சனி, 24 மார்ச், 2012

கொன்றது குற்றமே

miinnar

 'எந்தவித எச்சரிக்கையும் விடுக்காமல், கையில் ஆயுதமின்றி இருந்த இரண்டு பேரை சுட்டுக்கொன்றுள்ளனர். அந்த வகையில் இது ஒரு தீவிரவாதச் செயல்' என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக மீனவர்கள் அஜீஸ் பிங்கி (25), ஜெலஸ்டீன் (45) ஆகிய இருவரும் கேரள கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, கடந்த மாதம் 15ம் தேதி, அந்த வழியே வந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த சரக்கு கப்பல் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
 
சம்பவத்தைத் தொடர்ந்து அந்த கப்பல் கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. அந்த கப்பலை விடுவிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, கேரள உயர் நீதிமன்றத்தில் கப்பல் கம்பெனியின் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
கப்பல் கம்பெனியின் இந்த மனு நேற்று நீதிபதி சி.எஸ்.கோபிநாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, 'எந்த வித எச்சரிக்கையும் விடுக்காமல், கையில் ஆயுதமின்றி இருந்த இரண்டு பேரை சுட்டுக்கொன்றுள்ளனர். அந்த வகையில் இது ஒரு தீவிரவாதச் செயல்' என கருத்து கூறினார்.
 
கேரள அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் கே.பி.தண்டபாணி, 'கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களின் தடயவியல் பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை. அந்த அறிக்கை வந்தபின்னர்தான் கப்பலில் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகளிலிருந்துதான் மீனவர்களின் உயிரிழப்புக்கு காரணமான குண்டுகள் சுடப்பட்டனவா என்பதை உறுதி செய்ய முடியும்' என கூறினார். இதையடுத்து மனு மீதான அடுத்தகட்ட விசாரணையை நீதிபதி வரும் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”

  டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...