சனி, 25 மே, 2013

"மெகா ஊழல்?'

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதிக லாபமடைய வசதியாக, ஆந்திரபிரதேசத்தில் உள்ள கே.ஜி-டி6 இயற்கை எரிவாயு வயலில் உற்பத்தியாகும் எரிவாயுவை அதிக விலைக்கு வாங்க பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அதையடுத்து "இந்த விவகாரத்தில் உண்மையை விளக்க வேண்டும்' என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ்தாஸ் குப்தா வலியுறுத்தியுள்ளார்.
வீரப்ப மொய்லி
இது தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை பேசிய குருதாஸ்தாஸ் குப்தா:
 "இயற்கை எரிவாயு விலையை உயர்த்தும் விவகாரத்தில் மத்திய அமைச்சரவை தயாரித்த குறிப்புகள் மற்றும் மத்திய திட்டக் குழு, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுத்  தலைவர் சி. ரங்கராஜன் தலைமையிலான குழு ஆகியவை அளித்த பரிந்துரைகளை மீறி ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக வீரப்ப மொய்லி செயல்படுகிறார்; இதன் மூலம் அரசுக்கு பல்லாயிரக்கணகான கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும்.

"பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் சி. ரங்கராஜன் குழு, ஒரு எம்எம்பிடியு (ஒரு மில்லியன் மெட்ரிக் பிரிட்டிஷ் தெர்மல் யூனிட் என்பது பத்து லட்சம் கன அடி எரிவாயு யூனிட்டுக்கு சமம்) இயற்கை எரிவாயு விலையை 4.2 அமெரிக்க டாலர்களாக உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளது.  ஆனால், அதை முதலாவது ஆண்டில் 8 அமெரிக்க டாலர்கள், இரண்டாவது ஆண்டில் 10 டாலர்கள், மூன்றாவது ஆண்டில் 12 அமெரிக்க டாலர்கள், அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு எம்எம்பிடியு இயற்கை எரிவாயு விலையை 14 டாலர்கள் என்ற ரீதியில் உயர்த்தலாம் என்று வீரப்ப மொய்லி பரிந்துரை செய்துள்ளார்.
குருதாஸ்தாஸ் குப்தா

மொய்லியின் யோசனைக்கு பெட்ரோலியத் துறைச் செயலர், மத்திய மின் துறை, உரத் துறை அமைச்சக உயரதிகாரிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர். ஆனால், அவற்றை எல்லாம் பொருள்படுத்தாமல் அதிகாரிகள் எழுதிய குறிப்புகளை மூன்று முறை மொய்லி நிராகரித்துள்ளார். மேலும், தனது யோசனையைப் பரிந்துரைக்கும் கோப்பில் கையெழுத்திடும்படி அவர் அதிகாரிகளுக்கு நெருக்குதல் கொடுத்து வருகிறார்.
ஏற்கெனவே, இயற்கை எரிவாயு விலையேற்ற விவகாரத்தில் ஒரு எம்எம்பிடியு எரிவாயுக்கு ரூ. 13.8 அமெரிக்க டாலரை மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்று ரிலையன்ஸ்  நிறுவனம் பேரம் பேசி வருகிறது.
இந்த நிலையில், மொய்லியின் யோசனை ஏற்கப்பட்டால் ஆண்டுக்கு ரூ. 36,000 கோடி அளவுக்கு மத்திய அரசுக்கு கூடுதல் மானியச் சுமை ஏற்படும்.
 ஆனால், அந்த முடிவால்  
ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ. 32,400 கோடி லாபம் கிடைக்கும்.
இந்த விலை உயர்வை ஐந்து ஆண்டுகளுக்குக் கணக்கிட்டால் அரசுக்கு ரூ. 1,80,000 கோடி மானியச் சுமையும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சுமார் ரூ. 1,62,000 கோடி லாபமும் கிடைக்கும்.
இந்த அளவுக்கு ஒரு தனியார் நிறுவனம் ஆதாயம் பெற வழிவகைகளை உருவாக்கிக் கொடுக்கும் வீரப்ப மொய்லியின் செயலை "மெகா ஊழல்' எனக் கூறாமல் வேறு எப்படி அழைக்க முடியும்?'' - என்று கூறினார்.
மொய்லிக்கு எதிரான தனது குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அலுவல் குறிப்புகள், பெட்ரோலியத் துறை கொள்கை நிர்ணயக் குறிப்புகள் அடங்கியதாகக் கூறப்படும் சில ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாகக் குருதாஸ்தாஸ் குப்தா கூறினார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ஐக்கிய முற்போக்குக்கூட்டணி -2 அரசின் நான்காண்டுகள் நிறை வடைந்துள்ளதையொட்டி அரசின் சாதனைப் பட்டியலை பிரதமர் மன் மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வெளியிட் டுள்ளனர்.
இதற்கான விழாவில் காங்கிரஸ் தலைகள் தவிர கூட்டணி அரசில் அமைச்சர் பதவியை பெற்றுள்ள சரத் பவார், அஜித் சிங், பரூக் அப்துல்லா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். கூட்ட ணியை வெளியிலிருந்து ஆதரிப்ப தாக கூறிக்கொள்ளும் லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பஸ்வான் ஆகி யோரும் கலந்துகொண்டுள்ளனர்.
 கூட்டணி ஆட்சி பதவியேற்றபொழுது அதில் இடம் பெற்றிருந்த திமுக, திரி ணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தற்போது கூட்டணியில் இல்லை. அரசுக்கு ஆபத்து வரும்போதெல் லாம் மத்திய புலனாய்வுத்துறை விரட்ட, வேறு வழியில்லாமல் உறுதி யான ஆதரவு அளித்துவரும் முலாயம் சிங் யாதவ், மாயாவதி போன்றவர்கள் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. நியாயமாக இந்த விழாவில் மத்திய புலனாய்வுத்துறையின் இயக்குநரும் பங்கேற்றிருக்கவேண்டும். ஏனென் றால், மத்திய புலனாய்வுத்துறையின்புண் ணியத்தில்தான் இந்த அரசின் ஆயுள் காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
உண்மையில் சொல்லப்போனால், நாடாளுமன்றத்தில் ஐக்கிய முற்போக் குக்கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை. இருந்தாலும், பெரும்பான்மை இருப்பதுபோன்ற தோற்றத்தை மத்திய புலனாய்வுத்துறை உதவி யுடன்தான் காங்கிரஸ் கட்சி ஏற் படுத்தி வருகிறது. சில்லரை வர்த்தகத் தில் அந்நிய முதலீட்டை எதிர்ப்பதாக அரசை வெளியிலிருந்து ஆதரிக்கும் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி போன்றவை மட்டுமன்றி கூட் டணியில் இடம் பெற்றிருந்த திமுக, திரிணாமூல் காங்கிரஸ் போன்ற கட்சி களும் கூறிவந்தன.
ஆனால், வாக் கெடுப்பின்போது திமுக, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் போன்றவை ஆதரித்ததற்கு மத்திய புலனாய்வுத் துறை வசம் உள்ள வழக்குகளே கார ணம் என்பதை நாடறியும்.
 பிரதமருக்கும், காங்கிரஸ் தலை வர் சோனியா காந்திக்கும் கருத்து வேறுபாடு எதுவும் இல்லை என்று சம்பந்தப்பட்ட இருவர் மட்டுமன்றி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் சத்தியம் செய்திருக்கிறார்.
அவர்கள் கூறுவது உண்மைதான். சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முத லீட்டை அனுமதிப்பது உட்பட நாட்டை நாசமாக்கும் முடிவுகளை இவர்கள் அனைவரும் இணைந்து தான் எடுக்கிறார்கள். அமெரிக்கா வுக்கு காவடி தூக்குவதிலும், கூட்ட மாக அரோகரா போடுவதிலும் எந்தக் கருத்து வேறுபாடும் இருப்பதாகத் தெரியவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வு துவங்கி, மானியத்தில் மண் அள்ளிப் போடுவது வரை எல்லா முடிவுகளும் கூட்டாகத்தான் எடுக்கப்படுகின்றன. பொதுவாக மன்மோகன் சிங் அதிகம் பேசுவதில்லை என்று ஒரு கருத்து உண்டு. அதிலும் அவருக்கு நகைச்சுவை உணர்ச்சி குறைவு என்ற குறையும் உண்டு.
இந்தக் குறையை விழாவில் நிவர்த்தி செய் திருக்கிறார் அவர்.
 "ஸ்பெக்ட்ரம், நிலக் கரி ஊழல் குற்றவாளிகள் தண்டிக் கப்படுவார்கள் "என்று அவர் கூறிய போது, கூட்டத்திலிருந்தவர்கள் மட்டுமன்றி- மன்மோகன் சிங்கே மன துக்குள் அடக்கமுடியாமல் சிரித்திருப்பார்.
 ஸ்பெக்ட்ரம் ஊழலில் குற்ற வாளிகளைத் தண்டிக்க பிரதமர் மன் மோகன் சிங் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தொடர்ந்து எடுத் துரைத்து வருகிறார். அனைத்து முடிவு களையும் பிரதமரைக் கேட்டுத்தான் எடுத்தேன் என்று அவர் கூறியுள்ளதி லிருந்தே குற்றவாளிகள் யார் என்பது பிரதமருக்கு நன்றாகத் தெரிந்திருக் கும். அப்படியென்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எளிது தானே.
நிலக்கரி சுரங்க ஊழல் நடைபெற்ற பொழுது அந்த அமைச்சகம் பிரத மரின் நேரடி கட்டுப்பாட்டில்தான் இருந்தது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே மத்திய புலனாய்வுத்துறையின் அறிக் கையை வாங்கி திருத்திக்கொடுத்த தில் பிரதமர் அலுவலத்திற்கும் பங்கு உண்டு என்று சிபிஐ நீதிமன்றத்தில் கூறியுள்ளது.அநேகமாக குற்றவாளிகளின் பெயர்களை சேர்ப்பதற்காகத்தான் பிரதமர் அலுவலகம் அறிக்கையை திருத்திக்கொடுத்தது என்று நம்பலாம். ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிவந்த வுடன் எஸ்-பேண்ட் ஒதுக்கீட்டு ஊழலும் வெளிவந்தது.
அந்த துறை பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதுதான்.
ஆனால், பின்னர் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுவிட்ட தாகக் கூறி ஒரே அமுக்காக அந்த விவகாரம் அமுக்கப்பட்டுவிட்டது. அந்த ஊழலிலும் குற்றவாளிகளைத் தண்டிக்க மன்மோகன் சிங் நட வடிக்கை எடுப்பாரேயானால் நாட்டு மக்கள் அவரை பாராட்டுவார்கள்.
தகவலறியும் உரிமைச்சட்டம், தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் போன்றவை யெல்லாம் இடதுசாரிகளின் ஆதர வுடன் செயல்பட்ட முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின் போது கொண்டுவரப்பட்டவை.
\மன் மோகன் சிங் வார்த்தையில் கூறுவ தானால் அவர் இடதுசாரிகளின் கொத்தடிமையாக இருந்தபோது கொண்டுவரப்பட்டவை. இந்த ஆட் சியில் அவர் சுதந்திரமாக , அதாவது அமெரிக்க ஆதரவுடன் செயல்பட்டு வரும் நிலையில் இந்த ஆட்சியின் சாதனை உலக மகா ஊழல், பன் னாட்டு நிறுவனங்களுக்கு அனைத் துத் துறைகளிலும் நடைபாவாடை விரிப்பது ஏழைகளின் உணவைப் பறித்து பணக்காரர்களுக்கு பந்தி வைப்பது போன்றவைதான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...