திங்கள், 25 பிப்ரவரி, 2013

உணர்ச்சி அற்ற பிண்டங்கள்,

ஏற்கனவே காவேரி தண்ணீர் கிடைக்காமலும்,மழை ஏமாற்றி விட்டதாலும் விவசாயிகள் வாழ்க்கை வெறுத்து போயுள்ள இந்த காலத்தில் அவர்களுக்கு நிவாரணம் வழங்க வந்த அமைச்சர் மேலும் அவர்களை கடுப்படித்துள்ளார்.
தஞ்சாவூரில் சம்பா பயிர்கள் கருகியதற்கு இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சியில், வீட்டு வசதித் துறை அமைச்சர் வைத்தியலிங்கம் விவசாயிகளை கடுமையாக திட்டிபேசியுள்ளார்.காரணம் அவர் அம்மாவின் புகழ் பாடி  இழப்பீட்டு தொகையை விவசாயிகளுக்கு வழங்கிய போது அங்கு  கூடிய விவசாயிகள் யாரும் கைதட்டவில்லை .
திட்டும் அமைச்சர்.-படம்:தினகரன்.
அதனால் கோபம் தலைகேறிய  அமைச்சர் கைதட்டுமாறு கேட்டுள்ளார்.ஆனால் சீவனற்ற விவசாயிகள் கைத்தட்டியது ஓசையை அமைச்சர் விரும்புமளவு எழும் பாததால் அங்கு கூடியிருந்த விவசாயிகளை பார்த்து கடுமையாக ஏகத்துக்கும்  திட்டி பேசியுள்ளார்.
"அறிவு இல்லாதவர்கள், உணர்ச்சி அற்ற பிண்டங்கள்,அம்மா கொடுக்கும் பணத்தை
 வாங்கியும் நன்றியில்லாத ஜென்மங்கள்"
 என்று அமைச்சர் வைத்தியலிங்கம் கடுமையான வார்த்தைகளால் திட்டிமுடித்துள்ளார்.
இதைக்கண்ட அதிகாரிகளும் ,விவசாயிகளும்  அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.  மிக மோசமான வார்த்தைகளை அமைச்சர் பேசியுள்ளார்  என எதிர்த்து திட்டிக்கொண்டே கலந்தனர்.
அமைச்சர் வைத்தியலிங்கம் இன்று மரியாதையுடன் இருக்க காரணம் அம்மா இல்லை.விவசாயிகள் இவருக்கு போட்ட வாக்குகள்தான் அவரை அ மைச்சராக்கியுள்ளது.
அது போக இப்போது விவசாயிகளுக்கு கொடுத்த நிவாரணம் இவர் தனது கையில் இருந்தோ,இவர் வணங்கும் அம் மாவின்  சொத்துக்களை விற்றோ கொடுக்கவில்லை.மக்களின் வரிப்பணம்தான்.இப்போது அரசு நிதியாக மக்களுக்கு போ யுள்ளது.
இவர் அம்மாவின் கடைக்கண் கடாட்சம் வேண்டுமென்றால் வழக்கமான முறையில் 90பாகை குனிந்து கும்பிடட்டும்.மற்றவர்களையும் இவர் "இதய தெய்வம் அம்மா "என்று கூறும் போதெல்லாம் கைத்தட்டியாக வே ண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு .
ஏற்கனவே கொடுக்கும் நிவாரணம் உரம் வாங்கிய காசில் பாதிக்கு கூட வராது.வட்டிக்கு என்ன செய்ய என்று கலங்கிய நிலையில் காலம் தள்ளும் விவசாயிகளை அவர்கள் மனதை இன்னமும் கலங்க வைப்பது ஒரு அ மைச்சரின் வேலை அல்ல.
அமைச்சர் தனது தலைவியை புகழும் போதெல்லாம் கைத்தட்ட வே ண்டியது  ,மக்களின் கடமை அல்ல.
அவர்கள் உணர்ச்சியற்ற பிண்டங்களாக இருக்கப் போய்தானே சென்ற முறை அம்மாவின் ஆட்சியின் அலங்கோலங்களை மறந்து உணர்ச்சியின்றி இந்த முறை ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளார்கள் என்பதை அமைச்சர் நன்கு புரிந்து கொ ண்டுள்ளா ர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...