திங்கள், 14 ஏப்ரல், 2014

பிரதமரை வசைபாடும் 2 வது புத்தகம்

காலம் முடிகிறதென்றால் கட்டெறும்பு கூட காலில் ஏறி ஆட்டம் போடும் என்பார்கள் இது போல பிரதமர் மன்மோகன்சிங் பதவி முடியும் தருவாயில் பலவித கணைகள் அவரை நோக்கி பல தரப்பில் இருந்தும் வீசப்படுகின்றன. அரசியல் பிரமுகர்கள் அப்பாற்பட்டு அரசு அதிகாரிகளும் தங்களின் பங்கிற்கு பிரதமர் குறித்து விமர்சனம் செய்ய துவங்கியுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமரின் ஊடக ஆலோசகர் சஞ்சய்பாரு ஆக்சிடன்டல் பிரதமர் என்ற தலைப்பில் புத்தகம் வெளியிட்டு, பிரதமரின் உண்மை நிலையை வெளியிட்டிருந்தார். பிரதமர் மதிக்கப்படாமல் இருந்தார், எடுக்கும் முடிவுகள் எதுவும், பிரதமருக்கு தெரியாமல் கூட இருந்தது என்றும் காங்., தலைமை மட்டும் எடுக்கும் முடிவுகளே செயல்வடிவத்திற்கு வந்தன என்று குறிப்பிட்டிருந்தார். 
இந்நிலையில் நிலக்கரி சுரங்க துறை செயலராக இருந்த பி.சி., பாரக் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகம் நாளை ( செவ்வாய்க்கிழமை) வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த புத்தகத்தில் பிரதமர் மன்மோகன்சிங், மிக சொற்ப அரசியல் அதிகாரம் படைத்தவராகவே இருந்தார் என்றும், குறிப்பிட்டுள்ளார். மேலும் போராடினாரா ? சதிகாரரா - நிலக்கரியும் , உண்மைகளும் என்ற தலைப்பில் மன்மோகன்சிங் நிலையை எடுத்து சொல்லியிருக்கிறார் இந்த மாஜி அதிகாரி.

பராக், நிலக்கரி சுரங்க செயலராக இருந்து கடந்த 2005 டிசம்பரில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இவர் தனது புத்தகத்தில், 'பார்லி., நிலைக்குழு கூட்டத்தில் பா.ஜ., எம்.பி., தர்மேந்திர பிரதான், தன்னை கடுமையாக சாடினார். நிலக்கரி சுரங்க விவகாரம் தொடர்பாக அரசிடம் இருந்து எவ்வித ரெஸ்பான்ஸ்சும் இல்லை என்று என்னை கடிந்தார். நாள்தோறும் தமக்கு பல இன்னல்கள் கொடுக்கப்படுகிறது என்று அதிகாரியிடம் மன்மோகன் மிக கவலை அடைந்ததாகவும்,' தெரிவித்துள்ளார். நான் எனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியதாக இருந்தால் அது தேசிய நலனுக்கான பிரச்னையாக இருக்காது. பல்வேறு தொடர்பான விஷயங்களாக இருந்தது. பல்வேறு அமைச்சர்கள் தங்களின் சுயபலத்துடனே முடிவுகள் எடுத்து செயல்பட்டனர். 2ஜி ஸ்பெக்ட்ரம், நிலக்கரி சுரங்க ஊழல் தொடர்பாக பிரதமர் பெறும் விமர்சனத்திற்குள்ளானார். இருப்பினும் தனிப்பட்ட நம்பிக்கையில் பங்கம் ஏற்படாமல் பார்த்து கொண்டது பெரும் சாதனை.

இதில் பிரதமர் மிக வேதனையுற்றார். இதன் காரணமாக பிரதமர் மன்மோகன்சிங் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தால் இவரை விட சிறந்த பிரதமரை பெறமுடியுமா என்பது என்னால் யூகிக்க தெரியாது. இவ்வாறு பராக் கூறியுள்ளார். 

இவர் நேரில் பார்த்ததை எழுதியிருக்கிறார். இதில் பெரும் தவறு ஏதும் இல்லை என்ற சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...