வெள்ளி, 17 ஜனவரி, 2014

ஏன் இந்த முடிவு?

விளையாட்டு பிள்ளை அல்லது பிளே பாய் சசிதரூர் [57]இப்போதைய மனைவி திடீரென மரணமடைந்துள்ளார்.

டெல்லி ஐந்து நட்சத்திர விடுதியான 'லீலா பேலஸ்' என்ற விடுதியில் சுனந்தா புஷ்கர்,[56வயது ] 345எண்ணிட்ட அறையில்  மர்மமான முறையில் பிணமாகக் கிடந்துள்ளார்.

பாகிஸ்தான் ஊடகவியலாளர் 'மெர் தரார்' என்ற பெண்ணுடன் சசிதரூருக்கு தொடர்பிருப்பதாக சுனந்தா புஷ்கர் குற்றம் சாட்டியிருந்த வேளையில், சுனந்தா புஷ்கரின் இந்த மர்ம மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

காரணம் சசி தரூர் பின் பக்கம்தான்.
இந்தியாவின் ஐநாவுக்கான துணைச் செயலாளார்களில் ஒருவராக பல ஆண்டுகள் பணிபுரிந்த சசி  தரூர், துபாயைச் சேர்ந்த வர்த்தகரான சுனந்தா புஷ்கரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இந்த திருமணத்திற்கு முன்னதாக, அதே ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் ஒரு குறிப்பிட்ட அணிக்கு சாதகமாக செயற்பட்டார் என்கிற குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து சசி  தரூர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.


சசி  தரூருக்கு தொடர்புடையதாக கூறப்பட்ட அந்த குறிப்பிட்ட ஐபிஎல் கிரிக்கெட் அணியில், அன்றைய காலகட்டத்தில் சசி  தரூரின் நெருங்கிய சிநேகிதியாக இருந்த சுனந்தா புஷ்கருக்கு இலவசமாக பங்குகள் அளிக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, அந்த குறிப்பிட்ட ஐபிஎல் கிரிக்கெட் அணிக்கு சாதகமாக சசி  தரூர் தனது அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது.
 அந்த குற்றச்சாட்டுக்களை சசி  தரூர் அப்போது மறுத்தார் .ஆனா லும் அவர் மீது இந்தியா முழுக்க எழுந்த அதிருப்தியால்  மத்திய அமைச்சர் பதவியை விட்டு விலகச் செய்தனர்..

பிறகு சிறிதுகாலம் கழித்து தனது சிநேகிதியாக இருந்த சுனந்தாவை சஷி தரூர் முறைப்படி திருமணம் செய்து மனைவியாக்கிக்கொண்டார்.


              சுனந்தா 
இருவருமே ஏற்கெனவே இரண்டு முறை விவாகரத்து பெற்றிருந்தவர்கள் என்பதால் இது இவர்கள் இருவருக்கும் மூன்றாவது திருமணம்.

2010 ஆம் ஆண்டு அமைச்சர் பதவியிலிருந்து சர்ச்சைக்குரிய முறையில் விலகிய சசி  தரூர் மீண்டும் 2012 ஆம் ஆண்டு மத்திய அமைச்சராக பதவியேற்றார்.
கொஞ்ச காலம் பரபரப்பில் இருந்து விலகியிருந்த தரூர் ,இப்போது மீண்டும் சர்ச்சையில் மாட்டியுள்ளார்.

                              முக்கோணக் காதல் அல்லது அறுபதிலும் ஆசை வரும்?

" பாகிஸ்தானைச் சேர்ந்த, பெண் பத்திரிகையாளர் மெகர் தரர் என்பவருடன், கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக", அவர் மனைவி, சுனந்தா புஷ்கர்,தனது  'ட்விட்டர்' தளத்தில், தெ ரிவித்திருந்தார்.
இதை மறுத்த சசி தரூர், ''என் ட்விட்டர் கணக்கை யாரோ, 'ஹே க்' செய்து, தவறான தகவல்களை பரப்பியுள்ளனர்,'' என, தெரிவித்தார்.
"சசி தரூரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்படவில்லை என்றும் அவரது கணக்கில் இருந்து தான் தான் அந்த தகவல்களை வெளியிட்டதாக"வும் தரூரின் மனைவி சுனந்தா புஷ்கார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மேலும் தரூருக்கு பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் மெஹர் தரார் அனுப்பிய காதல் செய்திகளை ட்விட்டரில் போட்டு அந்த பெண் எப்படி தனது கணவரை பின் தொடர்கிறார் என்பதை உலகிற்கு தெரிவிக்கவே இவ்வாறு செய்ததாக அவர் கூறியுள்ளார்.
எங்களின் டுவிட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்படவில்லை. நான் தான் அந்த டுவீட்களை போஸ்ட் செய்தேன். இது என்னால் சகித்துக் கொள்ள முடியாது என்றும் இந்த பாகித்ஸான் பெண் ஒரு ஐஎஸ்ஐ ஏஜென்ட், அவர் என் கணவரை பின் தொடர்கிறார், ஆண்கள் எப்படி என்று உங்களுக்கு தெரியும் எனவும் சுனந்தா டுவிட் செய்துள்ளார்.
 இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் சுனந்தா மரணம் அதுவும் ஓட்டல் அறையில் என்பது ஏகப்பட்ட கேள்விகளை எழுப்பியுள்ளது.
இறந்து கிடந்த சுனந்தா  உடலில் காயங்கள் ஏதும் இல்லை
சுனந்தா மர"ணமடைந்தவுடன் சசி தரூர் பாக்கிஸ்தான் தோழி மெகர் தார் தனது டுவிட்டரில்,
ஏன் இந்த முடிவு, கடவுளே எதற்கு இப்படி செய்தார் "என்று டுவிட் செய்துள்ளார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜீவா

ப. ஜீவானந்தம் மறைந்த நாள் ஜனவரி 18, 1963

ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 - ஜனவரி 18, 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார். ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர். காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர். தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர்.
கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர். பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர்.
வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர். 1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

தோழர் ப. ஜீவானந்தம்
 மறைந்த நாள் ஜனவரி 18, 1963
 ப. ஜீவானந்தம் (ஆகஸ்ட் 21, 1907 - ஜனவரி 18, 1963) ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல ப...ுரிந்த பொதுவுடமைத் தலைவர் ஆவார்.
ஏறத்தாழ பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தவர்.
காந்தியவாதியாக, இருந்து பின்னர் பரிணாமமாக சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்தவர்.
தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டவர். மேடையில் இவர் முழங்க ஆரம்பித்தால் கூட்டத்தினர் தங்களை மறந்து இவரின் பேச்சில் மயங்கி விடுவர்.
கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தவர். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர்.
பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர். வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர்.
1952ஆம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
                             "சென்னைக்கு வருவதற்காகக் கோவை ரயில் நிலையத்தில் தோழர் ஒருவருடன் காத்திருந்தார். கையில் பெரிய பணமூட்டை. அது அன்றைய பொழுது திரட்டப்பட்ட நிதி. காலையிலிருந்து ஜீவாவும் அவருடைய தோழரும் கொலைப் பட்டினி. அலைச்சலால் ஏற்பட்ட அசதி வேறு! ஜீவாவிடம் அந்தத...் தோழர், "பசி வயிற்றைக் கிள்ளுது. சாப்பிடலாமா?" என்றார். "சாப்பிடலாமே ! ஆனால், காசு எது?" என்றார் ஜீவா. "அதுதான் உங்கள் கையில் பெரிய பணமூட்டை உள்ளதே " என்றார் அந்த தோழர்.

ஜீவாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. "என்ன பேசுறீங்க... அது மக்கள் கொடுத்த பொதுப் பணம். அதிலிருந்து ஒரு காசு கூட எடுக்கக் கூடாது" என்று உறுதியாக மறுத்துவிட்டார் ஜீவா. பின்பு, அங்கு வந்த தோழர் ஒருவர் இருவருக்கும் சிற்றுண்டி வாங்கிக் கொடுத்தார்."

பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த ஜீவா, அடிக்கடி வெளியூருக்குச் சென்று மக்களைத் தன் உணர்ச்சிமிக்க சொற்களால் தட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டார். ஜீவா ரயிலிலிருந்து இறங்கும் போது அவரைக் கைது செய்யக் காவலர்கள் காத்திருப்பர். இத்தகைய வாழ்க்கைக்குத் தன்னை பக்குவப்படுத்திக் கொண்ட ஜீவாவின் துணைவியார் பத்மாவதி, "ஜீவா ஏறினா ரெயில்; இறங்கினா ஜெயில்!" என்று வேடிக்கையாக குறிப்பிடுவார்.

அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தபோதிலும் காமராஜரும் ஜீவாவும் பரஸ்பர அன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தனர். காமராஜர் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில், தாம்பரம் வழியாகச் செல்லும்போது காரை ஜீவாவின் குடிசை வீட்டுக்கு விடச் சொல்வார். அவ்வாறு ஒருமுறை காமராஜர் ஜீவாவின் வீட்டுக்குள் நுழைந்த போது, ஜீவா நான்கு முழ வேட்டியின் ஒருமுனையை மரத்தில் கட்டிவிட்டு, மற்றொரு முனையைக் கையில் பிடித்துக் கொண்டு வெயிலில் காய வைத்துக் கொண்டிருந்தார். உடனே, வசதியில்லாமல் வாழ்ந்த ஜீவாவுக்கு நான்கு ஜோடி வேட்டி, முழங்கைச் சட்டைகளை நட்புரிமையுடன் வாங்கித் தந்தார் காமராஜர்.

பாரதிதாசன், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, என்,எஸ்.கிருஷ்ணன், ம.பொ.சி என கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரையும் அன்புடனும் நட்புடனும் நேசித்தவர் ஜீவா.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
சிறந்த மாணவர்
 
எம்ஜிஆர் 
 
நடிகரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர்., 1917-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம்  தேதிபிறந்தார்.
 இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பட்டியில் மருதூர் கோபாலமேனன் -, சத்தியபாமா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவருடைய இயற்பெயர் மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்பதாகும். இவருடைய அப்பா கேரளாவில் வக்கீலாக பணிபுரிந்தார். அவருடைய மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார்.
Photo: " பாட்டாளி மக்களுக்கு உதவவேண்டும்; வறுமையாளர்களுக்கு வழி செய்ய வேண்டும், தொழிலாள வர்க்கத்தின் துயரைத் துடைக்க வேண்டும்; ஏழை மக்களை ஈடேற்ற வேண்டும்’ என்ற நல்ல எண்ணம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எப்போதும் உண்டு.

ஏழை மக்களை நேரில் பார்த்தவர்கள், அவர்களுக்கு எப்படி உதவி செய்வதென்றே புரியாமலிருக்கிறார்கள்; ஆனால் எம்.ஜி.ஆர் அவர்கள் ரிக்ஷாத் தொழிலாளர்களின் தொல்லைகளைக் கண்டிருக்கிறார். இருந்தாலும் அவருக்கு, இப்படி மழை அங்கிகளைத் தரவேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

இந்த நேரத்தில் எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது. 20 ஆண்டுகளுக்குமுன் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ஒரு நாடகத்தில் நடிக்க திருச்சிக்குச் சென்ற பொழுது, திருச்சி ஜங்ஷனில் குதிரை வண்டி, மாட்டு வண்டிக்காரர்கள் மரத்தில் நிழல்கூட இல்லாமல் வெயிலில் இருப்பதைக் கண்டு, உடனே அங்கு ஒரு கொட்டகையைக் கட்டி அவர்களுக்கு உதவினார்.

அதைப்போல எம்.ஜி.ஆர் அவர்கள் ரிக்ஷா தொழிலாளர்கள் மழையில் படும் கஷ்டங்களைக் கண்டு அவர்கள் மழையில் வாடுவதைக் கண்டு மற்றவர்களுக்காக அவர்கள் மழையில் வணடி இழுக்கும் பரிதாபத்தைப் பார்த்து பலத்த மழையில், வெயிலில், கடுங்குளிரில் வண்டி இழுக்காவிட்டால் அவர்கள் வயிற்றுப் பாட்டுக்கு வயிருக்காதே என்பதையும் உணர்ந்து மழையில் வண்டியிழுத்தால் அவர்களின் உடலுக்கும் கஷ்டம், நோயையும் கொண்டு வந்துவிடுமே என்பதையும் அறிந்து,  உணர்ந்துதான் இந்த நல்ல முயற்சியில் ஈடுபட்டு, நல்லதோர் உதவி செய்ய முன்வந்திருக்கிறார்.

மற்றவர்கள் நினைப்பார்கள் ‘ஏழைகளுக்கு எப்படி உதவலாம்?’ என்று அவர்கள் உள்ளத்தில் ‘100 பேருக்குச் சோறு போடலாம்; 200 பேருக்குத் துணி கொடுக்கலாம்; திருமணத்துக்கு ரூ.50 கொடுத்து உதவலாம் என்றுதான் தோன“றும்.
இப்படிப்பட்ட எண்ணங்கள் எல்லாம் மிகவும் எளிதானவை; ஆனால் ஏழை படும் இன்னலை எண்ணி எண்ணிப் பார்த்துக் கனிவு உள்ளம் பெற்றுத் தொண்டாற்றுகிறார் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.இராமச்சந்திரன் நல்ல கலைஞர், நல்ல கலைஞர்கள் பெரிய மோட்டார் வைத்திருப்பார்கள்; அதில் சென்றால் ஏழை எளியவரைப் பார்க்க முடியாது; உள்ளே பள்ளமாக இருப்பதால் வெளியில் இருப்பவர்களைப் பார்க்க முடியாதபடி மறைத்துவிடும். அப்படிப்பட்ட உயரிய நிலையிலே வாழும் எம்.ஜி.ஆர். அவர்களுக்குக் குடிசைகளைப் பார்க்க வேண்டிய எண்ணம் எப்படி வந்தது? அதைத்தான் அவரே விளக்கினார். ‘யானை கவுனிப் பகுதியில் ஏழை நடிகனாக கேட்பாரற்றவனாக எத்தனையோ நாட்கள் நடைபாதையிலேயே நடமாடினேன். அதுதான் ஏழைகளின் நிலையை உணரமுடிந்தது’ என்று சொன்னாரே-அந்த உள்ளந்தான் அவரை எண்ணிப் பார்க்க வைத்தது.

அதன் காரணமாகத் தான் ஏழை மனிதனாகப் பிறந்து, மிருகத்திலும் கேவலமாக மனிதனை மனிதன் இழுத்துச் செல்லும் காட்சிகளைக் கண்டு உள்ளத்திலே நினைத்து, கண்ணீர் விட்டு அழுது, அவன் துயரத்தைத் துடைக்கத் தானும் ஓரளவு உதவலாம் என்று முன்வந்து மழை அங்கிகளை அளிக்கிறார்.

இந்த அருமையான காரியத்தை மற்றவர்களும் செய்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்றுப் பாராட்டுவேன்; அவர்கள் கலைஞர்களாக இருந்தால் மெத்த சந்தோஷம்; கழகத்தைச் சார்ந்த கலைஞர்களாக இருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி; எம்.ஜி.ஆர் தான் செய்கிறாரே என்று யாருமே சும்மா இருக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

எம்.ஜி.ஆருடன் போட்டி போட்டுக் கொண்டு நன்கொடை வழங்க முன்வரும் கலைஞர்கள், இந்த நல்ல காரியத்தைச் செய்யலாம். எம்.ஜி.ஆர் ஒரு சிறு உதவி செய்தால் அவர்கள் அதைவிடப் பெரிதாக நல்ல உதவி செய்யட்டும் .

“மக்களிடம் பெறுகிறோம். மக்களுக்குத் திருப்பித் தருகிறோம்” என்று எம்.ஜி.ஆர் கூறினார். நல்ல தத்துவம். எவ்வளவு பெரிய உலகத்திலேயே ஈடு இணையற்ற சீரிய பொருளாதாரத் தத்துவத்தை இவ்வளவு எளிமையாகச் சொல்கிறாரே என்று நானே அதிசயித்துப் போனேன் அவர் பேசும்பொழுது?

நம்முடைய புரட்சி நடிகர் இராமச்சந்திரன் அவர்கள் மழை அணி வழங்கும் இந்தச் சீரிய காரியத்தைக் குறித்து, பலர் பலவிதமாகப் பேசுவதைப் பற்றி வருத்தப்படத் தேவையில்லை. புகழுக்காகத்தான் இதை எம்.ஜி.ஆர். செய்கிறார் என்று சொன்னால் இப்படிப் புகழ் பெறுவதிலே ஒன்றும் தவறில்லை.

இந்த விழா எம்.ஜி.ஆர். அவர்களின் புகழுக்காக அல்ல; அவருடைய புகழுக்காக என்றால் நாங்கள் இங்கு இருக்கமாட்டோம்; நீங்கள் வந்திருக்கமாட்டீர்கள்; நாமெல்லாம் கூடியிருக்க மாட்டோம். நாட்டுக்கு நல்லது செய்யும் விழா இது; அதனால்தான் கூடியிருக்கிறோம். நாட்டுக்கு எங்கு நல்லது என்று படுகிறதோ அதனை வரவேற்போம், மற்றவைகளை எதிர்ப்போம்.

எம்.ஜி.ஆர் ஈட்டுகின்ற புகழ் அவருக்கு மட்டுமல்ல அவர் மூலம் நாட்டுக்குக் கிடைத்த நல்ல காரியமாகும் ! "

 = அறிஞர் அண்ணா , 4 - 12 - 1961 , நம் நாடு  இதழில் .

குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை தொடர முடியாததால் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார். நாடகத்துறையில் அனுபவமான நிலையில் திரைப்படத் துறையில் கால் பதித்தார்.சதிலீலாவதி எம்ஜிஆரின் முதல் படம்.அப்போது வயது 31, தனது அயராத உழைப்பில் முன்னேறி முதன்மை நடிகரானார்.
இவரது நடிப்பு பெரும்பாலான மக்களைகுறிப்பாக அடித்தட்டு மக்களை  கவர்ந்தது.
தங்களின் லட்சிய நாயகனாகவே எம்ஜிஆரை பார்த்தனர்.அதுதான் அவரை சாகும் வரை முதல்வராகவே வைத்தது.இன்று இரட்டை இலைக்கு பாமரர்கள் கண்ணை மூடிக்கொண்டு வாக்களிக்கவும் வைக்கிறது.

முதலில் காங்கிரசில் இருந்தவர், அறிஞர் அண்ணாவில் அரசியல் கருத்துக்களில் ஈர்க்கப்பெற்று திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். அண்ணாவின் மறைவுக்குப் பின்னர் கருணாநிதி தலைமையில் மோதல் உண்டாகி திமுகவில் இருந்து விலகி, சொந்தமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற  கட்சியைத் தொடங்கி அண்ணாயிசம் என்பதை கொள்கையாக அறிவித்து , தேர்தலில் நின்று தொடர்ந்து 3 முறை தமிழகத்தில் முதலமைச்சராக பதவியில் இருந்தார்.
இவரின் மறைவுக்குப் பின்னர் முன்பு இந்தியாவின்  உயரிய விருதாக இருந்த   பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
Photo: " இருந்தாலும் மறைந்தாலும் 
பேர் சொல்ல வேண்டும் ,
இவர் போல யாரென்று 
ஊர் சொல்ல வேண்டும் ! "

##   எங்கள் தங்கத்துக்கு இன்று 
97  வது  பிறந்தநாள் !
-----------------------------------------------------------------------------------------------------------------------------
 
தொப்பை குறைய
சர்வாங்காசனம்.
 
தொப்பை குறைய பல பயிற்சிகள் இருந்தாலும் இந்த பயிற்சி செய்வது மிகவும் எளிமையானது. மேலும் விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது.  இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் உள்ள  தரையில் படுத்துக்குங்க. மெதுவா உங்க காலை மேல தூக்குங்க.

முதுகு தரையில் இருக்க வேண்டும். காலை மடக்க கூடாது. கால் நேராக தான் இருக்க வேண்டும். ஆரம்பத்தில் இவ்வாறு செய்ய முடியவில்லை என்றால் கீழே உள்ளபடி படிப்படியாக கெய்ய ஆரம்பிக்க வேண்டும். இரண்டு காலையும் மடக்கி தரையில் படுங்க. பின் வலது காலை மட்டும் நேராக நீட்டவும். 10 வினாடிகள் இந்த நிலையில் இருக்கவும்.
 

 
 


சர்வங்காசனம்
பின் வலது காலை பழைய நிலைக்கு கொண்டுவரவும். பின் இடது காலை நேராக நீட்டவும் 10 வினாடி இருக்கவும். பின் இடது காலை பழைய நிலைக்கு கொண்டுவரவும். இவ்வாறு 10 முறை இவ்வாறு செய்யவும். பின்னர் இரண்டு காலையும் தரையில் இருந்து முட்டி மடங்காம நேரா தூக்குங்க.

எவ்வளவு உயரத்துக்கு தூக்க முடியுமோ அவ்வளவு தூரம் தூக்கலாம். 30 வினாடி அந்த நிலையிலேயே இருக்க வேண்டும்.  நேரம் ஆக ஆக வயிறு இறுகும். உங்களால் காலை தூக்குனாப்பல வைச்சிருக்க முடியாது. 10, 15, ...., 60 வினாடின்னு வரை நேரத்தை அதிகரிச்சுக்கலாம். நேரத்தை அதிகரிக்க முயற்சி பண்ணுங்க. 10 முறை இப்படி பண்ணுங்க.
During the filming of Rumble in the Bronx, Jackie broke his ankle while jumping off a bridge onto a hovercraft. Despite being told to rest, Jackie painted his cast to look like a shoe so that they could continue filming!
                        இது என்ன ஆசனம்?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 Check out some of the best pictures of the week from @[154990484549538:274:TIME Photo]: http://ti.me/LpTqAl

(Photo: AP)
                                                               இது என்ன ஆசனம்?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

வீட்டு உபயோகத்துக்கான மானிய விலை கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கை 9-ல் இருந்து 12 ஆக உயர்த்தப்படும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.

ஜப்பானிய விவசாயிகள் உருவாக்கிய ஐங்கோண ஆரஞ்சின் சுளை.


இப்படி நால்வராக சென்ற குடும்பம் விபத்தில் சிக்கி கணவர் மரணம்.
எவ்வளவு சொன்னாலும் திருந்த மாட்டீர்களா?

 "
தி முக கூட்டணி தோற்றால்தான் தமிழக அரசியலில் தெளிவு பிறக்கும்.
தமிழகத்தில் கடந்த தேர்தலில் மின் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக இருந்தது.

ஆனால் இப்போது மின்மிகை மாநிலம் என்ற இலக்கை நோக்கி தமிழகம் முன்னேறி விட்ட து..." |
துக்ளக் ஆண்டு விழாவில் நகைச்சுவை நடிகர் சோ

ஏம்பா சோ உன் நகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லையா?அதுவும் இன உணர்வுடன் ஜெயலலிதாவுக்கு அடிக்கும்  ஜால்ராவுக்கும்  முடிவே இல்லையா?
உன்னை மதித்து உன் மகன் திருமணத்துக்கு வராமல் அவமதித்தாலும் அவாளை விட்டுக்கொடுக்காத உன் இன வுணர்வு உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியதுதான்.அதற்காக இப்படி கேனத்தனமாக பேச வேண்டுமா?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...