ஞாயிறு, 3 மார்ச், 2013

இந்தியாவுக்கு நட்பு நாடு அல்ல இலங்கை,

   சோனியா வுக்கும் காங்கிரசுக்கும் மட்டும் தான் இலங்கையும்-ராஜபக்சேயும்  நட்பு.
இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும்,சிங்களருக்கு கீழே தாழ்த்தப்பட்ட சமுகமாக மாற்றப்படுவதையும் எதிர்த்து தனி ஈழம் கேட்டு போராடிய விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த சண்டை கடந்த 2009–ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
 விடுதலைப்புலிகளை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் சிங்கள ராணுவம் நடத்திய வெறியாட்டத்தில், அப்பாவி தமிழர்கள் லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் .அப்பாவி மக்கள்-பெண்கள் -சிறுவர்கள் என அனைவரும் கொன்று குவிக்கப்பட்டனர்.இது உலகையே அதிரவைத்தது.இந்திய அரசை தவிர.
அப்போது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் 14 வயது பாலச்சந்திரனை பிணைக் கைதியாக பிடித்து வைத்துக்கொண்டு பின்னர் தமிழினத்துரோகி கருணாவின் ஆலோசனையின்பேரில்  துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர் .
அந்த படுகொலை படங்கள் தற்பொது வெளியாகி இலங்கை அரசின் கொலைவெறி உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதுவும் இந்தியாவை த்தவிர தான்.
 இலங்கை மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு முன்பும், சர்வதேச நீதிமன்றத்திலும்  விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனீவா நகரில் செயல்பட்டு வரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா ஒரு கண்டன தீர்மானத்தை தாக்கல் செய்தது. 
இதில் பலத்த வற்புறு த்தலில் இந்தியாவும் மனிதாமிமான அடிப்படையில்  பெரும்பான்மையான நாடுகளும்  இந்த தீர்மானத்தை ஆதரித்து ஓட்டு அளித்தன. அந்த தீர்மானம் நிறைவேறியது இலங்கைக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
இப்போது  ஐ.நா. மனித உரிமை குழு  மீண்டும் கூடி நடக் கிறது. இந்த கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மானத்தை கொண்டு வருகிறது. இன்று (திங்கட்கிழமை) தாக்கல் ஆகும் இந்த தீர்மானத்தில், "இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும், போர்ப்படிப்பினைகள் மற்றும் நல்லிணக்கக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும், கடமையை நிறைவேற்றுவதில் தனக்குள்ள பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தப்படும்" என்று தெரிகிறது. இந்த தகவலை இலங்கை விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் பாட்ரிக் வென்ட்ரல் நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஐ.நா. மனித உரிமைகுழவில்  47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. 
அவற்றில், ஐரோப்பிய நாடுகள் உள்பட 30–க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்க முன்வந்து இருப்பதாகவும், மேலும் சில நாடுகளும் ஆதரவு அளிக்கும் என்று நம்புவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
 இன்று முதல் இந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்து, முடிவில் ஓட்டெடுப்பு நடக்கும்போது தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறும் தெரிகிறது.
ஆனால் தமிழர்கள் வாழும் மாநிலத்தையே தன்னிடம் கொண்டு கூட்டாட்சி நடத்தும்  இந்தியா மட்டும் இலங்கைக்கு எதிராக வாக்களிக்க இன்னமும் யோசித்து வருகிறது.உலக நாடுகள் அனைத்தும் இலங்கையி கொடுரத்தை எதிர்த்து தீர்மானத்தை ஆதரிக்கும் போது இந்தியா மட்டும் இலங்கை தனது நட்பு நாடு என்று புலம்பிக்கொண்டிருப்பது என்ன மர்மம் என்று தெரிகிறதா?
இந்த விவகாரத்தில் முழுக்க இந்தியாவுக்கு நட்பு நாடு அல்ல இலங்கை சோனியா வுக்கும் காங்கிரசுக்கும் மட்டும் தான் இலங்கையும்-ராஜபக்சேயும்  நட்பு.
தமிழனாகப்பிறந்தததே   இவன் படுகொலைக்கு காரணம்.
இங்கேயே வாழும் தமிழர்கள் தேவையா?அல்லது தமிழரினத்தையே கொன்று குவிக்கும் பக்சேயின் சிங்கள  இனவாத இலங்கை தேவையா?
இத்தீர்மானத்தில் இந்தியா முடிவு அதன் வருங்காலத்தையே அதாவது காங்கிரசின் தமிழக வருங்காலத்தையே தீர்மானிக்கும்.

------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...