற்கு பெரும் உதவியாக அமைந்தது மட்டுமல்ல, பல்வேறு சேனல்களில் செய்தி வெளியிடாமல் இருக்க பெரும் நெருக்கடி கொடுக்க உதவியது.   விஜய் டிவியில் முன்பு, ஒரு ஐந்தாண்டுகளுக்கு முன்பு என்டிடிவி நிறுவனத்தோடு சேர்ந்து தயாரித்த செய்திகள் ஒளிபரப்பாகி வந்தன. அந்தச் செய்திகள், நடுநிலைமையாக, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, விஜய் டிவிக்கு செய்திகள் ஒளிபரப்பும் அனுமதியை பறித்தார் தயாநிதி மாறன். அப்போது பறிக்கப் பட்ட செய்திக்கான அனுமதி, விஜய் டிவிக்கு மீண்டும் வழங்கப் படவேயில்லை.
இது மட்டுமல்லாமல், அப்போது ஓரளவு நடுநிலையோடு செய்திகளை வெளியிட்டு வந்த, ராஜ் டிவி நிறுவனம், விசா என்ற தனது தெலுங்கு தொலைக்காட்சிக்காக ஆன்லைன் ப்ராட்காஸ்டிங் எனப்படும், ஓபி வேனை வைத்து, செய்தி ஒளிபரப்பியதாக குற்றஞ்சாட்டி, இரண்டு வருடங்களுக்கு விசா தொலைக்காட்சியை செய்தி ஒளிபரப்ப விடாமல் தடுத்து விட்டனர். இதற்கு முழு முதற்காரணம், தயாநிதி மாறனே… எப்படிப் பட்ட அதிகார துஷ்பிரயோகம் பாருங்கள்.
தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சரானதே ஒரு சுவையான கதை.   அவரின் தந்தை முரசொலி மாறன் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்து, உலக வர்த்தக மைய மாநாட்டில் ஏழை நாடுகள் தொடர்பான நீண்ட உரையை ஆற்றி, இந்தியாவை பெருமைப் படுத்தினார்.   சென்டிமென்ட்டலாகவாவது, அந்தத் துறையை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் தான் கேடி சகோதரர்களாயிற்றே… தொலைத் தொடர்புத் துறைதான் வேண்டும் என்று, அத்துறையை கைப்பற்றினர். அந்தப் பொறுப்பை ஏற்பதற்கு சில நாட்களுக்கு முன், சன் டிவியின் தலைமை நிர்வாகியாக இருநதார் தயாநிதி மாறன்.
தயாநிதி மாறன் தரப்பில் சொல்லப் படும் ஒரு முக்கிய தியரி, டிவி சேனல்கள் தொடர்பாக தகவல் ஒளிபரப்புத் துறைதான் அனுமதி வழங்க வேண்டும், என்பது. ஆனால், தகவல் ஒளிபரப்புத் துறை ஒரு போஸ்ட் ஆபீஸ்தான்.   ஒரு தொலைக்காட்சி தனது ஒளிபரப்பை நடத்துவதற்கு ஸ்பெக்ட்ரம் தான் அடிப்படை. அந்த ஸ்பெக்ட்ரத்தை வழங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டியது தொலைத் தொடர்புத் துறை.   இதை வைத்துத் தான், சன் டிவிக்கு போட்டியாக, உள்ள சேனல்களை வளர விடாமல் செய்தனர்.
ஒரு உதாரணத்தைக் கூற வேண்டுமானால், ஜெயா தொலைக்காட்சி, 24 மணி நேர செய்தி சேனல் தொடங்குவதற்காக விண்ணப்பித்தது. இதற்காக ஜெயா தொலைக்காட்சி புதிய ஸ்பெக்ட்ரம் கேட்கவில்லை.   ஏற்கனவே ஜெயா தொலைக்காட்சிக்காக ஒதுக்கிய ஸ்பெக்ட்ரத்தை மேலும் வலுவாக பயன்படுத்தவே அனுமதி கேட்டது. மே 2004ல் சமர்ப்பிக்கப் பட்ட ஜெயா டிவியின் விண்ணப்பம், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தயாநிதி மாறனால் கிடப்பில் போடப்பட்டது.
ஜெயா டிவி நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத்தில் ஜெயா டிவி போலவே, கைரளி டிவியும் செய்தித் தொலைக் காட்சி தொடர்வதற்காக கொடுத்த விண்ணப்பம், ஒரு சில நாட்களில் பரிசீலனை செய்யப் பட்டு ஒதுக்கப் பட்ட விவசாரமும் நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டப் பட்டது.
தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த போது நடந்த மற்றொரு முக்கிய நிகழ்வு டாடா ஸ்கை தொடர்பானது. டாடா நேரடியாக வீட்டுக்கே தொலைக்காட்சி சேவையை வழங்கும் டாடா ஸ்கை என்ற ஒளிபரப்பை துவக்க உத்தேசித்தது. இதற்கான அனுமதியை வழங்க வேண்டியது தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம்.   டாடா ஸ்கை தொடங்க அனுமதி வழங்குவதை தொடர்ந்து தாமதித்தார் தயாநிதி மாறன்.
தயாநிதி மந்திரியாக இருந்த சமயத்தில், தொலைத் தொடர்புத் துறை புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்தது. அது என்னவென்றால், தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, செல்பேசியிலேயே நேரடியாக தொலைக்காட்சியை பார்க்கும் வாய்ப்பு உருவானதால், செல்பேசிக்கு பயன்படும் ஸ்பெக்ட்ரத்தையும், தொலைக்காட்சிகள் ஒளிபரப்பப் படும் அலைவரிசையையும் இணைக்கும் வகையில் (Convergence) வழி வகை செய்யும் ஒரு சட்டம் உருவாகிறது.
இது போன்ற சட்டம், உருவாக்கும் அமைச்சகத்தின் அமைச்சர் தம்பி தயாநிதி மாறன். அந்த அமைச்சகம் உருவாக்கும் சட்டத்தின் விளைவுகள் என்ன என்பதை உணர்ந்து அதற்குத் தகுந்தாற்போல புதிய பிசினசை தொடங்குவது அண்ணன் கலாநிதி மாறன். எப்படி இருக்கிறது ?
நீண்டதொலைவு அழைப்புகளுக்கான கட்டணம் 100 கோடி ரூபாயாக இருந்த போது, அந்த கட்டணத்தை 2.5 கோடியாக குறைத்தவர் தயாநிதி.   இது எந்த நேரத்தில் என்றால், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நீண்ட தூர அழைப்பு வசதியை வழங்குவதற்கு போட்டி போடத் தொடங்கிய நேரத்தில் இவ்வாறு கட்டணங்களை குறைத்தார். வெளிநாடுகளுக்கு அழைக்கும் கட்டணங்களையும் குறைத்தார். இந்த தொழில் தொடங்குவதற்காக இருந்த பல்வேறு கட்டுப்பாடுகளையும் நீக்கினார்.   அதோடு, ஒரே கம்பிவட இணைப்பு மூலமாக, இணைய இணைப்பு, தொலைபேசியில் பேசும் வசதி உள்ளிட்ட வசதிகளை வழங்கவும் வழிவகை செய்தார்.
இந்த வசதிகளை உருவாக்கிய நோக்கமே, எஸ்சிவி மூலமாக, இதே வசதியை சன் நெட்வொர்க் வழங்க வேண்டும் என்பதற்காவே….. தம்பி வழங்குகிறார்… அண்ணன் பயன்படுத்திக் கொள்கிறார்.   இதற்காக நாம் வாக்களித்து இவர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்புகிறோம்.
84 எப்எம் லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பித்த கேடி சகோதரர்கள் 67 லைசென்சுகளை பெற்றார்கள். இப்போது உள்ள சட்டத்தின் கீழ் 46 லைசென்சுளைத் தான் வைத்துக் கொள்ள முடியும் என்பதால், மீதம் உள்ள லைசென்சுகளை விற்று விடுவார்கள்.
தம்பி தருகிறார், அண்ணன் பெறுகிறார்.     டாடா, அம்பானி, பிர்லா, பஜாஜ், போன்ற அத்தனை பெரிய நிறுவனங்களும், அரசாங்க விதிகளை வளைத்து, லஞ்சம் கொடுத்துதான் தொழில் செய்கின்றன என்றாலும், இது போல இவர்களே அரசாங்கமாகவும், இவர்களே தொழில் அதிபர்களாகவும், இவர்களே லைசென்சுகளை கொடுத்தும், இவர்களே, அதைப் பெற்றுக் கொள்வதும், இந்தியாவிலேயே முதல் முறை என்றால் அது மிகையாகாது.
இந்த கேடி சகோதரர்கள், இந்து பத்திரிக்கையின் பங்கை வாங்குவதற்கு முயற்சி எடுத்தார்கள் என்ற செய்தி உங்களில் பல பேருக்கு அதிர்ச்சியாக இருக்கும். கேடி சகோதரர்கள் சன் டிவி பங்குச் சந்தையில் நுழைந்த காலத்தில், அதன் மூலம் வந்த பெரிய வருவாயை வைத்து, இந்து பத்திரிக்கையில் பங்கை வாங்க முயற்சித்து, அது நிறைவேறாமல் போனது.
சன் டிவி உள்ளிட்டு, கேடி சகோதரர்கள் மொத்தம் 20 சேனல்களை பல்வேறு தென்னிந்திய மொழிகளில் நடத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டைப் போல, ஏகபோகம் அங்கே இல்லாவிட்டாலும், தமிழகத்தில் உள்ள, தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் மக்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் ஈர்த்து அதன் மூலம் பெரிய வருவாயை ஈட்ட கடுமையாக முயற்சித்து வருகிறார்கள்.
கேடி சகோதரர்களின் வெற்றிக்கு ஒரு முக்கியமான காரணம், வியாபார தந்திரம். ஒரு விஷயத்தை வியாபார ரீதியாக வெற்றி பெற வைக்க நூதனமான பல்வேறு தந்திரங்களை கையாளுவதில் கேடி சகோதரர்கள் சமர்த்தர்கள். தினகரன் நாளிதழை வாங்கியதும், வடிவமைப்பை மாற்றி வண்ணத்தில் கொண்டு வந்ததோடு, அதை வியாபார ரீதியாக வெற்றி பெற வைக்க மிகச் சிறந்த தந்திரத்தை கையாண்டார்கள். தினத்தந்தி 3 ரூபாய்க்கும், தினமணி 3 ரூபாய்க்கும், தினமலர் 3 ரூபாய்க்கும் விற்றுக் கொண்டிருந்த காலத்தில், தினகரனை 1 ரூபாய்க்கு வழங்கினார்கள். 1 ரூபாய் என்றதும், வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. குறுகிய காலத்திலேயே சர்குலேஷன் பல மடங்கு உயர்ந்ததும், பத்திரிக்கை விலையை 2 ரூபாய் ஆக்கி விட்டு இன்று தமிழகத்தின் 2வதாக அதிகம் விற்பனையாகும் நாளிதழாக ஆக்கியிருக்கிறார்கள்.
இதே போல கேடி சகோதரர்கள் தொடங்கிய மாலை நாளிதழ் தமிழ் முரசு. சென்னையில் மாலையில் பரபரப்பாக பல வருடங்களாக கொடிகட்டிப் பறந்த மாலை நாளிதழ்கள் மாலை முரசு மற்றும் மாலை மலர். தமிழ் முரசு வெளியீடு தொடங்கியதும், தினந்தோறும், தமிழ் முரசோடு இலவசமாக ஏதாவது ஒரு பொருளை வழங்கினார்கள். அவ்வாறு இலவசமாக வழங்கப் படும் பொருள்களுக்கு இவர்கள் காசு செலவழிக்கப் போவது இல்லை.   சம்பந்தப் பட்ட பொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் விளம்பரத்திற்காக இலவசமாக வழங்கும் பொருட்களை இவர்கள் தமிழ் முரசோடு வழங்கி, தங்கள் விற்பனையை அதிகரித்துக் கொண்டார்கள். இது தவிரவும், குங்குமம், வண்ணத்திரை, முத்தாரம் என்று வார இதழ்களையும் நடத்தி வருகிறார்கள் கேடி சகோதரர்கள்.
இதற்கு அடுத்து கேடி சகோதரர்கள் இறங்கிய தொழில் திரைப்படத் தயாரிப்பு.   இவர்கள் திரைப்படத் தயாரிப்பில் இறங்கிய பிறகு, சன் டிவி தங்கள் வியாபாரத்துக்கான எத்தனை பெரிய அயோக்கத்தனத்தில் வேண்டுமானாலும் இறங்கும் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது.
சன் பிக்சர்ஸ் சார்பில் எடுக்கப் பட்ட முதல் படம் ‘காதலில் விழுந்தேன்’. அந்தப் படத்தில் ஒரு டப்பாங்குத்து பாடலை தவிர்த்து வேறு எதுவுமே இல்லை. மிகச் சுமாரான வசூலைப் பார்த்த அந்தப் படத்தை சன்டிவி டாப் டென் திரைப்படங்களில் முதலிடத்தை பிடித்ததாக தொடர்ந்து பல வாரங்களுக்கு ஒளிபரப்பியது, சன் டிவியின் மோசமான ஊடக தர்மத்தை வெளிப்படுத்தியது.
எந்திரன் என்ற ரஜினிகாந்த் நடித்த படத்துக்காக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி, இந்தியாவுல் ஏதோ யுகப்புரட்சி நடந்து விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினார்கள் கேடி சகோதரர்கள். இந்தத் திரைப்படம் எதிர்ப்பார்த்ததைப் போல ஓடவில்லை, விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தியது என்ற உண்மைச் செய்தி போட்டதற்காக டெக்கான் க்ரானிக்கிள் மற்றும் தினமணி செய்தித் தாள்களை மிரட்டும் விதமாக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியவர்கள் இந்த கேடி சகோதரர்கள் என்பதை மறந்து விடக் கூடாது. 
அடுத்ததாக கேடி சகோதரர்கள் இறங்கிய தொழில் விமான சேவை. ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகளை வாங்கி இன்று அந்த நிறுவனத்தை தங்களுக்குச் சொந்தமானதாக ஆக்கிக் கொண்டுள்ளனர் கேடி சகோதரர்கள்.   சமீபத்தில் ஜெயா டிவியில் வெளி வந்த செய்தி கேடி சகோதரர்களின் அயோக்கியத்தனத்துக்கு ஒரு சான்று.   திமுக சார்பாக, வாக்காளர்களுக்கு கொடுக்கப் படுவதற்காக பல்வேறு மூட்டைகள் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் சரக்குகளாக தூத்துக்குடியில் வந்திறங்கி சோதனையில் அந்தப் பார்சல்கள் கைப்பற்றப் பட்ட செய்தி, அவ்வளவாக வெளியில் தெரியாமல் போனது.
கேடி சகோதரர்களின் விஷமத்தனத்துக்கு ஒரு நல்ல சான்று, அரசு கேபிள் கார்ப்பரேஷன். தினகரன் ஊழியர்கள் படுகொலைக்குப் பிறகு, குடும்பம் பிரிந்ததும், அரசுப் பணம் சும்மாதானே இருக்கிறது என்று கருணாநிதி அரசு கேபிள் கார்ப்பரேஷனை தொடங்கினார்.   லஞ்சம் வாங்கி சம்பாதிக்கத் தெரியாத உருப்படாத ஐஏஎஸ் அதிகாரியான உமாசங்கர், அந்த கார்ப்பரேஷனின் தலைவராக நியமிக்கப் பட்டு, மிக மிக சிறப்பான பணியை செய்தார்.   கோவை மாவட்டத்தில் முதல் முறையாக ஒளி இழை வடங்களை நிறுவி, கேபிள் மூலமாகவே, இணைய இணைப்பு, கேபிள் தொலைக்காட்சி போன்ற பல்வேறு சேவைகளை வழங்க முயற்சி எடுத்தார்.

அப்போது, கேடி சகோதரர்கள் அழகிரியோடு கடுமையான யுத்தத்தில் இருந்தார்கள்.   அரசே அவர்களுக்கு எதிராக இருந்தது. ஆனால், கேடி சகோதரர்கள் சற்றும் சளைக்காமல் ரவுடித்தனத்தில் ஈடுபட்டு, கம்பி வட இணைப்புகளை இரவோடு இரவாக அறுத்தெரிந்தார்கள். கம்பி வட இணைப்பு ஒரு முறை அறுக்கப் பட்டால், மீண்டும் மொத்தமாக புதிதாக நிறுவப்பட வேண்டும். பல முறை இவ்வாறு அறுக்கப் பட்டு புதிதாக நிறுவப்பட்டும், மீண்டும் மீண்டும் அதை அறுக்கும் வேலைகளில் கேடி சகோதரர்கள் ஈடுபட்டதை பொறுக்க முடியாமல் தான் உமாசங்கர், கம்பி வட இணைப்புகளை அறுப்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அனுமதி வேண்டும் என்ற அப்போதைய தலைமைச் செயலாளர் ஸ்ரீபதிக்கு கடிதம் எழுதினார். ஸ்ரீபதி, பெருமாள் கோயில் வாசலில் பிச்சை எடுப்பவனுக்கு இருக்கும் சுயமரியாதை கூட இல்லாத ஒரு நபர். அவரா நடவடிக்கை எடுப்பார் ?
அதிகாரம் இல்லாத போதே இவ்வாறு ரவுடித்தனத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால், கேடி சகோதரர்களின் துணிச்சலை புரிந்து கொள்ளுங்கள். இது தவிரவும், கேடி சகோதரர்களுக்கு திமுக கட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற கனவு உண்டு.   பிரிவு காலத்தின் போது, ‘மாறன் பேரவை’ என்ற பேரவையை தொடங்கி கட்சிக்குள் பிளவு ஏற்படுத்த முயற்சித்தவர்கள் தான் இவர்கள் என்பதை மறந்து விடக் கூடாது.
குடும்பம் பிரிவதற்கு முன்பு கூட, கட்சியை கைப்பற்றும் முயற்சியில் கேடி சகோதரகள் ஈடுபட்டே வந்தார்கள். கருணாநிதியோடு உரையாடிய ஒரு சமயத்தில், கலாநிதி மாறன், திமுக நிர்வாகிகள் அனைவருக்கும் ஒரு பொலிரோ ஜீப் வாங்கித் தர உத்தேசித்துள்ளதாக கருணாநிதியிடம் கூறிய போது தான், கருணாநிதி உஷாரானார்.   பிரிவு காலத்தின் போது, கேடி சகோதரர்கள் சார்பாக, தன்னிடம் பேச்சு வார்த்தை நடத்த வந்த வைரமுத்துவிடம், கருணாநிதி முரசொலி மாறன் தன் கண்ணின் மணிபோன்றவர் என்றும், ஒரு நாளும், தன்னுடைய நாற்காலிக்கு ஆசைப்பட்டவர் கிடையாது என்றும் சொல்லியிருக்கிறார்.
கேடி சகோதரர்கள் சந்தித்த முதல் நெருக்கடி, கலைஞர் டிவியின் தொடக்கம். கலைஞர் டிவி தொடங்கப் பட்ட போது, அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த 250க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள், கலைஞர்கள் என ஒரே நாளில் கலைஞர் டிவிக்கு மாறினார்கள்.   இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், இத்தனை கோடிகள் சம்பாதித்தாலும், ஊழியர்களுக்கு கப்பித் தனமாக குறைந்த சம்பளமே சன் டிவியில் வழங்கப் படும் என்பது. கலைஞர் டிவியில் கூடுதல் சம்பளம் கிடைக்கிறது என்றவுடன், பெரும்பாலான கலைஞர்கள் கிளம்பி விட்டார்கள்.
கேடி சகோதரர்களின் அராஜகம் ஒரு பக்கம் என்றால், அவர்களிடம் வேலை பார்க்கும் நபரும் அராஜகத்தில் ஈடுபடுவது என்பதுதான் வேதனையிலும் வேதனை. சரக்கடித்து விட்டு, பெண் விவகாரத்தில் ஏற்பட்ட ஒரு சாதாரண சண்டையை, ஆட்களை கூட்டிக் கொண்டு போய், ஒரு ஓட்டலை அடித்து நொறுக்கும் அளவுக்கு துணிச்சல் கொண்டவர்தான் ஹன்ஸ்ராஜ் சக்சேனா என்ற கேடி சகோதரர்களின் நம்பிக்கைக்குரிய கைத்தடி. இந்தத் துணிச்சல் வந்ததற்கு காரணம், கருணாநிதி முதல்வர் என்பதைத் தவிர வேறு என்ன ? அவர்களின் துணிச்சல் பொய்யானது இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில், சென்னை மாநகர கமிஷனர் கண்ணாயிரம், இந்த விஷயத்தில் இது வரை ஒருவரைக் கூட கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.
கேடி சகோதரர்களின் அதிகாரமும், அயோக்கியத்தனங்களும் தமிழகத்தில் பாயாத இடமே இல்லை எனலாம். அடுத்ததாக கேடி சகோதரர்கள் ரிலையன்ஸ் ப்ரேஷ் போன்ற ரீட்டெயில் வாணிபத்திலும் இறங்கத் திட்டமிட்டுள்ளனர் என்பதுதான் லேட்டஸ்ட் தகவல்.
டுமாரோ நெவர் டைஸ் என்று ஒரு ஜேம்ஸ் பாண்ட் படம் வரும். அந்தப் படத்தில் வரும் வில்லனுக்கு தொழிலே மீடியா அத்தனையையும் தன் கட்டுப் பாட்டில் வைத்திருப்பது.   அது எதற்காக என்றால், நாளை இந்த உலகம் என்ன படிக்க வேண்டும், எது செய்தியாக வேண்டும் என்பதை நான்தான் தீர்மானிப்பேன் என்று கூறுவார். ஏறக்குறைய அந்த வில்லன் போன்றவர்கள் தான் இந்த கேடி சகோதரர்கள்.
சமீபத்திய உதாரணம், அன்னா ஹசாரேவின் பட்டினிப் போராட்டம். அன்னா ஹசாரே பட்டினிப் போராட்டத்தை தொடங்கியதிலிருந்து, தேசிய காட்சி ஊடகங்களும், அச்சு ஊடகங்களும் இந்த செய்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தையும், அதையொட்டி, நாட்டில் உள்ள படித்த வர்க்கம் அனைத்தும் கிளர்ந்தெழுந்ததும் நம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.


கேடி சகோதரர்களின் மிகப் பெரிய பலமே, எஸ்சிவி தான். இந்த எஸ்சிவியின் கொட்டத்தை அடக்கினால், இவர்களின் ஏகபோகம் தானாக முடிவுக்கு வரும்.   இன்று சென்னையில் என்டிடிவி இந்து, பாலிமர், போன்ற பல்வேறு தொலைக்காட்சிகள் ஒழுங்காக தெரியாமல் இருக்கிறது என்றால், அதற்கு ஒரே காரணம், கேடி சகோதரர்கள் தான்.   வருடத்துக்கு இவர்களுக்கு ஐந்து கோடி கட்டினால் மட்டுமே, சம்பந்தப் பட்ட சேனல்கள் ப்ரைம் பாண்டில் வைக்கப் படும். இல்லயென்றால், சுத்தமாக தெரியாத வண்ணம் பார்த்துக் கொள்வார்கள்.
நான்கு வருடங்களாக அமைதியாக இருந்து விட்டு, இன்று திடீரென கருணாநிதி குடும்பத்தை உறித்து தொங்க விட்டுக் கொண்டிருக்கும் விகடன் குழுமத்திலும், கணிசமான பங்குகளை கேடி சகோதரர்கள் வாங்கியிருக்கிறார்கள் என்பது பரவலாக பத்திரிக்கையாளர்கள் மத்தியில் உலவும் செய்தி.   திமுக குடும்பத்தைப் பற்றி இத்தனை செய்திகள் வெளியிட்டாலும், விகடன் குழுமம், கேடி சகோதரர்களைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல், கவனமாக மவுனம் சாதிப்பது, இந்தத் தகவலை உறுதிப் படுத்துகிறது.
கருணாநிதி ஆட்சி வீழ்த்தப் பட வேண்டியதன் அவசியம், கருணாநிதி மற்றும் அவர் குடும்பத்தினரின் அட்டூழியங்கள் மட்டுமல்ல…..   கேடி சகோதரர்கள் என்ற ஆக்டோபஸ், தமிழகத்தை கபளீகரம் செய்யாமல் இருப்பதற்காகவுமே…..

 நன்றி சவுக்கு

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

ஜப்பான் சுனாமியும் சூப்பர் மூனும், சில புரிதல்களுக்காக‌


கடந்த இரண்டு நாட்களாக உலகம் அதிர்ச்சியோடு ஜப்பானைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. துறைமுகப் பேரலை எனும் பொருள்தரும் ஸுநாமி எனும் ஜப்பானியச் சொல்லையே உலகம் முழுதும் பயன்படுத்தி வந்தாலும் 2004 டிசம்பருக்கு முன்னால் இந்தியாவில் சுனாமி என்றால் யாருக்கும் தெரியாது. சுனாமியின் பாதிப்புகள் எப்படி இருக்கும் என அறிந்தவர்கள் கூட ஜப்பானைத் தாக்கிய இந்த சுனாமியை தொலைக்காட்சியில் கண்டவர்கள் திகைத்துப் போயிருப்பார்கள். மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் குப்பைகளைப்போல் கார்களும் வீடுகளும், விமானங்களும் கூட. இதுவரை 1600 பேர் மரணமடைந்திருப்பதாகவும், இன்னும் இது தொடர்ந்து உயரும் எனவும் கூறுகிறார்கள். ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. பொருட் சேதங்களோ முழுமையாய் கணக்கிடுவதற்கே சில வாரங்கள் தேவைப்படலாம்.
ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் கடந்த 11ம் தேதி ஏற்பட்ட 8.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி தாக்கியிருக்கிறது. இது வரை உலகம் சந்தித்த சுனாமிகளில் இரண்டாவது பெரிய சுனாமி இதுவென்று செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சென்டாய் எனும் ஊர் முற்றிலுமாக நிலைகுலைந்து போயிருக்கிறது. மினாமிஸன்ரிகு என்ற ஒரு துறைமுக நகரில் மட்டும் பத்தாயிரம் மேற்பட்டோர் என்ன ஆனார்கள் என தெரியவில்லை. மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. நூறுபேர்களை ஏற்றிச்சென்ற பயணிகள் கப்பலை தேடிக்கொண்டிருக்கிறார்கள். மூன்று ரயில்களைக் காணவில்லை. மீட்புப் பணிகளில் உதவுவதற்காக உலக நாடுகள் தங்கள் மீட்புக்குழுக்களை அனுப்பியுள்ளன.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஐந்து அணு உலைகள்  பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஃபுகுஷிமா அணு உலை வெடித்து விட்டதாகவும் ஆனால் அணுக்கதிர்கள் பரவாமல் தடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 20 கிமி சுற்றுவட்டாரத்திலுள்ள மக்கள் அப்புறப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். ஏனைய உலைகளின் வெப்ப நிலை உயர்ந்து வருகிறது. அமெரிக்க குளிரூட்டும் இயந்திரங்களை அனுப்பிவைத்திருக்கிறது. மின்கலன்களாலும், கடல் நீரை உபயோகித்தும் வெப்பம் ஏறாமல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும், ஐஏஇஏ அறிக்கை வெளிவந்தவுடன் தான் அணு உலைகளைப் பற்றிய முழுமையான நிலவரம் தெரியவரும்.
இதற்கிடையில் எதிர்வரும் 19ம் தேதி பூமியின் துணைக்கோளான நிலவு தன் சுற்றுவட்டப் பாதையில் பூமியை மிகக் குறுகிய தூரத்தில் நெருங்குகிறது. இதை சூப்பர் மூன் எனக் குறிப்பிடுகிறார்கள். கடந்த பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தமுறை நிலவு பூமிக்கு மிக நெருக்கமாக அதாவது சுற்றுவட்ட சராசரியை விட 18000 கிமி நெருங்கி 2.21,500 கிமி தூரத்தில் வருகிறது. கடந்தமுறை 2005ல் சூப்பர் மூன் நிகழ்வின் போது தான் இந்தியப் பெருங்கடலில் சுனாமி வந்தது, இந்தமுறை ஜப்பானை சுனாமி தாக்கியிருக்கிறது. இனி பூமியெங்கும் பேரழிவுகள் தொடரும் என்றெல்லாம் ஆரூடங்கள் உலவுகின்றன.
இயற்கைப் பேரழிவுகளை மனிதன் இன்றைய அறிவியலைக் கொண்டு தடுத்துவிட முடியாது. ஒரு எல்லைவரை வரை அதை முன்னறிந்து தற்காத்துக் கொள்ளவே முடியும். கல்வி என்பதே இயற்கையை அறிதலும், அதில் வினை புரியும் மாற்றங்களைக் கொண்டு மனித குலத்தின் வளர்ச்சியை சாத்தியப்படுத்துவதும்தான். ஆனால் இந்தப் பாட்டையிலிருந்து விலகி, பெருநிறுவனங்களின், முதலாளிகளின் லாபத்தை தங்கள் உழைப்பிலிருந்து செதுக்கித் தரும் பொருட்டு தம்மை கூர்தீட்டிக் கொள்வதே கல்வி என்றாகிவிட்டது. ஜப்பனில் நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தினாலும் சுனாமியினாலும் நேர்ந்த பேரழிவுகளை விட பலமடங்கு பேரழிவை அணுக்கதிர் வீச்சு ஏற்படுத்திவிடும் ஆபத்து காத்திருக்கிறது. சிறிய அளவில் பாதிப்பு ஏற்பட்டாலும் பல லட்சம் மக்களை, பல தலைமுறையினரை ஊனப்படுத்திவிடக்கூடிய வாய்ப்பை தன்னுள் அடக்கிக் கொண்டிருக்கும் அணு உலைகள், லாபத்திற்காக கடும் அலட்சியத்துடன் கையாளப்படுகின்றன. ஐஏஇஏ யின் விதிகள் நிலந‌டுக்கத்தை தாங்கும் அளவில் அணு உலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதை உறுப்படுத்துகிறது. ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்டதும் உடனடியாக அணு உலையின் செயல்பாடுகளை ஜப்பானிய அரசு நிறுத்தி விட்டது, ஆனாலும் உலையை குளிர்விக்கும் அமைப்புகள் முழுமையாக சேதமடைந்திருக்கின்றன. என்றால் செய்யப்பட்ட விதிகள் யாருக்காக? அந்த விதிகளை கண்காணிப்பது யார்? எல்லாம் முடிந்தபின், பல லட்சம் உயிர்கள் காற்றில் கரைந்து போனபின், விபத்து என்றும் இயற்கைச் சீற்றம் என்றும் செய்தியை வாசித்து விட்டு போய்விட வேண்டுமா?
உலகம் முழுவதும் 32 நாடுகளில் சற்றேறக் குறைய 450 அணு உலைகள் இயங்கி வருகின்றன. மின்சாரத் தேவைகளுக்காக என்று கூறப்பட்டாலும் ஆயுதத் தயாரிப்புகளுக்காகவே பெரும்பாலும் அவைகள் பயன்படுத்தப்படுகின்றன. வளர்ந்த நாடுகள் அனைத்தும் புதிய அணு உலைகள் நிறுவுவதையும், புதுப்பிப்பதையும் கிட்டத்தட்ட‌ நிறுத்தி விட்டன. அதேநேரம் காலாவதியான தொழில்நுட்பங்களை இந்தியா போன்ற வளரும் நாடுகளிடம் திணிக்கின்றன. மின்சாரத்திற்காக ஆபத்தற்ற, எளிமையான வழிகள் இருக்க அவைகளை விட்டுவிட்டு அணு உலைகளை மடியில் கட்டிக் கொள்ள வேண்டுமென்றால் கொள்ளை லாபத்தைக் குவிப்பது என்பதை தவிர வேறு காரணங்கள் இருக்க முடியுமா?
பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் உயர உயர நாடு முன்னேற்றத்தில் உயர்வதான ஒரு மாயையை திட்டமிட்டு ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஜப்பான் நிலநடுக்கம், சுனாமியை தொடர்ந்து ஆசியப் பங்குச் சந்தை வீழ்ந்து கிடக்கிறது. உலகப் பொருளாதாரத்தில் ஜப்பான் முக்கியப் பங்காற்றுவதால் அது மீண்டு வருவது வரையிலான நெருக்கடிகள் மக்கள் தலையிலேயே விடியும். முன்னேற்றம் முன்னேற்றம் என ஜல்லியடித்தவர்களெல்லாம் சுனாமிச் செய்தி வந்ததும் முன்னேற்றத்தை மூலையில் விட்டுவிட்டு தங்கள் முதலீடுகளை திரும்பப் பெற்றுக்கொண்டார்கள். ஆனால் ஜப்பானின் மீள் திரும்பலை விலைவாசி உயர்வாகவும் வரிகளாகவும் உலக மக்கள் தங்கள் தலையில் சுமக்க வேண்டும்.
ஆயிற்று, நிலநடுக்கம் இயற்கைச் சீற்றம் தான், சுனாமி இயற்கைச் சீற்றம் தான். அவை ஆடிய ஊழித்தாண்டவத்தில் பல்லாயிரம் உயிர்கள் போயின, கோடிகளின் மடங்குகளில் பொருட்சேதங்கள் ஆயின. லட்சக் கணக்கான மக்கள் வீடிழந்து, ஊனமுற்று வீதிகளில் நிற்கிறார்கள். இனி மறு நிர்மாணப் பணிகளைத் தொடங்கியாக வேண்டுமே, காத்திருக்கின்றன பகாசுர நிறுவனங்கள். நிலநடுக்கம் அழிக்க, அழிக்க, சுனாமி சுருட்டச் சுருட்ட, இயற்கை சீறச் சீற அத்தனையும் அந்த நிறுவனங்களுக்கான வாய்ப்புகள். ஆண்டுகள் பல கடந்தபின்னும் தமிழக கரையோர மக்களுக்கு இன்னும் முழுமையாக சுனாமி மாற்று வசதிகள் செய்து தரப்படவில்லை. இதைவிட தரத்திலும் நிவாரணப் பணிகளிலும் ஜப்பான் மேம்பட்டிருக்கலாம், ஆனாலும் பாதிக்கப்பட்ட மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் அந்த நிறுவனங்களுக்கான வாய்ப்பாக மாறி லாபத்தைக் கொட்டும்.
தெளிவாகச் சொன்னால் இயற்கைச் சீற்றங்களின் பாதகங்கள் மக்களுக்கு அதனால் ஏற்படும் சாதகங்கள் முதலாளிகளுக்கு....

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...