ஞாயிறு, 11 செப்டம்பர், 2011
கனிமொழி இன்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்: கதறி அழுத தாயார் |
![]() |
நீதிமன்றத்திற்கு ராஜாவும் அழைத்து வரப்பட்டார். நீதிமன்றத்திற்குள் கனிமொழி நுழைந்ததும், அங்கு ஏற்கனவே காத்திருந்த கனிமொழியின் தாயார் ராஜாத்தி அழுதார். அவருடன் டி.ஆர்.பாலுவும் வந்திருந்தார். நேற்று( 21ம் திகதி) பிற்பகல் டெல்லி பட்டியாலா சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீதான தீர்ப்புக்காக காத்திருந்த கனிமொழி இறுக்கமான முகத்துடன் அமர்ந்திருந்தார். நீதிமன்றத்தில் 2ஜி வழக்கில் ஏற்கனவே கைதான ராஜா, சாகித் பால்வா, சஞ்சய் சந்திரா, வினோத் கோயன்கா ஆகியோரும் இருந்தனர். கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி ஓ.பி.செய்னி வாசிக்க ஆரம்பித்தார். யாராவது அதை மொழி பெயர்த்து செல்ல மாட்டார்களா என்ற படி கனிமொழி சுற்றி இருந்தவர்களை ஏக்கத்துடன் ஒரு நோட்டம் விட்டார். கனிமொழி ஜாமீன் மனு ரத்து, அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை புரிந்து கொண்ட ராஜா எழுந்து நின்றார். சமிக்ஞைகளில் கனி கைது என்பதை தெரிவித்தார். அதிர்ந்து போனார் கனிமொழி. சென்னையில் இருந்து வந்திருந்த கனிமொழியின் உறவுக்கார பாட்டி, கனிமொழியின் மெய்க்காப்பாளர் ஆகியோர் அழுது கொண்டே நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினர். மவுனம் மட்டுமே மொழியாக கண்களில் இருந்து கண்ணீர் வழிய கணவர் அரவிந்தனை நோக்கி நகர்ந்தார் கனிமொழி. கணவரை கண்ணீருடன் ஆரத் தழுவி மவுனத்தடன் நகர்ந்தார். நீதிமன்றத்தில் இருந்த டி.பி.ரியால்டி நிறுவனர் சாகித் பால்வாவின் தந்தை, கனிமொழியை நோக்கி நடந்து வந்து கனியின் தலையில் கைவைத்து எதுவும் நடக்காது என ஆசிர்வதிப்போல் செய்து விட்டுச் சென்றார். உடைகளுக்கு ஏற்ப விதவிதமாக வித்தியாசமாக கைப்பைகளை பயன்படுத்தும் கனிமொழி அவர் கையில் வைத்திருந்த பையை கணவரிடம் தந்து விட்டு நகர்ந்தார். யாருடனும் பேசவில்லை. அவரது ஆதரவாளர்களை நோக்கி கையை மட்டும் அசைத்து விட்டுச் சென்றனர். அதற்குள் கோர்ட்டில் இருந்த பொலிசார் கனிமொழியை சுற்றிலும் பாதுகாப்புக்கு வந்தனர். வெளியில் இருந்து உள்ளே நுழைய முயன்ற பத்திரிகையாளர்களை தடுத்து நிறுத்தி கனிமொழியையும், சரத்குமாரையும் நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் லாக் அப்புக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர் |
சனி, 3 செப்டம்பர், 2011
அனிதாவும்-ஆல்நாத் தப்பியதும்,
கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைதாகி தற்போது சிறையில் உள்ள, முன்னாள் அமைச்சரும், தற்போதைய தி.மு.க,,எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணனுடன் கைதான அவரது உதவியாளர் தப்பியோடியது, ‘வேறு ஒரு’ வில்லங்க காரணத்துக்காக என்ற பேச்சு தி.மு.க. வட்டாரங்களில் அடிபடுகின்றது.
இவர்கள் கூறும் காரணப்படி, இந்த தப்பியோடல், முற்று முழுதாக ஒரு செட்டப்!
திருச்செந்தூர் தொகுதி, தி.மு.க. எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன், ஆறுமுகநேரி, தி.மு.க. நகர செயலர் சுரேஷ் என்பவரை கொலை செய்ய முயற்சியில் சம்மந்தப்பட்டுள்ளார் என்பதுதான் வழக்கு. இந்தக் குற்றச்சாட்டில் அனிதா கைது செய்யப்பட்டபோது, அவருடன் அவரது உதவியாளர் ஆல்நாத் என்பவரையும், போலீசார் கைது செய்தனர். சுரேஷ் போலவே இந்த ஆல்நாத்தும் ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அனிதாவும், ஆல்நாத்தும், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே அனிதா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் சிலவற்றில் சோதனையிட்ட போலிஸார், அங்கே எந்தவித ஆதாரத்தையும் எடுக்க முடியவில்லை என்று கூறப்பட்டது. தவிர, அனிதாவுக்கு எதிரான சாட்சிகளைத் தேடும் முயற்சியிலும் போலிஸ் வெற்றி பெறவில்லை என்று தெரியவருகின்றது.
இப்படியான நிலையில் இந்த கேஸ், நீதிமன்றத்தில் நின்று பிடிக்காது என்ற தகவல் சென்னைக்கு தெரிய வந்தபோது, இதில் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது சென்னையின் கோபப் பார்வை பதிந்து இருப்பதாகவும் கூறப்படுகின்றது. வழக்கு விசாரணையின்போதோ, அல்லது ஜாமீன் மனு விசாரணையின்போதோ, அனிதா வெளியே வந்துவிட்டால், நிலைமை இன்னமும் மோசமாகி விடலாம் என்ற நிலையிலேயே, ஆல்நாத்தின் தப்பியோடல் அரங்கேறியிருக்கிறது.
சிறையில் இருந்த ஆல்நாத், நள்ளிரவு நேரத்தில் திடீரென தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியதாகவும், அதனால் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறுகிறது போலிஸ். அவருக்கு காவலாக மூன்று சிறைத்துறை போலீசார், பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். இரவு ஏதும் நடக்கவில்லை.
நேற்று மதிய நேரத்தில், பாத்ரூம் அழைத்துச் செல்லப்பட்ட போது, காவலுக்கு நின்றிருந்த போலீஸ்காரரை தள்ளிவிட்டு மருத்துவமனை காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து தப்பி ஓடிவிட்டார் ஆல்நாத் என்கிறது போலிஸ்.
இந்தச் சம்பவம் பற்றி தூத்துக்குடி தி.மு.க. வட்டாரங்களில், “ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட விஷயம்தான் இது” என்கிறார்கள். அனிதாவுக்கு எதிராக ஆல்நாத், வாக்குமூலம் கொடுக்க சம்மதித்து விட்டார் என்று கூறும் அவர்கள், “ஆதாரங்களோ, வேறு சாட்சிகளோ இல்லாத நிலையில், ஆல்நாத்தின் வெறும் வாக்குமூலத்தை மாத்திரம் வைத்து நீதிமன்றத்தில் கேஸை வெற்றி கொள்ள முடியாது என்பதாலேயே இந்த ஏற்பாடு” என்கிறார்கள்.
“விசாரணைக் கைதி தப்பிச் சென்றால், அவர்மீதுள்ள குற்றச்சாட்டு மேலும் இறுகும். அதே குற்றச்சாட்டில் அவருடன் கைதாகியுள்ள அனிதாவையும் அது பாதிக்கும். அந்த நிலையில், அனிதாவுக்கு எதிராக ஆல்நாத் வாக்குமூலம் கொடுத்தால் அது பவர்ஃபுல்லாக இருக்கும்” என்பதே அவர்களது ஊகம்.
இந்த ஊகம் சரியாக இருந்தால், ஆல்நாத் மிக விரைவில் போலிஸாரிடம் பிடிபட வேண்டும்.
-இராகு,
சீனாவும் சோயாவும்,,,,,.
கடந்த வருடம் சில சீன நிறுவனங்கள் வர்த்தக விசாரணைகளுடன் பிரேசிலுக்கு வந்தபோது, சீனர்கள் பிரேசிலில் என்ன செய்யப் பார்க்கிறார்கள் என்பது யாருக்கும் புரிந்திருக்கவில்லை. இப்போதுதான் சீனத்திட்டம் புரிந்திருக்கிறது பிரேசில் நாட்டில்.
வந்திறங்கிய சீன அதிகாரிகள் பிரேசிலின் சிறிய நகரங்களைக் குறிவைத்து அங்கே சென்றார்கள். அவர்களது விசாரணைகள் சோயா பீன்ஸ் வாங்குவது பற்றியே இருந்திருக்கின்றது. வியாபார விசாரணைகளில் அவர்களது அணுகுமுறை, அதுவரை பிரேசிலியர்கள் கண்டிராத ஒன்றாக இருந்தது.
சோயா பீன்ஸ் மொத்த விற்பனை விலையைத்தான் முதலில் கேட்டார்கள் சீனர்கள். அது விளையும் பண்ணை நிலங்களைப் பார்க்க வேண்டும் என்று அடுத்த கேள்வியைக் கேட்டார்கள். மூன்றாவது கேள்விதான் பிரேசில் விவசாயிகளை தலை கிறுகிறுக்க வைத்தது.
“இவற்றை மொத்தமாக விலைக்குத் தருவீர்களா?” என்பதே அந்தக் கேள்வி.
இதில் என்ன ஆச்சரியம்? பொருள் பிடித்து விலையும் சரியாக அமைந்தால் மொத்தமாக வாங்குவது சகஜம்தானே? கதை அதுவல்ல. அவர்கள் மொத்தமாக விலைக்குக் கேட்டது சோயா பீன்ஸ்களை அல்ல. அவை விளையும் பண்ணை நிலங்களை!
அந்த நிலங்களின் மார்க்கெட் விலையைவிட இரண்டு மடங்கு விலை கொடுக்க தயாராக இருந்தன சீன நிறுவனங்கள். ஆனால், பிரேசிலின் பண்ணை விவசாயிகள் விழித்துக் கொண்டனர். சீனர்கள் மொத்தமாக விலைபேசிய கிட்டத்தட்ட 60,000 ஏக்கர் பண்ணை நிலங்களை அவர்கள் விற்கத் தயாராக இல்லை.
சீன நிறுவனங்களுக்கு ஏமாற்றம்தான். ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், அந்த விவசாயிகளிடமிருந்தே சோயா பீன்ஸ்களை நல்ல விலை கொடுத்து வாங்கினார்கள். சீனாவுக்கு கப்பலில் ஏற்றுமதி செய்தார்கள்.
அடுத்த போக வேளாண்மை எப்போது என்று கேட்டுவிட்டுச் சென்றார்கள். பிரேசிலைவிட்டு சீனாவுக்குத் திரும்பியபோது, தமது அலுவலகம் ஒன்றையும் அங்கே அமைத்துவிட்டு, அதற்கு ஒரு பிரதிநிதியையும் நியமித்துவிட்டுச் சென்றார்கள்.
இந்த சீனப் பிரதிநிதி, பிரேசிலின் சிறு நகரங்களிலுள்ள பெரிய, சிறிய பண்ணை விவசாயிகளுடன் தொடர்பில் இருந்தார். அதிகளவில் சோயா பீன்ஸ் பயிரிடுமாறும், சீன நிறுவனங்கள் வாங்கிக் கொள்ளும் என்றும் உறுதியளித்தார்.
இந்த இடத்தில் ஒரு சிக்கல்.
அதிக உற்பத்திக்கு பிரேசில் விவசாயிகளிடம் போதிய முதலீடு இருக்கவில்லை. “அப்படியா விஷயம்? நோ ப்ராப்ளம்” என்றார் சீனப் பிரதிநிதி.
பண்ணை விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்களுக்கு கடன் கொடுத்தன சீன நிறுவனங்கள். ஒப்பந்தத்தின்படி, பண்ணைகளில் விளையும் சோயா பீன்ஸில் 80% கடன் கொடுத்த சீன நிறுவனங்களுக்கு விற்கப்பட வேண்டும்.
இந்த ஒப்பந்தத்தின் பெறுமதி, 7 பில்லியன் அமெரிக்க டாலர்!
பிரேசிலின் சிறு நகரங்களில் ஒன்றான உராசூவில் வசிக்கும் பண்ணை விவசாயி எடிமில்சன் சன்டானா, “இந்த சீனர்களுக்கு இவ்வளவு சோயா பீன்ஸ் எதற்கு என்றே புரியவில்லை. நிலைமையைப் பார்த்தால், உலகிலேயே சோயா பீன்ஸை அதிகளவில் நேசிப்பவர்கள் சீனர்கள்தான் போலிருக்கிறது” என்கிறார் வியப்புடன்.
எடிமில்சன் சன்டானாவுக்கு தெரியாத ஒரு விஷயத்தை உங்களுக்குச் சொல்கிறோம். சீனாவுக்கு எதற்காக சோயா பீன்ஸ் ஏற்றுமதியாகிறது தெரியுமா? சீனாவின் பெரிய பண்ணைகளில் உள்ள ஆடு. மாடு, கோழி ஆகிய கால்நடைகளுக்கு உணவாகக் கொடுக்க!
இருந்து பாருங்கள், அந்த கோழி இறைச்சி பேக் பண்ணப்பட்டு பிரேசிலின் மார்க்கெட்டுக்குள் வந்துவிடும், Product of China என்ற எழுத்துக்களுடன்!
-இக்ஸ்டாபா, மெக்சிகோவிலிருந்து பிரான்சிஸ்கோ தலமான்டேவின் குறிப்புகளுடன், ரிஷி
பார்த்து நடந்துக்கோங்க........,
ஜன் லோக்பால் வேண்டும் என்று கோரி அண்ணா ஹசாரே 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததை ஆங்கில ஊடகங்கள் ஆகஸ்ட் க்ராந்த்தி என்றன. சில தமிழ் ஊடகங்களில் கூட இப்போது கடந்த மாதம் நடந்த கூத்துகளை ஆகஸ்டு புரட்சி என்றே குறிப்பிடுகின்றனர். அது ஒரு பக்கம் இருக்கட்டும். மேற்படி ஆகஸ்டு புரட்சியின் போது நாளொரு நிலைப்பாடும் பொழுதொரு கொள்கையும் எடுத்து குழப்புவதற்குப் பெயர்போன காங்கிரஸையே அண்ணா குழப்பியடித்தார்.
மூன்றே நாளில் மசோதா வேண்டும் என்றார். இந்த மாதத்துக்குள் மசோதா நிறைவேற வேண்டும் என்றார். பிரதமரை ஜன்லோக்பாலில் கொண்டு வர வேண்டுமென்றார். அதை அப்படியே விட்டு விட்டு அரசு தாக்கல் செய்துள்ள மசோதாவைத் திரும்பப் பெற்றே ஆக வேண்டும் என்றார். பிறகு அந்தக் கோரிக்கையை திராட்டிலில் விட்டு விட்டு எங்கள் லோக்பாலையும் சேர்த்து கொஞ்சம் கவனிங்க என்றார். கடைசியில் அத்தனை நாட்கள் கேட்டதையெல்லாம் குழி தோண்டி புதைத்து விட்டு மூன்று கோரிக்கையில் வந்து நின்றார்.
அந்த மூன்று கோரிக்கையுமே மொக்கைக் கோரிக்கைகள் என்று தனியே சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறோம். இப்படி அண்ணா ஹசாரே மாறி மாறி பேசிக் கொண்டிருந்த சமயத்தில் இதில் இருக்கும் இடியாப்பச் சிக்கல்களை அவிழ்க்க களமிறக்கப்பட்டவர் தான் பிரணாப் முகர்ஜி. அந்த சமயத்தில் அரசியலில் போடப்படும் முடிச்சுகளையெல்லாம் அவிழ்க்கும் தெள்ளியதோர் முடிச்சவிழ்க்கி என்று ஆங்கில ஊடகங்கள் அவரை போற்றிப் புகழ்ந்தன. அப்போது அண்ணாவுக்கும் பிரணாபுக்கும் இடையே தூதுப் புறாவாக செயல்பட்டவர் விலாஸ்ராவ் தேஷ்முக்.
கபில் சிபலும், சிதம்பரமும் பேட் பாய்ஸ் என்றும், விலாஸ் ராவ் தேஷ்முக்கும் பிரணாபுமே குட்பாய்ஸ் என்றும் அண்ணா கும்பல் இவ்விருவருக்கும் நற்சான்றிதழ் வழங்கியிருந்தது. விலாஸ்ராவ் தேஷ்முக் நமக்குப் புதியவரல்ல. முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் – தற்போது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான கேபினட் அமைச்சர். இவரை 2g ஸ்பெக்ட்ரம் ஊழலை விட பெரியது என்று சொல்லப்பட்ட ஆதர்ஷ் வீட்டு மனை ஊழல் மூலம் நாட்டு மக்கள் சிறப்பாக அறிவார்கள். ராம்லீலா மைதான மேடையில் அண்ணாவும் விலாஸ்ராவும் கட்டிப் பிடித்து போட்டோவுக்கு போஸ் கூட கொடுத்தார்கள். அதில் அண்ணா அம்சமாக சிரித்திருப்பார் – மராத்தி மானூஸ் சிரிப்பாய் சிரித்தது. நீங்களும் பார்த்திருப்பீர்கள்.
இன்னொரு ‘நல்லவரான’ பிரணாப் முகர்ஜி பற்றி இந்தியன் எக்ஸ்ப்ரஸ் பத்திரிகையில் கடந்த 30-ம் தேதி ஒரு செய்தி வந்துள்ளது.
பங்குச் சந்தையைக் கண்காணிக்கும் செபி அமைப்பின் சேர்மனாக இருந்த யு.கே சின்ஹா என்பவருக்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் அவரது ஆலோசகரான ஓமிதா பவுலும் சில பெரிய நிறுவனங்கள் தொடர்பான தாவாக்களைக் கையாள்வது தொடர்பாக சில வழிகாட்டுதல்களை அளித்துள்ளனர். முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ், அனில் அம்பானியின் அடாக், ராஜஸ்தான் வங்கி, சஹாரா குழுமம் உட்பட சில பெரிய கார்பப்ரேட் நிறுவனங்கள் தொடர்பான முறைகேடுகள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ‘பார்த்து பக்குவமாக’ நடந்து கொள்ளுமாறு நிதியமைச்சர் பிரணாப் அழுத்தம் கொடுத்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, மேற்படி நிறுவனங்கள் தொடர்பான விவகாரங்களை கவனித்து வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆபிரகாமிடம் நிதியமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் படி இந்நிறுவனங்கள் தொடர்பான விஷயங்களில் நீக்குப் போக்காக நடந்து கொள்ள வேண்டும் என்று யு.கே. சின்ஹா அறிவுறுத்தியுள்ளார். ஆபிரகாம் அதற்கு மறுக்கவே அவர் மேல் பல்வேறு பொய்யான புகார்களைக் கிளப்பி மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளனர். ஆபிரகாம் தனது தொழிலாளர் வைப்பு நிதியில் இருந்து கடன் பெற்று வாங்கிய வீடு பற்றி குடைச்சல் கொடுத்துள்ளனர். பின்னர் தீவிர விசாரணைகளின் முடிவில் அவர் வீடு வாங்கியதில் முறைகேடுகள் ஏதும் இல்லை என்று தெளிவு படுத்தப்பட்டது.
அடுத்து, ஜூலை 20-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள ஆபிரகாமுக்கு மேலும் இரண்டாண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்ததை ரத்து செய்துள்ளனர். இப்படி பல்வேறு வகைகளில் அவர் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். இந்நிலையில், ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆபிரகாம், ஜூன் 1-ம் தேதியிட்ட கடிதம் ஒன்றில் நடந்த விஷயங்களைப் பற்றி குறிப்பிட்டு பிரதமர் அலுவலகத்திற்கும் மத்திய ஊழல் கண்காணிப்புப் பிரிவுக்கும் புகார் அனுப்பியுள்ளார். நல்லவரான பிரதமர், புகாரின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அதைக் கிளப்பிய அதிகாரியின் பெயரோடு சேர்த்து அந்தக் கடிதத்தை அப்படியே நிதியமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார்.
பெரிய நிறுவனங்களின் ஊழல் முறைகேடுகள் பற்றிய புகாரில் தனது பெயர் வெளிப்படையாக்கப் பட்டதால் தனது உயிருக்கு ஆபத்து வரக்கூடும் என்று அச்சமடைந்துள்ள ஆபிரகாம், தற்போது விஷயத்தை ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார். பத்திரிகைகளில் விவகாரம் நாற்றமடிக்கத் தொடங்கியதும் இது தொடர்பாக பேட்டியளித்துள்ள யு.கே.சின்ஹா, ஆபிரகாமுக்கு சமீப காலமாக மனநிலை சரியில்லை என்று திமிர்த் தனமாக கருத்துத் தெரிவித்திருக்கிறார். பிரணாப் முகர்ஜி இன்னமும் வாயைத் திறக்கவில்லை.
ஆக, இங்கே ஊழல் என்பதன் பிறப்பிடம் என்பது கார்ப்பெரேட் தரகு முதலாளிகள் தான் என்பது இந்த விவகாரத்திலும், இதற்கு முன் வெளியான அநேகமான ஊழல்களிலும் வெளிப்படையாகவே தெரிகிறது. எதார்த்தம் இவ்வாறு இருக்க, அண்ணாவின் ஊழல் எதிர்ப்பு கோஷங்கள் அனைத்திலும் இந்த பகல் கொள்ளை கும்பலை மிகுந்த கவனத்துடன் தவிர்க்கிறார். இந்த நன்றிக் கடனுக்காகத் தான் அண்ணாவின் தம்பிகள் கண்டுபிடித்துள்ள மிஸ்டுகால் புரட்சிக்கும் எஸ்.எம்.எஸ் புரட்சிக்கும் ரிலையன்ஸ் தயங்காமல் ஸ்பான்சர் செய்கிறது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
.“ஷாக்கடிக்குது சோனா.. நீ நடந்து போனா.. !”
டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...

-
" இருவர் படுகொலை தென் மாவட்டங்களில் பதட்டம். போலிஸ் படை குவிப்பு : பழையகாயல் அருகே சர்வோதாயபுரியில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் பசுபதி...
-
டிக்-டாக்கால் வாழ்க்கை போச்சு மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும், தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் செல்ப...
-
எம்.ஜி.ஆர்.முதல்வாராக இருக்கிறார். கேரள அரசு தமிழக அரசிடம் 65 லட்சம் லிட்டர் எரிசாராயத்தை கேட்டது. முதலில் 26 லட்சம் லிட்டரும் பின்னர்...